Advertisment

அசுப கிரக தோஷம் போக்கும் அன்னதானப் பரிகாரம்!

/idhalgal/balajothidam/annapurna-remedy

ருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஏனெனில் ஆஸ்தான ஜோதிடர்கள் பழங்காலந்தொட்டே பலன்களைக் கூறுவதற்கு முன்னர் ஜாதகத்திலுள்ள 1, 5, 9-ஆம் இடங்களைப் பார்த்துக் கணக்கிடுவர். ஒருவருக்கு 1, 5, 9-ஆம் இடங்கள் நன்றாக இருக்குமானால் அவருடைய வாழ்க்கை நிம்மதியாக, கடவுளின் கிருபையால் இனிதே நடந்தேறும் என்றுரைப்பர். ஒன்றாம் இடம் இந்தப் பிறவியில் நடக்கும் நிகழ்வுகள், வெற்றி, தோல்வியைப் பற்றிக் கூறும். 5-ஆம் இடம் வாரிசுகளையும் அவர்களுடைய சுக வாழ்க்கையைப் பற்றியும் பேசும். ஆதலால் இவருடைய பிற்கால வாழ்க்கையில் நடக்கும் நன்மை, தீமை பற்றிக் கூறுவதாகும். 9-ஆம் இடம் முன்னோர்களைப் பற்றியும், குலதெய்வ வழிபாடு, முன்னோர்களின் ஆசிர்வாதம், அரவணைப்பு ஆகியவை பற்றியும் கூறுவதாகும். ஆக இத்தகைய மூன்றுவிதமான அமைப்புகளும் ஒருவருக்கு சாதகமாக இருக்குமானால் அவருக்கு வேறென்ன வேண்டும்? ஆகவே இந்த மூன்று இடங்களைப் பிரதானமாகப் பார்த்துப் பலனுரைத்தார்கள்.

Advertisment

மேலே கூறிய மூன்று இடங்களில் ஒன்றான 5-ஆம் இடம் திம்ப சக்கர ஜாதகத்தில் நாபி என்று அழைக்கப்படுகின்றது. நாபி என்பதை வயிறு என்றும் கூறுவதுண்டு. ஒரு மனிதருடைய உறுப்புகளில் வயிறு முக்கியமானதாகும்.

annadanam

ஏனெனில் வயிறு மூலம்தான் நாம் உண்ணும் உணவு செரிமானமாகி, மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் சக்தியானது சென்று உடம்பை இயங்க வைக்கின்றது. ஆதலால் நாம் எதனைச் சாப்பிடுகிறோமோ அவற்றின் பலன்களை அடைகிறோம்.

ஐந்தாமிடம் புத்திர ஸ்தானம் என்ற காரகத்தையும் கொண்டுள்ளது. ஐந்தாம் இடத்தைக்கொண்டு ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டா, இல்லையா? குழந்தை உடனே பிறக்கும் வாய்ப்புள்ளதா அல்லது தாமதமாகுமா என்பதை அறியலாம். இந்த புத்திர ஸ்தானத்தைக் குறிப்பிடுவதற்கு, ஸ்ரீரங்கநாதர் தனது வலக்கையை தலைக்கு வைத்து, ஆதிசேஷனின் ஏழுதலைகளை குடையாக அமைத்து, பஞ்சபூதங்களின் ஆளுமைகளிலிருந்து பாதுகாக்க அரண் அமைத்து ஒ

