Advertisment

அஷ்ட ஐஸ்வர்யங்கள் தரும் அதிர்ஷ்ட திரிதியை நாள்! - வைபவ ஜோதிடர் ரெ. ஸ்ரீராம்

/idhalgal/balajothidam/ashta-aiswaryas-give-lucky-trinity-day

செல்வச் செழிப்பைத் தரும் விரத பூஜைகளுள் வளர்பிறை திரிதியைத் திதியில் மேற்கொள்ளும் விரதமே முதன்மையானது.

Advertisment

இந்தத் திதியின் அதிதேவதை கௌரி எனப்படும் பராசக்தி. ஸ்ரீசக்கர பிந்து ஸ்தானத்தில் வீற்றிருக்கும் தேவியின் அம்ருதக் கலைகள் பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று, பதினைந்து நித்யாதேவிகளாக பராசக்தியைச் சுற்றிக் கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் அங்க தேவதைகள்.

இவர்களுள் செல்வத்தை வாரிவழங்கும் திரிதியைத் திதியின் நித்யா தேவியாக இடம்பெறுவது நித்யக்லின்னா எனும் தேவி.

திரிதியை நாளின் சிறப்புகள் பாண்டவர்களுக்கு சூரிய தேவனால் அள்ள அள்ளக்குறையாத அட்சயப் பாத்திரம் ஒன்று திரிதியை நாளில் வழங்கப்பட்டது.

Advertisment

ll

சாபம் காரணமாக பிட்சாடனராக உருமாறிய சிவபெருமான், காசியில் அன்னபூரணியிடம் அன்னம் பெற்று சாபம் நீங்கினார்.

மகாவிஷ்ணுவின் மார்பில் மகாலட்சுமி இடம்பெற்றமை, பரசுராமர், பலராமர் போன்றவர்கள் அவதரித்த நாள்.

குசேலனைக் கிருஷ்ண பரமாத்மா குபேரனாக்கிய திருநாளும் திரிதியை தான்.

கண்ண பரமாத்மா பாஞ்சாலியின் மானம் காத்தது இந்தத் திரிதியை நாள்.

பகீரதனின் கடுந்தவத்தால் ஆகாயத்திலிருந்து இறங்கிய கங்கை, திரிதியை நாளில்தான் பூமியைத் தொட்டது.

மணிமேகலை அட்சயப் பாத்திரம் பெற்றதும் திரிதியை நாளில்தான்.

அட்

அட்சய திரிதியை தினத்தன்றுதான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.

பராசக்தியின் அம்சமான சாகம்பரி தேவி இவ்வுலகில் உணவுகளையும், காய்கறிகளையும், மூலிகைச்செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. ஒரு அட்சய திரிதியை தினத்தன்றுதான் அவர் இவற்றை உருவாக்கினாராம்.

இந்த நாளில்தான் திரேதா யுகம் தொடங்கியது.

இந்திராணி பிள்ளை வரம் வேண்டி இந்நாளில் பூஜைசெய்து ஜெயந்தனைப் பெற்றாள்.

இந்த நாளில் விரதமிருந்தே அருந்ததி, சப்தரிஷி மண்டலத்தில் எல்லாரும் வணங்கும் நிலையடைந்தாள்.

விரத பூஜை

ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமி யாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜலட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரகலட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும் போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள்.

திரிதியை நாளில் விரத பூஜையைச் செய்தால் அவளருளைப் பெறலாம்.

திரிதியை தினத்தில் அதிகாலை எழுந்து நீராடி, கோபூஜை செய்தபின், பூஜையறையில் கோலமிட்டுக் குலதெய்வத்தை வழிபட வேண்டும். லட்சுமி நாராயணன், அன்னபூரணி, குபேரன் படங்களை வைத்து, சந்தனம், குங்குமம் இட்டு மாலையிட வேண்டும். அந்தப் படங்களின்முன்பு குத்துவிளக்கேற்றி வைத்து, பூஜையறையில் போடப்பட்ட கோலத்தின்மீது பலகை வைத்து, அதன்மீதும் கோலமிட வேண்டும்.

ஒரு கலசச் செம்பில் அரிசி, மஞ்சள், நாணயம், சிறிய நகைகளை இடவேண்டும். அந்தக் கலசச் செம்பில் நீர்நிரப்பி, அதற்கு சந்தனம், குங்குமம் இடவேண்டும். கலசச் செம்பின்மேல் தேங்காய் வைத்து, அதைச்சுற்றிலும் மாவிலையை வைக்க வேண்டும். பிறகு, கலசத்தின்முன்பு வாழையிலையில் அரிசியைப் பரப்பி, அதன்மீது விளக்கேற்றி வைக்கவேண்டும். அதனருகில் மஞ்சள் பிள்ளையார் பிடித்து, அதற்கு குங்குமமிட்டுப் பூப்போட வேண்டும்.

அப்பொழுது, லலிதா சகஸ்ர நாமத்தையும், கனகதாரா ஸ்தோத்திரத்தையும் சொல்லி தீபாராதனை காட்டி வழிபட வேண்டும். தூபதீப ஆராதனையைக் கலசத்துக்குச் செய்துவிட்டு, ஒரு நாழிகைக்குப்பிறகு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். கலசத்தினை நகர்த்து வது விரதத்தினை நிறைவு செய்து விட்டதாக அர்த்தம்.

தானியங்களுள்தான் லட்சுமி நிறைந்திருக்கிறாள். அதனால், அன்றைக்கு முனைமுறியாத பச்சரிசி, கஸ்தூரி மஞ்சள் வாங்கிப் பூஜையில் வைத்தபின், பணப்பெட்டி, பீரோவில் கொஞ்சம் வைத்தால் செல்வம் பெருகும். அன்றிரவு உண்ணாவிரதம் இருப்பது நல்லது.

திரிதியை விரதப் பூஜைப் பலன்கள்

ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமி யைப் பூஜித்தால், நம் இல்லத்தில் திருமகளின் திருவருள் கிட்டும் .

மூதாதையர்களுக்குத் தர்ப்பணம் செய்தால் பாவ விமோசனம் கிடைக்கும் அறுகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களால் வீட்டிலும், வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.

கன்னிப்பெண்கள் இவ்விரதத் தைக் கடைப்பிடித்தால் நல்ல கணவனைப் பெறுவார்கள்.

இது சத்ருசாந்தி பூஜைக்கேற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.

திரிதியை அன்று ஒரு ஆல இலையைப் பூஜையில் வைத்து, மகாலட்சுமியின் மூலமந் திரத்தை மந்திரத்தை ஜெபித்து, கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும்.

தாமரை, மல்லிகைப்பூவால் பூஜைசெய்தால் மன்னர்குலத்தில் பிறப்பு கிடைக்கும்.

தாழம்பூவால் பூஜை செய்தால் மகா விஷ்ணுவின் அருள் கிடைக்கும்.

திரிதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை போஜ்பத்ரா மரத்தின் பட்டை அல்லது பனையோலையில் எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண்திருஷ்டி கழியும்.

அன்றைய தினம் மிருதசஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.

பொன் மற்றும் புதியதாக வாங்கிய பொருட்களையும், உப்பையும் சோழி களையும் பூஜையில் வைத்தால் அஷ்ட லட்சுமி கடாட்சம் வீடு தேடிவரும்.

தான பலன்

தானம் செய்வதே பூஜையில் பிரதானம்.

இனிப்புப் பொருள் தானம்செய்தால் திருமணத்தடை நீங்கும்.

உணவு தானியம் அளித்தால் அகால மரணத்தைத் தடுக்கலாம்.

கால்நடைகளைத் தானமாக வழங் கினால், வாழ்வு வளம்பெறும்.

ஏழை, எளியவர்களுக்கு ஆடைதானம் செய்வதால், நற்பண்புகள் நிறைந்த மனைவி அமைவார்.

துவரம் பருப்பு, மொச்சை, அரிசி, சிவப்புப் புடவை, வெள்ளை வேஷ்டி தானம் செய்வதால் ஐஸ்வர்யம் பெருகும்.

குடை, விசிறி, காலணி வழங்கினால் இன்பவாழ்வு உண்டாகும்.

ஆடை தானம்செய்ய ஆரோக்கியம் கூடும்.

தாகம் தணிக்க தண்ணீர், மோர் வழங்கினால் கல்வி வளர்ச்சி பெருகும்.

பழங்கள் தானம்செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும்.

மஞ்சள் தானம்- மங்களம் உண்டாகும்.

வெல்லத்தைத் தானம்செய்தால்- குல அபிவிருத்தி- துக்கநிவர்த்தி.

தேன் தானம்- செல்வாக்குப் பெருகும்.

திரிதியையில் செய்ய உகந்த காரியங்கள் வீட்டுக்குத் தேவையான டி.வி, வாஷிங் மெஷின், ஏ.சி போன்ற மின்சாதனப் பொருட் களை வாங்குவது சிறப்பு. குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்க உகந்த நாள்.

புதிதாகத் தொழில் தொடங்கலாம், புது முயற்சிகளில் ஈடுபடலாம்.

கட்டடப் பணி துவங்கலாம்.

தங்க ஆபரணங்களைத் திரிதியை நாளில் வாங்கலாம்.

வாகனங்கள், கட்டுமானப் பொருட்கள் வாங்கலாம்.

குழந்தைகளுக்கு அன்னம் ஊட்டும் சடங்கு செய்யலாம்.

சங்கீதம் கற்கத் தொடங்கலாம்.

சீமந்தம் செய்யலாம்.

கிரஹப் பிரவேசம் போன்ற அனைத்து விதமான சுபகாரியங்களுக்கும் உகந்த திதி இது.

முக்கியக்குறிப்பு:விரதத்தைச் செய்பவர் சந்திராஷ்டமம், வார சூன்யம், திதி சூன்யம், ராகு காலம், எமகண்டத்தைத் தவிர்ப்பது நன்று.

செல்: 98404 07209

bala140820
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe