Advertisment

எண்ணியதை ஈடேற்றும் எண் கணிதம்-பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/arithmetic-present-astrologer-i-anandi

6-சுக்கிரன்

6, 15, 24, 33, 42, 51, 60, 69, 78, 87, 96, 105 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்; 6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களும் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். ஆறு என்ற எண் சுக்கிரனின் ஆதிக்கத் தைக் குறிக்கிறது.

Advertisment

ஒன்பது எண்களிலும் பிறவியிலேயே அதிர்ஷ்ட சாலிகள் 6-ஆம் எண்காரர்கள். இவர்கள் தைரியசாலிகள். காந்தசக்தி நிறைந்த கண்கள், வசீகரத் தோற்றம் நிறைந்தவர்கள். கவிதை, சங்கீதம், நடனம் போன்றவற்றில் ஈடுபாடு மிகுந்தவர். விருந்து, கேளிக்கை, சினிமா ஆகியவற்றில் நாட்டமுண்டு. நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். தன்னுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களைத் தன்வயப்படுத்தும் திறமை கொண்டவர்கள். கணவன் அல்லது மனைவி யின் அளவற்ற அன்பிலும், பாசத்திலும் மூழ்கித் திளைப் பார்கள். இவர்கள் சொல்வதைக் கேட்காதவர்களைப் புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமமில் லாமல் மற்றவர்களின் துணையுடன் செய்து முடிப்பார்கள்.

கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப் பார்கள். எதிர் பாலினத்தினரைக் கவரும் இயல்புடைய வர்கள். காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். தாராள மனப்பான்மை கொண்டவர்கள். புகழுக்கு ஆசைப்பட்டு செலவும் செய்வார்கள். உணவு, உடை, நிம்மதி யான தூக்கம் போன்ற அனைத்து நிறைவுகளும் உண்டு. படிப்பில் ஆர்வ மிருக்காது. உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பர். அழகாகப் பேசுவர். செயல்திறன் மிக்கவர்கள். சமாதானத்தை விரும்புபவர்கள். சுயநலம் மிகுந்தவர்கள். இவர் களின் தேவைக்கு யார் மூலமாவது எப்படியாவது பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதற் கும், சிற்றின்பத்திற்கும் பணத்தை நிறைய செலவுசெய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு லாபமில்லாமல் உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள்.

புத்திர பாக்கியம் நிறைந்தவர் கள். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகமுண்டு. பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டமானவர்கள்.

Advertisment

கோப உணர்வு மிகுந்தவர்கள். கோபம் வரும்போது முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். எளிதில் மாற்றமுடியாத பிடிவாதக்காரர்கள். நண்பர்கள் அதிகமுண்டு. ஒரு வீட்டில் 6-ஆம் எண்ணில் குழந்தை கள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். மேலும் இவர்கள் தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிட பிற்காலத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் விளங்குவார்கள்.

எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம். இவர்கள் மனதிற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, நாடகம், இசை, சங்கீதம், வாய்ப்பாட்டு, சிற்பக் கலை, சித்திரம் வரைதல், கட்டடக்கலை போன்ற துறைகளில் வெற்றி வாய்ப்பு அதிகம். மேலும் விலையுயர்ந்த பட்டு, துணிமணிகள், துணிக் கடை, நகைக்டை, ரத்தினங்கள், வெள்ளிப் பொருட்கள், நவநாகரீக ஆடம்பரப் பொருட் கள்

6-சுக்கிரன்

6, 15, 24, 33, 42, 51, 60, 69, 78, 87, 96, 105 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்; 6, 15, 24-ஆம் தேதிகளில் பிறந்தவர்களும் சுக்கிரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். ஆறு என்ற எண் சுக்கிரனின் ஆதிக்கத் தைக் குறிக்கிறது.

Advertisment

ஒன்பது எண்களிலும் பிறவியிலேயே அதிர்ஷ்ட சாலிகள் 6-ஆம் எண்காரர்கள். இவர்கள் தைரியசாலிகள். காந்தசக்தி நிறைந்த கண்கள், வசீகரத் தோற்றம் நிறைந்தவர்கள். கவிதை, சங்கீதம், நடனம் போன்றவற்றில் ஈடுபாடு மிகுந்தவர். விருந்து, கேளிக்கை, சினிமா ஆகியவற்றில் நாட்டமுண்டு. நல்ல பேச்சாற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். தன்னுடைய பேச்சுத் திறமையினால் மற்றவர்களைத் தன்வயப்படுத்தும் திறமை கொண்டவர்கள். கணவன் அல்லது மனைவி யின் அளவற்ற அன்பிலும், பாசத்திலும் மூழ்கித் திளைப் பார்கள். இவர்கள் சொல்வதைக் கேட்காதவர்களைப் புறக்கணித்து விடுவார்கள். எந்த வேலையையும் சிரமமில் லாமல் மற்றவர்களின் துணையுடன் செய்து முடிப்பார்கள்.

கலைகளில் நாட்டம் கொண்டவர்களாக இருப் பார்கள். எதிர் பாலினத்தினரைக் கவரும் இயல்புடைய வர்கள். காரியத்தில் கண்ணாக இருப்பார்கள். தாராள மனப்பான்மை கொண்டவர்கள். புகழுக்கு ஆசைப்பட்டு செலவும் செய்வார்கள். உணவு, உடை, நிம்மதி யான தூக்கம் போன்ற அனைத்து நிறைவுகளும் உண்டு. படிப்பில் ஆர்வ மிருக்காது. உயர்ந்த காரியங்களைச் செய்பவராய் இருப்பர். அழகாகப் பேசுவர். செயல்திறன் மிக்கவர்கள். சமாதானத்தை விரும்புபவர்கள். சுயநலம் மிகுந்தவர்கள். இவர் களின் தேவைக்கு யார் மூலமாவது எப்படியாவது பணம் வந்து கொண்டே இருக்கும். சாப்பிடுவதற் கும், சிற்றின்பத்திற்கும் பணத்தை நிறைய செலவுசெய்வார்கள். ஆனால் மற்ற பொதுவான விஷயங்களிலும், அடுத்தவர்களுக்கு லாபமில்லாமல் உதவுவதிலும் மிகுந்த கஞ்சத்தனம் பார்ப்பார்கள்.

புத்திர பாக்கியம் நிறைந்தவர் கள். அதிலும் பெண் குழந்தைகள் இவர்களுக்கு அதிகமுண்டு. பண விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டமானவர்கள்.

Advertisment

கோப உணர்வு மிகுந்தவர்கள். கோபம் வரும்போது முரட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். எளிதில் மாற்றமுடியாத பிடிவாதக்காரர்கள். நண்பர்கள் அதிகமுண்டு. ஒரு வீட்டில் 6-ஆம் எண்ணில் குழந்தை கள் பிறப்பது, அந்தக் குடும்பத்தின் அதிர்ஷ்டத்தை அதிகரிக்கும். மேலும் இவர்கள் தங்கள் பிறந்த வீட்டின் வசதியைவிட பிற்காலத்தில் உயர்ந்த அந்தஸ்துடன் விளங்குவார்கள்.

எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் இவர்களுக்கு வெற்றி நிச்சயம். இவர்கள் மனதிற்கு மிகவும் பிடித்தது கலைத் தொழில்தான். எனவே சினிமா, நாடகம், இசை, சங்கீதம், வாய்ப்பாட்டு, சிற்பக் கலை, சித்திரம் வரைதல், கட்டடக்கலை போன்ற துறைகளில் வெற்றி வாய்ப்பு அதிகம். மேலும் விலையுயர்ந்த பட்டு, துணிமணிகள், துணிக் கடை, நகைக்டை, ரத்தினங்கள், வெள்ளிப் பொருட்கள், நவநாகரீக ஆடம்பரப் பொருட் கள், உல்லாசப் பொருட்கள், அழகு சாதனப் பொருட்கள், வாசனை திரவியங்கள், தங்க நகைகள், அணிகலன்கள், கண்ணாடி, பூக்கள், மாலைகள் தயாரித்தல்- விற்றல், அலங்காரப் பொருட்கள், கவரிங் நகைவிற்பனை- தயாரிப்பு, உற்சாக பானம், பிளாஸ்டிக் பொருட்கள் வியாபாரம் போன்றவையும் வெற்றிதரும். பேசி விவாதம் புரியும் வக்கீல்கள், நீதிபதிகள், அரசு அதிகாரியாகவும் இவர்கள் வெற்றியடை வார்கள்.

திருமணத்தின்மூலம் ஆதாயமும், லாபமும் கிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு மிகுந்தவர்கள். இவர்கள் 6, 9-ஆம் எண்களில் பிறந்தவர்களைத் திருமணம் முடித்தால் வாழ்க்கை மகிழ்சியாக அமையும். 3, 4, 5 ஆகிய எண்களில் பிறந்தவர்களைத் தவிர்க்க வேண்டும். மேலும் திருமணத்தை 1, 10, 19, 28, 6, 15, 24, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 1, 6, 9 வரும் தேதிகளிலும் செய்து கொண்டால் மிக நன்மை தரும். 6, 9-ஆம் எண்காரர்களை நண்பர்களாகவும், கூட்டாளி களாகவும் சேர்க்கலாம்.

எந்த ஒரு செயலையும் 6, 15, 24; 9, 18, 27 ஆகிய தேதிகளிலும், கூட்டு எண் 6 மற்றும் 9 வரும் தினங்களிலும் செய்தால் நல்ல பலன்கள் கொடுக்கும். 3, 12, 21, 30 ஆகிய தேதி களும், கூட்டு எண் 3 வரும் தினங்களும் மிகவும் துரதிர்ஷ்டமானவை. 5, 14, 23 தேதிகளில் முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடாது. நடுத்தரமான பலன்களே கிடைக்கும்.

ஜனனகால ஜாதகத்தில் சுக்கிரன் பலம் குறைந்தவர்களுக்கு உடல் பருமன், பால் வினை நோய், இதய பலவீனம், ரத்த ஓட்டக் கோளாறுகள், போதைக்கு அடிமையாதல், மூச்சுத் தொந்தரவுகள், சுவாசம் சம்பந்தப் பட்ட நோய்களும் ஏற்படும்.

பெயரெண்- 6: தனித்த சுக்கிரனின் ஆதிக்கம் நிறைந்த எண். உலக சுகங்களை முழுமையாக அனுபவிக்கவேண்டும் என்ற எண்ணம் மிகுதியாக இருக்கும். இவர் களுக்கு உலகமே சொர்க்கமாகத் தெரியும்.

வாழ்க்கை வாழ்வதற்கே என்று இன்ப உணர்வுடன் வாழ்பவர்கள். இயற்கை யிலேயே போகங்கள், வாசனை திரவியங் கள், ஆபரணங்கள் ஆகியவற்றை அனுபவிக் கும் ஆசையும் அதிர்ஷ்டமும் உண்டு. தங்களது சுயலாபத்திற்காகவே அடுத்தவர்களுக்கு உதவிசெய்வார்கள். எக்காரியமானாலும் நன்றாகச் சிந்தித்தே ஒரு முடிவுக்கு வருவார் கள். தேவையற்ற "ரிஸ்க்'குகளை எடுக்கத் தயங்குவார்கள். பெரிய வருமானம் இருக்காது. காமம், குரோதம், வஞ்சகத்தன்மையால் மன அமைதி கெடும். எதிரிகளை எப்போதும் மறக்கமாட்டார்கள். பொறுமையுடன், காலம் பார்த்துப் பகையைத் தீர்த்துக் கொள்வார்கள். வாக்கு சாதுரியம் உண்டு. புகழ், அந்தஸ்து, கௌரவம் உண்டு.

பெயரெண்- 15: சூரியன், புதனின் ஆதிக்கம் நிறைந்த எண். கலைகளில் தேர்ச்சியும், நகைச்சுவைப் பேச்சும் உண்டு.

மக்களை வசீகரிக்கும் தன்மை இயற்கை யிலேயே உண்டு. பேச்சுத்திறமையும் கவர்ச்சி யும் உண்டு. கலைகளில் தேர்ச்சி, நகைச்சுவை யுடன் பேசுதலில் சாமர்த்தியம், எவரையும் பார்த்தவுடன் புரியும் தன்மையுண்டு. அதனால் நாடகம், சினிமா, டி.வி போன்றவற்றில் ஈடுபடு வார்கள். நல்ல புகழும் அதிர்ஷ்டமும் தேடிவரும். எதிரியை எடைபோடுவதில் மிகவும் திறமையானவர்கள். ஆதாயம் வந்து கொண்டே இருக்கும். எப்போதும் இவர்கள் தங்களது புத்தியையும் அதிர்ஷ்டத்தையுமே நம்பியிருப்பார்கள். இவர்கள் மற்றவர்களை வசப்படுத்தி, தங்களது காரியங்களை முடித்துக்கொள்வதில் வல்லவர்கள்.

bb

பெயரெண்- 33: குருவின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் சுக்கிரனின் எண். இந்த எண்காரர்களுக்கு பக்தி, பொதுத்தொண்டு செய்தல் போன்ற குணங் களால் பெரும் புகழும், அமைதியான- மகிழ்ச்சி யான குடும்ப வாழ்க்கையும் உண்டு. இவர்கள் தாங்கள் வசிக்கும் இடத்தை மிகவும் அழகாக கோவில்போல் வைத்துக்கொள்வார்கள். அருளும் பொருளும் ஒருங்கே வளரும். லட்சுமி கடாட்சம் நிரம்பியவர்கள். செல்வத்தைக் குவித்திடும், மகாலட்சுமியின் ஆசிபெற்றவர்கள். தானிய விருத்தி, குறைவற்ற செல்வம், ஐஸ்வர்யம் நிரம்பியவர்கள். ஆலயத் திருப்பணி, புண்ணிய காரியங்கள் செய்தல் மற்றும் திருப்திகரமான வாழ்க்கையைப் பெற்று இன்பமயமாக வாழ்வார்கள்.

பெயரெண்- 42: ராகு மற்றும் சந்திரனின் ஆதிக்கம் கலந்த எண். ஏழையானாலும் பெரிய அதிகாரப் பதவியை அடைவார்கள். சிக்கனத்தில் புத்தி செல்லும். சுக வாழ்க்கைக்கு பணம் செலவு செய்பவர்கள். மனோதிடம் குறைவு. பேராசை படைத்தவர்கள். ஏதோ செய்து சிறுகசிறுக பொருள் சேர்ப்பது இவர்கள் இயல்பாக இருக்கும். பொறாமையும் பிடிவாதமும் உண்டு. சிலர் கீழ்த்தரமாக இருப்பார்கள். பிறரை ஏமாற்றியும் வஞ்சித் தும் பிழைப்பார்கள். கெட்ட வழிகளில் துணிந்துசெல்வார்கள். தங்களை நம்பியவர் களைக்கூட ஏமாற்றுவார்கள். இவர்களது மனதில் அதிக காமமும், பணத்தாசையும் இருக்கும்.

பெயரெண்- 51: புதன் மற்றும் சூரியனின் ஆதிக்கம் இணைந்து புதாத்தித்ய யோகம்பெற்ற எண். ஆறாம் எண்களில் இதுவே அதிர்ஷ்டகரமான எண். திடீர் முன்னேற்றம் உண்டு. சாமானியர்களாக இருந்தவர்கள்கூட எதிர்பாராத வகையில் பெயரும் புகழும் அடைவார்கள். முக்கிய பணிகள், பொறுப்புகள் உடையவர்கள். சோர்வையே அறியாத உழைப்பாளிகள். உடலும் மனமும் நிலைகொள்ளாது. மிதமிஞ்சிய சரீர வலிமை கொண்டவர்கள். பொதுவாக இந்த எண்காரர்களுக்கு உணவு, உடை, வீடு ஆகியவற்றில் குறைபாடுகள் வாராது. வசதிகளை எப்படியும் உருவாக்கிக்கொள்வார்கள். பலருக்குப் பிறவியிலேயே அமைந்திருக்கும். சினிமா, டி.வி, ரேடியோ போன்றவற்றில் பெரும் புகழ்பெற்ற கலைஞர்களும் பேச்சாளர்களும் இவர்களே.

பெயரெண்- 60: தனித்த சுக்கிரனின் ஆதிக்க எண். இவர்கள் மற்றவர்களின் கலைத்திறமையைப் பாராட்டுவார்கள். உலகக் கலைகளை அனுபவிக்கப் பிறந்தவர்கள் இவர்களே. உலகிலுள்ள பழைய கலைகள் மற்றும் இலக்கியங்களில் மிகுந்த ஆர்வமுண்டு. கலைகளில் சுலபமாகத் தேர்ச்சி பெறுவர். மிக்க கண்ணியமும் ஊக்கமும் உடையவர்கள். அடக்க சுபாவமும் ஆழ்ந்த கருத்துகளும் உண்டு. பொருள் சேர்ப்பதில் ஆர்வம் கொண்டவர்கள். யாரால் என்ன நன்மை விளையும் என்பதை உணர்ந்து, அவர்களை சரிக்கட்டி காரியம் சாதித்துக் கொள்வார்கள். அடக்கமான தன்மை நிரம்பியவர்கள். அதிர்ஷ்டகரமான திருமண வாழ்க்கையும் விரும்பிய பதவியும் தேடிவரும். எந்தத் தொழில் செய்தாலும் முடிசூடா மன்னராகத் திகழ்வர்.

பெயரெண்- 69: சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ஆதிக்கம் சேர்ந்த எண். கருணையுள்ளம் படைத்த யாராவது ஒருவரின் உதவியால் கல்வியைப் பெறுவார்கள்.

அரசாங்கத்தால் ஆதரவுண்டு. அந்தஸ்துக்கு மீறிய வாழ்க்கைத் துணை அமையும். போலீஸ், இராணுவம் போன்ற அதிகாரத் திறமையும், செய்யும் தொழிலில் மேன்மையும் உண்டு. மிகவும் பகட்டாக வாழ்வதில் ஆர்வமுண்டு. பொதுவாக ராஜவாழ்க்கை வாழ்வது இந்த எண்ணின் பலமாகும். கணவன்- மனைவி ஒற்றுமை மேலோங்கும். தங்களது சபலபுத்தியின் காரணமாக தவறான பல முயற்சிகள் செய்து, பல துன்பங்களை அடைகின்றனர். சிற்றின்பத்தில் மிதமாக இருக்கப் பழகிக்கொண்டால் இந்த எண்ணால் அபரிமிதமான சுபப்பலன் உண்டு.

பெயரெண்- 78: கேது மற்றும் சனியின் ஆதிக்கம் நிறைந்த எண். அதிக முதலீட்டில் தொழில் செய்பவர்களுக்கு தொழில் நெருக்கடி மற்றும் தொழிலாளர்கள்மூலம் மிகுதியான மன உளைச்சல், கடன் சுமையை உருவாக்கும். முதலீடு குறைந்த அல்லது முதலீடில்லாத தொழில்களுக்கு ஓரளவு சாதகமான பலன் தரும் எண். உத்தியோகஸ்தர்களுக்கு உயரதிகாரியின் வெறுப்பை மிகுதிப்படுத்தித் தரும். திருமணத் தடையைத் தருவதில் முன்னனி வகிக்கும் எண். வெளிநாட்டு வாழ்க்கை, வேலை, தொழில் சிறப்பான பலன் தரும். சமயப்பற்றும், ஆச்சார நம்பிக்கையும் இருக்கும். கவிஞர்; பேச்சுத்திறன் நிரம்பியவர்கள். மந்திரசித்தி உண்டு. எல்லாராலும் மதிக்கப்படுவார்கள். ஆழ்ந்த அறிவையும் சாந்த குணத்தையும் தரக்கூடிய எண். எவ்வளவு ஞானம் இருந்தாலும் சமயத்திற்குப் பயன்படாது.

பெயரெண்- 87: சனி, கேதுவின் ஆதிக்கம் சார்ந்த எண். அதிக உழைப்பு; குறைந்த ஊதியம் கிடைக்கும். சொந்தத் தொழிலுக்கு ஏற்ற எண்ணல்ல. தொழில்மூலம் வம்பு, வழக்குண்டு. சமுக சேவை, பொதுத்தொண்டு நிறுவனங்களுக்கு ஏற்ற எண். கடவுள், சாஸ்திரங்கள்மீது மிகுந்த அவநம்பிக்கை கொள்வார்கள். அடிக்கடி மற்றவர்களிடம் பணம் வாங்குவார் கள். ஆனால் திரும்பக் கொடுக்கும்போது மட்டும் இழுத்துப் பிடித்துதான் கொடுப்பார்கள். வாழ்நாள் முழுவதும் உழைத்து உழைத்து மனம் நொந்துபோவார்கள். இவர்கள் தங்களது நேரத்தை காதல், கவிதை, கதை, வசனம், சினிமா, கருவிகள் என்று வீணாக்குவார்கள். வாக்கில் வாதத்திறமை நிறைந்திருக்கும். சிலர் ரகசியமான சக்தி, தீயவழிகளில் பணம் சேர்க்கும் எண்ணம் உடையவர்கள். இரவில் திருடுதல், சட்டங்களை அவமதித்தல் போன்ற கெட்ட குணங்கள் உண்டு. இவர்களது வாழ்க்கை கத்தி முனையில் நடப்பதுபோன்று திகில் நிறைந்ததாக இருக்கும்.

பெயரெண்- 96: செவ்வாய் மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் சேர்ந்த எண். அரசாங்க ஆதரவு கிடைக்கும். அடக்கமும் அமைதியும், கூடவே அழுத்தமும் நிறைந்தவர்கள். பெரிய இடத்து சம்பந்தமும் பெரும் பதவிகளும் தேடிவரும். மிகவும் துணிச்சல்காரர்கள். மற்றவர் கள் தயங்கும் காரியங்களை இவர்கள் ஏற்றுக் கொண்டு, திறமையுடன் செய்துமுடிப்பார்கள். எனவே, விரைவிலேயே வெற்றி கிடைத்து விடும். பலர் விளையாட்டில் மிகவும் சிறந்து விளங்குவார்கள். கற்பனை வளமும், கலைகளின் மிகுந்த ஈடுபாடும், போகப் பொருட்கள்மேல் நாட்டமும் உடையவர்கள். தனக்கென ஒரு கொள்கையை ஏற்படுத்திக்கொண்டு, அதில் துணிந்து செல்வார்கள். கலையுலகிலும் அதிர்ஷ்டம் உண்டு. பொதுவாக வாழ்க்கையில் அதிர்ஷ்டசாலிகள் என்றேகூற வேண்டும். மனதில் பலவகை எண்ணங்கள், பொறாமை கள், மற்றவர்களைப் புண்படுத்தும் விஷமப் பேச்சுகள் இவர்களுக்குண்டு.

பெயரெண்- 105: சூரியன் மற்றும் புதனின் ஆதிக்கம் கலந்த எண். அதிர்ஷ்டமான எண். சகலகலா வல்லவர்களாக இருப்பார் கள். சிறுவயதிலிருந்தே இந்த எண்காரர்கள் ஒழுக்கம், பொறுமை போன்ற நல்ல குணங் களை விடாமுயற்சியுடன் வளர்த்துக் கொள்வார்கள். ராஜ குணங்கள் உடம்போடு ஒட்டிப் பிறந்தவர்கள். கல்வியில் வல்லவர்கள். நினைத்த காரியங்களில் எல்லாம் வெற்றியடை வார்கள். நுண்ணிய நினைவாற்றலும் நுணுக்க மான சிந்தனை வளமும் இருக்கும். கணிதம், விஞ்ஞானம் போன்ற துறைகளில் பிரமிப் பூட்டும் சாதனைகளைப் படைப்பார்கள். ஓவியம், இசை, பாடல்கள், நாட்டியம் போன்ற வற்றில் மிக்க ஈடுபாடு உண்டு. எதிர் பாலினத்த வரை எளிதில் கவர்ந்துவிடுவார்கள். அழகான உடை மற்றும் வாசனைத் திரவியங்கள்மூலம் தங்களை மேலும் அழகுபடுத்திக்கொள்வார்கள். இவர்களுக்கு நல்ல அழகும் குணங்களும் கௌரவமும் நிறைந்த வாழ்க்கைத் துணை அமையும்.

பொதுவாக எண் 6 வரும்படி பெயர் வைக்கும்போது 42, 78, 87 ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும். மேலும் சுக்கிர பலத்தை அதிகரிக்க வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீசுக்தம், மகாலட்சுமி அஷ்டகம், லலிதா சகஸ்ரநாமம் படித்து மகாலட்சுமியை வழிபடலாம். வெள்ளை மொச்சை தானம் தரலாம்; சாப்பிடலாம். இவர்களுக்கு மிகவும் உகந்தது பச்சை, நீலம், வெள்ளை, சிவப்பு நிறங்கள். இவை அதிர்ஷ்டத்தைக் அதிகரிக்கும். ரோஸ், மஞ்சள் ஆகிய வண்ணங்களைத் தவிர்த்து விடவும். ஒயிட் ஜெர்கான், பச்சை நிற ரத்தினங் கள் அணியலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: 6, 15, 24; 9, 18, 27.

அதிர்ஷ்டக் கிழமை: வெள்ளி, செவ்வாய்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்: வைரம், மரகதம்.

அதிஷ்ட திசை: மேற்கு, தென்மேற்கு.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, பச்சை.

அதிர்ஷ்ட தெய்வம்: மகாலட்சுமி.

அதிர்ஷ்ட மலர்கள்: மல்லிகை, வெண்தாமரை.

அதிர்ஷ்ட தூபம்: லவங்க தூபம், குங்குலியம்.

அதிர்ஷ்ட சின்னங்கள்: கருடன், பசு, தாமரை, நீர்.

அதிர்ஷ்ட மூலிகை: செந்நாயுருவி.

(தொடரும்)

செல்: 98652 20406

bala151021
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe