ஸ்ரீராமபிரான் அவதார நோக்கம் நிறைவேறத் துணைநின்றவர்களில் மிகமுக்கியப் பங்கு வகித்தவர் ஸ்ரீஆஞ்சனேய ஸ்வாமி. என்றைக்கும் சிரஞ்சீவியாக வாழும் மாண்பினை சீதாப்பிராட்டியிடம் வரமாகப் பெற்றவர். இவர் நினைத்தபொழுதே விஸ்வரூபம் என்னும் மகா உருவமெடுக்கும் சக்தி படைத்தவர். எப்போதும் ஸ்ரீராமனையே தியானித்துக் கொண்டிருப்பதுடன், ஸ்ரீராமாயண காவியம் உபன்யாசம் செய்யப்படும் இடங் களில் தானும் ஒரு பக்தராக வந்திருந்து இன்றைக்கும் ரசிக்கிறார் என்றும் உறுதியாக நம்பப்படுகிறது.
தன்னை நம்பிக்கையுடன் மனதாரத் துதித்து வணங்குபவர்களுக்கு அஷ்டமகாசக்திகளை அள்ளித் தருவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை. வாழ்க் கைக்கு உதவிடும் சக்திகள் பின்வருமாறு:
1. நல்ல அறிவுத்திறன், புத்திக் கூர்மை.
2. உடல் வலிமை.
3. நல்ல பெயர், புகழ்.
4. தைரியம், எதற்கும் அஞ்சாத தன்மை.
5. எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்புரிதல்.
6. நோயற்ற வாழ்வு.
7. பேச்சுத்திறமை, வாக்கு வண்மை.
8. சுயநலம் துளியுமின்றி, பிறருக்குத் தொண்டுபுரிதல்.
இப்படிப்பட்ட மகத்துவங் களைக்கொண்ட ஆஞ்சனேயர் ஜனனக் குறிப்புகளாக சாஸ்திர நூல்களில் கூறப்படுபவை:
ஜனன மாதம்- மார்கழி.
ஜென்ம நட்சத்திரம்- மூலம்.
ஜென்ம ராசி- தனுசு.
ஜென்ம லக்னம்- மேஷம்.
ஆஞ்சனேய ஸ்வாமி ஜாதக மகிமைகள்
பஞ்சமகா புருஷ யோகங்களில் மூன்று மகாயோகங்கள் அமைந் துள்ளன.
லக்னக் கேந்திரத்தில் செவ் வாய் ஆட்சிபெற்றதால் ருசக மகாயோகம். கேந்திரமாகிய ஏழாம் வீட்டில் சுக்கிரன் ஆட்சி பெற்றதால் மாளவ்ய மகா புருஷ யோகம். கேந்திரமாகிய பத்தாம் வீட்டில் சனி கிரகம் ஆட்சி பெற்று சசமகா புருஷ யோகம்.
லக்னத்தில் செவ்வாய் (மேஷம்) ஆட்சிபெற்றதால், எந்த ஒரு காரி யத்தையும் விரைவாக, தைரியமாக முடிக்கும் ஆற்றல், மகாசக்தி.
திரிகோண ஸ்தானங்கள் என அழைக்கப்படும் ஐந்தாம் வீட்டு அதிபதி (பூர்வபுண்ணியம்) சூரியனும், ஒன்பதாம் வீட்டு அதிபதி குருவும் (பாக்கிய ஸ்தானம்) இடம்மாறி அமர்வது பரிவர்த்தனை யோகத்தினைத் தருகின்றன. சூரிய பகவானிடம் கல்வி கற்றார் என்பது புலனாகிறது. (சூரியனுக்கு குரு பார்வை).
கேந்திரமாகிய பத்தாமிடத்தில் ஆட்சி பெற்றிருக்கும் சனி, பன்னிரண்டாம் வீட்டில் அமையும் மோட்ச காரகன் எனப்படும் கேது வுடன் மூன்றாம் பார்வையாகத் தொடர்பு பெறுவது, தவ வலிமைமிக்கவர் என்பதைக் குறிக்கிறது. சனி பகவான் பாதிப்புகளிலிருந்து பக்தர்களை மீட்பவர்- அருள்பாலிப்பவர் என்பதும் புரிகிறது.
மேஷ லக்னத்திற்கு பாதகாதிபதியாக விளங்கும் சனி ஏழாம் வீட்டு (களஸ்திர ஸ்தானம்) அதிபதி சுக்கிரனுடன் பத்தாம் பார்வைத் தொடர்பு பெற்றுள்ளதால், பிரம் மச்சரிய தவவலிமை வாழ்வை மேற்கொண்டார் என்பது தெளிவாகிறது.
இப்படிப்பட்ட அற்புத சக்திகள் கொண்ட ஆஞ்சனேய ஸ்வாமி மந்திரம்:
"புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்பயத்வம்
அரோகதா அஜாட்யம் வாக்படுத்வம் சஹனுமத்
ஸ்மரணாத் பவேத்!'
இந்த அற்புத சுலோகத்தை தினமும் மூன்றுமுறையாவது உச்சரித்துவர அற்புதப் பலன் கிட்டும்.
எந்திரம்
இத்துடன் ஆஞ்சனேய சுவாமியின் ஜாதகத் தினை பக்தர்கள் எந்திரமாகவும் பயன்படுத் திக்கொள்ளலாம். ஜாதகத்தினை தூய செம்பு அல்லது வெள்ளியில் வரைந்துகொள்ளலாம். பின்னர் கண்ணாடி பிரேம் போட்டு பூஜையறையில் வைத்து தினமும் வழிபட்டு வரலாம்.
மேற்கூறிய மந்திரம் மற்றும் எந்திரத்தினை முறையாக தூயபக்தியுடன் பூஜித்துவந்தால் வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சக்திகளையும் ஆஞ்சனேய ஸ்வாமி தொடர்ந்து அருள்வார் என்பது நிச்சயம்.
செல்: 74485 89113