பஞ்சாங்கம் என்ற ஆழ்கடலிருந்து நாம் எடுக்கும் முத்துதான் அமிர்த கடிகை அல்லது அமிர்த நாழிகை அல்லது அமிர்த மணி என்று சொல்லவேண்டும். வியாதிக்கு மருந்துண்ணும் நேரம் என்று குறிப்பிடப் படும் அதுபற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதய மாகிறது. ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ நடப்பில் இருக்கிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு
பஞ்சாங்கம் என்ற ஆழ்கடலிருந்து நாம் எடுக்கும் முத்துதான் அமிர்த கடிகை அல்லது அமிர்த நாழிகை அல்லது அமிர்த மணி என்று சொல்லவேண்டும். வியாதிக்கு மருந்துண்ணும் நேரம் என்று குறிப்பிடப் படும் அதுபற்றி சற்று விளக்கமாகப் பார்ப்போம்.
மொத்தம் 27 நட்சத்திரங்கள். நாள் ஒன்றுக்கு ஒரு நட்சத்திரம் வீதம் உதய மாகிறது. ஒரு நட்சத்திரம் நாள் ஒன்றுக்கு தோராயமாக 60 நாழிகைக்குக் கூடுதலாகவோ, குறைவாகவோ நடப்பில் இருக்கிறது. ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள். ஒரு நாளின் தொடக்கம் சூரிய உதயத்திலிருந்து தொடங்குகிறது. அந்தவகையில் அமிர்த நாழிகையைக் கணக்கிட அன்றைய சூரிய உதயம் என்னவென்று அறிந்திருக்கவேண்டும். அதிலிருந்து அமிர்த நாழிகை தொடங்கும் நேரத்தை மணிக்கணக்காக மாற்றி அதைப் பின்பற்ற வேண்டும். அவ்வாறு சரியான அமிர்த நாழிகை யில் நோய்க்கான மருந்தை உண்பதால் நோயிலிருந்து பூரண குணமடைய முடியும் என்பது கவி காளிதாசர் எழுதிய "உத்தர காலாமிருதம்' என்ற நூலில் சொல்லப் பட்டிருக்கும் சூட்சுமம்.
மருந்துண்ணும் நேரம் நான்கு நாழிகைக்குக் குறைவில்லாமல் இருக்க வேண்டும். எனவே அமிர்த நாழிகை தொடக்கம்முதல் முடிவுவரை ஒன்றரை மணி நேரம் இருக்கிறது. சூரிய உதயத்தை ஒதுக்கி விட்டால்கூட அதன் மத்திம நேரத்தில் மருந்துண்ணலாம் என்பதை நினைவில் கொள்ளவும். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் கணக் கில் கொள்ளவேண்டும். அவசரகால மருத்துவத் திற்கு அமிர்த நாழிகை பொருந்தாது. உதாரண மாக, ஒருவரைப் பாம்பு தீண்டிவிட்டால் அதற்கு மருத்துவம் செய்ய அமிர்த நாழிகைக் காகக் காத்திருக்க முடியாது. அதேபோல இன்றைய நவீன மருத்துவத்தில் காலை, மதியம், மாலை, இரவு என்று மருந்து உட்கொள்ளும் பழக்கம் இருக்கிறது. இதில் எந்த நேரத்தில் அமிர்த நாழிகை வருகிறதோ அந்த நேரத்தில் மருந்துண்டால் பூரண குணம் உண்டாகும்.
எந்த காலநேரத்தில் மருந்துண்டால் நோய் கள் பூரண குணமடை யும் என்பதை நமது சித்தர் பெருமக்கள் கண்டுள்ளனர். அந்த அமிர்த நாழிகையை சித்தர் பெருமக்கள் 27 நட்சத்திரங்களுக்கும் கொடுத்துள்ளார்கள். அதை அட்டவணையில் மணி, நிமிடங்களில் கொடுத்துள்ளோம்.
அதில் குறிப்பிட்ட நேரங்களில் மருந்துண்ண நோய் பூரண குணமாகும். 16 பேறுகளில் ஆரோக்கியமும் ஒன்று.
பரிகாரம்
திருக்கடையூர் அபிராமியை வணங்கிவர வேண்டும். பிணியில்லாத உடலைத் தரவல்லவர் தன்வந்திரி பகவான். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்திற்கு மகாலட்சுமி, வீரத்திற்கு பார்வதி என்று சொல்வதுபோல் மருத்துவத்திற்கு தன்வந்திரி கடவுள்.
அபிராமியைத் திருக்கடையூர் சென்று வணங்க முடியாதவர்கள் தன்வந்திரி பகவானை வீட்டிலேயே நினைத்து வணங்கிவர, நோய்கள் பூரண குணமடையும்.
செல்: 94871 68174