சென்ற இதழ் தொடர்ச்சி...
பன்னிரண்டு வீடுகளும் அதன் ஸ்தானங்களும்...
ஜாதகக் கட்டத்தில்ல/ என்று குறிப்பிடப்பட்டுள்ள வீடே ஜாதகரின் லக்னமும் முதல் வீடுமாகும். இந்த வீட்டை வைத்துதான் ஜென்மம், பிறப்பு, அந்தஸ்து, ஆயுள், தேகபலம் முதலியவற்றைத் தெரிந்துகொள்கிறோம்.
லக்னத்திற்கு இரண்டாம் வீட்டை வைத்து குடும்பம், தனம், பொருளாதாரம், வாக்கு, நாணயம், கண்கள் ஆகியவற்றின் நிலையைத் தெரிந்துகொள்கிறோம்.
மூன்றாம் வீட்டை வைத்து சகோதர- சகோதரிகள், தைரியம், வீரம், வீரியம், ஆண்மை மற்றும் போக பாக்கியம், பெண்மை மற்றும் போகநிலை, எழுத்து, அறிவு, கீர்த்தி, விளையாட்டு, வெற்றி, மனோதிடம், மாமனார் நிலைகளைத் தெரிந்துகொள்கிறோம்.
நான்காம் வீட்டை வைத்து தாயார், மனை, வீடு, வாகனம், சுகம், காதல், கற்புநிலை, கல்வி, மனப் பக்குவம், நிலபுலன் ஆகியவற்றின் நிலைகளையும்;
ஐந்தாம் வீட்டை வைத்து பூர்வபுண்ணியம், புத்திர பாக்கியம், புத்தி, தெய்வ அருள், குணநலன் ஆகியவற்றின் நிலைகளையும்;
ஆறாம் வீட்டை வைத்து ருணம் (கடன்), ரோகம் (நோய்), சத்ரு (எதிரி- எதிர்ப்பு), தாய்மாமன், அடிமைத் தொழில், மனைவியால் அடையக் கூடிய படுக்கை சுகம் ஆகியவற்றின் நிலைகளையும்;
ஏழாம் வீட்டை வைத்து திருமணம், காதல், களத்திரம், விபத்து, திடீர் மரணம், வெளிநாடு வாசம், கூட்டுத்தொழில், நட்பு, வாழ்க்கைத்துணை, கணவனின் குணாதிசயங்கள் பற்றியும்;
எட்டாம் வீட்டை வைத்து ஆயுள், ஆரோக்கியம், வறுமை, சிறைதண்டனை, சட்டவிரோதம், மரணம், புத்திக்குறைவு, பெண் களுக்கு மாங்கல்ய பலம், தாம்பத் திய உறவு போன்றவற்றையும்;
ஒன்பதாம் வீட்டை வைத்து பாக்கியம், தந்தை, தெய்வ அருள், தீர்த்த யாத்திரை, தனம், செல்வம், நிம்மதி, ஒழுக்கம், கல்வி, இன்பம், ஐஸ்வர்ய விருத்திகள் ஆகியவற்றையும்;
பத்தாம் வீட்டை வைத்து தொழில், ஜீவனம், கங்காஸ்நானம், மாமியார் வீடு, உத்தியோகம், வேலைவாய்ப்பு, கணவனால் அடையக்கூடிய சுகம் ஆகியவற்றின் நிலைகளையும்;
பதினொன்றாம் வீட்டை வைத்து லாபம், மூத்த சகோத ரம், இளைய தாரம், மாரகம், வெற்றி ஆகியவற்றின் நிலைகளைப் பற்றியும்;
பன்னிரண்டாம் வீட்டை வைத்து அயன

பன்னிரண்டாம் வீட்டை வைத்து அயனம், சயனம், போகம், விரயம், மோட்சம், மரணம், வீடு, தூக்கம், வெளிநாட்டுப் பயணம், படுக்கை சுகம், விரயச்செலவுகள் பற்றிய நிலைகளையும் தெரிந்து கொள்கிறோம்.
இவையெல்லாம் எல்லா ஜாத கருக்குமே உள்ள பொதுவான நிலைகள்தான். ஆனால், இந்த பன்னிரண்டு வீடுகளுக்குரிய ஸ்தானாதிபதிகள் ஜாதகத்தில் அமர்ந்துள்ள இடங்களையும் நிலைகளையும் வைத்து, ஒவ்வொரு ஜாதகருக்கும் அவர்களுக்கு உண்டா கும் பலன்களில் மாறுதல்கள் இருக்கும்.
ஸ்தானாதிபதி சுபராக இருந்து, ஆட்சி யாகவோ, உச்சமாகவோ, நட்பாகவோ, சுபர் பார்வைகளுடனோ இருந்தால் அந்த ஸ்தானத் திற்குரிய பலன்கள் சிறப்பாகும். ஸ்தானாதிபதி கெட்டிருந்தாலோ, நீசமடைந்திருந்தாலோ, பாவர்களால் பார்க்கப்பட்டிருந்தாலோ அந்த ஸ்தானத்திற்குரிய பலன்களில் பாதிப்புண்டாகும்.
இப்படி, பன்னிரண்டு வீடுகளுக்குரிய ஸ்தானாதிபதிகளின் நிலையை வைத்து ஜாதகருக் குக் கிடைக்கப்போகும் நன்மை- தீமைகள்பற்றித் தெரிந்து கொண்டாலும், இதை மட்டுமே வைத்து முழுமையான பலன்களைக் கூறிவிட முடியாது. கிரகங்களின் காரகத்துவமே இதற்கு விடை தரும்.
கிரகங்களும் அதற்குரிய காரகங்களும்...
அவரவர் பூர்வபுண்ணியத்தின் அடிப்படையில் ஒவ்வொருவருக்கும் பலன்களை வழங்கிடும் அதிகாரம் படைத்தவர்கள் சூரியன் முதல் கேது வரையிலான ஒன்பது கிரகங்கள்தான். இவர்களின் நிலையும் சஞ்சாரமுமே மனிதர்களை முன்னோக்கிக் கொண்டு செல்கிறது; பின்னோக் கியும் இழுத்து தண்டிக்கிறது.
நட்சத்திரங்களின் அதிபதிகளாக, ராசிகளின் அதிபதிகளாக, தசாபுத்திக்குரியவர்களாக உள்ள இந்த ஒன்பது கிரகங்களும் தங்களுக்கென்று தனித் தனி பணிகளை ஏற்று, அவற்றை ஜாதகர்களுக்கு செய்து வருகின்றன. இவற்றை ஜோதிடம் காரகர்கள் என்று கூறுகிறது.
அதன்படி, சூரியனானவர் ஆத்மாவுக்கும், தந்தைக்கும் (பிதுர்) காரகனாகிறார் என்று சுருக்கமாகச் சொல்லப்பட்டாலும், சுயநிலை, சுய உயர்வு, செல்வாக்கு, கௌரவம், ஆற்றல், வீரம், பராக்கிரமம், சரீர சுகம், நன்னடத்தை, அரசாங்க ஆதரவு, உஷ்ணம், ஒளி போன்ற அனைத்திற்கும் சூரியனே காரகனாகிறார்.
சந்திரன் உடலுக்கும், மனதிற்கும், தாய்க்கும் (மாதுர்) காரகனாகிறார் என்று சொல்லப்பட்டாலும், கடல் கடந்த பயணத் திற்கும், கலைச்சுவை நிறைந்த ரசனைக்கும், அறிவு, ஆனந்தம், புகழ், ஆற்றல், அழகு, நடுநிலைமை, நறுமணம், சுகபோகம் ஆகிய அனைத்திற்கும் சந்திரனே காரகனாகிறார்.
செவ்வாய், பூமிக்கும் சகோதரர் களுக்கும் காரகனாகிறார் என்று சொல்லப் பட்டாலும், உடலுறுதி, மனவுறுதி, பெருந் தன்மை, கண்டிப்பு, தொண்டு செய்தல், தலைமை வகித்தல், வைராக்கியம், பகைவ ரைப் பந்தாடும் பராக்கிரமம், அரசியல் தலைமை, காவல் அதிகாரி, நாட்டுத் தளபதி கள், நீதிபதிகள், பொறியியல் வல்லுநர்கள் ஆகியவற்றுக்கும் காரகம் வகிக்கிறார்.
புதன் கல்விக்கும் (வித்யா), மாமனுக்கும் (மாதுல) காரகனாகிறார் என்று சுருக்க மாகக் கூறப்பட்டாலும், அறிவு, கணிதம், தர்க்கம், வைத்திய அறிவு, நாடக அமைப்பு, நடன அமைப்பு, புத்தக வெளியீடு, நூலாக் கம், இருபொருள்பட பேசும் திறன், பளிச் சென்ற உச்சரிப்பு, நகைச்சுவைமிக்க நயமான பேச்சு, பேச்சாற்றல், மேதைகள் உருவாக்கம் ஆகியவற்றுக்கும் காரகம் வகிக்கிறார்.
குரு பொதுவாக தனத்திற்கும் புத்திரனுக் கும் காரகனாகிறார். மேலும் விவேகம், வித்தை, அந்தஸ்து, ஆற்றல் போன்றவற்றுக்கும், நாட்டை ஆளவைக்கும் பதவிக் கும், புதுப்புது உத்திகளுக்கும், மென்மைக் கும், தன்மைக்கும், தலைவணங்கா தலைமைக் கும் காரணமும் குரு பகவானே.
சுக்கிரன் களத்திரத்திற்கும் வாகனத் திற்கும் பொதுவாக காரகனாகிறார். மேலும் அழகு, ரசனை, விநோதம், அனைத்து இன்பங்களின் வித்து, நடனம், நாடகம், சினிமா, இசை, பெருந்தன்மை, ஒற்றுமை, மதிப்பு, மாபெரும் அதிர்ஷ்டம், ஆதாயம், வித்தைகள், உடலில் வீரியம், எதிர்பாலினரின் ஈர்ப்பு போன்றவற்றுக்குக் காரகம் வகிப்பதோடு, ஜனன உறுப்புகளைக் காப்போனும், சிற்றின்பத்தை நுகரவைப் போனும் சுக்கிரனே. சனி ஆயுளுக்குக் காரகனாகிறார்.
மேலும், இரும்பு, எண்ணெய், இயந்திரங்கள், இயந்திரச் சாலைகள் போன்றவற்றுக்கும் சனி பகவானே காரகனாகிறார்.
ராகு யோகத்திற்கும் போகத்திற்கும் காரகனாகிறார். மேலும், சூதாட்டம், கள்ளவழி, திருட்டு உறவு, ஏமாற்றுதல், தீயோர்கள் சேர்க்கை, எதிர்பாலினரால் சுகம், மிலேச்ச சகவாசம், விதவைகள் உறவு, தந்தைவழிப் பாட்டன் ஆகியவற்றுக்குக் காரகம் வகிக்கிறார்.
கேது ஞானத்திற்கும் மோட்சத்திற்கும் காரகனாகிறார். மேலும், விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம், பக்திநெறி, பக்திமார்க்கம், மதப்பற்று, உலக பந்தங்களிலிருந்து விடு விப்பு, கண்நோய், புண், காய்ச்சல், மருத்துவர் கள் உருவாக்கம், மனநோய், விபத்து, தகாத சகவாசம், தாய்வழிப் பாட்டன், வேதாந்த அறிவு போன்றவற்றுக்கும் காரகனாகிறார்.
நம்முடைய ஜாதகத்தில் ஸ்தானாதிபதி களின் நிலை கெட்டிருந்தாலும், காரகர்கள் பலம் மிக்கவர்களாக இருந்துவிட்டால், சுபர்களுடன் சேர்ந்தோ, சுபர்களின் பார்வை யுடனோ இருந்தாலும், ஆட்சி, உச்சம், நட்பு நிலையை அடைந்து நட்பு கிரகங் களின் சாரத்தில் இருந்தாலும் அந்த ஜாதகருக் குரிய பலன்கள் அமோகமாகவே இருக்கும்.
ஒன்பது கிரகங்களும் அவரவர் காரகப் பணியைச் செய்பவர்களாக இருந்தாலும், அவர்களது வலிமையை வைத்து, எந்த கிரகத்தைவிட எந்த கிரகம் வலிமை பெற்றது என்பதையும் பார்க்கவேண்டும். காரணம், கிரகங்கள் எல்லாம் சம வலிமையுடையவை அல்ல. ஒன்றைவிட ஒன்றுக்கு வலிமை அதிகம்.
கிரகங்களுக்குரிய வலிமை...
புதனைவிட செவ்வாய்க்கு வலிமை அதிகம். செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவைவிட சுக்கிரனும், சுக்கிரனைவிட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும், சூரியனைவிட ராகுவும், ராகுவைவிட கேதுவும் வலிமை மிக்கவை என்கிறது ஜோதிட சாஸ்திரம்.
கிரகங்களின் தன்மை
வளர்பிறைச் சந்திரன், பாவர்களுடன் சேர்க்கைபெறாத புதன், குரு, சுக்கிரன் ஆகியவற்றை சுப கிரகங்கள் என்கிறோம்.
சூரியன், சனி, செவ்வாய், ராகு- கேது, தேய்பிறைச் சந்திரன், பாவர்களுடன் சேர்க்கைபெற்ற புதன் ஆகியவற்றை அசுப கிரகங்கள் என்கிறோம்.
தனது வலிமையின் காரணமாகவும், தன்மையின் காரணமாகவும் நற்பலன் கொடுத்திடவேண்டிய ஒரு கிரகத்தை, தனது இணைவாலும் பார்வையாலும் மற்ற கிரகம் அடக்கித் தடுக்கலாம். அதனாலும் ஜாதகருக்கு கிடைத்திடவேண்டிய நற்பலன் கள் கிடைக்காமல் போகலாம். அதனால் ஜாதகர் சோதனைகளுக்கு ஆளாகலாம்.
நாம் முன்னர் சொன்ன தசாபுக்தியும், கிரகங்கள் அமர்ந்த இடத்திற்கேற்பவும், அவர்களுடன் இணைந்த- பார்த்த கிரகங் களுக்கேற்பவும் ஜாதகருக்கு யோகத்தையும், அவயோகத்தையும் வழங்கலாம்.
ஆட்சிபலம் பெற்ற, சுபஸ்தானத்தில் நின்ற, சுபர் பார்வை பெற்ற ஒரு கிரகத்தின் தசை ஜாதகருக்கு நடக்க ஆரம்பித்து விட்டால், அஷ்டமச் சனியாலும் அவரை வீழ்த்திடமுடியாது; ஜென்ம குருவாலும் அவரை விரட்டிட முடியாது.
பொதுவாக, எல்லா ஜாதகர்களுக்கும் அவர்களுடைய ஜாதகத்தில் யோகமும் உண்டு; அவயோகமும் உண்டு. முந்தைய ஜென்மங்களில் செய்த பாவங்களுக்கும் புண்ணியங்களுக்கும் ஏற்ப ஒவ்வொரு வருக்கும் பலன்கள் மாறுபடுவதும் உண்டு. ஒருசிலருக்கு எந்த ஜோதிடராலும் கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு அவர் களுடைய ஜாதகங்களில் கடுமையான தோஷங்கள் இருப்பதும் உண்டு. இத்தகைய தோஷமுடைய ஜாதகர்களுக்கு கிரகங்களால் கிடைத்திடவேண்டிய நற்பலன்கள் கடைசிவரை கிடைக்காமல் போவதும், அவர்களுடைய வாழ்க்கை எப்போதும் போராட்டமாகவும் சங்கடமுமாகவுமே இருப்பதும் உண்டு.
இதுதான் கடைசி பிறவி என்றான ஜாதகர்களுக்கு சங்கடங்கள், சிரமங்களாகவுமே இருக்குமே ஒழிய, துன்பம் மட்டுமே அவர்களுடைய வாழ்க்கையாக இருக்காது.
ஜாதகத்தில் ஒன்பது கிரகங்களில் எட்டு கிரகங்கள் கெட்டுபோய் ஒருவருக்கு பாதகமான பலன்களை வழங்கி வந்தாலும், ஏதாகிலும் ஒரு கிரகம் அவருடைய ஆயுள் முடியும்வரை அவர் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை வழங்கிடக்கூடிய நிலையில் இருக்கும்.
ஜாதகர்களுக்குள் ஒருவருக்கு தொடர்ந்து நன்மைகள் உண்டாகி வருவதற்கும், மற்றவருக்கு சங்கடமே வாழ்க்கையானதுபோல் தெரிவதற்கும்- பிறந்த நேர ஜாதகத்தில் அமைந்த கிரகங்களும், தசையும் புக்தியும், கோட்சாரத்தில் சஞ்சரிக்கும் கிரகங்களின் நிலைகளுமே காரணமாக இருக்கின்றன.
தசாபுக்திகள் பாதிப்புகளை வழங்கிடும் நிலையில் இருந்தாலும், கோட்சாரத்தில் கிரகங்கள் நன்மைகளை வழங்கிடும் இடத்தில் சஞ்சரிக்கும் நிலையில், ஜாதகர்கள் அனுபவித்து வரும் சங்கடங்களிலிருந்து விடுபட்டு நன்மைகளைக் காண்பார்கள்.
தசாபுக்தியும், கோட்சார கிரகங்களும் ஒன்றுசேர்ந்து நன்மைதரும் நிலையில் இருந்துவிட்டால், அக்காலத்தைதான் ஜாதகருக்கு யோககாலம் என்று சொல்ல வேண்டும்.
இவைதான் அடிப்படை ஜோதிட ரகசியங்கள்.