Advertisment

எண்ணியதை ஈடேற்றும் எண் கணிதம்! 5

/idhalgal/balajothidam/arithmetic-accomplishes-counting-5

வெற்றி தரும் எண்ணியல் தொடர்!

4-ஆம் எண் பலன் தொடர்ச்சி...

4-ராகு

இந்த 13-ஆம் எண் பெயரில் வருபவர்கள் தங்களது வாழ்க்கையில் பல ஜீவமரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துதான் ஆகவேண்டும். பெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் அயராது உழைத்திட்டபோதிலும், ஏனோ மேலதிகாரி களால் வெறுக்கப்படுகிறார்கள். அடிக்கடி இவர்கள் வீண்பழிகளைச் சந்திக்கிறார்கள். பலர் அரசாங்கவேலையை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு. மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13-ஆம் எண் ஏற்றதல்ல. பலருக்குத் திருமண வாழ்வில் தோல்வியையும் திருமணத் தடையையும் தரக்கூடிய எண்.

Advertisment

மனைவி, மக்கள், சகோதரர்கள்களிடம் மன சஞ்சலம் ஏற்பட்டு, தன்னுடைய இருப் பிடத்தைவிட்டு தலைமறைவாகிவிடுவார்கள். இந்த 13-ஆம் எண் ஒரு தனிமனிதரின் பெயரில் வரும்பொழுது பலவிதமான சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கி வந்தாலும், நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவற்றுக்கு பெயர் எண்ணாக வரும்பொழுது அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது. அதேசமயம் இத்தகைய நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஜாதகத் தில் ராகு சுபவலிமை பெற்று யோகம்தரும் நிலையில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதையும் மறக்கக்கூடாது. மேன்மையான அந்தஸ்தில் இருந்தாலும், சஞ்சலமான மன நிலையுடனும் வேதனையுடனும் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கும். உலகளவில் எண்கணிதத்தில் அதீத நம்பிக்கையுடைய அனைத்து நாடுகளும் இந்த எண்ணை விரும்புவதில்லை.

Advertisment

பெயரெண்- 22: சந்திரனின் ஆதிக் கத்தை முழுமையாகப் பிரதிபலிக்கும் ராகுவின் எண். இந்த எண்ணும் 13-ஐப் போன்றே பயப்படவேண்டிய எண்தான். இந்த தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயரெண் உள்ளவர்களில் பலர் திடீரென தாழ்ந்துவிடுவார்கள். எதிர்பாராத சம்பவங் கள் அடிக்கடி

வெற்றி தரும் எண்ணியல் தொடர்!

4-ஆம் எண் பலன் தொடர்ச்சி...

4-ராகு

இந்த 13-ஆம் எண் பெயரில் வருபவர்கள் தங்களது வாழ்க்கையில் பல ஜீவமரணப் போராட்டங்களை அவசியம் சந்தித்துதான் ஆகவேண்டும். பெரும்பாலும் 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும், நான்காம் எண்ணில் பெயர் அமைந்த அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் அயராது உழைத்திட்டபோதிலும், ஏனோ மேலதிகாரி களால் வெறுக்கப்படுகிறார்கள். அடிக்கடி இவர்கள் வீண்பழிகளைச் சந்திக்கிறார்கள். பலர் அரசாங்கவேலையை இடையிலேயே இழந்துவிடும் அவயோகமும் உண்டு. மனிதனின் வாழ்க்கைக்கு இந்த 13-ஆம் எண் ஏற்றதல்ல. பலருக்குத் திருமண வாழ்வில் தோல்வியையும் திருமணத் தடையையும் தரக்கூடிய எண்.

Advertisment

மனைவி, மக்கள், சகோதரர்கள்களிடம் மன சஞ்சலம் ஏற்பட்டு, தன்னுடைய இருப் பிடத்தைவிட்டு தலைமறைவாகிவிடுவார்கள். இந்த 13-ஆம் எண் ஒரு தனிமனிதரின் பெயரில் வரும்பொழுது பலவிதமான சோதனைகளையும் வேதனைகளையும் வழங்கி வந்தாலும், நிறுவனங்கள், கம்பெனிகள் போன்றவற்றுக்கு பெயர் எண்ணாக வரும்பொழுது அதிர்ஷ்டத்தை வாரி வழங்குகிறது. அதேசமயம் இத்தகைய நிறுவனங்களின் உரிமையாளர்கள் ஜாதகத் தில் ராகு சுபவலிமை பெற்று யோகம்தரும் நிலையில் இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்பதையும் மறக்கக்கூடாது. மேன்மையான அந்தஸ்தில் இருந்தாலும், சஞ்சலமான மன நிலையுடனும் வேதனையுடனும் வாழ்க்கையை ஓட்டவேண்டியிருக்கும். உலகளவில் எண்கணிதத்தில் அதீத நம்பிக்கையுடைய அனைத்து நாடுகளும் இந்த எண்ணை விரும்புவதில்லை.

Advertisment

பெயரெண்- 22: சந்திரனின் ஆதிக் கத்தை முழுமையாகப் பிரதிபலிக்கும் ராகுவின் எண். இந்த எண்ணும் 13-ஐப் போன்றே பயப்படவேண்டிய எண்தான். இந்த தேதியில் பிறந்தவர்கள் அல்லது பெயரெண் உள்ளவர்களில் பலர் திடீரென தாழ்ந்துவிடுவார்கள். எதிர்பாராத சம்பவங் கள் அடிக்கடி நிகழும். சதா மனக் கவலையையும் கஷ்டத்தையும் சஞ்சலத்தையும் துக்கத்தை யும் கொடுக்கக்கூடிய எண். எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள். விளையாட்டு, குடி, போதை, சூதாட்டத்தில் ஈடுபடக்கூடியவர்கள். பொருளை இழக்கக்கூடிய தொழிலைச் செய்பவர்கள். தீய நண்பர்களைக் கொண்டவர்கள். கடலில் அலைகள் ஓய்வதில்லை. அதைப்போன்று தான் இவர்களது பிரச்சினைகளும் ஓயாது. இருப்பினும் தங்களின் கடும் உழைப்பால் பெயரும் புகழும், பெருஞ்செல்வமும் மிகச் சிறப்பாகத் தேடிக்கொள்வார்கள். எதிர்பாராமல் வரும் துன்பங்களெல்லாம் எதிர்பாராமலேயே விலகியோடும். ஆணவம்கொண்டு செயலாற்றினால் துன்பம் நிச்சயம். நேர்மையும், கடுமையான உழைப்புமே இவர்களை உயர்த்திவிடும். எந்தத் துன்பம் வரினும் சமாளித்துக் கொள்வார்கள்.

gg

பெயரெண்- 31: குரு மற்றும் சூரியனின் ஆளுமையில் உருவாகும் ராகுவின் எண். சற்றேறக் குறைய 13-ஆம் எண்ணிற்குச் சொன்ன அனைத்து பலன்களும் இந்த 31லிஆம் எண்ணிற்கும் பொருந்தும். இவர்களுக்குத் துணிச்சலும் பலமும் அதிகம். போலீஸ், போர்வீரர்கள் போன்று உடல்வாகு அமையும். சுதந்திரமாக செயல் படக் கூடியவர்கள். மனதிற்குப் பிரியமில்லாத காரியங்களில் ஈடுபடமாட்டார்கள். மனோ வசியம், ஜோதிடம், வேத சாஸ்திரங்களில் ஈடுபாடுண்டு. எதையும் லட்சியம் செய்ய மாட்டார்கள். வெற்றியடைந்தாலும் மகிழ்ச்சி யடைய மாட்டார். எதிர்பாராத நிகழ்ச்சிகள் வாழ்க்கையை பாதிக்கும். சந்தர்பங்களை உணர்ந்து சரியாக செயல்படக்கூடிய ஆற்றலுண்டு.

பெயரெண்- 40: தனித்த ராகுவின் குணங்கள் நிறைந்த எண். நண்பர்களால் பெரிய அந்தஸ்தும் உத்தியோகமும் பெறுவர். புகழ், பட்டம் உண்டு. ஆபரணச் சேர்க்கை, சொத்துகள் ஏற்படும். அதிக நண்பர்கள் உண்டு. நல்ல பேச்சு சாமர்த்தி யம் கொண்டவர்கள். நிர்வாகத் திறமை யும், பிடிவாதமும் உண்டு. தீய நண்பர் களைத் தெரிந்து அவர்களிடமிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும்.எப்படியாவது பணம் சம்பாதிக்க வேண்டுமென்று குறுக்குவழியில் துணிந்து இறங்கிவிடுவார்கள். பின்பு அதனால் பிரச்சினைக்குள்ளா வார்கள். இவர்கள் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டியது அவசியம். இல்லையெனில் இவரைச் சேர்ந்தவர்களே இவர்களை கவிழ்த்துவிடுவார்கள். வீம்புக் காக சில செயல்களில் ஈடுபட்டால், தோல்விகளே மிஞ்சும். அரசியல், சினிமா, போட்டி, பந்தயங்களில் அதிர்ஷ்டங்கள் உண்டு. தனக்கு ஏற்படும் அனைத்து தீய பலன்களுக்கும் "சமூகம் என்னைப் புரிந்துகொள்ளவில்லை' என்று குறைகூறுவார்கள். வாழ்க்கையில் கிடைத்த ஆதாயத்தைப் பயன்படுத்திக்கொள்ளத் தவறுபவர்கள்.

பெயரெண்- 49: ராகு மற்றும் செவ்வாயின் சம்பந்தத்தால் உருவாகும் ராகுவின் எண். செல்வம் நீர்வீழ்ச்சிபோல் வரும். புயல்போல் புகழ் வரும். பிரமிக்கத்தக்க காரியங்களைச் செய்பவர். வித்தியாசமான அனுபவங்கள் வாழ்க்கையில் உண்டு. பயணம் அதிகம் செய்பவர். விபரீத ராஜயோகம், திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் உண்டு. சிறுசிறு விபத்துகள் ஏற்படும். சொத்து தொடர்பான வம்பு வழக்கு வரும். வாஸ்து குற்றமுள்ள சொத்தே அமையும். பூர்வீக சொத்துமூலம் உடன்பிறந்த வர்களிடம் சர்ச்சையை மிகைப்படுத்தும் எண். பெண்களுக்கு மனம் நிறைந்த மணாளனைத் தருவதில்லை அல்லது திருமணத் தடையைத் தரும்.

பெயரெண்- 58: புதன் மற்றும் சனியின் ஆதிக்கத்தைப் பிரதிபலிக்கும் ராகுவின் எண். வசீகரத்தைத் தரும். காரியசித்தி ஏற்படும். துன்பங்களையே அனுபவிக்கப் பிறந்தவர்கள் என்பார்கள். உண்மை அதுவன்று. சோதனை இல்லையேல் சாதனை இல்லை. இவர்களது இளமைக் காலப் போராட்டங்கள் எல்லாம் பிற்கால வசதியான வாழ்வுக்கு அடித்தள மாக அமைந்துவிடும். வாழ்க்கையில் முன்னேற்றமுண்டு. கத்தியைத் தீட்டாமல் புத்தியைத் தீட்டி சம்பாதிப்பவர்கள். ஜனனகால ஜாத கத்தில் புதன் மற்றும் சனியின் வலிமைக்கேற்ப பிறரை ஏமாற்றிப் பிழைக்கும் தொழில் அல்லது பிறரால் ஏமாற்றப்படும் தொழில் கிடைக்கும். காரணமில்லாமல் பலருடைய எதிர்ப்பையும், விரோதத்தையும் சம்பாதிக்க வேண்டிவரும். இவர்கள் யாருக்கு உதவுகிறார்களோ, அவரே இவர்களுக்கு துரோகம் செய்வார்கள். விரக்தியில் சுயநலவாதியாகி விடுவார்கள்.

பெயரெண்- 67: சுக்கிரன் மற்றும் கேதுவின் ஆதிக்கம் சேர்ந்த எண். வசீகரத் தைத் தரக்கூடிய எண். ஏதாவதொரு சாஸ்திர ரீதியான கலையில் நல்ல புகழும் செல்வமும் பெற்றுத்தரும். கலையுணர்வு மிக்கவர்கள். நேர்மை நியாயத்தை எதிர்பார்ப்பவர்கள். நல்ல உழைப்பாளி. மேல்நிலையில் உள்ளவர் களின் ஆதரவு கிட்டும். கற்பனைவாதிகள்.

அன்பும் பொறுமையும் கொண்டவர்கள். ஆண்களுக்கு மனநிறைவான மணவாழ்க்கை யைத் தராது அல்லது திருமணத் தடையை உருவாக்கும்.

பெயரெண்- 76: கேது மற்றும் சுக்கிரனின் ஆதிக்கம் கலந்த ராகுவின் எண். திடீரென எல்லா பொருட்களையும் இழக்க நேரும். பொதுக் காரியங்களில் வெற்றி ஏற்படும். அதிசயப்படும்படியாக புதிய முறையில் செல்வம் சேரும். பின்வயதில் என்ன செய்வதென்று தெரியாமல், உண்டு உறங்கி வாழ்வைக் கழிப்பர். பொதுவாக அதிர்ஷ்டகரமான எண்ணல்ல.

பெயரெண்- 85: சனி மற்றும் புதனின் ஆதிக்கம் சேர்ந்த ராகுவின் எண். கஷ்டப்பட்டு முன்னேற்றமடைவார்கள். பிறர் சங்கடங்களை நீக்குவார்கள். வைத்தியத் தொழிலில் பிரகாசிப்பார்கள். எல்லாரா லும் வணங்கப்படும் பதவி கிடைக்கும். எந்தக்காலத்திலும் நண்பர்கள் பயனுள்ளவர் களாக இருப்பார்கள். கடினமாக உழைத்து முன்னேறச் செய்தாலும், சிறப்பான பயனுள்ள வாழ்வைத் தரும் எண்ணாகும்.

பெயரெண்- 94: செவ்வாய் மற்றும் ராகுவின் ஆதிக்கம் நிறைந்த எண். அரசியல் வாழ்க்கைக்கு நல்ல பலன்தரும் எண்.

அரசியலில் ஈடுபட்டால் நல்ல பதவிகள் கிடைக்கும். சமூகத்திற்கு அநேக நன்மை, சீர்திருத்தங்களைச் செய்பவர்கள். சுக வாழ்க்கையும் புகழும் உண்டு. நற்செயல்களை செய்யக்கூடியவர். சுயதிருப்தியே இவர்களுக்கு முக்கியமாக இருக்கும். பணம் இவர்களைத் தேடிவரும். தீவிரத் தன்மையும் அதிகாரம் செய்வதும் இவர்கள் குணம். உலக சுகங்களை அனுபவிக்கவேண்டுமென்று விரும்புவார்கள். மனோசக்தி மிகுந்தவர்கள். ஆன்மிகம், ஜோதிடம், வேதாந்த ஆராய்ச்சி களில் ஈடுபாடுண்டு. எதிரிகளைத் துணிவுடன் சந்திப்பார்கள். உலகத்திலுள்ள பல விஷயங் களையும் அறிந்து வைத்திருப்பார்கள். மற்ற மனிதர்களை உடனே எடைபோடும் சாமர்த்தியம் உண்டு. இதை பெயரெண்ணாகக் கொண்டவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.

பெயரெண்- 103: சூரியன் மற்றும் குருவின் ஆளுமை நிறைந்த ராகுவின் எண். மிகவும் அதிர்ஷ்டமான எண். முதலில் செல்வநிலையில் முன்னேற்றம் ஏற்படும். பிறகு தொழிலில் மாற்றம் ஏற்பட்டு முடிவு மங்களகரமாக இருக்கும். இது வாழ்நாள் முழுவதும் தொடரும். வாழ்க்கை முன்னேற் றத்திற்கு வழிவகை செய்யும் எண்.

பொதுவாக எண் 4 வரும்படி பெயர் வைக்கும்போது 4, 13, 22, 31, 40, 76 ஆகிய எண்களில் வைப்பதைத் தவிர்க்கவேண்டும். ராகுவின் ஆதிக்கத்தால் அசுபப் பலன்களை சந்திப்பவர்கள் கோமேதகம் அணிவது மிகவும் சிறப்பைத் தரும். மஞ்சள் நிறம், இளம்பச்சை, நீலநிற உடைகளை அணிவது சிறப்பு. கருப்புநிற ஆடைகளைத் தவிர்க்க வேண்டும். காளி, துர்க்கை, பைரவர் அல்லது சிவனை தினமும் வழிபடவேண்டும். தினசரி காலபைரவர் அஷ்டகம் படிக்கவேண்டும்.

அதிர்ஷ்டத் தேதிகள்: 1, 10, 19, 28; 9, 18, 27.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்: கோமேதகம்.

அதிர்ஷ்டக் கிழமை: ஞாயிறு, திங்கள், வெள்ளி.

அதிர்ஷ்ட தெய்வம்: சிவன், காளி, துர்க்கை, காலபைரவர்.

அதிர்ஷ்ட மலர்: மந்தாரை. அதிர்ஷ்ட திசை: தென்மேற்கு.

அதிர்ஷ்ட மூலிகை: அறுகம்புல்.

அதிர்ஷ்ட உலோகம்: கருங்கல்.

அதிர்ஷ்ட தானியம்: கருப்பு உளுந்து.

bala011021
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe