ள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளது. திமுக அதிக இடங்களை பிடித்துள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்... அதிமுக எதிர்பார்த்த இடங்களை பிடிக்கவில்லை என்பதையும் எப்படி பார்க்கிறீர்கள்...

விஜய் ரசிகர்கள் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதை அனைத்து யூடியூப் சேனர்கள், சில ஊடங்கள் பெரியதாக பேசுவதை எப்படி பார்க்கிறீர்கள்...

கமலின் மக்கள் நீதி மய்யம், சீமானின் நாம் தமிழர் கட்சியை விட விஜய் ரசிகர்கள் அதிக வெற்றிபெற்றுள்ளதாக வைரலாகிறது...

ரசிகர்கள் இத்தனை இடத்தில் வெற்றி பெற்றுள்ளதை விஜய்யே எதிர்பார்த்திருக்கவில்லை.

Advertisment

cc

விஜய்யோட எதிர்கால அரசியலின் ஆரம்ப சுழியாக பார்ப்பதாக சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். விஜய் ஒரு சோதனை செய்து பார்த்திருக்கிறார் என்கிறார்கள்...

இந்த தேர்தலில் விஜய் யாருக்கும் நேரடியாக ஆதரவு தெரிவிக்கவில்லை. போட்டியிட உள்ளவர்களுக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. விஜய்யின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக யாரும் நிற்கவில்லை... உள்ளுர் செல்வாக்கு காரணமாக வெற்றி பெற்றார்கள் என்கிறார்கள்... உள்ளாட்சி என்றாலே அப்படித்தானே... வெற்றி பெற்ற பின்னர் அவர் எங்கள் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்தவர். எங்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர் என்கிறார்கள் என்ற விமசனம் எழுகிறதே..

Advertisment

தேர்தலுக்கு முன்பு எங்கள் இயக்கத்தைச் சேர்ந்த, எங்கள் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த இத்தனைப் பேர் இந்தெந்த இடத்தில் போட்டியிடுகிறார்கள் என்று பட்டியலோ, அறிக்கையோ அறிவிக்கப்பட்டதா? அப்படி அறிவிக்கப்படாதபோது இதை எப்படி எடுத்துக்கொள்வது... வெற்றி பெற்றவுடன் நீ மன்றத்திற்கு வா... இவர் எங்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வது சரியா... என சிலர் கேள்வி எழுப்புகிறார்களே...

விஜய் கையெழுத்திட்டு, சின்னம் அல்லது அறிக்கை வெளியிட்டு பிரச்சாரம் செய்து இந்த வேட்பாளரை தேர்வு செய்யுங்கள் என்று பிரச்சாரம் செய்தால்தான் அது வெற்றியாக இருக்க முடியும்.

விஜய்யின் வெற்றி 2026 எதிரொலிக்குமா?