ருவருடைய ஜாதகத்தில் ஐந்தாம் இடம் முக்கிய பங்கினை வகிக்கின்றது. ஏனெனில் ஆஸ்தான ஜோதிடர்கள் பழங்காலந்தொட்டே பலன்களைக் கூறுவதற்கு முன்னர் ஜாதகத்திலுள்ள 1, 5, 9-ஆம் இடங்களைப் பார்த்துக் கணக்கிடுவர். ஒருவருக்கு 1, 5, 9-ஆம் இடங்கள் நன்றாக இருக்குமானால் அவருடைய வாழ்க்கை நிம்மதியாக, கடவுளின் கிருபையால் இனிதே நடந்தேறும் என்றுரைப்பர். ஒன்றாம் இடம் இந்தப் பிறவியில் நடக்கும் நிகழ்வுகள், வெற்றி, தோல்வியைப் பற்றிக் கூறும். 5-ஆம் இடம் வாரிசுகளையும் அவர்களுடைய சுக வாழ்க்கையைப் பற்றியும் பேசும். ஆதலால் இவருடைய பிற்கால வாழ்க்கையில் நடக்கும் நன்மை, தீமை பற்றிக் கூறுவதாகும். 9-ஆம் இடம் முன்னோர்களைப் பற்றியும், குலதெய்வ வழிபாடு, முன்னோர்களின் ஆசிர்வாதம், அரவணைப்பு ஆகியவை பற்றியும் கூறுவதாகும். ஆக இத்தகைய மூன்றுவிதமான அமைப்புகளும் ஒருவருக்கு சாதகமாக இருக்குமானால் அவருக்கு வேறென்ன வேண்டும்? ஆகவே இந்த மூன்று இடங்களைப் பிரதானமாகப் பார்த்துப் பலனுரைத்தார்கள்.

Advertisment

மேலே கூறிய மூன்று இடங்களில் ஒன்றான 5-ஆம் இடம் திம்ப சக்கர ஜாதகத்தில் நாபி என்று அழைக்கப்படுகின்றது. நாபி என்பதை வயிறு என்றும் கூறுவதுண்டு. ஒரு மனிதருடைய உறுப்புகளில் வயிறு முக்கியமானதாகும்.

annadanam

ஏனெனில் வயிறு மூலம்தான் நாம் உண்ணும் உணவு செரிமானமாகி, மற்ற அனைத்து உறுப்புகளுக்கும் சக்தியானது சென்று உடம்பை இயங்க வைக்கின்றது. ஆதலால் நாம் எதனைச் சாப்பிடுகிறோமோ அவற்றின் பலன்களை அடைகிறோம்.

ஐந்தாமிடம் புத்திர ஸ்தானம் என்ற காரகத்தையும் கொண்டுள்ளது. ஐந்தாம் இடத்தைக்கொண்டு ஒருவருக்கு குழந்தை பாக்கியம் உண்டா, இல்லையா? குழந்தை உடனே பிறக்கும் வாய்ப்புள்ளதா அல்லது தாமதமாகுமா என்பதை அறியலாம். இந்த புத்திர ஸ்தானத்தைக் குறிப்பிடுவதற்கு, ஸ்ரீரங்கநாதர் தனது வலக்கையை தலைக்கு வைத்து, ஆதிசேஷனின் ஏழுதலைகளை குடையாக அமைத்து, பஞ்சபூதங்களின் ஆளுமைகளிலிருந்து பாதுகாக்க அரண் அமைத்து ஒருக்களித்து, ஆதிசேஷன் உடலின்மீது ஆனந்த சயனத்திலிருக்க, அவரது தொப்புளிலிருந்து வளர்ந்த ஒரு தாமரைப்பூவின்மேல் ஸ்ரீலட்சுமி வீற்றிருக்கும் காட்சியே அற்புதமாகும். வயிற்றிலிருந்து உதிக்கும் கொடியே நாபிக்கொடி. அந்த இடமே தொப்புள் ஸ்தானமாக திம்ப சக்கரத்தில் குறிப்பிடும் பகுதியாகும். திம்ப சக்கர ஜாதகத்தில் முதலில் பார்ப்பது இந்த நாபியைத்தான். ஏனெனில் ஒருவரது வாழ்க்கை அமையும் பாங்கு எப்படி இருக்கும் என்பதை வயிற்றில் அமைந்திருக்கும் கிரகங்கள் பகர்ந்துவிடும்.

நாபியில் சுபகிரகங்கள் அமையப்பெற்று அந்த கிரகத்தின் தசாபுத்திகள் நடக்கும்பொழுது அவர் நல்லதொரு வாழ்க்கையை அனுபவிப்பார். நாடுபோற்றும் மக்கட்பேற்றை அடைவார். அவருடைய குழந்தைகளால் பெருமையடைவதோடு மகிழ்ச்சியுமடைவார்.

வயிறு ஸ்தானத்தில் சூரியன் அமைய வாய்ப்பில்லை. இந்த திம்ப சக்கர ஜாதகம் எப்படி கணிக்கப்படுகின்றது என்பதை வாசகர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். ஒருவரது உடம்பின் நெற்றிப் பகுதியிலிருந்து ஆரம்பித்து முகம், தோள், மார்பு, வயிறு, வலதுபுஜம், இடதுபுஜம், பிறப்புறுப்பு, கைகள், வலதுதொடை, இடதுதொடை, பாதங்கள் என்று 12 பகுதிகளாகப் பிரித்து, 27 நட்சத்திரங்களையும் ஒவ்வொரு உறுப்புக்கேற்றவாறு பிரித்து, எந்த நட்சத்திரத்தில் எந்த கிரகம் அமைந்திருக்கிறதோ அதற்கேற்ப ஒருவரது உடலிலுள்ள மேலே கூறிய உறுப்புகளில் அமைந்த கிரக அமைப்பே திம்ப சக்கர ஜாதகம்.

வயிறு ஸ்தானத்தில் சந்திரன் அமையப்பெற்றவர்கள் வாழ்க்கையில் சிறப்பாக முன்னேறும் தன்மையுடையவர்கள். கற்பனைத் திறன் அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த செயல்திறமைகளைப் பெற்றவர்களாகவும் இருப்பர். அதிகமான பாசத்துடன், மற்றவர்களை மதிக்க- மன்னிக்கத் தெரிந்தவர்கள். எனவே சமுதாயத்தில் உயர்ந்த மதிப்புடன் உலாவருவார்கள். ஐந்தாமிடம் கலை, கல்வியைப்பற்றிக் கூறுவதால், இலக்கியம், இசை, நாடகம், சினிமா, யோகா, மூச்சுப் பயிற்சி போன்ற பலவித கலைகளைக் கற்பவராக விளங்குபவர்கள்.

வயிறு ஸ்தானம் ஒருவருடைய வயிற்றுப் பிழைப்பைப்பற்றிக் கூறுவதால், ஒருவருடைய படிப்பு, அதனால் ஏற்படும் உத்தியோகம், தொழில் போன்றவற்றையும் அறியலாம். மேலும் தொழில்வளம் எப்படியிருக்கும் என்பதை அவருடைய பூர்வபுண்ணிய சம்பந்தம் பெற்ற ஸ்தானமான ஐந்தாமிடம்மூலம் தெளிவாக அறியலாம். எப்படியிருப்பினும் சந்திரன் அமையும் ஸ்தானம் திம்ப சக்கரத்தில் முக்கியமாகப் போற்றப்படுகிறது.

அத்தகைய சந்திரன் வயிற்றில் ஒருவருக்கு அமைந்தால் அவர் மிகவும் சிறப்பாக வாழ்வதற்குத் தகுதியுள்ளவராகிறார்.

வயிற்றில் புதன் இருக்கப்பெற்றவர்கள் கல்வியில் அதீதமாக முன்னேற்றம் அடைவார்கள். அவர்களுடைய படிப்பிற்கு ஒரு எல்லை இருக்காது. அதாவது அவர்கள் தங்களது துறையிலும் சரி; மற்ற பொதுக் கல்வியிலும் சரி- பல புதுமைகளைக் கற்றறியும் நிலை உருவாகும்.

