ளி கிரகமான சூரியன் தனக்கு மிக அருகில் செல்லும் கிரகங்களைத் தங்கள் சுய ஒளியை இழந்து அஸ்தங்கம் அடையச் செய்வார். சந்திரன், ராகு- கேது தவிர பிற கிரகங்களான செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்றவை சூரியனுக்கு ஒரு குறிப்பிட்ட பாகைக்குள் கூடும்போது தங்கள் சுய பலத்தை (ஒளியை) இழந்து அஸ்தமனம் அல்லது அஸ்தங்கம் என்னும் நிலையை அடைகின்றன. அவ்வாறு அஸ்தங்கம் அடையும் கிரகம் தனது சுயத்தன்மையை இழக்கிறது. சுய ஒளியை இழக்கும் கிரகங்கள் தங்கள் ஆதிபத்திய காரக பலத்தையும் இழக்கும். அஸ்தங்க கிரகங்கள் கோட்சாரங்களிலும் தசாபுக்திக் காலங்களிலும் நன்மை தரும் வாய்ப்பு குறைவு.

அதன்படி லக்னாதிபதி அஸ்தங்கம் அடைந்தால் ஜாதகரின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்காது. முன்னேற்றம் குறையும். பெயர், புகழ், அந்தஸ்தை அடையமுடியாது. எதையும் சமாளிக்கும் திறனிருக்காது. தாழ்வு மனப்பான்மை நிறைந்தவர். ஆன்மபலம் குறையும். சுய முடிவெடுக்கத்தெரியாது. பிறரின் ஆலோசனையையும் கேட்கமாட்டார்கள். எதிர்காலம், பொருளாதாரம் பற்றிய சிந்தனை, பயம் இருந்துகொண்டே இருக்கும்.

dd

Advertisment

தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி அஸ்தங்கம் பெற்றால் குடும்பத்தினரின் ஆதரவிருக்காது. போதிய வருமானம் கிடைக்காது. நிலையற்ற வருமானத் தால் கஷ்ட ஜீவனத்தில் வாழ்வார். அதிகநேரம் உழைத்தாலும் சொற்ப வருமானமே கிடைக்கும். பேச்சில் நிதானமிருக்காது. குடும்பத்தைப் பிரிந்துவாழும் நிலை ஏற்படும். குடும்ப உறுப்பினர்களிடம் மதிப்பு, மரியாதை இருக்காது. நேரத்திற்கு நல்ல சாப்பாடு கிடைக்காது.

சகாய ஸ்தானாதிபதி அஸ்தமனமானால் திட்டமிட்டு செயல்படத் தெரியாது. ஞாபக சக்தி குறையும். வீரம், விவேகம் இருக்காது. பல நேரங்களில் அசட்டு தைரியத்தில் பிரச்சினைகளில் சிக்கிக்கொள்பவராகவும் இருப்பார். காது, மூக்கு, தொண்டைப் பிரச் சினை இருக்கும். அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறு ஏற்படும். உடன்பிறந்த வர்களின் அனுசரணை குறையும். அடிக்கடி இடப்பெயர்ச்சி செய்ய நேரும். ஆண்களுக்கு வீரியம் குறைவுபடும்.

நான்காமதிபதி அஸ்தங்கம் அடைந்தால் தாயன்பு கிடைக் காது. சமயோசித புத்தியும், சாதுர்யமும் இருக்காது. பள்ளிப் படிப்பை முடிப்ப தில் அதிக சிரமம் இருக்கும்.

விவசாயம், ரியல் எஸ்டேட் டில் நட்டம் உண்டாகும். கால்நடை பாக்கியம் குறைவு படும். வீட்டு விலங்குகள் வளர்ப்பில் பாதிப்பு ஏற்படும். வீடு, வாகன யோகம் குறைவுபடும். ஆரோக்கியக் குறைபாடு இருந்துகொண்டே இருக்கும்.

ஐந்தாமதிபதிக்கு அஸ்த மன பாதிப்பிருந்தால் கரு தங்காது.

பிள்ளைகளால் மன வருத்தம் மிகுதியாகும். குலதெய்வம் தெரியாது அல்லது குலதெய்வ அனுக்கிரகம் குறையும். அதிர்ஷ்டம் குறைபடும். பூர்வீகத்தில் வசிக்கமுடியாது. பூர்வீகச் சொத்து கிடைக்காது அல்லது பயன்படாது.

பங்குச் சந்தை கொடுத்துக் கெடுக்கும். வீண் விரயங்களும், துயரங்களும் அதிக மாகும். புண்ணிய காரியங்களில், தானம், தர்மம் செய்வதில் ஆர்வம் குறையும். பணிவும் அடக்கமும் இருக்காது. காதல் திருமணத்தால் வாழ்க்கையை இழப்பார்கள்.

ஆறாமதிபதி அஸ்தமனம் அடைந்தால் நிலையான உத்தியோகம் இருக்காது. தாய்மாமனுக்கு ஆரோக்கியக் குறைபாடிருக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்காது அல்லது வாராக்கடன் அதிகமாக இருக்கும். எல்லாரிடமும் பகையையும் வெறுப்பையும் எளிதில் சம்பாதிப்பார்கள். நோயும் ஜாதகரும் இரட்டைப் பிறவிகள். உடலில் ஏதாவது நோய்த்தொல்லை இருந்துகொண்டே இருக்கும். பிறர்மீது குற்றம் கண்டுபிடிப்பது மற்றும் பிறர் பொருளின்மீது ஆசைப்படுவது போன்ற குணங்கள் இருக்கும். எதிலும் திருப்தியடையாதவராக இருப்பார். அனைத்திலும் குறைபட்டுக்கொண்டே இருப்பார். சுயதொழில் சிறப்பில்லை. தனது தோல்விக்குதானே காரணமாக இருப்பார். முதலீடு இல்லாத தொழில் அல்லது அடிமை உத்தி யோகமே சிறப்பு. கடனாளி யாக, நோயாளியாக எதிரிகள் மத்தியில் வாழ்வார்கள்.

ஏழாமதிபதி அஸ்தங்கம் பெற்றால் உரிய வயதில் திருமணம் நடக்காது.

அல்லது வாழ்க்கைத்துணை யின் ஆரோக்கியம் குறைவு படும். தம்பதிகளுக்குள் கருத்து வேறுபாடு மிகுதியாக இருக்கும். வெகுசிலருக்குத் திருமணமே நடக்காது. வாடிக்கையாளர்கள், நண்பர் கள், தொழில் கூட்டாளிகளால் அதிருப்தி உண்டாகும். சமுதாய அங்கீகாரம் கிடைக்காது.

அஷ்டமாதிபதி அஸ்தமன தோஷம் பெற்றால் ஆயுள் குறைபாடிருக்கும். தீராத பிரச்சினைகள், வைத்தியத்திற்குக் கட்டுப் படாத- இனம் காணமுடியாத நோய்த் தாக்கம் இருக்கும். வழக்குகளில் வெற்றி கிடைக்காது. வாழ்க்கையே போராட்டமாக இருக்கும். தாழ்வு மனப்பான்மை மிகுந்தவர்கள். விரக்தி அதிகமிருக்கும். வாழ்க்கையானது அவமா னம், கேவலம், துக்கம் நிறைந்ததாக இருக்கும். அங்கஹீனம், திருட்டுத்தனம் உண்டு. இழப்புகள் அதிகமிருக்கும். சட்டத்திற்குப் புறம்பான சமூகவிரோத செயல்களில் ஈடுபடுவார்கள். அடிக்கடி விபத்துகளில் சிக்குவார்கள். நீதிமன்றம், வழக்கென்று அலைந்துகொண்டிருப்பார்கள். அதிர்ஷ்டத்தை நம்பிப் பிழைப்பார்கள். வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பு.

பாக்கியாதிபதி அஸ்தமன தோஷத்தால் பாதிக்கப்பட்டால் தந்தையின் ஆரோக்கியம் பாதிப்படையும். தந்தை, தந்தைவழி உறவுகளிடம் மனபேதம் இருக்கும். பித்ருக்களின் நல்லாசிகள் கிடைக்காது அல்லது பித்ருக்கடன் நீக்காதவர்கள். வெளியூர், வெளிமாநிலம், வெளிநாட்டில் அந்தியர்கள் மத்தியில் வாழும்நிலை உண்டாகும். ஆச்சாரம் குறைவுபடும். குல கௌரவம் குறையும்.

தொழில் ஸ்தானாதிபதி அஸ்தங்கம் அடைந்தால் படித்த படிப்பிற்கு சம்பந்தமில்லாத தொழில், உத்தியோகம் உண்டு. சுயதொழில்மூலம் இழப்புண்டு. அடிமைத் தொழிலில் கடினமான உழைப்பாளியாக இருப்பார்கள்.

குறுக்குவழியில் முன்னேற்றமடைய விரும்புவார்கள். முக்கிய குடும்ப உறவுகளின் கர்ம காரியங்களில் கலந்துகொள்ளமுடியாது.

லாப ஸ்தானாதிபதி அஸ்தமனத்தால் பாதிக்கப்பட்டால் சேமிப்பிருக்காது. பல தொழில் அனுபவம், ஞானம் இருக்காது. கல்லா நிறையாது. செல்வம், செல்வாக்கு இருக்காது. மூத்த சகோதர- சகோதரிகள், சித்தப்பாவின் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்காது. எத்தனை திருமணம் செய்தாலும் திருமண வாழ்க்கை தோல்வியில் முடியும். இரண்டாம் திருமணத்தால் துரோகத்தை சந்திக்க நேரும்.

பன்னிரண்டாமான அயன, சயன, விரய ஸ்தானம் அஸ்தங்கமானால் ஜாதகர் தனது செயல்பாடுகளால் நிறைய விரயங் களை உண்டாக்குவார். வரவுக்கு மீறி செலவு செய்வார். கட்டுக்கடங்காத விரயம் இருந்து கொண்டே இருக்கும். சேமிக்கும் பழக்கம் இருக்காது. வீண் வம்பு, வழக்கு, விரோதங் களைத் தானே உருவாக்குவார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார். தீயபழக்கம் அதிகம் நிறைந்தவர்.

பிறர்மீது நம்பிக்கை இல்லாதவராக இருப் பார். வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனமாக அடுத்தவரை நம்பியே பிழைக்கிறார்கள்.

சூரியனுக்கு முன்பின் 12 டிகிரிக்குள் சந்திரன் வரும்போது அஸ்தங்கம் அடைந்து அமாவாசை உண்டாகிறது. சூரியனுக்கு 17 டிகிரிக்குள் செவ்வாய் வரும்போது அஸ்தங்கம் அடைகிறார். ஆண்களுக்கு உடன்பிறந்த சகோதரத்திடமும், பெண்களுக்கு வாழ்க்கைத்துணை அல்லது சகோதரரிடமும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. ரத்த சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகிறது.

சூரியனுக்கு 14 டிகிரிக்குள் புதன் வரும்போது அஸ்தங்கமாகிறார். சூரியனும் புதனும் இணைவு பெறும்பொழுது அஸ்தமனத்தை அடைந்தாலும் பெரும் பாதிப்பைத் தருவதில்லை. புதாதித்ய யோகத்தை அளிக்கிறது. சிலருக்கு புதன் நின்ற நட்சத்திர சாரம், இணைந்த பிற கிரகங்களின் அடிப்படையில், கல்வியில் தடை, தாய்மாமனுக்கு தோஷம் ஏற்படும்.

சூரியனுக்கு 11 டிகிரிக்குள் குரு இணைந்தால் புத்திர தோஷம், புத்திரபாக்கியப் பிரச்சினை, பணப் பிரச்சினை, வாழ்வில் முன்னேற்றமற்ற நிலை உண்டாகும்.

சூரியனுக்கு 10 டிகிரிக்குள் சுக்கிரன் அஸ்தங்கம் அடையும்போது பால்வினை நோய், இல்வாழ்வில் ஈடுபாடற்ற நிலை ஏற்படும்.

சூரியனுக்கு 15 டிகிரிக்குள் சனி அஸ்தங்கம் அடைந்தால் ஆரோக்கிய பாதிப்பு, நிலையற்ற தொழில், தந்தைக்கு கண்டம் உண்டாகும்.

எல்லா கிரகங்களையும் செயலிழக்க வைக்கும் சூரியன், ராகுவுக்கு அருகில் வரும்போது தானே பலமிழக்கிறார். இதனால் சூரிய கிரகணம் உண்டாகிறது. அஸ்தங்கம் பெற்ற கிரகங்கள் தங்களின் காரகத்துவரீதியாக பாதிப்புகளை உண்டாக்கும் என்றா லும், ஜனன ஜாதகத்தில் பரிவர்த்தனை பெற்றிருந்தால் தோஷம் நீங்கி நற்பலன்கள் உண்டாகும். சூரியன் லக்ன சுபராக இருந்தால் அஸ்தங்கம் பெற்ற கிரகத்தின் நற்பலன்களை தன் தசாபுக்திக் காலங்களில் இரட்டிப்பாகத் தருவார்.

பொதுவாக எந்த கிரகம் அஸ்தங்கம் அடைந்தாலும் கண் சிகிச்சைக்கு உதவுவது சிறந்த பரிகாரமாகும்.

செல்: 98652 20406