"ஆமாமய்யா ஆமாம்!' கவலையே படாதீர்கள். உங்கள் பிரச்சினைகள் எல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல காணாமல் போகும்- இந்தக் கட்டுரையைப் படித்தவுடனே!
வாழ்க்கை எல்லாருக்கும் ஒரேமாதிரி அமைவதில்லை. சிலருக்கு எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி என்பதாகவும், சிலருக்கு உலகே மாயம்; வாழ்வே மாயம் என்று புலம்பும்படியாகவும், சிலருக்கு பரமபத விளையாட்டு போல ஏற்ற- இறக்கமாகவும், சாண் ஏறினால் முழம் சறுக்குவதாகவும்- இப்படி பலவிதமாக அமைகிறது. பிரச்சினைகள் ஒவ்வொருவருக்கும் ஒருவிதம். சிலருக்கு உடல்நலம் பாதிப்பது; சிலருக்கு பணப் பற்றாக் குறை; சிலருக்கு குடும்பப் பிரச்சினை; சிலருக்கு கடன், வம்பு வழக்கு, போலீஸ் என்று பிரச் சினை- இப்படி கூறிக்கொண்டே போகலாம்.
சிலருக்கு மூச்சுவிடக்கூட முடியாமல் பிரச்சினைகள் ஒன்று மாற்றி ஒன்று அலைக்கழிக்கும். உதாரணமாக "சர்ப்ப தோஷம்' ஒருவரது ஜாதகத்தில் அமைந் திருந்தால், அவருக்கு அடுக்கடுக் காக பிரச்சினைகள் வந்துகொண் டேயிருக்கும்.
சிலருக்கு கொடுக்கல்- வாங்கலில் பிரச்சினைகள் ஏற்பட்டு, தகராறாக முடிவதும் உண்டு. இதன்காரணமாக இவர்கள் தூக்கத்தைத் தொலைத்து, நிம்மதியிழந்து தவிப்பதும் உண்டு. பொதுவாகவே இவர்களுக்கு பணம் எப்போதும் பற்றாக்குறையாகவே இருக்கும். இவர்களிடம் பணம் தங்குவது கடினம் எனலாம்.
இத்தகைய பிரச்சினைகளை சந்திப்பவருக்கு, அவரது ஜாதகத்தில் லக்னத்திலிலிருந்து எண்ண வரும் இரண்டாமிடம் என்னும் தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் ராகு அல்லது கேது வலுப்பெற்று வீற்றிருப்பதைக் காணலாம். இவர்களுக்கு குடும்ப வாழ்க்கையும் சீக்கிரம் அமையாது. அப்படியே அமைந் தாலும் நிம்மதியிருக்காது. இவர்கள் தங்கள் பேச்சினாலும் பிரச்சினைகளை சந்திக்கநேரும். குடும்பத்தைச் சேர்ந்தவர்களே இவரை குறைகூறி அடிக்கடி இவருடன் மனஸ்தாபம் கொள் வார்கள்.
மூன்றாமிடம் என்னும் சகாய ஸ்தானத்தில் ராகுவோ கேதுவோ இருக்கப் பிறந்தவர்களுக்கு, எந்த ஒரு செயலையும் எளிதில் முடிக்கமுடியாமல் திணறும் நிலை ஏற்படும். மேலும் இவர்களுக்கு உடன்பிறந்த வர்களாலும் சிக்கல்கள் தோன்ற வாய்ப்புண்டு.
சிலர் அடிக்கடி ஏதாவது ஒரு வியாதியால் அவதிப்பட்டுக் கொண்டிருப்பார்கள். சிலருக்கு ஒன்று மாற்றி ஒன்று ஏதாவது செலவு வந்துகொண்டேயிருக்கும். கடன் வாங்கி கடன் அடைக்கும் நிலையும், அதனால் பிரச்சினைகளும் இருக்கும். கடன் சுமையால் கஷ்டங்களை அனுபவிப் பார்கள். இவர்களது ஜாதகத்தில் சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு- கேதுக்கள் லக்னத்துக்கு ஆறாமிடம் எனப்படும் ருண, ரோக, சத்ரு ஸ்தானத்தில் ஆணி அடித்ததுபோல் சகல பலத்துடன் அமர்ந் திருப்பதைப் பார்க்கலாம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/problems_1.jpg)
சிலர் அரசியல்வாதிகளால் மிரட்டலுக்கு ஆளாகிப் பிரச்சினைகளை சந்திப்பது, அரசாங்கம் மற்றும் அரசுத்துறை நிறுவனங் களாலோ அரசாங்க அதிகாரிகளாலோ பிரச் சினைகள் ஏற்பட்டு பாதிப்புகள் ஏற்படலாம். இதற்கு அவர்களுடைய ஜாதகத்தில் சூரியனின் அமைப்பு கெட்டிருப்பதே காரண மாக இருக்கும். இதனால் ஆதித்ய தோஷம் ஏற்பட்டு ஜாதகர் துன்பங்களை அனுபவிப் பார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். பொது வாக, சூரியன் லக்னத்திற்கு ஆறு, எட்டு, பன்னிரண்டாமிடங்களில் மறைவது அல்லது மேற்கண்ட இடங்களுக்குரியவர்களின் சேர்க்கையோ, பார்வையோ அல்லது சாரமோ பெறுவது போன்றவையே காரணம்.
பொதுவாக பிரச்சினைகள் ஏற்படுவதற்கு அவரவர் மனநிலையும் ஒரு காரணமாக அமைவதை மறுக்கமுடியாது. "மனமது செம்மையானால் மந்திரம் ஜெபிக்க வேண்டாம்' என்பது திருமூலரின் வாக்கு. எண்ணங்களே மனிதனை செயல்படத் தூண்டுகின்றன. நேர்மறை எண்ணங்கள் மனிதனை வாழவைக்கின்றன. எதிர்மறை எண்ணங்கள் நிறைந்திருக்கும் மனம் மனிதனை எந்த செயலிலும் வெற்றிபெற விடாமல் தடைகளை ஏற்படுத்தும். தாழ்வு மனப்பான்மை, அதீத தன்னம்பிக்கை, அகம்பாவம், மன அழுத்தம் போன்ற வகையிலும் மனிதர்கள் பிரச்சினைகளை சந்திக்கிறார்கள். ஜோதிடரீதியாக, இதற்கு ஒருவரது ஜாதகத்தில் லக்னத்துக்கு நான்காமிடமும், அதன் அதிபதியாக வரும் கிரகமும், இவர்களுடன் மனோகாரகனாகிய சந்திரனுமே காரணம். மனம் தன்வசத்தில் இருப்பவர்கள் பிரச்சினைகளுக்கே பிரச்சினை தருபவர்களாக இருக்கிறார்கள். மனதின்வழி செல்பவர்கள் அதற்கு அடிமையாகி பிரச்சினை களை உருவாக்கிக்கொண்டு கஷ்டப்படு கிறார்கள்.
பிரச்சினைகள் ஏற்பட்டாலும் புத்தியைக் கொண்டு அவற்றை சமாளிக்கும் திறமைசாலிகளும் உண்டு. இதற்கு லக்னத்துக்கு ஐந்தாம் பாவம் கெடாமல், வலுத்திருப்பது அவசியம்.
சிலருக்கு கூடாநட்பினால் பிரச்சினைகள் ஏற்பட்டு, அதனால் கஷ்டப்படும் நிலையும் உண்டாவதுண்டு. இதற்கு அவர்களது ஜாத கத்தில் ஏழாமிடத்தையும், அதன் அதிபதி அமர்ந்திருக்கும் நிலை- அதாவது ஏழுக்கு டையவர் பகை, நீசம் பெற்று, ஆறு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களின் அதிபதி களின் சேர்க்கை அல்லது சம்பந்தம் எவ்வகை யிலாவது பெற்றிருந்தாலும் கெட்ட சகவாசத் தால் பொன், பொருள் இழப்பு, அவமானம், போலீஸ், கோர்ட், வழக்கு என்று பிரச்சினைகளை சந்தித்து கஷ்டங்களை அனுபவிக்கும் நிலை உண்டாகும்.
எல்லாவற்றுக்கும் மேலாக கர்மக்காரகன் எனப்படும் சனி பகவானது நிலையையும் கவனிக்கவேண்டும். அவரவர் வினைப்படி பலன்களைப் பாரபட்சமின்றித் தரும் நியாய வான் சனி பகவான் ஒருவரது ஜாதகத்தில் குணம் கெட்டு சஞ்சரித்தால்- அதாவது பகை, நீசம் பெற்றோ அல்லது துர்ஸ்தானாதிபதியாகியோ சஞ்சரித்தால், ஜாதகர் பலவிதப் பிரச்சினைகளை சந்திப்பார். கோட்சாரத்தில் ஒருவரது ராசிக்கு- அதாவது சந்திரன் நின்ற ராசிக்கு பன்னிரண்டாமிடம், ஜென்ம ராசி, ராசிக்கு இரண்டாமிடம், நான்காமிடம், ஏழாமிடம் மற்றும் எட்டாமிடம் ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் பிரச்சினைகளை அடுக்கடுக்காக சந்தித்து, சொல்லமுடியாத கஷ்டங்களை அனுப்பவிப்பார்.
இவ்வாறே கோட்சாரத்தில் வருட கிரகங்கள் எனப்படும் குரு, ராகு மற்றும் கேது ஆகியோர் சஞ்சாரமும் கவனத்தில் கொள்ளவேண்டும். ஜென்ம ராசி, மூன்றாமிடம், நான்காமிடம், எட்டாமிடம், பத்தாமிடம் மற்றும் பன்னிரண்டாமிடம் ஆகிய இடங்களில் குரு வரும்போது, கோட்சாரத்தில் அடுத்த ராசிக்கு மாறும்வரை ஜாதகரைப் பலவித மான பிரச்சினைகளை சந்திக்க வைப்பார்.
ஜாதகர் மனக்குழப்பம், எடுத்த காரியங் களில் தடை மற்றும் தோல்வி, பொருளா தாரக்குறை, வீண் வம்பு வழக்கு, கடன் மற்றும் எதிரிகளால் தொல்லை என்று பல வகையிலும் பிரச்சினைகளை சந்திப்பார்.
மேற்கூறியவை தவிர இன்னும் சில அமைப் புகளும் பிரச்சினைகள் ஏற்படுவதற்குக் காரண மாக அமைகின்றன. ஒருவரது ஜாதகத்தில் பித்ரு சாபம், ஸ்த்ரீ சாபம், புத்திரசாபம், களத்திர சாபம் போன்ற முற்பிறவி சார்ந்த குறைகளும் ஜாதகரின் வாழ்க்கையை நிம்மதி யில்லாமல் செய்துவிடுகின்றன. சிலருக்கு திருமணம் உரிய காலத்தில் நடக்காது. சிலருக்கு கணவன்- மனைவிக்குள் பிரிவு ஏற்பட்டு விவாகரத்தாவது, குழந்தை பிறப்பதில் தாமதம், சொத்துகள் கைநழுவிப்போவது, எப்போதும் ஏதாவது பிரச்சினைகளை சந்தித்துக்கொண்டே இருப்பது, மனநல பாதிப்பு, பெண்களால் வேதனை, அவமானம் என்று பலவழிகளிலும் வாழ்க்கையில் நரக வேதனைகளை அனுபவிக்கும் நிலை காணப்படும்.
இத்தகைய கஷ்டங்கள் நீங்கி வாழ்க்கை தெளிந்த நீரோடைபோல் நிம்மதியாகச் செல்வதற்கு ஏங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.
அவரவர் கர்மப்பலனைத் தெளிவாக அறிவிக்கும் காலக்கண்ணாடியே ஜாதகம்.
அவரவர் ஜாதகத்தில் மேற்கூறிய தோஷங் களும், சாபங்களும் இருக்குமானால், அவற்றுக்கு மந்திர சாஸ்திரரீதியான பரிகாரங் களாக பித்ரு சாப நிவர்த்தி ‘ஹோமம், ஸ்த்ரீ சாப நிவர்த்தி சாந்தி ஹோமம் மற்றும் பீடாபரிகார ஹோமங்கள், புத்திரசாப நிவர்த் திக்கான ஹோமங்கள் போன்றவற்றைச் செய்வதன்மூலமும், உரிய மந்திரங்களை குரு உபதேசமாகப் பெற்று, ரட்சை அணிவதன்மூலமும் உறுதியாக பிரச்சினைகளிலிலிருந்து விடுபடலாம்.
95660 27065
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-09/problems-t.jpg)