சரஸ்வதி தேவி அவர்களுடன் உரிமை யோடு உறவாடும் நிலை உருவாகும். இவர்கள் வேண்டாம் என்று கூறினாலும், விடாப்பிடியாக அவரது நாவில் உடும்புப்பிடியோடு உறவாடும் அழகே அழகு. கலைகள் மொத்தம் 64 என்று போற்றப்படும் நிலையில், அவருடைய அணுகுமுறையால் மற்றவர்களுக்கு 64 கலைகளிலும் வல்லவர் என்று புகழப்படும் நிலை உருவாகும். எப்பொழுதும் ஒரு புதிய, நவீன முகமலர்ச்சியோடு நடமாடும் நிலையிலிருப்பர். புதனின் ஆளுமையிலிருப்பவர்களுக்கு இதுவே ஒரு வரப்பிரசாதமாகும். அதாவது அவர்களது உடல்வாகு எப்பொழுதும் இளமைப்பருவத்தில் இருப்பது போன்ற தோற்றத்தோடு, தங்களது அறிவாற்றலால் மற்றவர்களை வெகுவிரைவில் கவர்ந்துவிடும் தன்மையுடையவர்கள். மிகவும் "ஈன்ற்ங்' என்றும் போற்றப்படுவார்கள்.

அவர்களுடைய முதுமைப் பருவத்திலும் இளைஞர்கள்போல சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியோடும், இன்முகத்தோடும் காணப்படுவார்கள். இத்தகைய குணங்கள் வயிற்றில் புதன் இருப்பவர்களுக்கே உரித்தானதாகும்.

புதன் கிரகத்தோடு சுபகிரகமாகிய சுக்கிரனும் சேர்ந்து நாபியில் இருக்கப்பெற்றவர்கள், மேலே குறிப்பிட்ட குணங்களுடன், நல்ல ரசனையுடையவர்களாகவும், சிறப்பான நடிகர்களாகவும் இருப்பார்கள். பாஸ்கரா ஜோதிட முறையில் ஐந்தாம் பாவத்தில் புதன் அல்லது சுக்கிரன் 1, 5, 9, 11-ஆம் பாவத்தொடர்புடையவர்கள் இயல், இசை, நாடகம் போன்ற கலைகளில் சிறந்து விளங்குவார்கள். அதேசமயத்தில் புதன் அல்லது சுக்கிரன் 2, 4, 6, 10-ஆம் பாவத் தொடர்பு பெற்றவர்கள் இயல், இசை, நடிப்பு தொழில்கள் மூலம் செல்வ வளமும் புகழும் ஒருங்கே பெற்று முன்னேற்றத்தை அடைவார்கள்.

நாபி ஸ்தானத்தில் குரு இருக்கப்பெற்றவர்கள் தெய்வீக சக்தியைப் பெற்றவர்கள். இவர்கள் உலகம் போற்றும் ஞானத்தை அதிகம் உடையவர்களாக விளங்குவார்கள். அதோடு மற்றவர்களுக்கு அறிவைப் புகட்டுகின்ற உன்னதமான செயல்களில் எப்போதும் ஈடுபாடு கொண்டவர்கள். இவர்களது வயிற்றைக் குளிர்விக்கும் மக்களுக்கு, அவர்கள் சந்ததியினருக்கும் சேர்த்து அருள் கிடைக்கச் செய்வார்கள். எனவே, வயிற்றில் குரு இருப்பவர்களுக்கு அன்னதானம் செய்விப்பது மிகச்சிறந்த பரிகாரமாகும். பெரியவர்கள் "தானத்தில் சிறந்தது அன்னதானம்' என்று கூறுவார்கள்.

ஆதலால்தான் எந்த ஒரு விசேஷத்திலும்- அவை நல்லவையோ கெட்டவையோ அன்னதானத்தைப் பெரியவர்கள் ஏற்படுத்தியுள்ளார்கள். ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்தால், அதில் ஒருவருக்காவது வயிற்றில் குரு அமையப்பெற்றிருக்கும்.

அவர் உணவருந்தி மகிழ்ச்சி கொண்டால், அவரது ஆசிர்வாதம், அன்னதானம் செய்தவர்களுக்கு கிடைக்கப்பெற்று அவர்களது குடும்பம் வாழையடி வாழையாக வாழும்.

நாபியில் அசுப கிரகங்களான சனி, செவ்வாய், ராகு- கேது போன்றவை இருப்பின், அவர்களது வாழ்க்கையில் பொருளாதாரப் பின்னடைவு, கஷ்டங்கள் போன்றவை ஏற்படும். அதில் சனி, செவ்வாய் சுபயோகிகளாக இருந்தால் 50 சதவிகித நற்பலன்களைக் கொடுக்கும். ராகு- கேது தனித்தனியே அமர்ந்துவிடின் வறுமை வாட்டும். இத்தகைய ஜாதகர்கள் கவலைப்பட வேண்டாம்; அதற்குத் தகுந்த பரிகாரங்கள் உண்டு.

மேலே கூறியபடி நாபியில் அசுப கிரகங்கள் இருக்கப் பெற்றவர்கள், "நான் நன்றாகப் படித்தும் வேலை கிடைக்கவில்லை; ஜோதிடத்தைக் கற்றுக்கொண்டாலும் பலன்கள் சரியாகக் கூறமுடியவில்லை; எவ்வளவு வருமானம் வந்தும் கையில் காசு தங்குவதில்லை; எவ்வளவு பணம் வந்தும் வீடு, வாசல் வாங்கமுடியவில்லை; அலுவலகத்தில் எவ்வளவு வேலை செய்தும் உத்தியோக உயர்வு, ஊதிய உயர்வு கிடைப்பதில்லை' என்று புலம்பும் நிலையும், அதனால் அல்லல்படுவோரும் உண்டு. "பையன் நன்றாகப் படித்தும் மதிப்பெண் கிடைக்கவில்லை; பல பட்டப்படிப்புகள் படித்தும் உருப்படியான வேலை கிடைக்கவில்லை; கஷ்டப்பட்டு வேலை செய்தும் தக்க வருமானம் இல்லை. செய்யும் தொழிலில் ஏதாவது மனக்கஷ்டம் வந்துகொண்டேயிருக்கிறது; எப்பொழுதும் கடன் தொல்லை இருந்துகொண்டே இருக்கிறது' என்றால், அவர்கள் வயிற்றில் அமைந்துள்ள கிரகத்தைப் பொருத்து பரிகாரங்கள் செய்துகொள்ளல் நன்று. அன்னபூரணியை ஆராதித்து, அன்னதானம் செய்துவர கஷ்டங்கள் தீர்ந்து சுபிட்சத்தை அடையும் வழி திறக்கும்.

நாபியில் அசுப கிரகங்கள் தனியாகவோ, கூட்டாகவோ அமைந்து அவர்களின் வாழ்க்கையில் வறுமையான சூழ்நிலை அமைந்து மேற்கூறிய துன்பங்களை அனுபவிப்பவர்கள், அருள்மிகு அருட்பிரகாச வள்ளலாரின் உருவப்படத்திற்கு வாரம் ஒருமுறை நெய்விளக்கு மற்றும் தூபதீபம் ஏற்றி வணங்கிவர, துன்பங்கள் சூரியனைக்கண்ட பனிபோல் விலகும். வடலூர் ஜீவசமாதியில் ஜோதிமயமாய்க் காட்சி கொடுக்கும் அந்த மகான், "வாடிய பயிரைக் கண்டபோது மனம் வாடினேன்' என்று கூறியவர். அவருடைய திம்ப சக்கர ஜாதகத்தில் குரு பகவான் இடதுதொடை என்று பகரப்படும் லாபஸ்தானமாகிய 11-ஆம் இடத்தில் உச்சம்பெற்று அமர்ந்து ஐந்தாமிடமாகிய நாபி ஸ்தானத்தைப் பார்ப்பதால், அவருடைய ஜீவபீடத்தில் பல்லாயிரக்கணக்கில் அவரது பக்தர்களுக்கு வயிறு குளிர அன்னதானம் வழங்கப்பட்டு வருவதை வாசகர்கள் நன்கு அறிவர்.

அருள்மிகு வள்ளலாரின் திம்ப சக்கர ஜாதகத்தை வாசகர்கள் வணங்கி அருள் பெறுவீர்களாக.

செல்: 91767 71533

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe