Advertisment

அசுபப் பலன்களைக் குறைக்கும் சூட்சுமங்கள்! -பாஸ்கரா ஜோதிடர் எம். மாசிமலை

/idhalgal/balajothidam/approaches-reduce-risk-infection-bhaskara-astrologer-m-masilamani

ரு வயதான தாய் தன் மகனுடன் வந்து, மகனுடைய ஜாதகத்தைக் கணித்துக் கூறும்படி கேட்டுக்கொண்டார். மகனுக்கு வயது முப்பதுக்குமேல் ஆகிறது. அவர்கள் என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல், பொதுவாகப் பலன்களைக் கூறும்படி கேட்டுக்கொண்டனர். ஆதலால் அவர்களின் கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அப்பொழுது சந்திரன் குறிகாட்டும் பாவங்களை வைத்து முடிவுசெய்தேன். ஆளுங்கிரகங்களின்படி, சந்திரன் அந்த நிமிடத்தில் குரு நட்சத்திரத்திலும், சுக்கிரன் உபநட்சத்திரத்திலும் சென்று கொண்டிருந்தது, 4, 10, 11, 12-ஆம் பாவங்களை குறிகாட்டின. இங்கு முக்கியமாக 4, 10, 12-ஆம் பாவங்கள் அவர்களின் மனதிலிருக்கும் பிரச்சினைகளை குறிகாட்டியதால் அவர்களிடம், "நீங்கள் வந்திருப்பதன் நோக்கம், உத்தியோகத்தில் அதிக பளு இருப்பதோடு வருமானமும் படிப்புக்கேற்றவாறு இல்லாமல் குறைவாகப் பெறுகிறார்; அடுத்து திருமண வாழ்க்கையில் அதிருப்தி, மனைவியால் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்கிறார்' என்று கூறினேன். அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு, உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக உ

ரு வயதான தாய் தன் மகனுடன் வந்து, மகனுடைய ஜாதகத்தைக் கணித்துக் கூறும்படி கேட்டுக்கொண்டார். மகனுக்கு வயது முப்பதுக்குமேல் ஆகிறது. அவர்கள் என்னிடம் எந்தக் கேள்வியும் கேட்காமல், பொதுவாகப் பலன்களைக் கூறும்படி கேட்டுக்கொண்டனர். ஆதலால் அவர்களின் கேள்வி என்னவாக இருக்கும் என்பதை அப்பொழுது சந்திரன் குறிகாட்டும் பாவங்களை வைத்து முடிவுசெய்தேன். ஆளுங்கிரகங்களின்படி, சந்திரன் அந்த நிமிடத்தில் குரு நட்சத்திரத்திலும், சுக்கிரன் உபநட்சத்திரத்திலும் சென்று கொண்டிருந்தது, 4, 10, 11, 12-ஆம் பாவங்களை குறிகாட்டின. இங்கு முக்கியமாக 4, 10, 12-ஆம் பாவங்கள் அவர்களின் மனதிலிருக்கும் பிரச்சினைகளை குறிகாட்டியதால் அவர்களிடம், "நீங்கள் வந்திருப்பதன் நோக்கம், உத்தியோகத்தில் அதிக பளு இருப்பதோடு வருமானமும் படிப்புக்கேற்றவாறு இல்லாமல் குறைவாகப் பெறுகிறார்; அடுத்து திருமண வாழ்க்கையில் அதிருப்தி, மனைவியால் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்கிறார்' என்று கூறினேன். அவர்கள் ஆம் என்று கூறிவிட்டு, உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகமாக உள்ளதாகவும், மிகவும் குறைவான ஊதியம் பெறுவதாகவும், திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டதாகவும் கூறினார்கள். இனி அந்த ஜாதகத்தைப் பார்ப்போம்.

Advertisment

vishnu

சிம்ம லக்னம், அஸ்வினி நட்சத்திரம், மேஷ ராசி. நடக்கின்ற தசை சூரிய தசை.

லக்னாதிபதி சூரியன் நீசமடைந்து சுக்கிரனுடன் இணைந்திருப்பது, சுகத்தைக் கொடுக்கும் சுக்கிரனைக் கெடுக்கும் நிலையில் உள்ளது. 6, 7-ஆம் பாவாதிபதி சனி 10-ஆம் பார்வையாக லக்னத்தைப் பார்ப்பதும் தீமை பயப்பதையே குறிக்கிறது. சந்திரனுக்கு 12-ஆம் இடத்தில் ராகு இருப்பதும் இவருக்கு தடைகள், அஷ்டமாதிபதியின் தாக்கங்களைக் கொடுத்து வாழ்க்கையில் விரக்தியைக் கொடுக்கும். திருமண வாழ்க்கை என்பது இவருக்கு பாலைவனம்போல் உள்ளது. இவருக்குள்ள சுகஸ்தானங்கள் அவ்வப்போது எதிர்கொள்ளும் பாலைவனச் சோலையாகும்.

vishnuஇந்த ஜாதகத்தை பாஸ்கரா ஜோதிட முறையில் ஆராய்வோம். உத்தியோக ஸ்தானமாகிய 6-ஆம் பாவம் 2, 6, 8, 10, 12-ஆம் பாவங்களைத் தொடர்புகொள்வதால் இவருக்கு உத்தியோகம்மூலம் வருமானம், மதிப்பு மரியாதை உண்டு. அதேவேளையில் 8, 12-ஆம் பாவங்களும் உடனிருப்பதால், அவற்றுக்கே உரிய கஷ்டங்களையும், மனதில் ஒருவித அமைதியின்மையும், நீண்ட அலைச்சலையும் தரும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் ஊதியம் குறைவாகக் கொடுக்கும். இது கொடுப்பினையாகும். அதற்குத் தகுந்தாற்போல் நடக்கின்ற சூரிய தசையானது 2, 6, 12-ஆம் பாவங்களை குறிகாட்டுவதால், இங்கு 10-ஆம் பாவத் தொடர்பு இல்லாததால் உத்தியோகம் உண்டு. ஆனால் அதற்கே உரியதான அந்தஸ்து என்று சொல்லக்கூடிய மதிப்பு அவ்வளவாக இருக்காது என்பதையே காட்டுகின்றது.

Advertisment

இரண்டாவது கேள்வியான திருமண வாழ்க்கையை ஆராய்ந்தோமேயானால், இவருடைய ஜாதகத்தை கழுகுப் பார்வை என்று சொல்லக்கூடிய (ர்ஸ்ங்ழ்ஹப்ப் ல்ண்ஸ்ரீற்ன்ழ்ங்ள்)பொதுத்தன்மையாகப் பார்க்கும்போது, பொருளாதார வாழ்க்கையைவிட மணவாழ்க்கை சிறப்புக் குறைவாகும். ஏனெனில் 12 பாவங்களில் 11 பாவங்கள் 2, 4, 6, 8, 10, 12 போன்ற பொருட்பற்றுடைய பாவங்களைத் தொடர்புகொண்டும், 8-ஆம் பாவம் மட்டும் 5, 8, 11-ஆம்பாவங்களைத் தொடர்புகொண்டுள்ளதால், இவருடைய திருமணவாழ்க்கைக் கொடுப்பினை மிகவும் பலவீனமாக இருக்கிறது. மேலும் ஒன்பது கிரகங்களில் எட்டு கிரகங்கள் இதேவகையில் தொடர்புகொண்டுள்ளன. செவ்வாய் மட்டும் 6, 7-ஆம் பாவங்களைத் தொடர்புகொண்டுள்ளது. செவ்வாயின் தொடர்பிலுள்ள சூட்சுமம் என்னவென்றால், களத்திர ஸ்தானமான 7-ஆம் பாவம் 6-ஆம் பாவத்துடன் தொடர்புகொண்டுள்ளதால், 6-ஆம் பாவமே வலுவாகச் செயல்படும். 6-ஆம் பாவம் என்பது வெற்றி ஸ்தானமாகும். அதாவது மனைவியை வெற்றிகொண்டு அவர்களைப் புறக்கணிப்பதாகும்.

அதுவே இவரது வாழ்க்கையில் நடைபெற்று மனைவியைப் பிரிந்துவிட்டார்.v இனி இவர் எப்படிப்பட்ட ஊழ்வினையோடு பிறந்திருக்கிறார் என்பதை, இவரது திம்ப சக்கர ஜாதகத்தின்மூலம் ஆராய்வோம்.

நெற்றி ஸ்தானத்தில் பாவகிரகமாகிய கேது, பெண்களின் சுகத்தைக் கொடுக்கக்கூடிய சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால் பெண்களால் துன்பத்தை அனுபவிக்க இப்பிறவி எடுத்துள்ளது தெளிவாகிறது. மேலும் 6 மற்றும் 7-ஆம் அதிபதி- களத்திர ஸ்தானாதிபதி சனி 2-ஆம் இடத்தில் இருப்பது, குடும்பம் அமைவதற்குத் தடைகளைக் கொடுக்கின்றது. 5-ஆம் இடத்தில் அசுப கிரகம் ராகு இருப்பது, வளமான வாழ்க்கையைக் கொடுக்கக்கூடிய நிலையில் உள்ளது. நாபி என்று சொல்லக்கூடிய 5-ஆம் இடத்தில் ராகு இருப்பதால், குழந்தையைக்கூட கொடுக்காமல் மனைவி பிரிந்துவிட்டார்.

நெற்றி ஸ்தானத்தில் கேது சேர்ந்திருப்பது, இவருக்கு ஒருவகையான மனக்கவலையைக் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலை உள்ளது. இக்குறைகளைக் களைய சித்தர்களின் ஜீவசமாதிக்கு மாதந்தோறும் சென்று, பௌர்ணமியன்று பூஜை செய்துவர வேண்டும்.

vishnu

இதனால் கேது கிரகத்தின் கெட்ட பலனகள் குறைந்து, 7-ஆம் பார்வையால் களத்திர ஸ்தானத்தின்மீது உண்டாகும் தீய தாக்கத்தையும் குறைத்து மணவாழ்விற்கு வழி அமைக்கும். 5-ஆம் இடமாகிய வயிறு ஸ்தானத்தில் தீய கிரகமான ராகுவின் கெட்ட பலன்களைக் குறைக்க பெரியோர்களுக்கு அன்னதானம் செய்துவர வேண்டும். இதனால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.

இவருக்கு மணவாழ்க்கையில் சந்தோஷத்தைக் கொடுக்கக்கூடிய செவ்வாய், சந்திரன், கேது ஆகிய கிரகங்களுக்குண்டான பவளம், முத்து, வைடூரியம் ஆகிய ரத்தினங்களை மோதிரங்களாக அணிந்துவர, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.

செல்: 91767 71533

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe