ஜோதிடம் என்பது மந்திரமோ தந்திரமோ அல்ல. அதுவொரு அறிவியல், வான சாஸ்தி ரம். ஏழாயிரம் ஆண்டு களுக்கு முன்னர் வாழ்ந்த மக்கள் ஜோதிடத்தை பொக்கிஷமாக எண்ணி வாழ்ந்துள்ளனர் என்பதை அறியமுடிகிறது. ஜோதிடர் என்பவர் வரம்கொடுக்கும் கடவுளோ, சித்துவேலைகள் செய்யும் மந்திரவாதியோ அல்ல. ஜோதிடம் என்னும் வான சாஸ்திரத்தை, அறிவியலைக் கற்றுத் தேர்ந்தவர்.

ஒரு குழந்தை பிறக்கும் நேரத்தில் வானில் சஞ்சரிக்கும் ஒன்பது கிரகங்களின் நிலையை வைத்தும், அந்த நேரத்தில் எந்த ராசியில் லக்னம் உள்ளது என்பதை வைத்தும் கணிக்கப்படுவதே நம்முடைய ஜாதகமாகும். துல்-யமாகக் கணித்த ஜாத கத்தை வைத்து சொல்லப்படும் பலன்கள் பெரும்பாலானவர்களின் வாழ்க்கையில் இன்றுவரை மிகச் சரியாகவே உள்ளன.

ஒருவரின் பிறப்பு ஜாதகத்தை வைத்தே, அவருடைய பிறப்புக்கும் மறைவுக்குமான இடைப்பட்ட காலத்தின் வாழ்க்கையைத் தெரிந்துகொள்ள முடியும்.

ஒருவரின் பிறந்தநாள், நேரம், மாதம், வருடத்தை வைத்தே அவருடைய ஜாதகம் கணிக்கப்படுகிது.

Advertisment

ஜாதகம் கணிப்பதற்கு பிறந்த நேரம் என்பது மிகமிக முக்கியமானது. காரணம், அன்றைய தினத்தில் அந்த நேரத்தில் சந்திரன் எந்த ராசியில், எந்த நட்சத்திரத் தில், எத்தனையாவது பாதத்தில் சஞ்சரித்தார் என்பதை வைத்தே ஜாதகரின் தசாபுக்தி யைக் கணக்கிடமுடியும். அத்துடன் லக்னத் தையும் குறிக்கமுடியும்.

குழந்தை பிறந்த நேரத்தில் சந்திரன் எந்த ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருந்தாரோ அந்த ராசியையே அந்தக் குழந்தையின் ராசியாகக் காண்கிறோம்.

தசாபுக்தி

Advertisment

ஜாதகத்தில் மிகவும் முக்கியமானது தசாபுக்தியாகும். இதற்கு ஆதாரம் பிறந்த நட்சத்திரமாகும்.

உதாரணமாக, மேஷ ராசி, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜனனகால தசையாக கேது தசை வரும். அதுவே மேஷ ராசி, பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஜனனகால தசையாக சுக்கிர தசை வரும். கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சூரிய தசை வரும்.

இந்த மூன்று நட்சத்திரத்தினரும் பிறந்தது மேஷ ராசிதான் என்றாலும், அவர்கள் பிறந்த நட்சத்திரத்தை வைத்தே என்ன தசை- அதில் என்ன புக்தி தொடங்கியது, தற்பொழுது என்ன தசை- என்ன புக்தி நடக்கிறது என்பதை அறியலாம். அந்த தசாநாதனும் புக்திநாதனும் அவரவர் ஜாதகத்தில் எந்த நிலையில், யாருடைய வீட்டில், யாருடைய பார்வையில் அமர்ந்திருந்தனர் என்பதையெல்லாம் வைத்து அதற்கேற்பவே அவரவர்களுக்குரிய பலன்களும் அமையும்.

ஒரே ராசியில் பிறந்தவர்கள்தான் என்றா லும் வெவ்வேறு பலன்கள் உண்டாவதற்குக் காரணம், நட்சத்திரம் வேறுபடுவதும் அதற் கேற்ப தசாபுக்தி மாறுவதும்தான். தசாபுக்தி யும் எல்லாருக்கும் முழுமையாக அமைந்து விடுமா என்றால் அதுவுமில்லை. நாம் பிறக்கும் நட்சத்திரத்தில் நான்கு பாதங்கள் உண்டு.

ஒரு நட்சத்திரத்தின் காலம் அறுபது நாழிகை என்றே வைத்துக்கொள்வோம். இந்த அறுபது நாழிகையில் அந்த நட்சத்திரம் தொடங்கிய நேரத்தில் இருந்து முதல் பதினைந்து நாழிகை முதல் பாதமாகும். அடுத்த பதினைந்து நாழிகை இரண்டாம் பாதமாகும். அதற்கடுத்த பதினைந்து நாழிகை மூன்றாம் பாதமாகும். கடைசி பதினைந்து நாழிகை நான்காம் பாதமாகும்.

இந்த நட்சத்திர பாதங்களை வைத்துதான் தசாபுக்தி இருப்பில் வேறுபாடுகள் உண்டாகின்றன. அதற்கேற்ப ஒரே ராசி, ஒரே நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் பலன்கள் மாறிப் போகிறது.

உதாரணமாக, ஒருவர் பரணி நட்சத்திரத் தில் முதலாவது பாதத்தில் பிறக்கிறார் என்றால், அவருக்கு சுக்கிர தசை இருப்பு பதினைந்தி-ருந்து இருபது வருடங்கள்கூட இருக்கும். இரண்டாவது பாதத்தில் பிறக்கிறார் என்றால் அதே சுக்கிர தசை அவருக்கு பத்தி-ருந்து பதினைந்து ஆண்டு காலம்தான் இருப்பு இருக்கும். மூன்றாம் பாதத்தில் பிறப்பவருக்கு ஐந்தி-ருந்து பத்தாண்டு காலமும், நான்காம் பாதத்தில் பிறப்பவருக்கு ஒரு நாளி-ருந்து ஐந்தாண்டு காலமும்தான் இருப்பு இருக்கும்.

பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களை உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அந்த நட்சத்திரத்தின் தொடக்கத்தில் பிறக்கும் ஒருவருக்கு, அவருடைய இருபதாவது வயதில் தான் அதற்கு அடுத்த தசையான சூரியதசை வரும். பரணி நட்சத்திரத்தின் கடைசியில் பிறக்கும் ஒருவருக்கு இரண்டாவது வயதில் கூட சூரியதசை வந்துவிடும். அதனால் அவரு டைய நடப்பு தசைக்கும் புக்திக்கும் ஏற்பவே அவருக்கு நன்மைகளும் தீமைகளும் உண்டா கும். அதனால், ஒரே ராசி, ஒரே நட்சத்திரத் தில் பிறந்தவராகவே இருந்தாலும் ஒவ்வொரு வருக்கும் பலன்கள் மாறுபடும்..

சாரபலன்...

நாம் ஒருவரின் ஜாதகத்தை மேலோட்ட மாகப் பார்த்ததும் என்ன சொல்வோம்? சூரியன் ஆட்சியாக இருக்கிறார், குரு ஆட்சி யாக இருக்கிறார், சனி உச்சமாக இருக்கிறார், செவ்வாய் பகையாக இருக்கிறார் என்று அவர்கள் அமர்ந்துள்ள ராசி வீடுகளை வைத்து சொல்-விடுவோம். ஆனால், இங்கேயும் ஒரு தகவல் உண்டு.

உதாரணத்திற்கு குரு பகவானை எடுத்துக் கொள்வோம். அவருடைய ஆட்சி வீடு மீனம்.

jj

இதைவைத்து அவர் ஆட்சியாக இருக்கிறார் என்று தெரிந்தாலும், குருவின் சஞ்சாரப் பயணத்தில் மீன ராசிக்குள் அவர் பூரட்டாதி யின் நான்காம் பாதத்தில் பிரவேசித்து உத்திரட்டாதி, ரேவதி என்று கடந்துதான் மேஷத்திற்குச் செல்வார். இதனால் மீனத்தில் இருக்கும் குரு பகவான் ஒருவருக்கு பூரட்டாதி யிலும், அடுத்தவருக்கு உத்திரட்டாதியிலும், அதற்கடுத்தவருக்கு ரேவதியிலும் இருக்கலாம். எனவே ஒரு கிரகம் சஞ்சரிக்கும் ராசியை வைத்து மட்டும் சரியான பலன்களைக் கூறிவிட முடியாது.

மீன ராசிக்குள் உள்ள மூன்று நட்சத்திரங் களும் வெவ்வேறு கிரகங்களுக்குரியவையாகும். பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி குரு பகவனே ஆவார். அவர் மீன ராசியில் தன்னு டைய நட்சத்திர சாரத்திலேயே சஞ்சரிக்கும் போது அபரிமிதமான சுபப் பலன் கொண்ட வராகிவிடுவார். அவரே மீன ராசியில் உத்திரட் டாதி நட்சத்திரத்தின் சாரம் பெறும்போது, உத்திரட்டாதிக்குரிய சனிபகவானின் நிழல் அவர்மீது படிந்துவிடுகிறது. அதேபோல் அவரு டைய மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தின் சாரத்தில் அவர் சஞ்சரிக்கும்போது, ரேவதி நட்சத்திரத்திற்குரிய புதன் பகவானின் ஆதிக்கத் திற்கு அவர் ஆளாகிவிடுகிறார். இதன் காரணமாகவே கிரகங்கள் எந்த நிலையில் எந்த வீட்டில் சஞ்சரித்தாலும், அவர்கள் எந்த நட்சத்திரத்தின் சாரத்தில் சஞ்சரிக்கிறார்கள் என்பதைப் பார்த்தால்தான் முழுமையான பலன்களைக் காணமுடியும்.

ராசியாதிபதிகள்

மேஷம்முதல் மீனம்வரையிலுள்ள பன்னிரண்டு ராசிகளுக்கும் ஆட்சியாளர்களாக ஒவ்வொரு கிரகங்களும் உள்ளன. சூரியனுக்கு ஆட்சி வீடு சிம்மம், உச்ச வீடு மேஷம். சந்திரனுக்கு ஆட்சி வீடு கடகம், உச்ச வீடு ரிஷபம். செவ்வாய்க்கு மேஷமும் விருச்சிகமும் ஆட்சி வீடுகள், மகரம் உச்ச வீடு. புதனுக்கு மிதுனம் ஆட்சி வீடு, கன்னி உச்ச வீடு. குரு பகவானுக்கு தனுசும் மீனமும் ஆட்சி வீடுகள், கடகம் உச்ச வீடு. சுக்கிரனுக்கு ரிஷபமும் துலாமும் ஆட்சி வீடுகள், மீனம் உச்ச வீடு. சனி பகவானுக்கு மகரமும் கும்பமும் ஆட்சி வீடுகள், துலாம் உச்ச வீடு.

மேற்கண்ட ஏழுகிரகங்கள் மட்டுமே பன்னிரண்டு வீடுகளையும் தங்களுக்குரிய ஆட்சிவீடுகளாகப் பிரித்துக்கொண்டுள்ளன. ராகு - கேதுக்கள் நிழல் கிரகங்கள் என்பதால், அவர்கள் சஞ்சரிக்கும் ராசியாதிபதியின் தன்மையைப் பெற்று அவர்கள்போல் பலன் வழங்குவார்கள் என்றும், ராகு- சனிபகவானின் தன்மையையும், கேது- செவ்வாய் பகவானின் தன்மையையும் கொண்டவர்கள் என்றும் ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

ஆட்சி வீடுகளில் உள்ளவர்கள் நன்மை செய்வார்கள் என்பது பொதுவான விதி. எனினும் அவர்களுடைய ஆட்சி வீட்டிலும் அவர்கள் எந்த சாரத்தில், நட்சத்திரத்தில் சஞ்சரிக்கின்றனர் என்பதை வைத்தே பலன்களை முழுமையாக அறியமுடியும்.

நட்சத்திர அதிபதிகள்

பன்னிரண்டு வீடுகளையும் ஏழு கிரகங்கள் தங்கள் ஆட்சிக்குரிய வீடுகளாகக் கொண்டுள்ள நிலையில், அஸ்வினிமுதல் ரேவதிவரையிலான இருபத்தேழு நட்சத்திரங்களும் ஒன்பது கிரகங்களுக்குரியவையாக உள்ளன.

கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய மூன்றும் சூரியனுக்குரிய நட்சத்திரங்களாகவும்; ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை சந்திரனிற்குரிய நட்சத்திரங்களாகவும், மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகியவை செவ்வாய்க்குரியவையாகவும்; திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை ராகுவுக்குரியவை யாகவும்; புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை குருவுக்குரியவையாகவும்; பூசம், அனுஷம், உத்ரட்டாதி ஆகியவை சனி பகவானுக்குரியவையாகவும்; ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை புதனுக்குரியவை யாகவும்; அஸ்வினி, மகம், மூலம் மூன்றும் கேதுவுக்குரியவையாகவும்; பரணி, பூரம், பூராடம் ஆகிய மூன்றும் சுக்கிரனுக்குரிய நட்சத்திரங்களாகவும் உள்ளன.

மேஷ ராசியென்பது செவ்வாயின் ஆட்சி வீடு என்றாலும் அங்கே அவர் கேதுவின் அஸ்வினி சாரத்திலும், பரணியின் சுக்கிரன் சாரத் திலும், கிருத்திகையின் சூரிய சாரத்திலும்தான் சஞ்சரிப்பார். அதேபோல் செவ்வாயின் மற்று மொரு ஆட்சிவீடான விருச்சிகத்தில் அவர் சஞ்சரித்தாலும் குருவின் விசாகம் சாரத்திலும், சனியின் அனுஷம் சாரத்திலும், புதனின் கேட்டை சாரத்திலும்தான் சஞ்சாரிப்பார்.

அதேபோல் ஒவ்வொரு கிரகமும் அவர் களுடைய ஆட்சி வீடுகளில் சஞ்சரித்தாலும், அந்த வீடுகளிலுள்ள தங்களுடைய சுய நட்சத் திரத்தின் சாரத்திலோ அல்லது நட்பு நட்சத் திரத்தின் சாரத்திலோ, பகை நட்சத்திரத்தின் சாரத்திலோதான் சஞ்சரிப்பார்கள்.

தங்களுடைய ஆட்சி வீடுகளில் கிரகங்கள் சஞ்சரிப்பதுபோல் பகை வீடுகளில் சஞ்சரிக் கும்போதும் தம்முடைய சுய சாரத்திலோ அல்லது நட்பு சாரத்திலோ, பகை சாரத்திலோ தான் சஞ்சரிப்பார்கள். அதற்கேற்பவே நம் பலன்கள் உண்டாகும்.

தசாபுக்தியும் கோட்சாரமும்

ஜாதகரீதியாக ஒருவர் அடையப்போகும் பலன் எத்தகையதாக இருக்கும் என்பதை அவருக்கு நடக்கும் தசையை வைத்து ஐம்பது சதவிகிதமும், புக்தியை வைத்து இருபத்தைந்து சதவிகிதமும், கோட்சாரப் பலன்களை வைத்து இருபத்தைந்து சதவிகிதமும் தெரிந்துகொள்ள முடியுமென்பது ஜோதிட வல்லுநர்களின் கருத்து.

தசாநாதன் நற்பலன்களை வழங்கிடக்கூடிய நிலையில் ஒருவருக்கு இருந்துவிட்டால், கோட் சாரப் பலன்களால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் ஜாதகரை நெருங்காது என்றுகூட சொல்லலாம்.

தசாநாதன் நட்பாக, ஆட்சியாக, உச்சமாக அமையப்பெற்றவர்களும் சரி; பகையாக, வக்ரமாக, அஸ்தங்கமாக அமையப் பெற்றவர் களும் சரி- அவர்கள் பெற்றுள்ள சார பலன்களுக் கேற்பவே பலன்கள் கிடைக்கப்பெறுவார்கள்.

இதற்கு மேலாகவும், முதன்மையாகவும் ஒவ்வொருவருக்கும் காணவேண்டியது லக்னமாகும்.

லக்னப் பலன்

ஜாதகத்தில் ஒருவரின் லக்னம் என்னவாக அமைந்துள்ளதோ அதை வைத்துதான் அந்த ஜாதகரின் முழுமையான பலன்களைத் தெரிந்துகொள்ள முடியும்.

லக்னம் என்பது சூரியனின் சஞ்சாரத்தை வைத்துக் கணக்கிடப்படுவதாகும். ஒரு ஆண்டின் தொடக்கமான சித்திரை மாதத்தில் மேஷ ராசியில் சஞ்சரிக்கும் சூரிய பகவான், ஒரு மாதம் முழுவதும் அந்த ராசியில் இருந்துவிட்டு, வைகாசி மாதம் முதல் தேதியன்று ரிஷப ராசிக்குள் பிரவேசிப்பார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் சூரிய பகவான், பங்குனி மாதம் முழுவதும் மீன ராசியில் சஞ்சரித்து மீண்டும் சித்திரை முதல் நாளன்று மேஷ ராசிக்கு வருவார்.

இப்படி சஞ்சரிக்கும் சூரிய பகவான், ஒவ்வொரு நாளும் எந்த ராசியில் இருக்கி றாரோ அந்த ராசியில் முதல் லக்னம் தொடங்கி அன்று முழுவதும் பன்னிரண்டு ராசிகளுக்கும் லக்னம் கணக்கிடப்படும்.

உதாரணத்திற்கு சித்திரை மாதம் முதல் தேதியில் மேஷ ராசியில் சூரியன் இருப்பார். அன்று காலை 7.49 மணிவரை பிறக்கும் குழந்தை மேஷ லக்னத்தில் பிறந்ததாகக் கணக்கிடப்படும். 7.49 முதல் 9.43-க்குள் பிறக் கும் குழந்தை ரிஷப லக்னத்தில் பிறந்ததாகக் கணக்கிடப்படும், 9.43 முதல் 11.49 வரை பிறக்கும் குழந்தை மிதுன லக்னத்தில் பிறந்ததாகக் கணக்கிடப்படும்.

இப்படி, நாள்தோறும் எந்த நட்சத்திரத்தில் எந்த ராசியில் பிறந்தாலும் நட்சத்திரமும் ராசியும் ஒன்றாக இருக்குமே ஒழிய, லக்னமென்று பார்க்கும்போது பன்னிரண்டு லக்னங்களில் ஏதாகிலும் ஒன்றில் பிறப்பு நிகழ்ந்திருக்கும்.

தொடர்ச்சி அடுத்த இதழில்...

செல்: 94443 93717