ஒன்பது கிரகங்களின் ஆய்வுகளில் ஜோதிட சூட்சுமத்தில் இந்த கிரக அவஸ்தைகளும் ஒரு கிரகம் தான் சாதகம் செய்யுமா! பாதகம் செய்யுமா! என்பதை நிர்ணயிக்க இதுவும் ஒரு வழியாகும். அனுபவ ஆய்வுகளில் இந்த கிரக அவஸ்தை நிலைகள் பலன்களுக்கு சற்று ஒத்துவருகின்றன. இந்த கிரக அவஸ்தையில் இரண்டுவித நிலைகள் உள்ளன. ஒன்று கிரகங்களின் தசவித அவஸ்தைகள். அதாவது ராசி, அம்சம். ஜாதகத்தில் இந்த இரு சக்கரங்களில் ஒரு கிரகத்தின் உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, சமபலம். அடுத்ததாக அந்த கிரகங்களுக்கு நீசம், அஸ்த்தங்கம், பகைவீடு, சத்துருகிரக தொடர்பு, பாவகிரகங்களின் சாரம் வீடுகளில் இருப்பது. ஸ்தம்பனம் பெற்றிருப்பது. பலவீன கிரகங் களின் பார்வை தொடர்பில் இருப் பது. இதனாலும் சில பாதக அம்சங் கள் உள்ளன.
அதனை ஒரு பட்டியல் இட்டு பத்து வித கிரக அவஸ்தை களாகக் காட்டப்பட்டுள்ளது.
மனித வாழ்க்கையில் நாம்கூட ஒரு நல்ல நிகழ்வுகள் நம்மை சந்தோஷப் படுத்தும்போது என்ன இது ஒரு சுப அவஸ்தையாக இருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்வோம். அக மகிழ்வு கொள்வோம். அதேசமயம் பாதிப்புகள் வரும்போது என்னடா இந்த பெரிய அவஸ்தைக்கு உள்ளாகி இருக்கிறோம் என்று மன வேதனை அடைகிறோம். அதேபோல் கிரகங்களுக்கும் இத்தகைய நிலைகளை சாஸ்த்திர கர்த்தாக்கள் நிர்ணயித்து இருக்கி றார்கள். முதலில் சொன்ன தச வித அவஸ்தைக்கு அதன் பலனை எப்படி அறிவது என்ற அதற்கு உண்டான பலன் அங்கேயே தரப்பட்டுள்ளது. இரண்டாவதாக டிகிரி ஒரு பாவம் 30 பாகை கொண்டது. 12 ராசிகளில் ஆண் ராசி, பெண் ராசி என்று அட்ட
ஒன்பது கிரகங்களின் ஆய்வுகளில் ஜோதிட சூட்சுமத்தில் இந்த கிரக அவஸ்தைகளும் ஒரு கிரகம் தான் சாதகம் செய்யுமா! பாதகம் செய்யுமா! என்பதை நிர்ணயிக்க இதுவும் ஒரு வழியாகும். அனுபவ ஆய்வுகளில் இந்த கிரக அவஸ்தை நிலைகள் பலன்களுக்கு சற்று ஒத்துவருகின்றன. இந்த கிரக அவஸ்தையில் இரண்டுவித நிலைகள் உள்ளன. ஒன்று கிரகங்களின் தசவித அவஸ்தைகள். அதாவது ராசி, அம்சம். ஜாதகத்தில் இந்த இரு சக்கரங்களில் ஒரு கிரகத்தின் உச்சம், மூலத்திரிகோணம், ஆட்சி, நட்பு, சமபலம். அடுத்ததாக அந்த கிரகங்களுக்கு நீசம், அஸ்த்தங்கம், பகைவீடு, சத்துருகிரக தொடர்பு, பாவகிரகங்களின் சாரம் வீடுகளில் இருப்பது. ஸ்தம்பனம் பெற்றிருப்பது. பலவீன கிரகங் களின் பார்வை தொடர்பில் இருப் பது. இதனாலும் சில பாதக அம்சங் கள் உள்ளன.
அதனை ஒரு பட்டியல் இட்டு பத்து வித கிரக அவஸ்தை களாகக் காட்டப்பட்டுள்ளது.
மனித வாழ்க்கையில் நாம்கூட ஒரு நல்ல நிகழ்வுகள் நம்மை சந்தோஷப் படுத்தும்போது என்ன இது ஒரு சுப அவஸ்தையாக இருக்கிறதே என்று மகிழ்ச்சி கொள்வோம். அக மகிழ்வு கொள்வோம். அதேசமயம் பாதிப்புகள் வரும்போது என்னடா இந்த பெரிய அவஸ்தைக்கு உள்ளாகி இருக்கிறோம் என்று மன வேதனை அடைகிறோம். அதேபோல் கிரகங்களுக்கும் இத்தகைய நிலைகளை சாஸ்த்திர கர்த்தாக்கள் நிர்ணயித்து இருக்கி றார்கள். முதலில் சொன்ன தச வித அவஸ்தைக்கு அதன் பலனை எப்படி அறிவது என்ற அதற்கு உண்டான பலன் அங்கேயே தரப்பட்டுள்ளது. இரண்டாவதாக டிகிரி ஒரு பாவம் 30 பாகை கொண்டது. 12 ராசிகளில் ஆண் ராசி, பெண் ராசி என்று அட்டவணைப் படுத்தி அந்த 30 பாகையை ஐந்து அவஸ்தை களாக அட்ட வணைப் படுத் திக் காட்டப் பட்டுள்ளது. உங்க ஜாதகத் தில் ஒரு கிரகம் இருக்கக்கூடிய அந்த பாகை ஆண் ராசியா, பெண் ராசியா என்பதைப் பார்த்து எந்த பாகையில் உள்ளது. அது எந்த அவஸ்தை சுபமா, அசுபமா என தாங்கள் அறிந்து கொள்ளலாம். இதில் சுபகிரக அவஸ்தையில் முக்கிய கிரகங்கள் லக்னாதிபதி, ராசியாதிபதி, பூர்வ புண்ணியாதிபதி, பாக்கியாதிபதி, ஜீவனாதிபதி இவர்கள் இருப்பது நன்மை.
பலவீன அவஸ்தைகளில் கெட்ட ஆதிபத்திய முடைய கிரகங்கள் இருப்பது ஒருவகையில் சாதகமே. இதற்கும்மேல் டிகிரி அவஸ்தையில் சூட்சும ஆய்வாகிய சனி, ராகு, கேதுக்கள், சுக்கிரன், செவ்வாய், புதன், சூரியன், குரு, சந்திரன் இவர்கள் எந்த அவஸ்தையில் குறிப் பாக இருந்தால் பாதகம் என்பது சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
அந்த அவஸ்தை தொடர்புடைய கிரக தசாபுக்திகள் நடைமுறையில் இருந்தால் கண்டம், காட்சிகள், பிரிவுகள், பிரச்சினைகள், வழக்குகள், பண இழப்புக்கள் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும். இதற்கு உரிய பரிகாரம் குலதெய்வ பூஜைகள் மற்றும் எந்த கிரகங் களால் இந்த அவஸ்தை ஏற்பட்டிருக்கிறதோ.
அந்த கிரகங்களுக்கு உண்டான அதி தேவதை கள்மூலம் அதன் ஆலயங்கள் சென்று குறிப்பாக தாரா பலம், சந்திர கோட்சாரம் இவற்றை அறிந்து சென்று குறிப்பிட்ட நாளில் வணங்கவேண்டும். இன்னும் பஞ்சபட்சி அறிந்திருந்தால் அதன்மூலம் கால நேரங்களை அறிந்து அந்தநாளில் சென்று ஆலய வழிபாடு செய்தால் இந்த பாதகங்களில் இருந்து இறை அருளால் தப்பித்துக்கொள்ளமுடியும். தர்மம், இறைவழிபாடு, பூஜைகள், பாராயணம், ஜெபம், தொழுகை உகந்தது.
தீப்த அவஸ்தை
(உச்சம் மூலத் திரிகோணம்) தீப்த அவஸ்தை என்பது உச்ச ராசியில் அல்லது மூலத் திரிகோண ராசியில் ஒரு கிரகம் அமைவதாகும்.
தீப்த அவஸ்தையிள் இடம்பெற்று இருந்தால் அந்த கிரக தசையில் அந்த ஜாதகர் அரச வாழ்வை அனுபவிப்பார். தனவானாவார். கீர்த்தி, வித்தை, சௌகரியம் போன்ற அனைத்தையும் இந்த ஜாதகர் பெறுவர் என்பது சாஸ்திர விதி.
ஸ்வஸ்த அவஸ்தை
ஒரு கிரகம் தனது ஆட்சி வீட்டில் இருப்பதாகும். ஜீவனாதிபதி இப்படிப்பட்ட அவஸ்தையில் இடம்பெற்று இருந்தால், தனது தசையில் ஆச்சார உடல் ஆரோக்கியம், தன தான்ய சம்பத்தின் மிகுதியான சேர்க்கை போன்றவற்றை அந்த ஜாதகருக்கு வாரி வழங்கும் என்பது சாஸ்திர விதி
முருதிக அவஸ்தை
ஒரு கிரகம் நட்பு வீட்டில் இருப்பதைக் குறிக்கும். அரசு ஆதரவு அதிக சுகம், சம்பத்து ஆகியவற்றைத் தரும்.
சாந்த அவஸ்தை
ஒரு கிரகம் சுபக்கிரக சாரத்தில் இருப்பது அல்லது சுபர் இல்லத்தில் இருப்பதைக் குறிக்கும். சௌகரியம், சம்பத்து, அரசு ஆதரவு, உற்சாகம் போன்றவற்றைத் தரும் என்று சொல்லப்படுகிறது.
ஸ்க்த அவஸ்தை
ஒரு கிரகம் அம்சத்தில் உச்சம், ஆட்சி பெற்று பிரகாசமாய் இருப்பதைக் குறிக்கும். இந்த ஜாதகருக்கு கல்வி, ஞானம், தன சம்பத்து, தான தர்ம காரியங்கள் போன்றவற்றைத் தரும் என்பது சாஸ்திர விதி.
பீடிதா அவஸ்தை
ஒரு கிரகம் பகை கிரகத்துடன் கூட்டாக அமைந்து கிரக யுத்தத்தில் தோல்வி காண்பதைக் குறிக்கும். பயம் இழப்பு, சத்ருக்கள், பயம், இளைய சகோதர பாதிப்பு எல்லாம் நடைபெறும் என்பது சாஸ்திர விதி.
தீன அவஸ்தை
ஒரு கிரகம் அம்சத்தில் பகை இல்லத்தில் இருப்பதைக் குறிக்கும். இந்த ஜாதகருக்குத் தரித்திரம், பீடையை, வழக்கு, விவகாரம், பிரிவு ஏற்படுத்தும்.
விகல அவஸ்தை
ஒரு கிரகம் நீச இல்லத்தில் இருப்பதைக் குறிக்கும். தனது தசையை நடத்தும்போது அந்த ஜாதகருக்கு நோய் நொடிகளையும், மனச்சோர்வையும், கவலையையும், ஏதேனும் இழப்புக்களை உண்டாக்கும்.
கல அவஸ்தை
ஒரு கிரகம் பாபக் கிரக சாரம் அல்லது அம்சத்தில் பாபக் கிரகங்களின் இல்லத்தில் இருப்பதைக் குறிக்கும். அதிசாரம் அமைவது.
இதனால் மனநிலை பாதிப்பை ஏற்படுத்தி எதிலும் தெளிவில்லாதவராக ஆக்கிவிடும். அபராதம், வெளியிட பாதிப்பு, இடமாற்றம் உண்டாக்கும்.
பீத அவஸ்தை
ஒரு கிரகம் சூரியனுடன்கூடி அஸ்தங்கம் ஸ்தம்பனம் பெற்று இருப்பதைக் குறிக்கும். ஜீவனாதிபதி இப்படிப்பட்ட கிரக அவஸ்தை யில் இருந்து அக்கிரகம் தனது தசையை நடத்தினால் ஜாதகருக்கு அடிக்கடி சத்துரு தொல்லை, பயம், இழப்பு, பாதகம், தண்டனை,
மாரகம், கண்டம் காட்சிகளை ஏற்படுத்தும் என்பது சாஸ்திர விதி.
கிரக அவஸ்தை டிகிரி (பாகை) அவஸ்தை அறியும் அட்டவணை மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் போன்ற ஆண் ராசிகளில்
1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்தை - சுபம்
7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்தை - சுபம்
13 முதல் 18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவன அவஸ்தை - சுபம்
19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்தை - அசுபம்
25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் மிருத்தியூ அவஸ்தை - அசுபம்
ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் போன்ற பெண் ராசிகளில்
1 முதல் 6 பாகைக்குள் இருக்கும் கிரகம் மிருத்யூ அவஸ்தை - அசுபம்
7 முதல் 12 பாகைக்குள் இருக்கும் கிரகம் விருத்தா அவஸ்தை - அசுபம்
13 முதல் 18 பாகைக்குள் இருக்கும் கிரகம் யௌவன அவஸ்தை - சுபம்
19 முதல் 24 பாகைக்குள் இருக்கும் கிரகம் கௌமார அவஸ்தை - சுபம்
25 முதல் 30 பாகைக்குள் இருக்கும் கிரகம் பால்ய அவஸ்தை - சுபம்
சனி, ராகு- கேதுவுக்கு விருத்தா அவஸ்தை கூடாது.
சுக்கிரனுக்கு கௌமார மரண அவஸ்தை கூடாது.
செவ்வாய்க்கு விருத்த மரண அவஸ்தை கூடாது.
புதனுக்கு விருத்த மரண அவஸ்தை கூடாது.
சூரியன்- குருவிற்கு விருத்த மரண அவஸ்தை கூடாது.
சந்திரனுக்கு பால்ய மரண அவஸ்தை கூடாது.
குறிப்பு: இந்த அவஸ்தைகளில் இருந்து கிரகங்கள் தசாபுத்தி நடத்தினால் (ஜெனனம், கோட்சாரம்) இரண்டின்படியும் நாம் ஆராய வேண்டும். இதற்கு இயற்கை பாரிகாரம் எந்த அவஸ்தையில் கிரகம் இருக்கிறதோ. அது தாராபலம் உள்ள நட்சத்திர டிகிரி அல்லது யோகம் தரும். புஷ்கராம்ச புள்ளி நட்சத்திர சாரத்தில் இருப்பின் அல்லது இக்கிரக அவஸ்த்தை உள்ள கிரகங்களை சுபர்கள் பார்த் தால் சுபர், யோகர்கள் தொடர்பு ராசியின் அதிர்ஷ்ட பாகையில் இவர்கள் இருந்தால் இந்த பாதிப்பான அவஸ்தையில் இருந்து நீங்கி சாதகமான பலனை கிரக பலம் இறைசக்தி தான தர்மம், ஓமம், பூஜை, ஜெபம், தொழுகை ஆலய தரிசனம்மூலம் தனக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பான அவஸ்தை யில் இருந்து விடுபடநேரும்.
செல்: 94431 37989