Advertisment

மேஷ லக்னம் தசா புக்திப் பரிகாரங்கள் -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/aries-lagna-dasa-buktip-remedies-prasanna-astrologer-i-anandhi

ருவரின் சுய ஜாதகத்திலுள்ள கிரகங்களே அவரது விதியைத் தீர்மானிக்கின்றன. அந்த விதிப் பயனை ஜாதகர் எப்போது அனு பவிப்பார் என்பதை தசாபுக்திகளே தீர்மானிக்கின்றன.

Advertisment

ஒருவருக்கு ஜாதகத்திலுள்ள கிரகங்களும், பாவகங்களும் யோகம் தரும் விதத்தில் அமைந்தால் மட்டும் போதாது.

ஜாதகத்தில் எத்தனை யோகங் கள், தோஷங்கள் இருந்தாலும் அந்த சாதக பாதகத்தைத் தரும் கிரகங்களின் தசாபுக்திகள் நடை பெற்றால் மட்டுமே ஜாதகர் பலனை அனுபவிக்க முடியும்.

அவரது வாழ்நாளுக்குள் அனுபவிக்கவேண்டிய பருவத்தில் அந்த யோக கிரகங்களின் தசை வந்தால் மட்டுமே யோகப் பலனை பரிபூரணமாக அனுபவிக்க முடியும். சாதகமற்ற தசாபுக்திக் காலங்களில் மனிதர்கள் அனுபவிக்கக்கூடிய இன்னல்களுக்கு அளவே இன்லை. மனிதர்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டத்திற்குக் காரணம் தசாபுக்திகள் என்பதால் சங்கட காலங்களில் தசாபுக்தியை வலுப்படுத் தும் பரிகாரங்கள் செய்யும்போது பாதகங்கள் குறைந்து சாதகங்கள் உண்டாகும்.

Advertisment

அதேபோல் தசை, புக்தி நடத்தும் கிரகங்கள் தான் நின்ற வீட்டின் வழியாகவும், லக்னத்திற்கு தான் பெற்ற ஆதிபத்தியரீதியாகவும் பலன் தரும். எனவே இந்த கட்டுரையில் நவகிரகங்களின் தசாபுக்தியை வலிமைப்படுத்தும் எளிய பரிகாரங்களை லக்னரீதியாக காணலாம்.

மேஷ லக்னம்

காலபுருஷ முதல் லக்னம் மேஷம். இதன் அதிபதி செவ்வாய். செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த வர்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடனும் செயல்படு வார்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தைப் பிடிப்பது ஒன்றே தலையாய நோக்கமாக இருப்பார்கள். வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள். உஷ்ண தேகம், ப

ருவரின் சுய ஜாதகத்திலுள்ள கிரகங்களே அவரது விதியைத் தீர்மானிக்கின்றன. அந்த விதிப் பயனை ஜாதகர் எப்போது அனு பவிப்பார் என்பதை தசாபுக்திகளே தீர்மானிக்கின்றன.

Advertisment

ஒருவருக்கு ஜாதகத்திலுள்ள கிரகங்களும், பாவகங்களும் யோகம் தரும் விதத்தில் அமைந்தால் மட்டும் போதாது.

ஜாதகத்தில் எத்தனை யோகங் கள், தோஷங்கள் இருந்தாலும் அந்த சாதக பாதகத்தைத் தரும் கிரகங்களின் தசாபுக்திகள் நடை பெற்றால் மட்டுமே ஜாதகர் பலனை அனுபவிக்க முடியும்.

அவரது வாழ்நாளுக்குள் அனுபவிக்கவேண்டிய பருவத்தில் அந்த யோக கிரகங்களின் தசை வந்தால் மட்டுமே யோகப் பலனை பரிபூரணமாக அனுபவிக்க முடியும். சாதகமற்ற தசாபுக்திக் காலங்களில் மனிதர்கள் அனுபவிக்கக்கூடிய இன்னல்களுக்கு அளவே இன்லை. மனிதர்களின் அதிர்ஷ்டம் மற்றும் துரதிர்ஷ்டத்திற்குக் காரணம் தசாபுக்திகள் என்பதால் சங்கட காலங்களில் தசாபுக்தியை வலுப்படுத் தும் பரிகாரங்கள் செய்யும்போது பாதகங்கள் குறைந்து சாதகங்கள் உண்டாகும்.

Advertisment

அதேபோல் தசை, புக்தி நடத்தும் கிரகங்கள் தான் நின்ற வீட்டின் வழியாகவும், லக்னத்திற்கு தான் பெற்ற ஆதிபத்தியரீதியாகவும் பலன் தரும். எனவே இந்த கட்டுரையில் நவகிரகங்களின் தசாபுக்தியை வலிமைப்படுத்தும் எளிய பரிகாரங்களை லக்னரீதியாக காணலாம்.

மேஷ லக்னம்

காலபுருஷ முதல் லக்னம் மேஷம். இதன் அதிபதி செவ்வாய். செவ்வாய் பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த வர்கள் துடிப்பாகவும் மிகுந்த வீரத்துடனும் செயல்படு வார்கள். மற்றவர்களைப் பற்றி கவலைப்படாமல் எதிலும் முதலிடத்தைப் பிடிப்பது ஒன்றே தலையாய நோக்கமாக இருப்பார்கள். வீரமும் தைரியமும் கோபமும் ஆக்ரோஷமும் ஒருங்கே அமையப் பெற்றுள்ளவர்கள். உஷ்ண தேகம், போர் குணம் உள்ளவர்கள். எடுத்த காரியத்தில் இறுதிவரை போராடி ஒரு முடிவை பார்த்துவிட வேண்டுமென்ற உறுதி கொண்டவர்கள். வாழ்க்கையில் போராடி எப்படி வெற்றி பெறவேண்டும் என்று இவர்களிடம் இருந்துதான் தெரிந்துகொள்ளவேண்டும். மேஷ லக்னத் திற்கு தலை அல்லது முகத்தில் காயம் பட்ட தழும்பு, மச்சம் போன்ற அடையாளம் இருக்கும்.

இனி தசாபுக்திரீதியான பலன்களைக் காணலாம்.

செவ்வாய் தசை

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் லக்னாதிபதி மற்றும் அஷ்டமாதிபதி. லக்னாதிபதியாக வலுப்பெற்று தசை நடத்தினால். கட்டுமஸ்தான தோற்றம், நிறைந்த ஆரோக்கியம், சிந்தித்து செயல்படும் திறன், ஒரு கூட்டத்தை வழிநடத்தும் திறமை ஆகியவை ஏற்படும். அவரே அஷ்டமாதிபதி என்பதால் செவ்வாய் தசை, புக்திக் காலங்களில் வெளிநாட்டு வாழ்க்கை, உழைக்காத அதிர்ஷ்ட வருமானம், உயில் சொத்துகள் போன்ற அதிர்ஷ்ட பலன்கள் நடைபெறும். அசுபத் தன்மையுடன் இயங்கினால் வம்பு, வழக்கு, சிறை தண்டனை, விபத்து, கண்டம், அறுவை சிகிச்சை, தீராத கடன், தீர்க்கமுடியாத நோய், கண் திருஷ்டி பாதிப்பு போன்ற அசுபப் பலன்கள் நடக்கும். இவர்களுக்கு நடக்கும் நல்லது கெட்டதிற்கு இவர்களே காரணமாக இருப்பார்கள்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் பிரத்தியங்கரா தேவியை வழிபட செவ்வாய் தசையால் சுபப் பலன்கள் நடக்கும்.

சுக்கிர தசை

மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் 2, 7-ஆமதிபதி. சுக்கிரன் தனம், வாக்கு குடும்ப ஸ்தானாதிபதி என்பதால் வெகு விரைவில் சம்பாதிக்கத் துவங்கிவிடுவார்கள். இளம் பருவத்தில் சுக்கிர தசை நடைபெறும் மேஷ லக்னத்தினருக்கு உரிய வயதில் திருமணம் நடைபெற்று குடும்பம் அமையும். சுக்கிரன் நின்ற இடம், நட்சத்திர பாதம் மூலம் சிலருக்கு காதல், காதலால் தவறான வாழ்க்கையைத் தேர்வுசெய்வது அல்லது முறையற்ற காதல், காமம், கண் பார்வை பாதிப்பு போன்ற அசுபப் பலன்கள் நடக்கும். மேஷ லக்னத்திற்கு சுக்கிரன் மாரகாதிபதி என்பதால் வயோதிக காலத்தில் சுக்கிர தசை நடந்தால் மாரகத்தையும் தரத் தவறுவதில்லை.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை வீட்டில் நெய்தீபமேற்றி லலிதா சகஸ்ஹர நாமம் படித்துவர பொருளாதாரக் குற்றம் அகலும். வெள்ளிக்கிழமை ராகு வேளையில், துர்க்கை, காளியை வழிபட திருமணத்தடை, தவறான நட்பு, மாரகம் போன்ற பாதிப்புகள் அகலும்.

aa

புதன் தசை

புதனும் செவ்வாயும் பகை கிரகங்கள். மேலும் மேஷத்திற்கு புதன் 3, 6-ஆமதிபதி. உபஜெய ஸ்தானாதிபதி. புதன் சுபகிரக சம்பந்தம், சுபவலு பெற்றவர்கள் தொட்டது துலங்கும். கடன் வாங்கி சுய தொழில் நடத்தி முன்னேறுவார்கள். நல்ல நிலையான, நிரந்தரமான உத்தியோகத்தில் இருப்பார்கள். இவர்களுக்கு எதிரிகள் புறமுதுகு காட்டுவார்கள். நோய் பாதிப்பில்லாமல் ஆரோக்கியத்தைக் காப்பார்கள். தாய்மாமன், உடன்பிறந்தவர்கள் ஆதரவுண்டு. புதன் அசுப வலுவுடன் தசை நடத்தினால் அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறு, முறையான ஆவணம் இல்லாத சொத்து, ஜாமின் பிரச்சினை, கடன் பிரச்சினை, நோய்த் தாக்கம், எதிரி தொல்லை, செய்வினைத் தாக்கம், பய உணர்வு, நிரந்தரமில்லாத உத்தியோகம், அடிக்கடி வேலையை மாற்றுவது, தாய்மாமன், உடன்பிறப்புகளால் மனவேதனை, முறையற்ற பாகப்பிரிவினை போன்ற பாதிப்புகள் இருக்கும்.

பரிகாரம்: புதன்கிழமை புதன் ஓரையில் சரபேஸ்வரரை வழிபடவேண்டும்.

சந்திர தசை

சந்திரன் மேஷ லக்னத்திற்கு 4-ஆமதிபதி, சுக ஸ்தானாதிபதி. சுய ஜாதகத்தில் சந்திரன் வலுப்பெற்றால் நிறைந்த ஆரோக்கியம், ஆடம்பரமான, அந்தஸ்தான வாழ்க்கை, தாயின் அன்பு, அரவணைப்பு, அதிகப்படியான சொத்து சேர்க்கை, கால்நடை பாக்கியங்கள், சொத்துகள்மூலம் வாடகை, விவசாய வருமானம் ஆகிய சுப பலன்கள் நடக்கும். சந்திரன் அசுப பலம் பெற்றால் பய உணர்வு, நோய்த் தாக்கம், சொத்துகளால் பயனற்ற நிலை, வறுமை, தாயால் மன வேதனை போன்ற பாதிப்புகள் இருக்கும்.

பரிகாரம்: பௌர்ணமி நாட்களில் சிவ, சக்தியை வழிபடவேண்டும்.

சூரிய தசை

மேஷ லக்னத்திற்கு சூரியன் 5-ஆமதிபதி. பூர்வபுண்ணிய ஸ்தானாதிபதி. சுய ஜாதகத்தில் சூரியன் பலம்பெற்று தசை நடத்தினால் ஆன்மபலம் பெருகும். உடல் தேஜஸ் பெறும். நல்ல புத்திரர்கள் பிறப்பார்கள். இவர்களின் ஆலோசனை மற்றும் கட்டளைக்குப் பலர் அடிபணிவார்கள். அரசியல் ஆதாயமுண்டு. பூர்வீகத்தில் வாழ்வார்கள். பூர்வீகச் சொத்தால் பயனுண்டு. குலதெய்வ கடாட்சம் கிடைக்கும். இந்த ஜென்மத்தில் உலகிலுள்ள அனைத்து இன்பங்களையும், வெற்றிகளையும் அடைவார்கள். சூரியன் பலம் குறைந்தால் தோற்றப் பொலிவு குறையும். பிள்ளைகளால் மன வேதனை உண்டாகும்.. ஏன் பிறந்தோம் பூமியில் என்று மன வேதனையுடன் வாழ்வார்கள்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை மலர்களால் அர்ச்சனைசெய்து நவகிரக சூரிய பகவானை வழிபடவேண்டும்.

குரு தசை

மேஷ லக்னத்திற்கு குரு 9, 12-ஆமதிபதி. சுப வலுப்பெற்ற குரு தசை நடந்தால் வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை உண்டு. தந்தைவழி உற்றார்- உறவினர்களால் ஆதரவுண்டு. பொதுக் காரியங்களில் ஈடுபடுவார்கள். அரசியல் ஆர்வம், ஆதாயமுண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புண்ணிய ஷேத்திரங்களை தரிசிக்கும் பாக்கியமுண்டு. மத நம்பிக்கை அதிகரிக்கும். மனைவி, மக்கள், பேரன், பேத்திகள், சொத்து சுகம் என அனைத்து பாக்கியங்களையும் அடைவார்கள்.

குரு அசுப பலம்பெற்று தசை நடத்தினால் வெளிநாட்டில் கஷ்ட ஜீவனம் நடத்துவார்கள். மத நம்பிக்கை குறையும், மத மாற்ற சிந்தனை மேலோங்கும். தந்தை, தந்தைவழி உறவுகளுடன் கருத்து வேறுபாடு, தனிமை, அடிமை, சிறை தண்டனை, நோயால் படுத்த படுக்கையாகக் கிடப்பது போன்ற பலன் நடக்கும்.

பரிகாரம்: புனர் பூச நட்சத்திரநாளில் தொடர்ந்து ஸ்ரீஇராமரை பட்டாபிஷேக கோலத்தில் வைத்து வழிபடவேண்டும்.

சனி தசை

செவ்வாயும், சனியும் பகை கிரகங்கள் என்பதோடு மட்டுமல்லாமல் மேஷத்திற்கு சனி பாதகாதிபதி, தொழில் ஸ்தானாதிபதி, லாப ஸ்தானாதி பதி. மேஷ லக்னத்திற்கு சனி தசை வரமா, சாபமா என்று பட்டிமன்றம் நடத்தும்வகையில் பலருக்கு சனிபகவான் சுபத்தையும், அசுபத்தையும் வாரிவழங்கி இருக்கிறார். சுபத்தை அனுபவிப்பவர்கள் வரம் என்றும், அசுபத்தை சுமப்பவர்கள் சாபம் என்றும் கூறுவது சகஜம்தான். சனி தசைக் காலங்களில் ஏழரைச்சனி, அஷ்டமச்சனி நடந்தாலும், கோட்சார ராகு, கேதுவின் சம்பந்தம் சுய ஜாதக சனிக்கு இருந்தாலும் பாதிப்பு அதிகமாக இருக்கும். மீளமுடியாத. சில இழப்புகளை சந்திக்க நேரும். மற்றவர்களுக்கு பாதிப்பு தலைக்கு வந்தால் தலைப்பாகையோடு சென்றுவிடும். சுய தொழில்புரிபவர்கள் சுய ஜாதகத்தில் சனிபகவான் நின்ற இடத்திற்கும், பெற்ற நட்சத்திர சாரத்திற்கும் ஏற்ற வழிபாடுகளை கடைபிடித்தால் நிம்மதி நி';லைக்கும். என் அனுபவத்தில் பாதிகாதிபதி என்ற கோணத்தில் பாதிப்பு இல்லாமல் போகாது.

பரிகாரம்: வாசி தீரவே காசு நல்குவீர் என்ற தேவாரப் பாடலை தினமும் பாடிவர இன்னல்கள் விலகும்.

ராகு தசை நடப்பவர்கள் பெரிய பாளையம் சென்று வரவேண்டும்.

கேது தசை நடப்பவர்கள் திருச்சி உச்சிப் பிள்ளையாரை வழிபடவேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406

bala160623
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe