Advertisment

நான் சினிமா ஸ்டார் ஆவேனா?

/idhalgal/balajothidam/am-i-cine-star

பரந்தாமன் பற்பல தொழில்துறைகளைப் படைத்தபோதும், மனத்திற்குப் பிடித்த தொழில்கள் சிலவேதான் மானிடருக்கு. சினிமா ஆசை, சீரியல் வில்லி ஆசைகள் எவருக்கெல்லாம் நிறைவேறும் என்பதனை விளக்கவே, குருவருளால் இங்கு சில ஜோதிட வரிகள்.

கடந்த பத்து ஆண்டுகளாகவே வெள்ளித்திரை, சின்னத்திரைக் கனவுகளில் உலவும் பேராசைப் பெருநெஞ்சங்கள் அனேகம்.

எதிலும் அதிகம், உள்ளதை மறைத்தல், பிரம்மாண்டம், நயவஞ்சகம் போன்றவற்றுக்கு காரக கிரகம் ராகு பகவான்தான். மகரம், கன்னி, கடகம், ரிஷபம், மேஷ ராசிகளில் அமர்ந்த ராகு, கலைகளில் ஏதாவது வழிகளில் பிரகாசிக்கச் செய்யக்கூடியவரே. தொலைக்காட்சி, சினிமா ஸ்டுடியோக்களில் சாதாரண டச்அப் சிப்பந்தி முதல் டைரக்டர் வரை ராகுவின் அருளாசியைப் பெற்றவர்களே!

murugan

திரைப்படக

திரைப்படக்கல்லூரியில் கிராஃபிக்ஸ் மற்றும் சவுண்டு மிக்ஸிங் படித்தவருக்கும், ஜோதிடப்படி மனோசக்தி கற்பனைவளக் காரகன் சந்திரனும் அழகு, எழில், நாட்டியத்திறமைகளின் காரகன் சுக்கிரனும் ராகுவுடன் தொடர்புபெற்று, மகரம், கன்னி, கடகம், ரிஷபம் ஆகிய வீடுகளும் சம்பந்தமானால் ராகு தசையில் பிரபலமான சினிமா ஸ்டார், சிரிப்பு நடிகர், சீரியல் வில்லிகளாக பிரகாசிக்கச் செய்கிறார். குறுக்குவழிகளில் பல அடுக்கு மாளிகை, படகுக் கார் அளிப்பதில் வல்லவர் இந்த ராகுதான்!

புகழ்பெற்ற நடிகை, நடிகர்கள் மற்றும் டெக்னீஷியன்களுக்குக்கூட, இந்த சர்வசக்தி ராகு தனது தசையில் குரு புக்தி, சனி புக்தி, புதன் புக்தி, சுக்கிர புக்திக்காலங்களில் நல்ல வாய்ப்பு, பல கோடி வருமானம், மேடை முன்னிலை தந்தபோதும், பலரை ராகு தசையின் செவ்வாய் புக்தி, சந்திர புக்தி, சூரிய புக்திக்காலங்களில் பல மனக்கஷ்டம், பணக்கஷ்டங்களுக்கு ஆளாக்கிவிடுவார். கோடிகளில் புழங்கியவர்கள் தெருக்கோடி நாயகர்களான கதை கோடம்பாக்கத்தில் ஏராளம். ஜாதகத்தில் செவ்வாய், சந்திரன், சூரியன் நீசம் பெற்றவர்கள் (பலமிழந்தவர்கள்) ராகு தசையில் சம்பாதித்து சேர்த்த சொத்து சுகங்களை (குடும்ப உறுப்பினர் பெயர்களில் மாற்றி) பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும். எதிலும் உஷார் நிலை வேண்டும். யாருக்காகவும் பொறுப்பேற்றுக்கொள்வதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது.

ராகு மேற்குறிப்பிட்ட ராசிகளில் சுபத்துவம் பெற்று நின்றால் இயல், இசை, நாடகம், நாட்டிய வகையில் அந்தஸ்து, புகழ், கௌரவம் தந்து சினிமா ஸ்டார், டிவி நடிகைக்கு இணையாக வாழவைப்பார். 10-ல் ராகு மற்றும் 10-ஆம் அதிபதிக்கு ராகுவின் தொடர்பிருந்தால், சினிமாத்துறையில் வாகனத்தொழில் (கேரவன் ட்ரைவர்), புரடக்ஷன் யூனிட் வாகன ஓட்டுநர்களுக்கு சிறப்பாக சம்பாத்தியம் தரும்.

சுப ராசிகளில், சுபகிரகங்களால் பார்க்கப்பட்ட ராகு வெளிநாட்டுக் கலை, சினிமாத்துறைகளில்- குறிப்பாக கடல் சூழ்ந்த நாடுகளில் நல்ல வேலை, நல்ல சம்பளத்தில் அமர்த்துவார். உருது, தெலுங்கு போன்ற பிறமொழி பேசும் தொழில் கூட்டாளிகளால் அபரிமிதமான பணம், புகழ், அந்தஸ்தை ராகுவின் தசையில் அடைந்தவர் பலருண்டு.

ராகு தசை நடக்கும்போது சுக்கிரனையும் நான்காம் அதிபதியையும் குரு பார்க்கும் கோட்சாரங்களில், வியக்கும் வீடும், பார்ப்போர் புகழும் வாகனமும் நடிகையர் பலருக்கும் அமைந்திருக்கிறது.

திரையுலக நடிகை அசினுக்கு துலா லக்ன சுக்கிரனை கும்ப குரு பார்த்து, ராகு தசையும் நடக்கையில்தான் பேரும் புகழும் அடைந்தார்.

சிரிப்பு நடிகர் விவேக் மீன ராசி, மிதுன லக்னமாகி, கடகத்தில் நின்ற ராகு தசை நடக்கும்போது புகழின் உச்சிக்குச் சென்றார் என்பது சினிமாத்துறை ரகசியம்.

முடிவுரையாக, ஒருவரின் ராஜயோக ஜாதகப்படி லக்னத்திற்கு 2, 9, 11-ஆம் அதிபதி கிரகம் ஏதேனும் சந்திரனுக்கு கேந்திரங்களில் இருந்தாலும், தன காரகன் குரு, லக்னத்திற்கு 5, 9-ஆம் ஆதிபத்தியம் பெற்றவரும் கலைத்துறைகளில் ராகுவின் தசையில் மிக உன்னத- உயர்வான நிலைகளில் புகழ்பெற முடிகிறது. கொடுப்பினை என்பது குலதெய்வ அருள்தான். வாசக நெஞ்சங்கள் திரைவானில் மிளிர வாழ்த்துகள் பல!

செல்: 94431 33565

Advertisment
Murugan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe