மேஷம்
அஸ்வினி: சூரியன் மீனத்தில் குருவின் பேராதரவுடன் இருக்கிறார். தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திருப்தியாக அமையும். தங்கநகை வியாபாரிகள் கவனமுடன் செயல்படாவிட்டால் முதலுக்கே மோசம் வரும். பார்வதியை வணங்குவதால் நிலைமை சீரடையும். தூரத்து உறவினர் உதவி நாடி வருவார்கள். ஆற்று நீரை செப்புப் பாத்திரத்தில் சேமித்து பூஜையறையில் வைப்பது போதுமானது.
பரணி: ராசிக்கு 9-ல் இருக்கும் கிரகநாதர்கள் சேர்க்கையும், ராகுவின் பார்வையும் சீராகத் தெரியவில்லை. கருவுற்ற மாதர்கள் கவனமுடன் செயல்பட வேண்டும். இருசக்கர வாகனப்பயணத்தைத் தவிர்க்கவும். பிற வாகனம் ஓட்டும்போதும் கூட்டு எண் 5-ஆக வரும் வாகனம் கூடாது.
கிராமப்புற மாதர்கள் வீட்டுக்கு வெளியே பின்வாசலில், பூண்டையும் உப்பையும் கலந்து இரவில் தூவி வைத்தால் விஷப்பூச்சிகளின் தொல்லை குறையும்.
கிருத்திகை முதல் பாதம்: ராசிக்கு 11-ல் புதனும் சுக்கிரனும் சனியின் வீட்டில் இருக்கிறார்கள். தம்பதி களுக்கு பண விவகாரங்களால் மனக்கசப்பு வரலாம். சமாளித்துப் பாருங்கள். சனிபகவான் துணைபுரிவார். ஆண்கள் ஆட்டுக்கும், பெண்கள் பசுவுக்கும் உணவு கொடுப்பது நன்று. ஐந்து வெள்ளிக்கிழமைகள் சுக்கிர ஹோரையில் தயிர்சாதம், லஸ்ஸி, வெனிலா ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள். சுக்கிரன் முகத்தை வசீகரிக்கச் செய்வார். அழகு ஆராதிக்கும். வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் வெண்தாமரை மலரை சுக்கிரனுக்கு அணிவித்துப் பூஜித்தல் நன்று.
ரிஷபம்
கிருத்திகை 2, 3, 4-ஆம் பாதங்கள்: "குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா' என மனம் திருப்தியடையும். பத்தில் உள்ள புதனும் சுக்கிரனும் உங்களை மாயாஜாலம் செய்வர். எட்டில் இருக்கும் கிரகநாதர்கள் சிந்தனையைப் பின்னோக்கிப் போகச்செய்வார்கள். காப்பீட்டுத்துறைப் பணியாளர்கள் அதிக வாடிக்கையாளர்களை சம்பாதிக்க லாம். ஞாயிறன்று செய்யும் துர்க்கா பூஜை 16-க்கு மேற்பட்ட தோஷங்களை நிவர்த்தி செய்யுமாம். குடும்பப்பெண்கள் செய்தால் அதிக நன்மை பெறலாம்.
ரோகிணி: குடும்பத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட ரிஷப ராசியினர் இருந்தால் பணநெருக்கடிகளை சமாளிக்க நேரிடும். பங்குனி மாதத்தில் பிறந்த ஆண்களுக்கு திருமணம் சார்ந்த செய்திகள் தன்னம்பிக்கை ஏற்படுத்தும். திருமணமானோருக்கு இம்மாதம் கடைசி வாரம் மனரீதியாக தேவையற்ற சர்ச்சை ஏற்படலாம். அரச மரத்தின் தென்திசை நோக்கிச் செல்லும் வேருக்கு அருகே ஏழு ஒரு ரூபாய் நாணயத்தை மண்ணில் குழிதோண்டிப் புதைத்து தண்ணீர் விடவும். அமிதிஸ்ட் மோதிரம் அணியலாம்.
மிருகசீரிஷம் 1, 2-ஆம் பாதங்கள்: தன்னம்பிக்கை யோடு நிமிர்ந்த நடைக்கு சுக்கிரன், புதன் போதிய ஆதரவு தருவார்கள். உங்கள் நினைவு வங்கியில் வரும் கற்பனை நல்ல விலை போகும். செவ் வாய் ரகசிய பேரத்தைத் தடை செய்வார். தாயாரின் சொத்து நல்ல விலைக்குப் போக சூரியன் பேருதவி செய்வார். சனியின் வேதனை அகல இம்மாதம் மட்டும் ஒரு மூன்று இஞ்ச் இரும்பு ஆணியை பர்ஸ் அல்லது வாசல் கதவில் பதிக்கவும். கன்னிமூலையில் கழிவறை இருந்தால் இரவில் சிறிது உப்பு கலந்த நீரைத் தெளித்து வைக்கவும்.
மிதுனம்
மிருகசீரிஷம் 3, 4-ஆம் பாதங்கள்: செவ்வாய் ரிஷபத்தில் உள்ளார். எத்துறையில் பணிபுரிவோரும் குறுக்குவழியில் பணம் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும். செவ்வாய் தோஷ மனைவி அமைந்திருந்தால், அவர்கள் உடல்நலத்தில் கவனம் தேவை. 12 அல்லது 24 வயதுடையவர்களுக்கு மாதாந்திர உதிரப்போக்கு அதிகமாகும்.
வளர்பிறைச் சந்திரனை- அதாவது 3, 6-ஆம் பிறைச்சந்திரனை மாலையில் வானை நோக்கி வணங்கவும். அரசியல்வாதிகளுக்கு மனநிறைவு தரும் மாதம்.
திருவாதிரை: கும்பத்தில் இருக்கும் கிரகநாதர்கள் இலை மறைவு காதல்களை வெளிக்கொணரச் செய்வார்கள். தாய், தந்தையிடம் துணிந்து காதல் நிலையை வெளிப்படுத்தலாம். குறிப்பாக அவரவர் இனத்தைச் சேர்ந்தவர்களென்றால் திருமணம் வெற்றிகரமாக நிறைவேறும். கமர்சியல் படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு வெற்றி கிட்டும். பைரவருக்குப் பிடித்த நெய்யபிஷேகம், பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்கள், உடைக்கப்படாத தேங்காய் (முழுத்தேங்காய்), பாகற்காய், அச்சு வெல்லம் படைத்து வணங்குவது சிறப்பானது. புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: உல்லாசப்பிரியர்கள் இம்மாதம் விலைமாதரை நாடிச்செல்வது கூடாது. பால்வினை நோயை கிரகநாதர்கள் அள்ளித் தருவார்கள். மணமுறிவு விவகாரம் நீதிமன்றத்தில் இருந்தால், குரு பகவான் தம்பதிகளை இணைத்துவைக்கவே பாடுபடுவார். எனவே வேண்டா வெறுப்புடையோர் வாய்தா வாங்குவது உசிதமானது. திருநள்ளாறு சென்று சனி பகவானை தரிசித்து வருவதால் நீண்டநாள் பிரச்சினை ஒன்று இறுதிவடிவம் பெறும்.
கடகம்
புனர்பூசம் 4-ஆம் பாதம்: ராசிக்கு 6-ல் குரு, சனி, கேது. எனவே வம்சவிருத்திக்கு இம்மாதம் ஏற்றதல்ல. அதாவது கணவன்- மனைவி இணைந்து குழந்தை பாக்கியம் பெற கிரக சூழ்நிலை சீரானதனல்ல. அதனை உதாசீனப்படுத்திக் கருவுற்றால் குழந்தைக்கும், தந்தை- தாய்க்கும் ஆகாது. இயற்கை சதிசெய்து கருவுற்றால், பிரசவத்திற்காக மருத்துவமனை போகும்போது பாலும் சர்க்கரையும் (வெள்ளை) கொண்டு செல்லவேண்டும். குழந்தை பிறந்தபின் பாலை திருஷ்டிசுற்றி அரசமர வேரில் ஊற்றுதல் போதுமானது. கெடுதி போய்விடும்.
பூசம்: ராகு மிதுனத்தில். சுபச்செய்திகள் அதிகமாகும். சிலருக்கு உடன்பிறந்த சகோதரி மகளின் திருமணச் செலவு, கல்விச்செலவை ஏற்க நேரிடும். 11-ல் இருக்கும் செவ்வாய் முன்னேற்றத் தடை ஏற்படுத்துவார். இரவில் அதிக நேரம் கண் விழிக்க வேண்டாம். கண்புரை அகற்றல்- அதாவது காட்டிராக்ட் ஆபரேஷனை இம்மாதம் தவிர்க்கவும். 60 கிராம் யானை உருவம் வீட்டில் இருப்பது நன்று. ஆயில்யம்: புதனும் சுக்கிரனும் கும்பத்தில் இருப்பதால், இம்மாதம் ஏதோ காரணத்தால் பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர முயற்சிப்பது பலன்தராது. மாதத்தின் கடைசி வாரம் 26, 27, 28 தேதிகள் சாதகமான பலனைத் தரும். உங்களுடைய அசையா சொத்து சார்ந்த பத்திரம், பத்திரமாக இருக்க வேண்டும். சில தவறுகள் நடைபெற வாய்ப்புள்ளது. சனி பகவானை வணங்கவும்.
சிம்மம்
மகம்: மாத ஆரம்பத்தில் சனி, குரு, கேது 5-ல்- அதுவும் தனுசில். ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ஸ்ரீநர்த்தன பைரவர், வேலூர் கோட்டையின் ஒரு பகுதியிலுள்ள ஜலகண்டேஸ்வரர் கோவில் சென்று வணங்குவது உடனடி பலன் தரும். இயலாவிடில், பைரவர் மூலமந்திரம் கூறலாம். ("ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஐம் வம் வடுகநாதா பைரவாய; ஓம் ஹ்ரீம் நமச்சிவாய ஹ்ரீம் ஸ்வாஹா). இம்மாதம் எந்த புது வேலைக் கான முயற்சியும் வேண்டாம்.
பூரம்: ராகு இருக்குமிடம் சீராகத் தென்பட வில்லை. தாயாரின் உடலில் பின்னடைவு வரும்.
தங்க நகை வாங்குவது, பழைய நகைகளை உருக்கி புது நகை வாங்குவது கூடாது. குருவின் கொள்கைக்கு எதிரானது இம்மாதம். பிறர் உங்கள் பெயரில் அதிகாரப்பத்திரம் தந்தாலும், இம்மாதம் விற்பது, வாங்குவது பெரிய ஏமாற்றம் தரும். சுபநிகழ்ச்சிகளுக்கு நீலநிறம் தவிர்ப்பது நல்லது. ஊதா நிறப்பூ, ரிப்பன் ராசியானது- இம்மாதம்.
உத்திரம் 1-ஆம் பாதம்: அநேகருக்கு, நீங்கள் பிறந்த பிறகுதான் உங்கள் குடும்பம் செழிப்பான நிலையை அடைந்திருக்கும். எனினும் சொந்தத்திலுள்ள அசையா சொத்தில் லாபம் வரும் வாய்ப்பில்லை. சுக்கிரன் வலுவாக இருப்பதால் அழகு நிலையம் போகாமலே அழகாகத் தென்பட லாம். 83 வயதுக்குமேல் 90 வயதுள்ள வர்கள் பிசியோதெரபி இல்லாமலே சுறுசுறுப் பாகலாம். நெடுநாள் ஆரோக்கியக்குறை இருந்தால் நீல ஊமத்தங்காயை ஞாயிறன்று ராகுகாலத்தில் திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடல் நல்லது. சூரியன் அருள்புரிவார்.
கன்னி
உத்திரம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: வங்கி ஊழியர்களே, உஷார். பணம் எண்ணும் போது ராகு சதி செய்வார். வாலிப உள்ளங் களை கிரகநாதர்கள் திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துவர். சில தியாகங்கள் சிறப்பைத் தரும். மாற்றுத்திறனாளிகளும் துணையாகலாம். "சனி பிடித்தவள் சந்தைக்குப் போனாலும் கந்தலும் கிடைக்காது' என்பது பழமொழி. நான்காமிடத்து கிரகநாதர்கள் உங்களை பதம்பார்ப்பார்கள். குடும்ப தெய்வம், குலதெய்வ வணக்கம் சிறப்பானது.
ஹஸ்தம்: அரசு சார்ந்த மருத்துவமனை ஊழியர்களுக்கு ராகு கூடுதல் வருவாயைப் பெற்றுத்தருவார். பெண்கள் இம்மாதம் இரண்டாவது வாரம் குடும்பத்தை அதிகம் நேசிக்கும்விதமாக சூழ்நிலை அமையும். சனியின் வீட்டில் சுக்கிரன் இருப்பதால், பெண்கள் வீட்டினுள்ளே மிதியடியுடன் நடப்பது கூடாது. தோல் வியாதி வரும். சுண்டுவிரல் மிகக்குட்டையாக உள்ளவர்கள் கோமேதக ராசிக்கல் (வெள்ளியில் ஓபன் செட்டில்) அணிவதால், 10-ல் இருக்கும் ராகு சிக்கல்களைத் தடை செய்வார்.
சித்திரை 2, 3, 4-ஆம் பாதங்கள்: பெண்களுக்கு இம்மாதம் வாரக்கடைசியில் சுயமதிப்பு கேள்விக்குறியாகும். என்ன பேசினாலும், உங்கள் சொல் சபையேறாது.
குருவை திருப்திப்படுத்த, சிவப்பு நிற உள்ளா டைகள் அணிந்தால் கெடுதியை அகலச் செய்யும். மூத்தோரை மதிக்க வேண்டும். ஆறு, குளங்களில் அரைகுறை ஆடையுடன் நீராடுவது கூடாது. குடும்ப புரோகிதருக்கு ஆடை தானம் நல்லது. சூரியனைத் திருப்தி செய்ய கால் அல்லது அரை கிலோ கோதுமை அல்வா தானம் செய்தால் மனதை ஒளிபெறச் செய்யும்.
துலாம்
சித்திரை 3, 4-ஆம் பாதங்கள்: உங்களு டைய மனைவி அரசு சார்ந்த பணிபுரிபவர் எனில், மாதத்தின் இரண்டாவது வாரம் அலுவலகத்தில் வீண்விவகாரங்கள் மனம் வருந்தச் செய்யும் நிகழ்வுகள் ஏற்படும். பெரிய ஒப்பந்தங்களில் தடை ஏற்படும். செவ்வாயை வணங்க வேண்டும். 29, 30 தேதிகளில் எல்லா கெடுதல்களும் விடைகொடுக்கும். மூன்று உலோக மோதிரம் அணியலாம். புன்செய் பயிர் செய்வோர் விளைநிலத்தின் மையப்பகுதியில் கங்கைநீர் நிரப்பப்பட்ட ஒரு புட்டியை புதைத்து வைப்பது நன்று.
ஸ்வாதி: சூரியனும் புதனும் மீனத்தில் இருப்பதால், 8, 10 ஆகிய தேதிகளில் வாகனங் கள் ஓட்டும்போது கவனம் வேண்டும். மூன்றாம் நபர்மூலம் சிலருக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். 24, 25 வயதில் இருப்போர் இம்மாதம் திருமணப் பேச்சைத் தவிர்ப்பது நல்லது. தெற்கு வாசலுள்ள வீட்டில் வசிப்போர் ஒரு சிறு மண்குடுவையில் தேனை நிரப்பி, அனுமன் கோவில் குங்குமத்தைத் தூவி வாசலில் தொங்கச்செய்ய வேண்டும். 9-ஆம் நாள் அந்த குடுவையை நீர்நிலையில் போடுவது நன்று.
விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்: மீனத்தில் இருக்கும் சூரியன் எதிரிகளை சமாளித்து மாதம் முழுவதும் வெற்றிநடை போடச்செய்வார். சனி மூன்றாம் இடமான தனுசில் இருப்பதால், "நுணலும் தன் வாயால் கெடும்' என்பதுபோல, தேவையற்ற பேச்சால் வில்லங்கம் உருவாகும். முதிர்ந்த வேப்பமர அடிப்பாக மணலில் ஒரு சிறு வெள்ளி உருண்டையைப் புதைத்து தண்ணீர் விடவும். அல்லது ஆலமர விழுதின் எட்டு சிறு துண்டை திருஷ்டி சுற்றி செடியில் போடலாம்.
விருச்சிகம்
விசாகம் 4-ஆம் பாதம்: சனி, குரு இருவரும் தனுசில் இருப்பதால் பல நன்மைகள் பெறப்போகிறீர்கள். மூன்றாவது வாரம் குடும்பம் ஒன்றிணைந்து "கெட்டுகெதர்' கொண்டாடலாம்; பூரிப்படையலாம். ராகு எட்டில் இருப்பதால் நீதிக்குப் புறம் பாக பணம் தேடல் கூடாது. "ஒரு தவறு செய்தால், அதைத்தெரிந்து செய்தால்- ஒரு முக்கோண வடிவ வெள்ளித்தகடை பர்சில் வைத்துக்கொள்ளவும். தண்டனை குறையும். பெண் அதிகாரிகள் இப்படிப்பட்ட சிக்கலில் மாட்டிக்கொள்ளாதிருக்க ஓபல் ராசிக்கல் அணியவும். பழைய செல்லாக்காசுகளை உண்டியலில் போடவும்.
அனுஷம்: செவ்வாய் சுக்கிரனின் வீட்டில் இருப்பதால், கணவனை இழந்த கைம்பெண் வீட்டில் தஞ்சம் பெற்றிருந்தால், அவரது சொத்து சேமிப்புகளை நீங்கள் உபயோகிப் பது கூடாது. அரசு அல்லது பிற நிலங்களை பினாமியாக வைத்திருந்தால், அந்த நிலத்தின் மேற்குப் பகுதியில் ஒரு சிவப்பு நிறக் கொடி யைப் பறக்கக் செய்யுங்கள். சொத்து உங்களை விட்டுப் போகாமலிருக்க செவ்வாய் துணை நிற்பார். சனியின் பிடியில் இருந்து விடுபட சனிக்கிழமை அண்டங்காக்கைகளுக்கு உணவு தருதல் நன்று.
கேட்டை: இம்மாதம் சிவப்புநிற அனுமனை வணங்கவும். சனி, கேதுவுடன் இரண்டில் இருப்பதால், தும்பை இலை தோரணத்தை வாசலில் தொங்கவிடவும். சுப்ர மணியர், ஐயப்பனை வணங்கவும். இம்மாதம் புதன், செவ்வாய்க்கிழமை மாலை நேரத்தில் புதுமுயற்சி மேற்கொண்டால் வெற்றிக்குத் துணைவரும். சினைப்பை பிரச்சினை, தசைப் பிடிப்பு, காது வலி வரலாம். ஆண்கள் புதன் கிழமை பெல்ட் அணிதல் நன்று. பெண்கள் பச்சை நிற வளையல் அணியலாம்.
தனுசு
மூலம்: 3-ல் சுக்கிரன். சத்தியவானை சாவித்திரி காப்பாற்றியதுபோல, உங்கள் இல்லத்தரசி எல்லா வகையிலும் துணைபுரி வார்கள். "நீதானே என் பொன் வசந்தம்' என பாடிப்புகழலாம். ஆனால் 7-ல் இருக்கும் ராகு இருதார அமைப்புடையவர்களின் நிம்ம திக்குத் தடைபோடுவார். நல்ல பரிகாரம்: தென்கிழக்கு பாகத்தில் ஒரு கண்ணாடி டம்ளரில் மூன்று மாதுளை மொட்டுகளைப் போட்டு, மாலையில் பூஜையறையில் வைத்து, மறுநாள் தெருவில் போடுவதால் திருஷ்டி அகலும். நிம்மதி பெறலாம்.
பூராடம்: சூரியன் ராசிக்கு 4-ல். தேவைப் படும்போது பணம் கைக்கு வரத் தயங்கும். வாலிபர்களுக்கு இரவில் சுக்கிலம் கனவு களால் வெளிப்படும். வல்லாரைக்கீரையை உணவில் சேர்ப்பது மிக நல்லது. வயது 10, 17, 37 எனில், அரசு சார்ந்த சலுகைகள் கிடைக்கப்பெறும். உடம்பில் கரடியைப் போல் ரோமம் அடர்த்தியாக இருந்தால் இம்மாதம் எல்லா செயல்களும் மந்த நிலையில் ஈடேறும். காலையில் சூரியனை வணங்குவது நோய்களை அகலச்செய்யும்.
உத்திராடம்: மீனத்தில் சூரியனும் புதனும் இணைந்து காணப்படுவதால், கனவு காணும் வாழ்க்கை யாவும் கலைந்து போகவிடாமல் நினைத்ததை நடத்தி முடிக்கலாம். ராகுவின் தோஷம் விலக, காய்ந்த முழுத்தேங்காயின் தோட்டை அகற்றாமல், ஆசைகளை நிறைவேற்றும்படி வேண்டி உங்கள் கையால் ஓடும் நீரில் மிதக்க விடுதல் போதுமானது. திருமணமானவர்கள் மாமனாரிடம் சிறு வெள்ளி மோதிரம் வாங்கி அணிவதால் முன்னேற்றப்பாதை தெரியவரும்.
மகரம்
உத்திராடம் 2, 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் வீட்டை அலங்கரிப்பதில் கணவன்- மனைவிக்கிடையே கருத்து வேறுபாட்டை சுக்கிரன் உருவாக்குவார். வாலிப உள்ளங்கள் ஜிகினா ஆடைகள் அணிவதால் சுலப நன்மைகள் பெறலாம். புதிதாக வாடகை வீட்டில் குடியேற நேர்ந்தால், அந்த வீட்டில் அகாலமரணம் ஏற்பட்டிருந்தால் இம்மாதம் குடியேறுவது கூடாது. வேறுவழியின்றி குடியேறியிருந்தால், வீட்டு வாசலில் திருகுக் கள்ளித்துண்டை கட்டித் தொங்கச்செய்யவும். இரவில் கன்னிமூலையில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை வைத்திருந்து மறுநாள் வாசலில் ஊற்றவும்.
திருவோணம்: வேலைவாய்ப்பு சார்ந்த சுபச்செய்தி வரும். மேலதிகாரிகளின் பாராட்டைப்பெறலாம். 19, 21 தேதிகளில் பணவரவுக்கான உத்தியோக மாற்றம் வரும். பணிநேரங்களில் மதுபோதை வேண்டாம். பணயிடை நீக்கம் வரச்செய்வார் சனி பகவான். பழுப்புநிறப் பசு, நாய்க்கு உணவு தருதல் நன்று. பைரவர் அருளைப்பெறலாம். ஐந்து புதன்கிழமைகள் ஐந்து ரூபாயை பெருமாள் கோவில் உண்டியலில் போட்டு வந்தால் கடன் தொல்லை உங்களைவிட்டு அகலும்.
அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள்: பழைய கடனைத் திரும்பச்செலுத்தும் விதமாக பணம் வரும். மாதத்தின் கடைசி வாரம் உற்றார்- உறவினர்களால் சில இடையூறுகள் ஏற்படும். கருவுற்ற பெண்கள் கேது பகவானை வணங்குதல் நல்லது. கிராமப்புறத்தில், ஊரின் மேற்குப் பகுதியில் கிணறு இருந்தால், அந்த கிணற்றில் ஒரு பால்கவரைத் திறந்து பாலை ஊற்றுவது நல்லது. சந்திரன், பூமாதேவியின் அருளைப்பெறலாம். தடைகள் அகலச் செய்யும்.
கும்பம்
அவிட்டம் 3, 4-ஆம் பாதங்கள்: இம்மாதம் ஓடும் ஆற்றுநீரில் குளிப்பதால் சந்திரனின் பூரண ஆதரவைப் பெறலாம். இப்போது வயது 12, 24, 35, 46, 59, 71, 83 என்றால் மிகுதியான பலன் பெறலாம்.
பெண்களின் ஆரோக்கியத்தில் ஆண்கள் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். நாட்பட்ட கடன் தொல்லை விடைகொடுக்கும். குழந்தை களின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை பகலில் நடத்துவது நன்று. பிறந்தநாள் கொண் டாட்டத்தில் மது தவிர்த்தல் வேண்டும். கேசரி பவுடரை நீரில் கலந்து திலகமிடுதல் நன்று.
சதயம்: சனி, குரு, கேதுவின் இருக்கை சீராகத் தென்படவில்லை. இம்மாதம் குடும்ப இனப்பெருக்கத்திற்காக முயல்வது கூடாது.
தாய்க்கும் சேய்க்கும் பத்து மாதம் கேடாக அமையும். கட்டுப்பாடியின்றி சிசு உருவா னால், அம்மியில் கருப்பு எள்ளும் கொண்டைக் கடலையும் அரைத்து உடம்பில் பூசிக் கொண்டு ஸ்நானம் செய்வதால் கெடுதல் அகலும். வீட்டு வாசலில் திருகுக்கள்ளிச் செடித்துண்டினைக் கட்டிவைப்பது நன்று. கெடுதல் அகலும்.
பூரட்டாதி 1, 2, 3-ஆம் பாதங்கள்: வியாபாரிகள், முதலாளிகள் இம்மாதம் 24, 25 தேதிகளில் அதிக வருமானத்தை எதிர்பார்க்கலாம். சொந்த பந்தங்களால் நெருக்கடி மிகையாகும். ஆன்மிகச் சுற்றுலா ஆனந்தத்தைத் தரும். வழக்கு விவகாரம் வெற்றிபெற ஸ்ரீசண்டபைரவர் காயத்திரி மந்திரம் கூறலாம். "ஓம் சர்வ சத்ரு நாஸாய வித்மஹேமஹா: வீராய தீமஹி; தந்நோ: சண்ட பைரவ ப்ரசோதயாத்.'
மீனம்
பூரட்டாதி 4-ஆம் பாதம்: மாதத்தின் முதல் வாரமே பல கோணங்களில் நெருக்கடி யால் தடுமாறுவீர்கள். ஆனால் கிரக நாதர்கள் தரும் அபூர்வ வலிமையால் எல்லாமே சீராகிவிடும். சுக்கிரனின் துணையில்லாமை யால், பிறரின் சொல்லைக் கேட்பதால் அவமானம் வந்தடையலாம். சனியால் பொருளாதார நெருக்கடி வந்தால், சனியைத் திருப்தி செய்ய, பணநெருக்கடியுடன் வீடுகட்டும் நலிந்தோருக்கு, இரும்புக்கம்பிகள் உதவி செய்யலாம். அந்தப் பணம் வேறுவழியில் உங்களுக்கு வந்துவிடும்.
உத்திரட்டாதி: 17, 18 தேதிக்குமேல் உங்களுடைய முயற்சிகள் கிரகநாதர்கள் உதவியால் வெற்றியைத் தரும். ஆனால் 21-ஆம் தேதிக்குமேல் யாரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். குறிப்பாக, வீடு, வாகனம் வாங்கும்போது அவை சார்ந்த உறுதிப்பத்திரங்களை கவனமாகப் படித்துக் கையெழுத்திட வேண்டும். வெள்ளியிலான மோதிரத்தை இடக்கை மோதிர விரலில் அணியவும். ராகுவின் தடைக்கு 400 கிராம் கொத்தமல்லிக்கீரையுடன் நான்கு பாதாம் பருப்பைச் சேர்த்து திருஷ்டி சுற்றி நீரில் போடவும்.
ரேவதி: மாதத்தின் கடைசி வாரம் உங்கள் மேல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்; ஏமாற் றப்பட நேரும். புது ஆபரணச் சேர்க்கை குதூகலத்தை உருவாக்கும். நான்கு சக்கர வாகனத்தில் பயணம் செய்வோர், ஸ்டெப்னி டயர் வைத்துக்கொள்ளல் நல்லது. இப்போது வயது 48 எனில், இம்மாதம் பணநெருக்கடி வரும். சிவப்புநிற அரளிப்பூ, மூன்று செப்பு நாணயத்தை சேர்த்து வைத்துக்கொண்டு, கிழக்கு நோக்கி சூரிய வணக்கம் செய்வது சிறந்தது. செம்பவள மோதிரம் வலக்கையில் அணியலாம்.
செல்: 93801 73464