சுபகிரகம் அதிசாரம் பெற்றாலும், பாவ கிரகம் வக்ரம்பெற்றாலும் அந்த காலகட்டத்தில் புவியில் மக்களுக்கு பலவித துயரங்கள் ஏற்படுகின்றன. உயிரிழப்புக்களும், இயற்கை சீற்றங்களும் இந்த வேளையில் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன.

ஒரு ஜாதகத்தில் இரண்டாம் வீட்டுக்குடைய கிரகம் வக்ரம்பெற்றால் அவன் வாழ்வில் எல்லா செல்வங்களையும் பெற்றவனாகிறான். அதேவேளையில் ஏழாம் வீட்டிற்குடையவன் வக்ரம் பெறுவது, மீண்டும் திருமணத்தைத் தருகிற அமைப்பாகும்.

ss

குருபகவான் அதிசாரத்தால் மூன்று ராசிகளை ஒரே வருடத்தில் கடந்தபோதுதான் "கொரோனா' என்னும் பேரச்சம் தோன்றியது குறிப்பிடத்தக்கது - வக்ரம்பெற்ற கிரகம் உச்சபலனைத் தருமென்ற கருத்தும் உள்ளது. பிரசன்ன ஜாதகத்தில் ஆறாம் வீட்டுக்குடையவன் வக்ரம்பெற்றால், ஆறாம் வீட்டோன் குறிகாட்டும் நோய் எதுவோ அது மீண்டும் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

காணாமல் சென்றவரைக் குறித்த பிரசன்ன ஆரூடத்திற்கு, ஏழாம் வீட்டிற்குடையவன் எப்போது வக்ரம் பெறுகிறானோ அப்போது அவர் வீட்டிற்குத் திரும்பிவருவார் என கூறவேண்டும் என பிரசன்ன சாத்திரம் சொல்கின்றது. வக்ர கிரகம் குறி காட்டுகிற எந்த ஒரு நிகழ்வும் மீண்டும் நிகழ்வதற்கான வாய்ப்புள்ளது.

Advertisment

திருட்டைக் குறித்த பிரசன்னத் தில் ஆரூடாதிபதி வக்ரம் பெற்றாலும், ஆரூடத்தை வக்ர கிரகம் பார்த்தாலும் மீண்டும் திருட்டு நடப்பதற்கு வாய்ப்புள்ளது என்று உணரவேண்டும். ஒரு திருட்டில் சம்பந்தமுடைய திருடனின் வடிவத்தை பிரசன்னத்தால் கண்டறிய முடியுமா என்றால், நிச்சயமாக முடியுமென்று சாஸ்திரங்கள் சொல்கின்றன. வராகமிஹிரர் தனது பிரஹத் ஜாதக நூலில் 36 வடிவங்களைக் கூறுகிறார். ஒரு ராசியை மூன்று பகுதிகளாகப் பிரித்து, அவற்றிற்கு திரேக்காண வடிவம் என பெயரிட்டு, ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு வடிவத்தைச் சொல்லிருக்கிறார்.

இவற்றின்மூலமாக நாம் ஒரு நிகழ்வில் சம்பந்தமான நபர் அல்லது திருட்டில் சம்பந்தமான திருடனின் வடிவத்தைக் கண்டறியமுடியும்.

தொலைந்த பொருளைக் குறித்த பிரசன்னத்தில், பொருளானது திருடப்பட்டது என்று சாஸ்திரத்தால் நிச்சயம் செய்தபோது, ஆரூடத்தில் அல்லது உதய லக்னத் தில் உதயமான திரேக்காண வடிவத்தால் திருடிய நபரின் பெயர், வடிவு, அவர் சார்ந்த தொழில் இவற்றைக் கண்டறியமுடியும். இதற்கு ஆழமான சாஸ்திரப் பயிற்சியும் குருமுகமான பயிற்சி யும் தேவை.

Advertisment

குருபகவான் வக்ரம்பெறும் வேளை, நவாம்ச சக்கரத் தில் உச்சவீடு, சொந்த வீடு, நட்பு வீட்டில் அமர, ராசிக் கட்டத்தில் குருபகவான் அமர்ந்த ராசியை லக்னமாகக்கொண்டு தங்கம் வாங்கினால் தங்கம் பெருகிக்கொண்டே செல்லும்.

வக்ரம்பெற்ற சுப கிரகத்தின் பார்வையைப் பெற்ற லக்னத்தில் முகூர்த்தம் அமைத்தால் நற்பலன்கள் மீண்டும் மீண்டும் நடக்குமென்று நாம் எடுத்துக்கொள்ள லாம். மாறாக வக்ரம்பெற்ற பாவ கிரகமானது பார்க்கின்ற ராசியை லக்னமாகக்கொண்டு சுபகாரியங்களைச் செய்தீர்கள் என்றால், மீண்டும் மீண்டும் துன்பங்களும், திருட்டும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.

பொதுவாக பாவ கிரகத்தினுடைய பார்வை, சேர்க்கையுள்ள லக்னங் களில் முகூர்த்தம் அமைக் காமல் இருப்பதுவே நலம். முகூர்த்த சாஸ்திரம் மற்றொரு கருத்தையும் பதிவுசெய்கிறது. அதாவது ஒரு ராசியில் பாவ கிரகம் இருக்க, அந்த கிரகம் அந்த ராசியைவிட்டு விலகினாலும், அந்த ராசியில் ஒரு சுப கிரகம் வந்தால் மட்டுமே அந்த ராசி முகூர்த்தம் அமைப் பதற்கு ஏற்புடை யது என முகூர்த்த சாஸ்தி ரம் கூறு கிறது.

செல்: 4438 08596