Advertisment

பாலமுருகன் பதில்கள் 16.08.2024

/idhalgal/balajothidam/almanac-spiritual-notes-18082024

எனக்கு மூன்று பிள்ளைகள். தற்போது எனக்கு ராகு தசை நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் என் பிள்ளைகளின் படிப்பு, தொழில், திருமணம் ஆகியவற்றை சிறப் பாக செய்து முடிப்பேனா என்று கூறுங்கள்? -சக்திவேல், சென்னை.

Advertisment

பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கின்றபொழுதே இரண்டு கிரகங்கள் நீசம் பெற்று இரண்டு கிரகங்கள் வக்ரகதி யில் இருக்கும்பொழுது பிறந்து உள்ளீர்கள். இதன்காரணமாக வாழ்வில் எதிர்நீச்சல் போடவேண்டிய சூழ்நிலை இருக்கும். தற்போது ராகு தசையில் தனது புக்தி முடிந்து குரு புக்தி நடப்பதால் இனி வாழ்வில் படிப்படியான முன்னேற்றங்கள் இருக்கும். ராகு- செவ்வாய் வீட்டில் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருந்தால் கடந்த காலங்களைவிட வரும் நாட்களில் நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை நல்ல பலனை தரும். ராகு தசை நடப்பதால் அம்மன

எனக்கு மூன்று பிள்ளைகள். தற்போது எனக்கு ராகு தசை நடந்து கொண்டிருக்கிறது. அடுத்த பத்து ஆண்டுகளில் என் பிள்ளைகளின் படிப்பு, தொழில், திருமணம் ஆகியவற்றை சிறப் பாக செய்து முடிப்பேனா என்று கூறுங்கள்? -சக்திவேல், சென்னை.

Advertisment

பதில்: மூல நட்சத்திரம், தனுசு ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு பிறக்கின்றபொழுதே இரண்டு கிரகங்கள் நீசம் பெற்று இரண்டு கிரகங்கள் வக்ரகதி யில் இருக்கும்பொழுது பிறந்து உள்ளீர்கள். இதன்காரணமாக வாழ்வில் எதிர்நீச்சல் போடவேண்டிய சூழ்நிலை இருக்கும். தற்போது ராகு தசையில் தனது புக்தி முடிந்து குரு புக்தி நடப்பதால் இனி வாழ்வில் படிப்படியான முன்னேற்றங்கள் இருக்கும். ராகு- செவ்வாய் வீட்டில் இருப்பதால் உணர்ச்சிவசப்படாமல் நிதானத்தோடு இருந்தால் கடந்த காலங்களைவிட வரும் நாட்களில் நல்ல முன்னேற்றத்தை அடையக் கூடிய வாய்ப்புகள் உண்டு. குறிப்பாக மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ராகு தசை நல்ல பலனை தரும். ராகு தசை நடப்பதால் அம்மன் வழிபாடு, துர்க்கை வழிபாடு மேற்கொள்வது நல்லது. பிள்ளைகளின் படிப்பு எதிர் காலத்தை பொருத்தவரை அவர் களுடைய ஜாதகத்தை பொறுத்துதான் அமையும். உங்கள் ஜாதகத்தில் குரு வக்ரகதியில், ராகு சாரம் பெற்றிருப்பதால் பிள்ளைகள்வழியில் ஏதாவது ஒரு மன கவலைகள் இருந்துகொண்டுதான் இருக்கும். இறைவழிபாடு நற்பலனைத் தரும்.

Advertisment

ss

(ஆண்) என் பிள்ளைகள் எப்போது என்கிட்ட வருவாங்க? எனக்கு இரண்டாவது திருமணம் எப்போது நடைபெறும் என்று கூறுங்கள்?

பதில்: அனுஷ நட்சத்திரம், விருச்சிக ராசி, கடக லக்னத்தில் பிறந்த உங்களுக்கு தற்போது சுக்கிர தசையில் சந்திர புக்தி 18-6-2025 முடிய நடக்கிறது. உங்கள் ஜாதகத்தில் 7-ஆம் அதிபதி சனி வக்ரகதியில் இருப்பதாலும் கடந்த காலங்களில் கேது தசை நடைபெற்றதாலும் வாழ்வில் சில இடையூறுகளை சந்தித்து உள்ளீர்கள். தற்போது சுக்கிர தசை நடப்பதால் மறுமணத்திற்கான முயற்சி களை மேற்கொண்டால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத்தில் குழந்தை பாக்கியத்தை குறிக்கக் கூடிய கிரக மான குரு உச்சம் பெற்று சூரியன் சேர்க்கை பெற்றிருப்ப தால் பிள்ளை கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கக்கூடிய நிலை கண்டிப் பாக ஏற்படும். கவலைப்படவேண்டாம். தற்போது நடக்கக்கூடிய சந்திர புக்தியைவிட அடுத்து வரக்கூடிய செவ்வாய் புக்தி வாழ்வில் சில நல்ல மாற்றத்தை உண்டாக்கும்.

