4-ராகு

4, 13, 22, 31, 40, 49, 58, 67, 76, 85, 94, 103 ஆகிய எண்களில் பெயர் அமைந்தவர்களும்; 4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் ராகுவின் ஆதிக்கம் பெற்றவர்கள்.

நவகிரகங்களில் வலிமையானவரான ராகு உலக இயக்கத்தைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர் என்பதால், ராகு என்ற பெயரைக் கேட்டாலே பலருக்கும் பயம் வந்துவிடும். நாவண்மை அதிகமுள்ள இவர்கள் தீவிர உணவுப் பிரியர். வாய்ப் பேச்சில் இன்பம் காண்பவர் கள். தன் பேச்சினால் பிறர் மனம் புண்படுமென்னும் எண்ணமில்லாமல், துடுக் கான சொற்களை வெளியிடு பவர்கள். எதிர்வாதம் செய்யக் கூடியவர்கள். எதிலும் எதிர்ப்புள்ள விவகாரங் களையே எடுத்துப் பேசுவார் கள். சமுதாயத முன்னேற் றம், நாட்டு நடப்புகள் பற்றிப் பொது இடங்களில் காரசார மாகப் பேசுவார்கள். பிறர் கருத்துகளை ஏற்றுக்கொள் ளாதவர்கள். எல்லாம் எனக்குத் தெரியுமென்ற கர்வமுண்டு. தான் பிடித்த முயலுக்கு மூன்றுகால் என்று, எந்த விஷயத்திலும் தனிப்பட்ட எண்ணம் உள்ளவர்கள்.

விரோதிகள் அதிகம் இருப் பார்கள். தன் விருப்பப்படியே அனைத்தும் நடக்கவேண்டு மென்ற எதிர்பார்ப்பு உடைய வர்கள். சாஸ்திர நம்பிக்கை யற்றவர்கள். உழைக்காமல், அதிர்ஷ்டத்தை நம்பி வாழ்பவர்கள். உலகில் வாழ்வதற்கு அவசியமான பொருட்களை அடைய, அனைத்துவிதமான குறுக்குவழி யையையும் நாடும் ஆற்றலைத் தரும் எண். தங்கள் காரியம் வெற்றியடையவேண்டும் என்பதற் காக, எந்த வழியையும் பின்பற்றத் தயங்கமாட் டார்கள். இருப்பினும், வாழ்க்கையில் வெற்றிபெறுவோமா என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும். எதிலும் அவசரமும் ஆத்திரமும் உண்டு. தங்களைக் கண்டு பயப்படுபவர்களை விரட்டிக்கொண்டே இருப்பார்கள். பயப்படாமல் இருப்பவரிடம் நயமாகப் பழகு வார்கள்.

Advertisment

சந்தேக குணமும் அதிகாரம் செய்யும் விருப்பமும் இருப்ப தால், நண்பர்கள் குறைவாகவே இருப் பார்கள். தங்கள் முயற்சிகளில் அடுத்த வர்களின் தலை யீட்டை விரும்ப மாட்டார்கள். இவர் களது வருமானம் உயர உயர செலவும் அதிகமாகிக் கொண்டே வரும். கையில் பணம் இருக்கும்வரை கண்ணில் பார்ப்பதை வாங்கும் இயல்பினர்.

baba

நண்பர்களுக்காக செலவுசெய்யத் தயங்கமாட்டார்கள். துணிவும் குருட்டு தைரியமும் அதிகம்.

மனநிலையில் அவ்வப்போது உணர்ச்சி மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும் எண். அதேசமயம் கொள்கையில் பிடிவாதமும் ஒரு ஸ்திரத் தன்மையும் இருந்தால், உயர்வும் லட்சியமும் வெற்றிபெறும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இந்த எண்ணின் தொடர்புடையவர்களின் வாழ்க்கையானது எவ்வளவு வேகமாக உயர்கிறதோ, அதே வேகத்தில் திடீரென தாழ்ந்தும் விடும். அதாவது இந்த எண் ஒருவரின் வாழ்நாளில் கற்பனை செய்து பார்க்கமுடியாத உயரத்திற்கு ஏற்றி வைத்து, அதலபாதாளத்தில் இறக்கிவிடும்.

வாழ்க்கையில் மிகவும் அடிபட்ட ஒருவர் தான் உலக பந்தங்களிலிருந்து விடுபட விரும்பு வார்கள். வாழ்வில் ஏற்ற- இறக்கத்தை மிகுதியாக சந்திக்கச்செய்து, உலக பந்தங்களிலிருந்து விடுவிப்பதும் இந்த எண்தான். நன்நெறியில் தேர்ச்சி பெறவும், கவலையற்ற வாழ்வும், களிப் பான சூழ்நிலையும், இனிமை பயக்கும் உல்லாச மும் வேண்டுமென்று விரும்புவோர்க்கு இந்த எண் உதவி செய்யாது. எல்லாரும் பயப் படுவதுபோல், இந்த நான்காம் எண் சுபிட்சித் துச் சொல்லக்கூடிய சுபப் பலன்களைத் தராது.

இவர்கள் ரகசியங்களைக் காப்பாற்றமாட்டார்கள். எந்த ஒரு விஷயத்தையும், வேலை யையும் அடுத்தவரிடம் சொல்லிப் புலம்பு வார்கள். இவர்களிடமிருந்தே திட்டத்தை அறிந்துகொள்ளும் இவர்களது நண்பர்கள், அந்த திட்டத்தை விரைந்து செயலாற்றி வெற்றிபெற்றுவிடுவார்கள். தங்களது நண்பர்களாலும், சுற்றத்தார்களாலும் மற்றும் நம்பியவராலும் செய்வினைகள் மற்றும் ஏவல் கோளாறுகளை இவர்கள் அனுபவிக்க நேரிடுகிறது. ரோஷமும் தன்மான உணர்வும் மிகுந்த இவர்கள், அடுத்தவர்களுக்கு அடிமை யாக இருந்து முன்னேறுவதைவிட, அந்த வேலையைவிட்டு விலகி ஏதாவது செய்து பிழைத்துக் கொள்ளலாமென்று எதிர்த்து நிற்பார்கள். எனவேதான் இவர்களுக்குப் பல பிரச்சினைகளும், முன்னேற்றத் தடைகளும் தொழிலில் உண்டாகின்றன.

வட்டித் தொழில், அடகு பிடித்தல், நிழல் தொழில் (சினிமா), ஜோதிடம், மருத்துவம், விமானி, டிவி., ரேடியோ, கடிகாரம் பழுது பார்த்தல், அலைந்து திரிந்து செய்யும் தொழில், ஏமாற்றுதல், அரசுக்கு விரோத மான தொழில்கள், கடத்தல், கண்ணாடி பீங்கான் சம்பந்தப்பட்ட தொழில்கள், ஏற்றுமதி- இறக்குமதி, வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்புதல், ஏஜென்சி, ஒப்பந்தத் தொழில்கள், இறைச்சி விற்பனை, கார், லாரி, இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள், பேச்சாளர்கள், ஜோதிட நிபுணர்கள், துப்புத் துலக்கும் பணி, பத்திரிகை நிருபர்கள், டைப்பிஸ்ட்டுகள், ரயில்வே, வங்கி ஊழியர்கள், அடுத்தவர்களைத் தூண்டி வேலை வாங்கும் மேலாளர்கள், மேற்பார்வையாளர் போன்ற இனங்கள் இவர்களுக்கு நன்மை தருபவையாகும்.

கராத்தே, சர்க்கஸ், சிலம்பம் போன்ற உடற்பயிற்சித் தொழில் களும் ஏற்றவை. புத்தகங் கள் விற்பனை, வெளியிடுதல் போன்ற தொழில்களும் நன்மையே செய்யும். டெய்லர் கள், கார், பைக், ஸ்கூட்டர் மெக்கானிக்கு கள், எலக்ட்ரீஷியன்கள், அரசு அலுவலகங் களில் புரோக்கர் வேலை போன்றவை இவர்களுக்கு அமையும்.

இளவயதிலேயே இவர்களுக்குத் திருமணம் நடக்கும். மனைவியுடன் எப்போதும் விதண்டாவாதம் செய்பவர்கள். தாங்கள் காதலித்தவர்களை சமூகத்தின் கட்டுப்பாட்டையும், எதிர்ப்பையும் மீறி மணந்துகொள்ளும் வேகமும் தைரியமும் உண்டு. இவர்கள் 1, 5, 6, 8 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை மணந்துகொண்டால் (பிறவி எண் மற்றும் கூட்டு எண்) நல்ல மணவாழ்க்கை அமையும். பொருளாதார வசதிகள் முன்னேற்றமடையும். இவர்கள் திருமணத்தை 1, 6 வரும் தேதிகளில் (தேதி எண் அல்லது கூட்டு எண்) வைத்துக் கொண்டால் திருமண வாழ்வில் இன்பத்தை அடையலாம்.

பொதுவாக 1, 2, 4, 6 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாகவும், கூட்டாளி களாகவும் வைத்துக் கொள்ளலாம். 8-ஆம் தேதி பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக்கொள்ளலாமே தவிர கூட்டாளியாக சேர்த்துக்கொள்ளக்கூடாது. 1-ஆம் எண்காரர் கள் இவர்களைத் தங்கள் ஆளுமைக்குள் கொண்டுவந்து, இவர்களையும் முன்னேறச் செய்வார்கள். இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். ஜோதிடரீதியாக பகை கிரகங்களான சூரியனும் (1) ராகுவும் (4) எப்படி நட்பாக இருப்பார்கள் என்னும் கேள்வி எழும். சூரிய- சந்திரர்களின் நிழலே ராகு- கேதுக்கள். எனவே அவர்கள் எண் கணிதத்தில் நட்பாக வருகிறார்கள்.

பொதுவாக ராகு அசுபத் தன்மையைத் தரும் விதத்தில் பெயரெண் இருந்தால் பித்த நோய், மனநோய்களான டென்ஷன், படபடப்பு, ரத்தசோகை, மனச்சோர்வுகள், தலை, கண், மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட கோளாறுகள் அடிக்கடி வந்துமறையும். வாய்வுப் பிடிப்பு, ஜீரணசக்திக் குறைவு, இடுப்புவலி, பின்தலை வலி போன்றவை ஏற்படும். இவர்கள் உணவுக் கட்டுப்பாட்டைக் கடைப்பிடித்தால் நோய்கள் அண்டாது.

ஒவ்வொரு மாதத்திலும் 1, 10, 19, 28; 9, 18, 27 ஆகிய தேதிகள் நல்ல பலன்களையே கொடுக்கும். அதேபோன்று 4, 13, 22, 31 ஆகிய தேதி கள் தாமாகவே நல்ல பலன்களைக் கொடுக்கும்.

பெயரெண்- 4: ராகுவின் ஆதிக்கத்தை முழுமையாகக் கொண்ட எண். பய உணர்வு மிகுந்தவர். அற்ப காரியங்களுக்கெல்லாம் பயப்படுவது இவர்களின் அம்சமாக இருக்கும். தனித்தியங்கும் தன்மையற்றவர்கள். எல்லாம் தெரிந்தாலும் பிறர்சொல் கேட்டு நடப்பவர். சொந்தத் தொழிலில் விருப்பம் குறைவு. இழப்புகளை மிகைப்படுத்தும் எண். அடிக்கடி இவர்களுக்கு சோதனைகள் ஏற்படும். எளிதில் செல்வச் செழிப்பை அடையமுடியாது. அதிகம் உழைக்க நேரும். வீண் பயத்தால் நோய் எதிர்ப்புசக்தி குறைவுபடும். தீராத- தீர்க்க முடியாத நோய்த்தொல்லை உண்டு. இளமை யிலேயே திருமணம் நடந்து, குடும்ப பாரத்தைச் சுமக்கவேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்.

பெயரெண்- 13: 1 என்ற சூரியனும், 3 என்ற குருவும் சேர்ந்து ராகுவின் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் எண். ராகு பெண் ராசியான ரிஷபத்தில் உச்சமடைவதால், பெண்களால் பிரச்சினைகளையும் சிரமங்களையும் இந்த எண்ணில் உள்ளவர்கள் அனுபவித்தே ஆக வேண்டும். விரும்பினாலும் விரும்பா விட்டாலும் வேதனை தரும் நிகழ்ச்சிகளும் சம்பவங்களும் வாழ்க்கையில் நடந்து கொண்டே இருக்கும்.

என் அனுபவத்தில், நெருங்கிய ரத்தபந்த உறவினர் ஒருவரின் வீட்டுக் கதவெண் 13. அவர் களுக்கு ஐந்து பிள்ளைகள். அந்த நபர் அந்த வீட்டை வாங்கும்போது, அந்த ஊரில் குறிப்பிட் டுச் சொல்லும்படி புகழ், அந்தஸ்து, கௌரவம், பணம் என நிரம்பியவராக இருந்தார். அவரது பிறவியெண் 22. அந்த வீட்டிற்குச் சென்ற பிறகு, வீட்டைத்தவிர அனைத்து சொத்தையும் தொழி-ல் இழந்தார். வீடும் கடனில் இருந்தது. வாலிப வயதிலிருந்த பிள்ளைகளின் திருமணத்தை நடத்த மிகுந்த சிரமப்பட்டார். கூட்டுத் தொழிலில் வம்பு, வழக்கால் பெரும் பணம் முடங்கியது. சற்றேறக்குறைய 20 வருடங் களுக்குப்பிறகு, அரசின் சட்டதிட்டத்தில் கதவெண் 6/13 என மாறிய சில மாதங்களில், கூட்டுத்தொழில் வழக்கில் தீர்ப்பு சாதகமாகி பலகோடிகள் கிடைத்தது.

வம்பு வழக்கில் மீளமுடியாத- அடமானத் திலிருந்து மீட்கமுடியாத- விருத்தியில்லாத- விற்கமுடியாத- முடக்கப்படும் சொத்துகள் போன்றவற்றின் பல இடங்களின் சர்வே எண்களின் கூட்டு எண்கூட 4-ஐப் பிரதிபலிப்ப தாகவே இருக்கும். நீதிமன்றத்தில் பல வருடங் களாக நிலுவையிலுள்ள வழக்குகள், குற்றவாளி களைக் கண்டுபிடிக்க முடியாத வழக்குகள் போன்றவற்றின் வழக்கு எண் 4-ஆம் எண்ணின் ஆதிக்கத்திலேயே இருக்கும். இந்த கூட்டு எண்ணின் ஆதிக்கத்திற்கேற்ப சூட்சும வழிபாடு கள் செய்தால் மட்டுமே மேற்கூறிய சிரமத்திலிருந்து விடுபடமுடியும்.

4-ஆம் எண்ணின் பலன்கள்

அடுத்த இதழிலும்...

(தொடரும்)

செல்: 98652 20406