(சார்வரி வருட டிப்ஸ் இணைந்தது)
பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை
மேஷம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 11, 12, 20, 21, 22. பாதக நாட்கள்: 1, 2, 7, 8, 13, 14, 28, 29.
அஸ்வினி: மாத ஆரம்பத்தில், சுக்கிரன் ராசிக்கு இரண்டில்; சந்திரன், ராகு மிதுனத்தில். எனவே, "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே' என எண்ண வேண்டாம். குடும்பம், நண்பர்கள் என யாவரும் எல்லா வகையிலும் உதவி செய்வார்கள். இருப் பினும் 10-ல் இருக்கும் குரு பகவான் பிரச்சினைகளைத் தரத்தான் செய்வார். கொஞ்சம் பொறுத்துக் கொண்டால், 8-7-2020-ல் குரு (தனுசு ராசிக்கு வக்ரம்) 9-ஆம் இடம் செல்வார். பிறகு தடையின்றி நல்லவை நடக்கும். இப்போது நான்கு செம்பு நாணயம், நான்கு செம்பருத்திப்பூவை வியாழனன்று குருவை மனதில் தியானித்து நீர்நிலையில் போடவும். வாலிபர்கள் செம்பு வளையம் அணியலாம். சிலர் எப்போதோ சொன்ன பொய் சாட்சிக்கு இம்மாதம் வருந்த நேரிடும். 60 வயதைக் கடந்தவர்கள் இரண்டு கிலோ உருளைக்கிழங்கு பசுவுக்கு அல்லது 200 கிராம் நெய் ஆலயத்திற்குத் தருதல் நன்று.
பரணி: இம்மாதம் 11, 12 தேதிகளில் எவரிடமும் வேகமாக எதிர்வினாக்கள் கேட்கவேண்டாம். யாருக்குதான் வேதனை இல்லை? உங்கள்மீது வீண்பழி வரும். 18, 19 தேதிகளில் வியாபாரம் மற்றும் ஏதாவது முயற்சிகள்மூலமாக நல்லவை நடக்கும். புதிய நண்பர்களால் பிரச்சினைகள் வரலாம். (8-7-2020-க்குப்பிறகு வக்ரகுரு நல்லதைச் செய்வார்.) ஆண் வாரிசு இல்லாதோருக்கு வாரிசு உருவாகும். கேது உதவிகள்புரிவார். நாய்களைத் துன்புறுத்தல் கூடாது. சனி பகவானுக்காக, பத்து பார்வையற்றோருக்கு உதவி செய்யலாம். செவ்வாய்க்காக ஆலயங்களில் உழவாரப்பணி, ஆதாயமில்லா சேவை புரியலாம்.
கிருத்திகை 1-ஆம் பாதம்: புதன் 11-ல்; சூரியன் 12-ல். புதனுக்காக, உங்களுடன் சித்தி, சகோதரி, மகள் ஆகியோர் ஒன்றாக இருந்தால், அவரவர் இடங்களில் இம்மாதம் இருந்துகொள்வது நன்று. அதாவது திருமணமான மகள் இம்மாதம் புகுந்த வீட்டிலிருப்பது உத்தமம். சூரிய பகவானின் அருளைப் பெற, கருப்பு மற்றும் நீல வண்ணத்தைத் தவிர்த்தல் நன்று. இம்மாதக் கடைசி வாரம் அசையா சொத்து வாங்கலாம்; விற்கலாம். 25, 26, 27 தேதிகளில் விருந்தினரை சமாளிக்கநேரிடும். வியாபாரம் பெருகும். (6-4-2021-க்குப்பிறகு குருபகவான் கல்வியில் சாதனை படைக்க துணைபுரிவார்.) வெளிநாட்டுக் குடியுரிமை சுலபமாகும். பழைய குற்றங் களிலிருந்தும் விடுபடலாம்.
ரிஷபம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 13, 14, 23, 24. பாதக நாட்கள்: 3, 4, 9, 10, 15, 16, 30.
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: சுக்கிரன் ராசியிலேயே உள்ளார். 2-ல் ராகு. "கண்ணிமை காப்பதுபோல் எங்களை வளர்த் தார்கள்' என பிள்ளைகள் உங்களைப் பெருமைப்படுத்தும் மாதம். முதல் வாரம் ஆன்மிக சுற்றுலா போகலாம். குடும்பத்தில் ஒரு புது நபர் இணையும் வாய்ப்பை யும் எதிர்பார்க்கலாம். 5, 6 தேதிகளில் வாகனம் வாங்குவது- உடனே சவாரி செய்வதில் கவனம்வேண்டும். 13, 14 தேதிகளில் வயிற்று உபாதை வரும். நெடுநாட்களாக ஒருவர்பின் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், வளர்பிறை சஷ்டி திதியில் கந்தனு
(சார்வரி வருட டிப்ஸ் இணைந்தது)
பண்டிட் எம்.ஏ.பி. பிள்ளை
மேஷம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 11, 12, 20, 21, 22. பாதக நாட்கள்: 1, 2, 7, 8, 13, 14, 28, 29.
அஸ்வினி: மாத ஆரம்பத்தில், சுக்கிரன் ராசிக்கு இரண்டில்; சந்திரன், ராகு மிதுனத்தில். எனவே, "காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே' என எண்ண வேண்டாம். குடும்பம், நண்பர்கள் என யாவரும் எல்லா வகையிலும் உதவி செய்வார்கள். இருப் பினும் 10-ல் இருக்கும் குரு பகவான் பிரச்சினைகளைத் தரத்தான் செய்வார். கொஞ்சம் பொறுத்துக் கொண்டால், 8-7-2020-ல் குரு (தனுசு ராசிக்கு வக்ரம்) 9-ஆம் இடம் செல்வார். பிறகு தடையின்றி நல்லவை நடக்கும். இப்போது நான்கு செம்பு நாணயம், நான்கு செம்பருத்திப்பூவை வியாழனன்று குருவை மனதில் தியானித்து நீர்நிலையில் போடவும். வாலிபர்கள் செம்பு வளையம் அணியலாம். சிலர் எப்போதோ சொன்ன பொய் சாட்சிக்கு இம்மாதம் வருந்த நேரிடும். 60 வயதைக் கடந்தவர்கள் இரண்டு கிலோ உருளைக்கிழங்கு பசுவுக்கு அல்லது 200 கிராம் நெய் ஆலயத்திற்குத் தருதல் நன்று.
பரணி: இம்மாதம் 11, 12 தேதிகளில் எவரிடமும் வேகமாக எதிர்வினாக்கள் கேட்கவேண்டாம். யாருக்குதான் வேதனை இல்லை? உங்கள்மீது வீண்பழி வரும். 18, 19 தேதிகளில் வியாபாரம் மற்றும் ஏதாவது முயற்சிகள்மூலமாக நல்லவை நடக்கும். புதிய நண்பர்களால் பிரச்சினைகள் வரலாம். (8-7-2020-க்குப்பிறகு வக்ரகுரு நல்லதைச் செய்வார்.) ஆண் வாரிசு இல்லாதோருக்கு வாரிசு உருவாகும். கேது உதவிகள்புரிவார். நாய்களைத் துன்புறுத்தல் கூடாது. சனி பகவானுக்காக, பத்து பார்வையற்றோருக்கு உதவி செய்யலாம். செவ்வாய்க்காக ஆலயங்களில் உழவாரப்பணி, ஆதாயமில்லா சேவை புரியலாம்.
கிருத்திகை 1-ஆம் பாதம்: புதன் 11-ல்; சூரியன் 12-ல். புதனுக்காக, உங்களுடன் சித்தி, சகோதரி, மகள் ஆகியோர் ஒன்றாக இருந்தால், அவரவர் இடங்களில் இம்மாதம் இருந்துகொள்வது நன்று. அதாவது திருமணமான மகள் இம்மாதம் புகுந்த வீட்டிலிருப்பது உத்தமம். சூரிய பகவானின் அருளைப் பெற, கருப்பு மற்றும் நீல வண்ணத்தைத் தவிர்த்தல் நன்று. இம்மாதக் கடைசி வாரம் அசையா சொத்து வாங்கலாம்; விற்கலாம். 25, 26, 27 தேதிகளில் விருந்தினரை சமாளிக்கநேரிடும். வியாபாரம் பெருகும். (6-4-2021-க்குப்பிறகு குருபகவான் கல்வியில் சாதனை படைக்க துணைபுரிவார்.) வெளிநாட்டுக் குடியுரிமை சுலபமாகும். பழைய குற்றங் களிலிருந்தும் விடுபடலாம்.
ரிஷபம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 13, 14, 23, 24. பாதக நாட்கள்: 3, 4, 9, 10, 15, 16, 30.
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: சுக்கிரன் ராசியிலேயே உள்ளார். 2-ல் ராகு. "கண்ணிமை காப்பதுபோல் எங்களை வளர்த் தார்கள்' என பிள்ளைகள் உங்களைப் பெருமைப்படுத்தும் மாதம். முதல் வாரம் ஆன்மிக சுற்றுலா போகலாம். குடும்பத்தில் ஒரு புது நபர் இணையும் வாய்ப்பை யும் எதிர்பார்க்கலாம். 5, 6 தேதிகளில் வாகனம் வாங்குவது- உடனே சவாரி செய்வதில் கவனம்வேண்டும். 13, 14 தேதிகளில் வயிற்று உபாதை வரும். நெடுநாட்களாக ஒருவர்பின் ஒருவர் நோய்வாய்ப்பட்டால், வளர்பிறை சஷ்டி திதியில் கந்தனுக்கு பாலாபிஷேகம் நன்று. அயல் நாட்டில் இருப்போருக்கு 8-ல் இருக்கும் கேது சில ஆரோக் கியக் குறைகளைத் தருவார். கேட்ஸ்-ஐ (வைடூரியம்) மோதிரம் அணிவது நன்று. உங்கள் வாழ்க்கைத் துணை பரணி, மிருகசீரிடம், புனர்பூசம், ஆயில்யம், சதயம் எனில், இம்மாதம் திருமண நாள் இணைந்தால், முருகனை தரிசித்தல்வேண்டும்.
ரோகிணி: செவ்வாய், குரு, சனி மூவரும் 8-ல் நிலைகொண்டுள்ளார்கள். எந்தப் பணியில் ஈடுபட்டிருந் தாலும் 16, 17 தேதிகளில் இடமாற்றம், பதவி உயர்வு, பயணம் உண்டு. சுப நிகழ்ச்சிகளுக்குத் தடையேதும் இல்லை. தாய்வழியில் சிலருக்கு ஆரோக்கியக்குறை மனம்வருந்தச் செய்யும். சனி தந்தைக்குப் பின்னடைவு தருவார். 800 கிராம் தோல் நீக்காத உளுந்தை வாங்கி, எள்ளெண்ணெயில் கலந்து, கருப்புத்துணியில் முடித்து, மேற்கு நோக்கி நின்று திருஷ்டிசுற்றி நீர்நிலையில் போடுவது போது மானது. (8-7-2020-க்கு முன் புதுமுயற்சிகள் தொடங்கு வதால் லாபம் பெருகும்.) சதய நட்சத்திரத்தன்று சிவபெரு மானுக்குப் பச்சைக்கற்பூர அபிஷேகம் செய்தால், தடைப்பட்ட தொழில் சுலபமாக மேன்மையடையும்.
மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதங்கள்: சூரியன் 11-ல்; ராகு 2-ல்; சுக்கிரன் ராசியில் உள்ளார். "பொன்னைக் கண்டேன், அதில் உன்னைக் கண்டேன்' என இளம் காதலர்கள் பாட சுக்கிரன் துணைபுரிவார். உங்களுடைய சொந்த ஜாதகத்திலும் 2-ல் சுக்கிரன் இருந்தால் சொத்து, சுகம் அடங்கிய மனையாள் அமைவது உறுதி. மனையாளுக்கு கண் உபாதை வந்தால் உன்னிப்பாக கவனம் செலுத்தல் நன்று. 11-ல் இருக்கும் சூரியனின் கெடுதல் அகல, ஐந்து சிவப்பு முள்ளங்கியைத் தலையணை அருகே வைத்துத்தூங்கி, அடுத்த நாள் அதனை மாட்டுக்குத் தருதல் நல்ல பரிகாரம். இம்மாதம் புலால் தவிர்ப்பது நன்று. மாணவர்களுக்கு 28, 29 ஆகிய நாட்கள் வெற்றிக்கான பாதை வகுக்கும். மாதர்கள் மாதக்கடைசியில் குடும்பப் பொறுப்புகளைத் தவிர்ப்பது கூடாது. பின்விளைவு ஏற்படும்.
மிதுனம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 7, 8, 15, 16, 17, 25, 26. பாதக நாட்கள்: 5, 6, 11, 12, 18, 19.
மிருகசீரிடம் 3, 4-ஆம் பாதங்கள்: மாதத்தின் ஆரம்ப நிலையில் ராசியில் ராகு, 7-ல் கேது, 12-ல் சுக்கிரன். "நானிங்கு நாதியின்றி வாடுகிறேன்' என்ற எண்ணம் மறைய, ராகுவும் சந்திரனும் 5, 6 தேதிகளில் பணவரவை தரத்தான் செய்வார்கள். 7-ஆம் தேதி குற்றம்சாட்டப்பட வாய்ப்புள்ளது. கெட்ட செய்தி வரலாம். உணர்ச்சியின் உச்சகட்டத்தில் எந்தப் புது முடிவும் வேண்டாம். குரு அஷ்டம ஸ்தானத்தில் இருக்கிறார். (சார்வரி ஆண்டு, ஆனி 24-ஆம் தேதி இடம் பெயர்வார். ஐப்பசி 30-ஆம் தேதிவரை நல்வழிகாட்டுவார்.) தேய்பிறை அஷ்டமியில் காலபைரவருக்கு மிளகு தீபமேற்றவும். சனி பகவான் துணைபுரிவார். சூரியனின் பேராதரவுப்பெற அரசமரத்தின் கிழக்குநோக்கிய வேர்ப் பாகத்தில் பள்ளம் தோண்டி, ஐந்து ஒரு ரூபாய் நாணயத்தைப் போட்டு மூடி நீரூற்றினால் போதும். பிறர் பார்க்கா வண்ணம் செய்யவும்.
திருவாதிரை: ராசிக்கு 8-ல் செவ்வாய், குரு, சனி. 9-ல் புதன். பணவரவைப் பொருத்தமட்டில் தாராளமாக இருப்பது போன்ற பிரமையை வளர்த்துக்கொள்வீர்கள். ஆனால் இரண்டாவது வாரம் வரவை மிஞ்சும் செலவுகள் வரும். 20, 22-ஆம் தேதிவரை பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டும். அரசியல் தொடர்புடையோர், பொது இடத்தில் புகழை சம்பாதிக்கலாம். பழைய நண்பர்களின் பேராதரவு கிடைக்கப்பெறும். நீங்கள் செய்யும் தொழில் சார்ந்த ஆரோக்கியக்குறைகள் வரும். வெளிநாட்டில் பணிபுரிவோர் பினாமி பெயரில் அசையா சொத்து வாங்கியிருந்தால், அதனைக் கண்காணிப்பது நன்று. வியாபாரிகளின் கடின உழைப்பு லாபத்தை ஈட்டித் தரும். மாதர்கள் முகமலர்ச்சியோடு பேசித்தான் கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.
புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: சூரியன் 10-ல், சுக்கிரன் 12-ல் உள்ளார்கள். எந்தத் துறையைச் சார்ந்திருந்தாலும் மூன்றாவது வாரம் பல கவலைகளைப் போக்கும்விதமாக அமைந்துவிடும். 25, 27 தேதிகளில் உணவில் கட்டுப்பாடு இன்றியமையாதது. மதம் சார்ந்த வைபவம் சிறப்பு தரும். குரு 8-ல் இருப்பதால் நிலுவையிலுள்ள வழக்குகளில் பின்னடைவு வரும். வலக்கை ஆயுள்ரேகையில் சதுரக்குறி தென்பட்டால், அந்தகால அளவில் சிலர் சிறையில் வாடநேரிடும். சூரியனை சரிசெய்ய ஐந்து ஞாயிற்றுக்கிழமை ஒருபொழுது உப்புக்கலவா உணவுண்ணவும். நலிந்த அரசு ஊழியர்கட்கு சிவப்பு வண்ணப்பொருள் தானம் நல்லது. பசுமாட்டிற்கு, தவிடு, புண்ணாக்கு, புல் தருவதும் உத்தமம். பணிபுரிவோருக்கு உயரதிகாரிகள் பெண்கள் எனில், அவர்களுக்குரிய மதிப்பு கொடுப்பதை விரும்புவர். பதவி உயர்வுக்குத் துணைவருவார். முயன்று பாருங்கள்.
கடகம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 1, 2, 9, 10, 18, 19, 28, 29. பாதக நாட்கள்: 7, 8, 13, 14, 20, 21, 22.
புனர்பூசம் 4-ஆம் பாதம்: மாத ஆரம் பத்தில் 6-ல் கேது பகவான்; 7-ல் செவ்வாய், சனி, குரு. முதல் வாரம் "சிந்திடும் கண்ணீர் மாறிடும்' என்றே தினம் தினம் எண்ணியவை தொடரும். 5, 6 தேதிக்குமேல் சூழ்நிலை முகம் மலரச் செய்யும். 7-ஆம் தேதி நீங்கள் நேசிக்கும் ஒருவரின் உதவி நல்லதாகத் தெரியவரும்.11, 12 தேதிகளில் எவரையும் முழுமையாக நம்பவேண்டாம். விருச்சிக ராசிக்காரர்களுக்கு இம்மாதம் உதவிபுரிதல் கேடாகும். வெள்ளி அல்லது எவர்சில்வர் வளைகாப்பு இடக்கையில் அணிவது நல்லது. வீட்டுப் பணிப்பெண்மீது மையல் கொள்வது கூடாது. பெண்கள் இம்மாதம் முற்றும் துறந்த துறவிகளை தரிசிப்பது கூடாது. திருமணமான தம்பதிகள் ஆலயம் சென்று, அங்கு வளர்க் கப்படும் பசுவுக்கு உணவூட்டல் நன்று. கடக லக்னத்தில் பிறந்தவர்கள் சந்தான பாக் கியம்பெற முயற்சிக்கலாம். வழக்கு விவகாரங்கள் இருந்தால் வெற்றி.
பூசம்: புதன் 8-ல். 13, 14 தேதிக்குமேல் புதுப்புது யோசனைகள் சட்டென உருவாகி நல்வழிப்படுத்தும். குடும்பத்தாரின் தேவைகள் நெருக்கடியைத் தரும். வியா பாரிகளுக்கு புதுகொள்முதல் லாபத்தை வரவழைக்கும். இம்மாதம் பெண்கள் பிறரின் தேவைகளுக்காக நகைகளை மாற்றாகக் கொடுப்பது நல்லதல்ல. (குரு பகவான் ஜூலை வரை அசையா சொத்தை விற்பனை செய்யத் துணைபுரிவார்.) பழைய வாகனத்தைத் தந்து (எக்சேஞ் ஆபர்) புது வாகனம் வாங்கத் துணைபுரிவார். சனிக்கிழமை ஆஞ்சனேயரை 11 முறை சுற்றிவந்து கோரிக்கைகளை வையுங்கள். சுபச்செய்தியைத் தருவார். திருமணமான ஆடவர்களை வாழ்க்கைத் துணைவி, தங்கள் கட்டளைப்படி நடத்த முயல் வார்கள். பிரத்தியங்கரா தேவிக்கு அரளிப்பூ மாலை அணிவித்து வணங்குதல் மிக நல்லது.
ஆயில்யம்: சூரியன் 9-ல். மூன்றாவது வாரம் முதல் மிக அமைதியான சூழ்நிலை நிலவும். 18, 19 தேதிகளில் வாகனங்கள் பழுதுபடலாம். வாகனம் இயக்குவதில் மிக கவனம்வேண்டும்.
(குழந்தையில்லா ஆடவர்கள் ஆனி மாதம் வரை முயற்சிக்கலாம்.) பெண்கள் மாதவிலக்கு நின்ற நான்கு நாட்களுக்குப்பிறகு குரு பகவானை வணங்கவேண்டும். வியாழக் கிழமை காலையில் பாதாம் கீர், மாலையில் திராட்சை ரசம் பருகிவந்தால் தடைப்பட்ட சந்தான பாக்கியம் கிடைக்கப்பெறும். திருச்செந்தூர் அல்லது குருவாயூர் சென்று "துலாபாரம்- இயன்றதைத் தருகிறோம்' என சங்கல்பம் எடுத்துக்கொள்ளவேண்டும். கணவர் ஜாதகத்தில் 5-ல் கிரகமில்லாதவர் களுக்கும், பெண்கள் ஜாதகத்தில் குரு, 2, 7, 10-ல் இருந்தாலும் தடைகள் அகன்றுவிடும். பஞ்சமா பாதகம் மறையும்.
சிம்மம்
ராசிக்கு சிறந்த நாட்கள்: 3, 4, 11, 12, 20, 21, 22. பாதக நாட்கள்: 9, 10, 15, 16, 23, 24.
மகம்: கேது 5-ல். சனி, செவ்வாய், குரு 6-ல். இளந்தென்றல் வாசலைத் தட்டும் வாரமாக முதல் வாரம் அமையும். இருப்பினும் தகுதிக்குமீறிய பொறுப்புகளை ஏற்கநேரும். ஆரோக்கியத்தில் முழுகவனம் இருக்கவேண்டும். 4, 6 தேதிகள் எண்ணற்ற சாதனைகள் படைக்க உதவும். இரண்டாவது வாரம் மேலும் அட்டகாசம். 12, 13 தேதிகளில் விரோதிகள் உரசிப் பார்ப்பார்கள். (சார்வரி வருடம் கூட்டுக்குடும்பத்தில் பாகப்பிரிவினை செய்ய வழிவகுக்கும். 8-7-2020-ப்பிறகு பருவ வயதினர் காதல்வயப்பட நேரிடும்.) காவல்துறைப் பணியாளர்களுக்கு சனி பாராட்டைப் பெற்றுத்தருவார். விமானத்து றையினருக்கு பிரச்சினைகள் மனம் வருந்தச் செய்யும். பௌர்ணமி, பிரதோஷ தினங்களில் சிவனை பன்னீர் அல்லது ரோஜாப்பூ மாலை யால் திருப்திப்படுத்துதல் நன்று. மகாகண பதியை வணங்கலாம்.
பூரம்: புதன் 7-ல், சூரியன் 8-ல். இம்மாதம் இரண்டாவது வாரம் நீங்கள் செய்த தியாகம் முழுவதும் நட்புக்காக என உணரவைக்கும். 15-ஆம் தேதி ஒரு நல்ல சந்தர்ப்பம் பேராசைக்கு வித்திடும். 20, 22 தேதிகளில் எதையும் கவனமாகக் கையாள்வது மிக நன்று. (சார்வரி வருடம், ஆனி 24 வரை சிலருக்கு சிறுநீர் சார்ந்த தொல்லை வந்து மறையும். உத்தியோகம் பார்ப்போருக்கு 15-11-2020-க்குமேல் பணியில் முழுகவனம் வேண்டும். இலாகா மாற்றம், இடமாற்றம் போன்றவை கவலையை உருவாக்கும்) ஞாயிற்றுக்கிழமைகளில் காலபைரவருக்கு கருவேப்பிலை சாதம் படைத்து அல்லது முந்திரி மாலை சாற்றி வணங்கினால் அருள்புரிவார். அரசியலில் ஈடுபட்டோரை சனி பல கோணத்தில் முன்னேற வைப்பார்.
உத்திரம் 1-ஆம் பாதம்: சுக்கிரன் ரிஷபத்தில். சந்திரன், ராகு மாத ஆரம்பத்தில் மிதுனத்தில். "எந்தத் தோல்வியானாலும் நம்மால் மேலெழ முடியும்' என உணரச் செய்யும் மாதம். எந்தத் தொழில்புரிபவர் களானாலும் 25, 26, 27 தேதிகளில் உயரதி காரிகளின் பூரண ஆதரவு மனம் மகிழச் செய்யும். புதுப்பதவி, புது நட்பு ஏற்படும். 29-ஆம் தேதி பகல் பொழுதில் புதுமுயற்சிகள் வேண்டாம். ஏதோ ஒரு இழப்பு மனதை வருந்தச் செய்யும். சேமிப்பு நெருக்கடிகளை ஏற்படுத்தும். வீட்டை நெடுநாள் பூட்டி விட்டுப் பயணம்போக நேரிட்டால், உரிய பாதுகாப்புடன் செல்லல் நன்று.
(8-7-2020-ஆம் தேதிக்குமேல் வெளிநாடு செல்ல எண்ணம் கொண்டிருந்தால் வழிவகை செய்யும்.) கணவன்- மனைவி கருத்து வேறு பாட்டால் பிரிந்திருந்தால் ஒன்றுசேரலாம். சிலருக்கு தடைப்பட்ட மாமியார் வீட்டு சொத்துகள் சுலபமாக வந்துவிடும். சூரிய பகவானை வணங்குதல் மிக நன்று.
கன்னி
ராசிக்கு சிறந்த நாட்கள்: 5, 6, 13, 14, 23, 24. பாதக நாட்கள்: 11, 12, 18, 19, 25, 26.
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: கேது 4-ல். செவ்வாய், குரு, சனி 5-ல். திடமான நம்பிக்கையையும் தெம்பையும் உற்சாகத்தையும் தரும் மாதம்தான். மாண வர்கள் சக மாணவர்களால் அதிக நன்மை பெறுவர். பணியில் சக ஊழியர்கள் பேராதரவு மகிழ்வைத் தரும். 11, 12 தேதிக்குமேல் நல்ல செய்திகள் தொடர்கதையாகும். அந்நிய மண்ணில் பணிபுரிவோர், குடும்பத்தின் பணத் தேவையைப் பூர்த்தி செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும். (சார்வரி வருடத்தில், வழக்குகளிலிருந்து விடுதலை கிட்டும்.) கலப்புத் திருமணத்தில் இருக்கும் தடை விலகும். செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கையை வணங் கினால்போதும். அதுவும் 11 எலுமிச்சை கோர்த்த மாலை சாற்றி வணங்கினால் போது மானது. அர்த்தாஷ்டமச்சனி வெளிநாட்டு வியாபாரத்தைப் பெருக்கத் துணைபுரிவார்.
ஹஸ்தம்: புதன் 10-ல், சூரியன் 7-ல். "நிறைந்த அறிவு பெற்றிருந்தும் அதனைப் பயன்படுத்த வில்லையே' என்ற மனக்குறையைத் தீர்த்துவைக்கும் மாதம். நீங்கள் ஆசிரியர் அல்லது விரிவுரையாளர் எனின், உங்கள் மாணவர்கள் சாதனை படைக்கும்விதமாக செயல்படுவார்கள். 18, 19 தேதிகளில் விருந்து, உற்றார்- உறவினர்களின் பேராதரவு நிறைவைத்தரும். 22, 23 தேதிகள் "சோதனைமேல் சோதனை போதுமடா சாமி' என எண்ண வைக்கும். 25, 26, 27 தேதிகளில் கல்வித்துறை சார்ந்தவர்களுக்கு இனிப்பான செய்தி படையெடுக்கும். 28, 29-ல் உடல் சோர்வு, மனச்சோர்வு பற்றிக்கொள்ளும். (8-7-2020-க்குமேல் இரும்பு, கனரக வாகனம், மின்சார உபகரண வியாபாரத்தை விரிவாக்கம் செய்யலாம்; அதிக லாபம் வரும்.)
சித்திரை 1, 2-ஆம் பாதங்கள்:ராகு மிதுனத்தில். புதன் மீனத்தில். செவ்வாய் மகரத்தில். முதல் இரு வாரங்கள் மிக உற்சா கமாகவும், நிம்மதியாகவும் இருக்கப்பெறும். 22, 23 தேதிகள் நெருக்கடிகள் நிறைந்து காணப்படும். (சார்வரி ஆண்டு, குரு ஆரம்பத் தில் 5-ல் இருக்கிறார். அது பூர்வபுண்ணிய ஸ்தானமாகும். முன்னால் நடந்த பல சட்டச் சிக்கல்கள் விடைகொடுக்கும். வெளிநாடு சென்று கல்வி மேம்பாட்டை உயர்வுற செய்யலாம். 15-11-2020-க்குமேல் பூர்வீகச் சொத்தை ஈடாகவைத்து கடன் பெறுவது கூடாது.) எண்ணெய் வியாபாரம், விதைநெல் வியாபாரம் செய்வோருக்கு சனி பக்கத்துணை யாக செயல்படுவார். பசுவுக்கு வெள்ளிக் கிழமை அகத்திக்கீரை கொடுக்கலாம்.
குரங்குகள், காக்கைகளுக்கு சுவாதி நட்சத் திரத்தன்று தயிர் கலந்த உணவு கொடுக்கலாம். காக்கை காலை- மாலை இரையெடுக்கும்.
அப்போது தருதல் மிக நன்று.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 93801 73464