எண்ணியதை ஈடேற்றும் எண் கணிதம்! பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/arithmetic-accomplishes-counting-present-astrologer-i-anandi

னித குலத்திற்குப் பெருந்துணையாக விளங்குவது ஜோதிட சாஸ்திரம். ஆபத்துக் காலத்தில் கரைகடக்க உதவும் கலங்கரை விளக்கான ஜோதிடத்துடன் தொடர்புடைய ஒரு கலை எண்கணிதம். பல வெளிநாடுகளில் எண்ணியலை பிரதான சக்தியாகப் பயன் படுத்தி வெற்றிகண்டுள்ளனர். கிரேக்க நாட்டு கணிதமேதை பிதாகரஸ், அறிஞர் ஸீரோ போன்றவர்கள் எண்கணிதம் தொடர்பான பல உயரிய ஆய்வுகளை மேற்கொண்டு பல புதிய உண்மைகளை உலகிற்கு வழங்கியுள்ளார்கள்.

தற்போது மிக அதிகமாகப் பயன் படுத்தப்பட்டு வரும் இந்த எண்ணியல் கலை, சிலருக்கு அசுர வளர்ச்சியையும் பலருக்கு வீழ்ச்சியையும் தருகிறது. பொதுவாக, ஜோதிடம் அறியாத சில நியூமராலஜி நிபுணர்கள் பிறந்த தேதியை அடிப் படையாக வைத்து ஒரு தனி மனிதன் அல்லது நிறுவனத்தின் பெயரைத் தேர்வுசெய்து தருகிறார்கள். இது காக்கை உட்காரப் பனம் பழம் விழுந்த கதையாக சிலருக்கு நல்ல மாற்றத்தைக் கொடுத்துவிடுகிறது. பலர் எங்கே தவறென்ற புரித லின்றி தொடர்தோல்வியை சந்திக்கிறார்கள். சிலருக்கு பெரிய மாற்றத்தைத் தரும் நியூமராலஜி பலருக்கு ஏன் வெற்றி தருவதில்லை என்ற காரணத்தையும், எல்லாருக் கும் நியூமராலஜி பயன்தர அதை எப்படிப் பயன் படுத்துவது போன்ற தகவல் களையும் இந்த கட்டுரைத் தொடரில் காணலாம்.

ஒருவருடைய ஜாதகத் தில் எத்தனை யோகங்கள் அமைந்தாலும், அதை சிறப் பாகப் பெறவேண்டுமானால் பிறவி எண், விதி எண்ணுக்கு ஏற்றவாறு பெயர் வைப்பது அவசியம். ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான யோகம் இருந்தாலும் பிறவி, விதி எண்களுக்கேற்ற பெயர் வைப்பதால் கெடுதலை ஓரளவு குறைக்கலாம். ஆனால் முழுவதும் நீக்க முடியாது. ஆகவே வாழ்க்கை யில் வெற்றிபெற பிறந்த ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். அல்லது பிறந்த தேதியின் பிறவி, விதி எண்ணுக்கேற்றபடி பெயர் வைத்துக்கொள்வது உத்தமம். இயலாதவர் கள் பிறவி, விதி எண்களை ஆதிக்கம் செய்யும் கிரகங் களை வழிபாடு செய்வதன் மூலமும் நல்ல பலன்களைப் பெறமுடியும்.

பிறவி எண்: ஒருவரு டைய பிறந்த தேதியைக் கூட்டினால் வருவது பிறவி எண் எனப்படும்.

விதி எண்: ஒருவருடைய பிறந்த தேதி, மாதம், வருடம் ஆகிய மூன்றையும் கூட்டி னால் வருவது விதி எண் எனப்படும்.

பெயரெண்: ஒருவரின் பெயரிலுள்ள எழுத்துகளுக் கான எண்களைக் கூட்ட வருவது பெயரெண் எனப் படும

பெயரெண்: ஒருவரின் பெயரிலுள்ள எழுத்துகளுக் கான எண்களைக் கூட்ட வருவது பெயரெண் எனப் படும்.

எண்ணும் எழுத்தும் ஆங்கில மொழியே உலக மக்கள் அனைவரும் பயன்படுத்தும் பொது மொழி என்பதால், ஆங்கில எழுத்துகளே எண்கணித சாஸ்திரத்தில் பயன்படுத்தப் படுகிறது. ஒவ்வொரு மனிதனையும் நவகிரகங்கள் ஆள்வதுபோல் சில எண் களும் ஆளும். அதன்படி ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தக்கூடிய அதிர்ஷ்ட எண்களைக் கண்டறிந்து அதன்படி பெயரை திருத்தி அமைத்துக் கொண்டால் வாழ்க்கை வசந்தமாகும். உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒன்பது எண்களுக்குமேல் இல்லை. ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு கிரகத்தைச் சார்ந்துள்ளது.

எழுத்துகள் - எண்கள்

A, I, J, Q, Y 1

B, K, R 2

C, G, L, S 3

D, M, T 4

E, H, N, X 5

U, V, W 6

0, Z 7

F, P 8

9-ஆம் எண்ணிற்கு எந்த எழுத்தும் கிடையாது.

நவகிரகங்களும் ஒன்று முதல் ஒன்பதுவரையான எண்களின் ஆளுமைக்கு உட்பட்டவை.

எண்கள் - கிரகங்கள்

1- சூரியன்

2- சந்திரன்

3- குரு

4- ராகு

5- புதன்

6- சுக்கிரன்

7- கேது

8- சனி

9- செவ்வாய்

1-சூரியன்

1, 10, 19, 28, 37, 46, 55, 64, 73, 82, 91, 100 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்; 1, 10, 19, 28-ஆம் தேதிகளில் பிறந்த வர்களும் சூரியனின் ஆதிக்கம் பெற்றவர்கள்.

ஒன்று என்ற எண் சூரியனுடைய ஆதிக்கத் தைக் குறிக்கிறது. இவர்கள் யாருக்கும் வளைந்து கொடுக்காதவர்கள். எதிர்ப்பு களைக் கண்டு அஞ்சாதவர் கள். பழகுவதற்கும் பார்வைக் கும் கம்பீரமானவர்கள். தன்னம்பிக்கை அதிகமானவர்கள். மற்றவர்களிடம் எதையும் எதிர்பார்க்க மாட்டார்கள். தங்களின் பிரச்சினைகளைத் தாங்களே சமாளித்துக்கொள்ளும் திறமையுடையவர்கள்.

அடுத்தவர்களுடன் விவாதித்தால் கௌரவம் போய்விடும் என்று நினைப்பவர்கள்.

dd

நிதானமான- முன்னெச்சரிக்கையான செயல் பாடுகளைக் கொண்டவர்கள். சூழ்நிலைக் கேற்ப மற்றவர்களை அனுசரித்துச் செல்லக் கூடியவர்கள். அமைதியான குணநலன்களை உடையவர்கள். ரகசியங்களைப் பாதுகாக்கும் வல்லமை உண்டு. ஏட்டுக் கல்வியைவிட அனு பவப் பாடம் அதிகம் கற்றவர்கள்.

இந்த எண் சுறுசுறுப்பையும், படிப்பில் ஆர்வத்தையும் கொடுக்கும். மலை வாசஸ்தலங் களும், தொலைதூரப் பயணங்களும் இவர் களுக்கு மிகவும் பிடிக்கும்.

தனிமையில் அதிகமாக சிந்திக்கவும், செயலாற்றவும் விரும்புவார்கள். சமுதாயத்தில் பிரபலமான நிலையை அடையக்கூடியவர்கள். மிகக் கடினமான வேலையையும் தன் திறமை யால் எளிதாகச் செய்து முடிப்பார்கள். சொன்னதைச் செய்வார்கள். உதவும் குணம் கொண்டவர்கள். பிரகாசமான வாழ்க்கையைக் கொண்டவர்கள். தன்னைச் சுற்றி இருப் போரை எப்போதும் சந்தோஷமாக வைத்துக் கொள்வார்கள். இவர்களுக்கு ஆளுமைத்திறன், செல்வம், செல்வாக்கு உண்டு.

அரசியல், அரசு சார்ந்த தொழில்கள், உத்தியோகங்கள் இவர்களுக்கு நிச்சயம் உண்டு. இந்த எண்ணின் ஆதிக்கம் சுபத்துவத்துடன் அமைந்தவர்கள், பெரும்பாலும் அரசியலில் பெரும்செல்வாக்குடன் விளங்குவார்கள்.

அரசியலில் வெற்றிபெற ஒரு புகழ்பெற்ற கட்சியோ, இயக்கமோ இவர்களுக்குத் தேவை யில்லை.

நாணயமான அரசியல்வாதிகள் என்று பெயர் எடுப்பார்கள். புதிய திட்டத்துடன் சளைக்காமல் செயலாற்றுவார்கள். எதிரி களுடன் நேரடியாகப் போரிட்டு வெற்றி பெற விரும்புவார்கள். குறுக்குவழியை நாடாத வர்கள். தாங்கள் உதவுவதைக்கூட வெளிப்படை யாகச் சொல்லி விளம்பரமடைய ஆசைப்பட மாட்டார்கள். தாங்கள் உடுத்தும் உடைகள் மற்றும் அணியும் ஆபாரணங்கள் மிகவும் மதிப்பாகத் தெரியவேண்டுமென்று விரும்பு வார்கள். மகிழ்ச்சிக்காக தாராளமாக செலவு செய்யத் தயங்காதவர்கள். ஜோதிடம், ஆன்மிகம், வைத்தியம் போன்ற கலைகளில் ஈடுபாடு உண்டாகும்.

இவர்களுக்கு நிர்வாகத் திறமை மிகுந்திருப் பதால் அதிகாரமுள்ள பதவிகள் தேடிவரும். தங்களுக்குக்கீழே உள்ளவர்களை ஏவி, வேலை வாங்கும் திறமை நிறைந்தவர்கள். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ் போன்ற பதவிகளில் இருப்பார்கள். அரசாங்க அலுவலகஙகள், தர்மஸ்தாபனங்கள், கூட்டுறவுக் கழகங்கள், பொது நிறுவனங்கள், தொண்டு நிறுவனங் கள் போன்றவற்றில் நிர்வாகியாக அமைவார் கள். எண்ணின் பலம் குறைந்தவர்கள் நம்பிக்கை யான குமாஸ்தாவாக இருப்பார்கள்.

தனியார் நிறுவனங்களையும் நடத்தும் திறமை மிக்கவர்கள். லாபத்தைவிட, மனித நேயமும் தொழில் நியாயமும் இவர்களது நோக்கமாக இருக்கும். அரசாங்க கான்ட்ராக்டர் கள், புகழ்பெற்ற மருத்துவர்கள், ரத்தின வியா பாரம், பரம்பரை குலத்தொழில், விஞ்ஞானத் துறை, பொறியியல் துறை, இரசாயனத் துறை, நீதித்துறை போன்றவையும் இவர்களுக்கு ஏற்புடையவை.

இந்த எண்ணின் ஆதிக்கம் தொழில், அரசியல், சமூகரீதியாக நல்ல பலன்களைக் கொடுத்தாலும், பெரும்பாலும் திருமண வாழ்க்கை மனநிறைவைத் தருவதில்லை. பலரது இல்வாழ்க்கை தாமரை இலைத் தண்ணீரைப்போன்ற நிலையில்தான் அமைகின் றது. அன்பான மனைவி அமைந்தால்கூட தம்பதிகளுக்குள் அடிக்கடி பிரிவுகள் வந்து இவர்களை வாட்டுகிறது.

தொழில் சம்பந்தமான பிரிவுகள் மிகுதியாக வும், தவிர்க்கமுடியாதவையாகவும் இருந்து விடும். தங்களுக்கு அனுகூலமான தேதிகளில் பிறந்தவர்களைத் திருமணம்செய்து கொண்டால் நிம்மதி கிடைக்கும். அதாவது 3, 5, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களைத் திருமணம் செய்துகொள்ளலாம். 1-ஆம் எண்காரர் களைத் தவிர்க்கவேண்டும். ஆணாதிக்கம் அதிகம் நிறைந்த எண் என்பதால், தம்பதி களுக்குள் கௌரவப் பிரச்சினையால் அன்யோன்யம் குறைவுபடும்.

1, 3, 4, 5 ஆகிய எண்காரர்களைக் கூட்டாளி களாக சேர்க்கலாம். 2, 7, 8 ஆகிய எண்காரர் களை சேர்க்கக்கூடாது.

எந்தவொரு செயலையும் 4, 8 வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) செய்யக்கூடாது. திருமணம், சடங்குகள், புதுமனைப் புகுதல், புதுக்கணக்கு, இட மாற்றம், புதிய உத்தியோகம், உயர்பதவி ஏற்றல் கூடாது. மேலும் புதிய தொழில் முயற்சி, கடன்கேட்டல், பெரிய மனிதர்களைப் பார்க்கச் செல்லுதல், புதுப்பயிர் செய்தல், புதுக்கிணறு தோண்டுதல் ஆகியவற்றைத் தவிர்க்கவேண்டும்.

சூரியன் ஒரு நெருப்பு கிரகமென்பதால் சூரியனின் பலம் குறைந்தவர்களுக்கு வெப்ப நோய், மலச்சிக்கல், பார்வைக் குறைபாடு, தலைவலி, ரத்தக் கொதிப்பு, ஜீரணக் கோளாறு கள், படபடப்பு, பித்தம் சம்பந்தமான நோய்கள் ஏற்படலாம்.

பெயரெண்- 10: சூரியனின் தனித்தன்மை நிறைந்த எண் என்பதால் புகழ், தன்னம் பிக்கை, நேர்மை, நாணயம், ஒழுக்கம் ஆகிய பண்புகள் நிறைந்திருக்கும்.

பெயரெண்- 19: சூரியன், செவ்வாயின் ஆதிக்கம் கலந்திருப்பதால் சுயமுடிவு, சுய கௌர வம் இவர்களின் தனித்துவமாக இருக்கும்.

பெயரெண்- 28: சந்திரன், சனியின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் கடின முயற்சிக்குப்பிறகு வெற்றியுண்டு. அதிர்ஷ்டம் குறைவுபடும்.

பெயரெண்- 37: குரு மற்றும் கேதுவின் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் சுயநலமற்றவர்கள். மகா உன்னதப் பலன் உண்டு.

பெயரெண்- 46: ராகு மற்றும் சுக்கிரன் ஆதிக்கம் கலந்த எண். சிறுவயதில் மன சபலம் மிகுதியாக இருக்கும். வாழ்வின் பிற்பகுதியில் பலன் தரும்.

பெயரெண்- 55: புதனின் ஆதிக்கம் கொண்டது. சூட்சும அறிவு, ஞானம், திட்டமிடுதல், ராஜதந்திரம் மிகைப்படுத்தலாக இருக்கும்.

பெயரெண்- 64: சுக்கிரன், ராகு ஆதிக்கம் சேர்ந்திருக்கும். நண்பர்களையும் எதிரிகளையும் எளிதில் அடையாளம் காணமுடியாது. சில எதிர்புக்குப்பின் வெற்றியுண்டு.

பெயரெண்- 73: கேது, குரு ஆதிக்கம் சேர்ந்திருப்பதால், தெய்வபக்தி மிகுதியால் நினைத்ததை சாதிப்பவர்கள்.

பெயரெண்- 82: சனி, சந்திரன் ஆதிக்கத்தைப் பிரதிபலிப்பதால் கடின உழைப்பால் சாதாரண மனிதரும் சக்கரவர்த்தியாவார்.

பெயரெண்- 91: செவ்வாய், சூரியன் ஆதிக்கம் நிறைந்த எண் என்பதால் உலகப் புகழ், சரித்திரத்தில் இடம்பெறும் யோகம் உண்டாகும்.

பெயரெண்- 100: சூரியனின் ஆதிக்கத்தை மட்டும் கொண்டிருந்தாலும், பூஜ்ஜியம் வெற்றிவாய்ப்பை ஏற்படுத்தாது. உப்பு சப்பில்லாத- மன நிறைவற்ற வாழ்க்கையே நீடிக்கும். பலர் 100 சதவிகிதம் நற்பலன் தருமென்ற மனக்கணக்கில் இந்த எண்ணில் பெயர் வைத்துக் கவிழ்கிறார்கள்.

சுருக்கமாக, ஜனனகால ஜாதகத்தின்படி, பெயரெண் ஒன்று வரும்படியாகப் பெயர் வைக்கும்போது 28, 100 ஆகிய எண்களைத் தவிர்ப்பது நலம்.

சூரியனின் ஆதிக்கத்தை அதிகரிக்க தங்க நகைகளை அணிவது நன்மை தரும். மாணிக்கம், மஞ்சள் புஷ்பராகம், சூரிய காந்தக்கல் அணிவது நலம்.

பொன்னிறம், மஞ்சள், லேசான சிவப்பு, நீலம் ஆகிய நிறங்களால் நன்மையுண்டு. கருப்பு நிறங்களின் உபயோகங்களைத் தவிர்க்க வேண்டும்.

சூரியனின் கடவுளான சிவனை தினமும் வழிபடவேண்டும். ஞாயிற்றுக்கிழமை ருத்ராபிஷேக பூஜை செய்யலாம். தினசரி ஆதித்ய ஹிருதயம், சூரிய காயத்ரி படிக்க, கேட்கவேண்டும்.

ஞாயிறன்று கோதுமை உணவு தானம் கொடுக்கவேண்டும். ஒரு முகம் அல்லது 12 முக ருத்ராட்சம் அணியலாம்.

அதிர்ஷ்ட தேதிகள்: 1, 10, 19, 28, 2, 11, 29.

அதிர்ஷ்ட கிழமை: ஞாயிறு, புதன், திங்கள்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள் : மாணிக்கம், மஞ்சள் புஷ்பராகம்.

அதிஷ்ட திசை: கிழக்கு.

அதிர்ஷ்ட நிறங்கள்: சிவப்பு, மஞ்சள்- சிவப்பு கலந்த நிறம்.

அதிர்ஷ்ட தெய்வங்கள்: மகாவிஷ்ணு, சிவன்.

அதிர்ஷ்ட மலர்கள்: செந்தாமரை, ரோஜா.

அதிர்ஷ்ட சின்னங்கள்: உதயசூரியன், மயில், தேர், ராஜா, ஒளிரும் தீபம்.

அதிர்ஷ்ட முலிகை: வில்வம்.

அதிர்ஷ்ட உலோகம் : தங்கம்.

(தொடரும்)

bala030921
இதையும் படியுங்கள்
Subscribe