சொத்து வாங்குவதில் தடைகளா?

/idhalgal/balajothidam/are-bills-property-acquisition

மிகவும் கடுமையாக உழைத்தும், பலருக்கு சொத்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இருக்காது. ஏன் இந்நிலை? இதற்கு என்ன பரிகாரம்?

மனிதர்கள் யாராக இருந்தாலும் வசதியுடன் வாழவேண்டும், சொத்துகளை வாங்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஆனால், பலர் வாழ்வின் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். சொத்து என்று அவர்களுக்கு எதுவுமே இருக்காது.

இதற்குக் காரணம் ஜாதகத்திலிருக்கும் 4-ஆம் அதிபதியே. 4-ஆம் அதிபதி கெட்டுப்போனால் சொத்து எதுவுமே வாங்க முடியாது. 4-க்கு அதிபதி நீசமடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகர் சொத்து வாங்கலாமென்று நினைக்கும்போதெல்லாம் அவருக்குப் பிரச்சினைகள் உண்டாகும். முயற்சிகள் தோல்வியில் முடியும்.

ஒருவரின் ஜாதகத்தில் 4-ல் சூரியன் பலவீனமாக இருந்தால

மிகவும் கடுமையாக உழைத்தும், பலருக்கு சொத்து என்று சொல்லிக்கொள்ள எதுவுமே இருக்காது. ஏன் இந்நிலை? இதற்கு என்ன பரிகாரம்?

மனிதர்கள் யாராக இருந்தாலும் வசதியுடன் வாழவேண்டும், சொத்துகளை வாங்க வேண்டுமென்று ஆசைப்படுவார்கள். ஆனால், பலர் வாழ்வின் இறுதிவரை வாடகை வீட்டிலேயே வாழ்ந்துகொண்டிருப்பார்கள். சொத்து என்று அவர்களுக்கு எதுவுமே இருக்காது.

இதற்குக் காரணம் ஜாதகத்திலிருக்கும் 4-ஆம் அதிபதியே. 4-ஆம் அதிபதி கெட்டுப்போனால் சொத்து எதுவுமே வாங்க முடியாது. 4-க்கு அதிபதி நீசமடைந்தால் அல்லது பலவீனமாக இருந்தால், அந்த ஜாதகர் சொத்து வாங்கலாமென்று நினைக்கும்போதெல்லாம் அவருக்குப் பிரச்சினைகள் உண்டாகும். முயற்சிகள் தோல்வியில் முடியும்.

ஒருவரின் ஜாதகத்தில் 4-ல் சூரியன் பலவீனமாக இருந்தால், அவருக்கு தன் தந்தைவழியில் கிடைக்கக்கூடிய சொத்தில் பிரச்சினைகள் உண்டாகும்.

4-ல் சூரியன் இருந்து அதை சனி பார்த்தால், அந்த ஜாதகர் சொத்து வாங்கினாலும், அவரை நண்பர்கள் ஏமாற்றிவிடுவார்கள். சில நேரங்களில் உடல்நல பாதிப்பால் வாங்கிய சொத்தினை அவர் இழக்கவேண்டியதிருக்கும்.

ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 4-ல் பாவ கிரகம் இருந்தால், சொத்து வாங்கும்போது பிரச்சினைகள் ஏற்படும். சிலருக்கு சொத்து வந்து சேரவே சேராது.

ram

9-க்கு அதிபதி 8-ல் இருந்தால், அவருக்கு தலையெழுத்து சரியாக இருக்காது. அவர் சொத்து வாங்க முயற்சிக்கும்போது தடைகள் ஏற்படும். ஜாதகத்தில் 4-ஆம் அதிபதி 6, 8-ல் இருந்தால் அவர் சொத்து சம்பந்தமாக நீதிமன்றம்வரை செல்லவேண்டியதிருக்கும்.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி விரய ஸ்தானத்தில் பாவ கிரகத்துடன் இருந்து, 4-ஆம் அதிபதி கெட்டுப் போயிருந்தால் அல்லது நீசமடைந்தால் அவருக்கு சொத்து வாங்கும்போதெல்லாம் பிரச்சினைகள் ஏற்படும். அவருக்கு முன்னோர்களின் சாபம் இருக்கும். அதனால் சொத்து எளிதில் வந்துசேராது.

ஒரு ஜாதகத்தில் 2-ஆம் அதிபதி கெட்டுப்போனால் அல்லது 2-ஆம் வீட்டில் பாவ கிரகத்துடன் செவ்வாய் இருந்தால், அவருக்கு சொத்து வாங்கும்போதெல்லாம் ஏதாவது பிரச்சினைகள் வந்துசேரும்.

ஜாதகத்தில் 3-க்கு அதிபதி 2-ல் இருந்து அதை பாவ கிரகம் பார்த்தால், அவர் சொத்து வாங்கும் போதெல்லாம் வீட்டில் ஏதாவது சண்டை ஏற்படும். அதனால் சொத்து வந்து சேராது.

ஒரு ஜாதகத்தில் லக்னாதிபதி பலவீனமாக இருந்து, 9-க்கு அதிபதி நீசமாக இருந்தால் சொத்து விஷயத்தில் அந்த ஜாதகர் ஏமாற்றத்தைச் சந்திப்பார்.

9-ல் ராகு இருந்து, 11-க்கு அதிபதி பலவீனமாக இருந்தால், அவர் சொத்து வாங்க எண்ணும்போது வீண்செலவுகள் உண்டாகும். தேவையற்ற அலைச்சல்கள் ஏற்படும்.

ஜாதகத்தில் 4-க்கு அதிபதி நீசமடைந்து, 9-ல் ராகு இருந்தால், அவருக்கு அலைச்சல்கள் இருக்கும். 50 வயதிற்குப் பிறகுதான் ஏதாவது சொத்தை வாங்க முடியும்.

4-ல் சூரியன், 7-சனி, 11-ல் சந்திரன் இருந்தால் அவருக்கு சொத்து வந்து சேர்வதில் பல சிக்கல்கள் ஏற்படும்.

ஜாதகத்தில் 2-ல் செவ்வாய், 6-ல் சனி, 12-ல் சூரியன் இருந்தால், அவர் சொத்து வாங்கியிருந்தாலும் அதை விற்க நேரும். 54 வயதிற்குப் பிறகுதான் அவருக்கு சொத்து வரும்.

ஒரு ஜாதகத்தில் சந்திரன், சூரியன் பலவீனமாக இருந்து, சுக்கிரன் ராகுவுடன் இருந்தால், அந்த சுக்கிரனுக்கோ சூரியனுக்கோ சனியின் பார்வை இருந்தால், அவர் தன் வாழ்க்கையில் சொத்து என்று எதுவும் வாங்க முடியாது.

பரிகாரங்கள்

தினமும் மகாலட்சுமியை வழிபட வேண்டும். திங்கட்கிழமை சிவனுக்கு பாலாபிஷேகம் செய்ய வேண்டும். அரசமரத்தை திங்கட்கிழமை சுற்றிவரவேண்டும்.

வசிக்கும் வீட்டில் பச்சை, நீலம், ப்ரவுன் வண்ணங்களை சுவர்களுக்குப் பயன்படுத்தக்கூடாது.

சம்பாதிக்கும் பணத்தில் ஏழிலிருந்து பத்து சதவிகிதம் வரை தானமாகத் தரவேண்டும்.

வீட்டில் கணவன்- மனைவி சண்டை கூடாது. கிழிந்த பனியன், ஜட்டி அணிவதைத் தவிர்க்கவும். படுக்கும் விரிப்பு கிழிந்திருக்கக்கூடாது.

முன்னோர்களின் கடவுள்களை வழிபடுதல் நன்று.

மேற்கண்ட பரிகாரங்களைச் செய்துவந்தால் தோஷங்கள் விலகி சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் உருவாகும்.

செல்: 98401 11534

இதையும் படியுங்கள்
Subscribe