நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் பொருளாதார நிலை பெரும் பின்னடைவைச் சந்தித்துப் போக்குக் காட்டும் இன்றைய சூழலில், விலைவாசியும் விண்ணை முட்டுகிறது. வாழ்க்கை நடத்துவதும் பெரும் பாடாக இருக்கிறது. வருமானத்திற்காக அவரவர் சக்திக்கும் தகுதிக்கும் ஏற்ப எதையாவது செய்து பிழைப்பு நடத்த வேண்டியிருக்கிறது. கூடுதல் வருமானத் திற்காக எதையாவது செய்யவேண்டிய சூழ்நிலையும் பலருக்கு உண்டாகிறது. கூடுதல் வருமானம் என்றதும், ஏதாவது தொழில் செய்து சம்பாதிக்கவேண்டும் என்னும் எண்ணமே பலருக்கும் தோன்றும்.

ff

தொழில் அல்லது வியாபாரம் செய்வது எளிதானதல்ல. உழைப்பு, முதலீடு, புத்தி சாலித்தனம் போன்றவை மட்டுமே தொழில், வியாபாரத்தில் வெற்றிபெற போதுமானவை அல்ல. இவற்றையும் கடந்து நேரம், எண்ணம் ஒத்துழைக்கவேண்டும். ""சரியான காலத்தில் முறையாகத் திட்டமிட்டு, கடினமாக உழைத்து திறமையாக செயல்பட்டும், எனக்கு பிசினஸில் நஷ்டம் ஏற்பட்டு கடனாளியாகிவிட்டேன்'' என்று கூறுவோரும் உண்டு. இதற்கு என்ன காரணம்? அவரவர் பிறந்த ஜாதகப்படி, தொழில் செய்யும் யோகம் இருக்கிறதா என்பதையும், எந்தத் தொழில் செய்தால் லாபம் சம்பாதிக்கமுடியும் என்பதையும், அந்த வியாபாரத்தை எப்போது தொடங்கவேண்டும்- தனித்துச் செய்வதா, மற்றவர்களோடு சேர்ந்து செய்யலாமா என்பன போன்றவற்றையும் ஆராயாமல், வியாபாரம் செய்ய இறங்கியிருப் பார்கள். ஆழம் தெரியாமல் காலைவிட்டு அகப்பட்ட கதைபோலத்தான் இது.

பொதுவாக, அவரவர் ஜாதகப்படி தொழில் சரிப்பட்டுவருமா என்பதை முதலில் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு, ஜாதகத்தில் லக்னம் எனப்படும் முதல் வீட்டிலிருந்து, எண்ணிவரும் நான்காவது பாவம் நன்கு பரிசீலிக்கப்பட வேண்டும். இத்துடன் அவரவருக்கான வருமானம் எந்த வழியில் வரும்? அடிமைத் தொழிலா, வியாபாரமா என்பதையறிய உதவும் ஜீவன ஸ்தானம் எனப்படும் பத்தாம் பாவத்தின் வலிமை, அதன் அதிபதியான கிரகத்தின் வலிமை, பத்தாம் பாவத்தில் கிரகங்கள், அவற்றின் நிலை, பத்தாம் பாவாதிபதி இருக்கும் வீட்டின் அதிபதி நிலை, பத்தாம் பாவத்தைப் பார்க்கும் கிரகங்களின் நிலை போன்றவற்றையும் நுணுக்கமாகப் பரிசீலித்து அறியவேண்டும்.

இவ்வாறு நான்காம் பாவத்தில் நிலையைக் காணவேண்டும். அது சர ராசியா? ஸ்திர ராசியா?

உபய ராசியா? அதன் பாவாதிபதி சுபகிரகங்களின் பார்வை அல்லது சேர்க்கை என எவ்வகையிலாவது சம்மதம் பெற்றிருக்கிறதா என்பன போன்றவற்றையும், நான்காம் பாவத்தில் இடம்பெற்றுள்ள கிரகங்கள், நான்காம் பாவத்தோடு எவ்வகையிலாவது தொடர்பு பெற்ற கிரகங்கள் போன்றவற்றின் வலிமையையும் ஆராயவேண்டும்.

சிலருக்கு வியாபாரம் தொடங்கிய சில வருடங்களிலேயே அமோகமான வளர்ச்சியும், அபரிதமான லாபமும், எல்லாரும் வியக்கும்படியான முன்னேற்றமும் ஏற்படும். பிறகு, திடீரென்று சரிவு ஏற்பட்டு, வியாபாரத்தைக் கைவிடும்படியான சூழ்நிலையும் ஏற்படும். இதற்கு அவருடைய ஜாதகத்தில் நான்காம் பாவாதிபதி கெட்டிருக்கும் நிலையே காரணமாகும். மேலும், நான்காம் பாவத்திற்கு பாதகாதிபதியின் தசை மற்றும் புக்தி நடப்பதும், கோட்சாரத்தில் அஷ்டமச்சனியோ ஏழரைச்சனியோ நடப்பதும் காரணமாக இருக்கும். சரி; இங்கே நியாயமாக ஒரு கேள்வி வரும். அப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதே அது. அடக்கி வாசிக்கவேண்டும். அதாவது முதலாளி என்ற இடத்திலிருந்து சற்று ஒதுங்கியிருக்க வேண்டும். முடிந்தால் தொழிலாளியாக மாறுவதும் நல்லது.

நான்காமிடம் வியாபாரத்தைப் பற்றி அறிய உதவும் பாவமல்லவா? இதேபோல் கூட்டுத்தொழில் செய்பவர்களாக இருந்தால், முதலில் தங்கள் ஜாதகப்படி கூட்டுத்தொழில் ஒத்துவருமா என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. ஏனென்றால், தொழில் நன்கு நடந்துகொண்டிருக்கும்போது அவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டு, அதனால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுவதையும் பார்க்க முடிகிறது. சிலர் நீதிமன்ற படியேறி, வழக்கு களில் சிக்கி வீணாகி நிற்பதையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது.

பொதுவாக, கூட்டுத்தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கு கூட்டாளிகளிடையே நல்ல புரிதலும் நட்பும் இருக்கவேண்டும். ஜோதிடரீதியாக 7-ஆம் பாவத்தின் அதிபதி லக்னாதிபதிக்கு நட்பாகவும், ஜாதகத்தில் சுபகிரகங்களின் வீட்டிலோ, சுபகிரகச் சேர்க்கையோ- பார்வையோ அல்லது எவ்வகையிலாவது சம்பந்தமோ பெற்றிருப்பதும் நல்லது. குறைந்தபட்சம் துர்ஸ்தானங்கள் எனப்படும் 6, 8, 12-ஆமிடங்களில் இல்லாமல் இருப்பதும் நன்று.

மேற்கூறிய வீட்டதிபதிகளின் சேர்க் கையோ, பார்வையோ, சம்பந்தமோ இல்லாமலிருப்பதும் நன்று. மாறாக, ஏழாம் பாவாதிபதிக்கு பகை கிரகங்களின் தொடர்பு எவ்விதத்திலாவது ஏற்பட்டிருந் தால், ஜாதகருக்கு ஏன்தான் இவர்களுடன் கூட்டு சேர்ந்தோம் என வெறுக்குமளவுக்குப் பிரச்சினைகள் ஏற்படும்.

தனியாகத் தொழில் செய்தாலும், பிறருடன் கூட்டாகச் சேர்ந்து செய்தாலும் பணவரவு நன்றாக இருக்கவேண்டும். இதற்கு ஜாதகருடைய ஜென்ம லக்னத்திற்கு இரண்டாமிடம் மற்றும் பதினொன் றாமிடம் நன்றாக இருக்கவேண்டும். ஏனென்றால், இரண்டாமிடம் என்பது தன, குடும்ப, வாக்கு ஸ்தானமாகும். வியாபாரம் செய்ய முதலீடு அவசியம்.

அதற்கான பணமும் ஜாதகருக்கு வேண்டும். வியாபாரிக்கு பேச்சுத் திறமையும் மிகவும் முக்கியம். இனிமையாகப் பேசுவதற்கு நல்ல மன நிலையும், அதைத் தருவதற்கு குடும்பச் சூழ்நிலையும் உறுதுணையாக அமையவேண்டும். இதற்கு இரண்டாம் இடமும் அதன் அதிபதியும் சிறப்பாக அமையவேண்டும். குறைந்தபட்சம் எந்த பாதிப்பும் இல்லாமலாவது இருக்க வேண்டும். இதேபோல், லக்னத்திற்கு 11-ஆம் இடமும் அதன் நிலையும் கவனத் தில் கொள்ளப்படவேண்டும்.

இதுவரை கூறியபடி, ஒருவரது ஜாதகத்தில் கிரக அமைப்புகள் காணப்பட்டால், அவர் நல்ல முறையில் வியாபாரத்தில் ஈடுபட்டு சிறப்பாக வாழமுடியும். சிலருக்கு தொழில் நன்றாக நடந்தாலும், "ஓட்டைப் பானையில் தண்ணீர் ஊற்றியதுபோல', ஒருபக்கம் லாபம் வந்தாலும், மறுபக்கம் செலவு வந்து கொண்டே இருக்கும். சிலர் எந்தத் தொழில் தொடங்கினா லும் அதில் ஏதாவது தடை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். இன்னும் சிலர் ஆர்ப்பாட்டமாக வியாபாரத்தைத் தொடங்குவார்கள். ஆனால், ஆரம்பித்த சிறிது காலத்திலேயே அதைப் பிறருக்கு விற்றுவிடும் சூழ்நிலையோ ஒரேயடியாகக் கைவிடும்படியாகவோ நேரும்.

இன்னும் சிலருக்கு எந்தத் தொழில் செய்தாலும் முன்னுக்கு வரமுடியாமல் போகும்.

இதற்கு அவரவர் முற்பிறவி சார்ந்த பிரச்சினைகளே காரணமாக இருக்கும். முற்பிறவியில் யாரையாவது ஏமாற்றிப் பொருள் சேர்த்திருப்பார்கள். அதனால், இப்பிறவியில் யாரிடமாவது ஏமாந்து தொழிலில் நஷ்டம் ஏற்படும்படி நேரும். இப்படி அவரவர் செய்த கர்மவினைகளுக்கு சாபமும் தோஷமும் எதுவென்று கண்டு, அதற்கு மந்திர, சாஸ்திரரீதியான ஹோமங்கள்செய்து, ரட் சாதாரணம் ஏற்று, மந்திர ரோபதேசம் பெற்று ஜபித்து வருவது, உரிய எந்திரத்தை வியாபாரத் தலத்தில் பிரதிஷ்டை செய்து பூஜித்துவருவது போன்றவற்றால், தொழில் எதுவாயினும் அதை லாபகர மாக நடத்தி வாழ்க்கையில் உயரலாம்.

செல்: 95660 27065

Advertisment