காஞ்சி அத்திவரதர் தரிசனம் நிறைவடைந்தது. சுமார் ஒரு கோடி பக்தர்கள் அத்திவரதரை வணங்கி ஆனந்தமடைந்தனர் என்றாலும், அவரை நேரில் தரிசிக்கமுடியாத பக்தர்களுக்கு நமக்கு அந்த பாக்கியம் கிடைக்க வில்லையே என்ற ஏக்கம் ஏற்படுவது இயற் கையே! இன்னும் 40 ஆண்டுகள் ஆகுமே அத்தி வரதரை தரிசிக்க- அதுவரை ஆண்டவன் நமக்கு ஆயுளைக் கொடுப்பாரா என்ற கவலையை விடுங்கள்; அத்தி மரத்தினாலான வரதர் காஞ்சிபுரத்தில் மட்டுமல்ல; தமிழ கத்தின் பிறபகுதியிலும் உள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/athivaradhargod.jpg)
அத்திமரம் மகிமைவாய்ந்த ஒன்று. அது சுக்கிரனின் அம்சமாகும். அசுர குரு சுக்கிராச் சாரியார் அத்தி மரமாக பிறவியெடுத்தாக சதூர்மாசிய மகாத்மியத்தில் கூறப்பட்டுள்ளது. அத்திமரம் சுக்கிரனின் அம்சம் என்பதால்தான் காஞ்சி அத்தி வரதர் ஒரு மண்டலத்திலேயே 50 கோடிக் கும்மேல் சம்பாதித்துவிட்டார். அத்தி மரத் தினாலான தெய்வங்களை பெண்கள் வழிபடு வதால் விரைவில் திருமணம் நடக்கும். களத்திர தோஷம், சுக்கிர தோஷம் நீங்கும். சுபகாரி யங்கள் கைகூடும்.
அத்தி மரத்திற்கு நல்ல அதிர்வலைகள் உண்டு. அந்தக் காலத்தில் தியானம் செய்யும் சித்தர்கள், தவயோகிகள் அனைவரும் அத்தி மரத்திலான பலகைகளில் அமர்ந்து மந்திரங் களை உச்சரித்துவந்தனர். புவியீர்ப்பு விசை நம்மைத் தாக்காமலிலிருப்பதற்கு அத்திமரப் பலகை உதவுகிறது. மேலும் எந்த மந்திரங்கள் உச்சரிக்கப்படுகின்றதோ அந்த மந்திரத்தினுடைய முழுப் பலனும் கிடைக்கிறது.
கணவன்- மனைவி இருவரும் ஒருவருக் கொருவர் கருத்து வேறுபாடு இல்லாமல் கடைசிவரை பிரியாதிருக்க வீட்டில் அத்திமரம் வளர்த்துப் பராமரித்துவந்தால் நன்மை கிட்டு மென்பது ஐதீகம். மும்மூர்த்திகளின் அம்சமாகத் திகழும் தத்தாத்ரேயர் அத்திமரத்தில் வாசம் செய்வதாகப் புராணங்கள் கூறுகின்றன.
இனி, அத்தி மரத்தினாலான சில தெய் வங்கள் பற்றிக் காண்போம்!
கோழிகுத்தி வானமுட்டிப் பெருமாள்
தஞ்சை- மயிலாடுதுறையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ளது கோழிகுத்தி. இங்கு எழுந்தருளியுள்ள பெருமாள் வானமுட்டிப் பெருமாள் என்று அழைக்கப்படு கிறார். 15 அடி உயரமும், கரங்களில் சங்கு, சக்கரம், கதை, அபய ஹஸ்தம் ஏந்தி, மார்பில் மகாலட்சுமியைத் தாங்கி பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். விஸ்வரூபமாகக் காட்சிதருவ தால் வானமுட்டிப் பெருமாள் என அழைக்கப் படுகிறார்.
புதன் கிரகத்தின் பாதிப்பிற்குள்ளானவர்கள் இந்த தலத்திற்கு வந்து திருக்குளத்தில் நீராடி பெருமாளை சேவித்தால் சரும நோய்கள் விலகுகின்றன. மேலும் கர்மவினைகள் படிப்படியாகக் குறைகின்றன என ஜோதிட சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. இதுமட்டுமின்றி சுகாதிபதி சுக்கிரன், கர்மக்காரகன் சனி ஆகியோரால் பீடிக்கப்பட்டிருந்தால் இந்த கோவில் குளத்தில் நீராடி தரிசித்துவர நற்பலன்கள் கிட்டும். இந்த கோவில் பாவ விமோசனபுரம் என்றும் அழைக்கப்படுகிறது.
புதுவை செங்கோணியம்மன்
புதுச்சேரிக்கு அருகில் உள்ளது வீராம் பட்டினம் எனும் மீனவ கிராமம். கடலில் மிதந்துவந்த அத்திமரத்தினை செங்கோணி யம்மன் சிலையாக வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் ஆடிமாத வெள்ளிக்கிழமைகளில் செங்கோணியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிலிக்கிறார்.
இந்த திருவிழா பிரஞ்சுக்காலத்திலிலிருந்து புகழ்பெற்றது. சுக்கிரன், சந்திரன் தோஷம் உள்ளவர்கள் செங்கோணியம்மனை தரிசித்து வந்தால் கைமேல் பலன் கிட்டும்.
நவகிரகக் கோட்டை
வேலூர் அருகிலுள்ள பொன்னை விநாயகபுரத்தில் நவகிரகங்களுக்கு ஒன்பது வகை கோவில்கள் எழுப்பப்பட்டுள்ளன. இது நவகிரகக் கோட்டை ஆலயம் என்ற ழைக்கப்படுகிறது. இந்தக் கோவிலில் சுக்கிரனை வணங்குவதற்காக அத்திமரம் நடப் பட்டுள்ளது. இந்த அத்தி மரத்தை பக்தர்கள் வணங்கிவருவதால் தரித்திரம் நீங்கி செல்வச் செழிப்பு ஏற்படுகிறது.
மேலும் திருப்பதி திருமலையில் தலத்தீர்த்த மாகிய குளத்தில் அத்திமரத்தினாலான அத்திவரதர் எழுந்தருளியுள்ளார்.
கேரள உடுப்பி கிருஷ்ணன் சிலை அத்தி மரத்தினாலானது. தினமும் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வருகைதந்து இந்த கிருஷ்ணரை தரிசித்து சென்றவண்ணம் உள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம், படவேடு ரேணுகாம்பாள் அம்மன் முழு உருவச்சிலை அத்தி மரத்தினாலானது.
நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள் இரண்ய கசிபுவை வதம் செய்தபிறகு அத்திமரப் பட்டையில் தம்முடைய நகங்களை சுத்தப் படுத்திக் கொண்டார் என்கிறது புராணம்.
மேற்கண்ட அத்திமரத்தில் வடிவமைக்கப் பட்ட தெய்வங்களை வணங்கிவருவதன்மூலம் சுக்கிரனின் அருள் நமக்குக் கிட்டுவதாக ஐதீகம். மேலும் கிரக தோஷங்களைப் போக்கி ஐஸ்வர்யங்களுடன் வாழ வழிசெய்கிறது. நீண்டநாள் திருமணமாகாமல் இருக்கும் சுக்கிர தோஷமுள்ள பெண்கள் வழிபட்டால் திருமணம் விரைவில் கைகூடும். சுகாதிபதி சுக்கிரனின் அருள்கிட்ட அத்திரமர தெய்வங் களை வழிபட்டு ஆனந்தமுடன் வாழ்வோம்.
செல்: 98944 94915
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-08/athivaradhargod-t.jpg)