எனக்கு 37 வயதாகியும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. தொழிலும் மந்தமாக உள்ளது. திருமணம் எப்போது நடைபெறும்? சனி தசையில் சொந்தத் தொழில் செய்யலாமா அல்லது வேலை செய்யலாமா என்று கூறுங்கள்?

பதில்: மிருகசீரிஷ நட்சத்திரம், மிதுன ராசி, கன்னி லக்னத்தில் பிறந்த உங்களுக்கு லக்னத்திற்கு 7-ஆம் அதிபதி குருவும், களத்திரகாரகன் சுக்கிரனும் வக்ரகதியில் இருப்பதால் திருமணம் அமைய இடையூறுகள் ஏற்படுகிறது. 7-ல் ராகு இருப்பதாலும், குரு- ராகு சாரம் பெற்று இருப்பதாலும் சொந்தத்தில் பெண் பார்ப்பதைவிட அன்னியத்தில் அல்லது வேற்று ஜாதிப் பெண்ணை திருமணத்திற்காக முயற்சித்தால் நல்லது நடக்க வாய்ப்பு உண்டு. தற்போது உங்களுக்கு சனி தசையில் சனி புக்தி 1-8-2025 முடிய நடக்கிறது. சனி பரிவர்த்தனை பெற்றிருப்ப தா லும், 10-ஆம் அதிபதி புதன் 2-ல் இருப்பதா லும் சுய புக்திக்கு பிறகு தொழில் ரீதி யாக ஒரு நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். 10-ஆம் அதிபதி புதன் என்ற காரணத்தால் அதிக முதலீடுகள் இல்லாமல் செய்யக்கூடிய தொழில் செய்தால் அனுகூல பலன்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. உங்கள் ஜாதகத்தில் குரு வக்ரகதியில் இருப்பதால் தொழில் நிமித்த மாக கொடுக்கல்- வாங்கல் விஷயத்தில் மிகவும் கவனத்தோடு இருக்க வேண்டும்.

இந்த பெண் ஜாதகத்தில் மாங்கல்ய ஸ்தானம் என்று சொல்லக்கூடிய 8-ல் செவ்வாய் இருப்பது மாங்கல்ய தோஷமா என்று கூறுங்கள்? -அருணகிரி.

பதில்: சுவாதி நட்சத்திரம், துலா ராசி, ரிஷப லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 8-ல் செவ்வாய் இருப்பது செவ்வாய் தோஷம் எனக் கூறலாமே தவிர அது மாங்கல்ய தோஷம் கிடையாது. 8-ல் செவ்வாய் இருந்தால் வரன் பார்க்கின்றபொழுது வரும் வரன் ஜாதகத்திலும் 2, 4, 7, 8, 12-ல் செவ்வாய் இருந்தால் நல்லது. இந்தப் பெண்ணின் ஜாதகத்தில் 8-ஆம் அதிபதி குரு நீசமாகி இருப்பது மாங்கல்ய தோஷம் ஆகும். குரு நீசம் பெற்றாலும் அம்சத்தில் உச்சம்பெற்றிருப்பதாலும், குரு- சனி பரிவர்த்தனை பெற்றிருப்பதாலும் திருமணத்துக்கு பிறகு ஒருசில சின்ன சின்ன இடையூறுகள் அதன்பிறகு வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.

எனக்கு தபால் பணியாளர் பணி கிடைக்குமா? -பிரியா, நெய்வேலி.

பதில்: மக நட்சத்திரம், சிம்ம ராசி, சிம்ம லக்னத்தில் பிறந்த உங்களுக்கு 10-ஆம் அதிபதி சுக்கிரன் லக்ன கேந்திரம் பெற்று புதன்- சந்திரன் சேர்க்கைப் பெற்றிருப்பதும், புதன்- சூரியன் பரிவர்த்தனை பெற்றிருப்பதும் அற்புதமான அமைப்பாகும். புதன்- சூரியன் பரிவர்த்தனை பெற்றிருப்பதால் முதலில் ஒரு தற்காலிக பணியில் பணிபுரிந்து அதன்பிறகு ஒரு அரசு சார்ந்த துறையில், அரசு உதவி பெறக் கூடிய இடங்களில் நிரந்தர பணியில் அமரக்கூடிய வாய்ப்புகள் உண்டு. மனம் தளராமல் முயற்சி செய்யவும். உங்கள் எண்ணங்கள் நிறைவேற வாய்ப்புகள் உண்டு.

bala160824
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe