Advertisment

உள்ளங்கையில் இருக்கும் ஐஸ்வர்ய ரகசியம்! -கே. குமார சிவாச்சாரியார்

/idhalgal/balajothidam/aishwaryas-secret-k-kumara-sivacharya

ந்த உலகில் கொட்டிக்கிடக்கும் ஐஸ்வர்யங் களை அடைய, நமது விதியை அறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து முன்னேறும் சாமுத்ரிகா தந்திர ரகசியத்தை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்.

Advertisment

"பிரஹ்லாத சாமுத்ரிகா' என்ற நூல் சாமுத்ரிகா லட்சணத்தைப் பற்றிக் கூறும்போது, "ஆண்டவனால் ஒவ்வொருவர் உடலிலும் இடப்பட்டிருக்கும் முத்திரைகளே ரேகைகள். பல்வேறு ரேகைகளோடுகூடிய உடல்தான் சமுத்ரகம். உடலைப் பற்றிக் கூறப்படும் சாஸ்திரமே சாமுத் ரிகா சாஸ்திரம் ஆனது' என்கிறது. இதில் உடல்சார்ந்த அங்க சாமுத்ரிகம், கைகளில் வரிகள் சார்ந்த ஹஸ்த சாமுத்ரிகம் என்று இரு பிரிவுகள் உள்ளன.

நம் இதயத்திற்கும் கைரேகைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் எண்ணும் நல்ல நினைவுகள்மூலம் உள்ளங்கை ரேகைகள் வலம், இடப்புறமாக 16 நாட்களுக்கு ஒருமுறை .05 அளவுக்கு மாற்றமடையும் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது.

கைரேகை துல்லியப் பலன் தருமா?

நன்றாக மங்களங்களுடன் வாழ்ந்துவரும் ஒரு மனிதரை, புயல்போல திடீரென்று வரும் கஷ்டங்கள் புரட்டிப் போட்டுவிட்டால், அவரைத் தூக்கி நிறுத்திப் புனர்வாழ்வுபெறச் செய்திட அவருடைய இரண்டு கைகளிலுள்ள ரேகைகள் மட்டுமே போதும்.

Advertisment

dd

கைக்குள் மூன்று சக்திகள்!

"காலை எழுந்தவுடன் உள்ளங் கையைப் பாருங்கள்' என்று நமது தர்ம சாஸ்திரமான சம்க்ஷேபம் கூறுகிறது.

ஒருவரது உள்ளங்கைக்குள் நட்சத்திரப்படி சில தெய்வங்கள் ரேகை வடிவில் இருக்கின்றன. இவர்களை வழிபடும் விதி ரகசியத்தை மட்டும் அறிந்துவிட்டால் அனைவரும் அதிஷ்ட வாழ்க்கை பெறும் கோடீஸ்வரர்களே!

ரேகைகள் இயற்கையாக ரத்த ஓட்டத்தின் அடிப்படையில் தோன்றுபவை என்று மருத்துவத் துறையினர் கூறுவர்.

ஆனால், வேத ஜோதிடத்தின் ஆய்வுப்படி, அவரவர் முற்பிறவியின் நல்வினை, தீவினைகளின்படியே அமைகின்றன. நல்வினை செய்தோருக்கு எடுப்பாகவும், தீவினை செய்தோருக்கு மங்கலாகவும் அமையும் என கண்டறிந்துள்ளனர்.

ஆண்களுக்கு வலதுகை, பெண்களுக்கு இடதுகை ரேகைகள்படி பலன

ந்த உலகில் கொட்டிக்கிடக்கும் ஐஸ்வர்யங் களை அடைய, நமது விதியை அறிந்து சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து முன்னேறும் சாமுத்ரிகா தந்திர ரகசியத்தை நம் முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளார்கள்.

Advertisment

"பிரஹ்லாத சாமுத்ரிகா' என்ற நூல் சாமுத்ரிகா லட்சணத்தைப் பற்றிக் கூறும்போது, "ஆண்டவனால் ஒவ்வொருவர் உடலிலும் இடப்பட்டிருக்கும் முத்திரைகளே ரேகைகள். பல்வேறு ரேகைகளோடுகூடிய உடல்தான் சமுத்ரகம். உடலைப் பற்றிக் கூறப்படும் சாஸ்திரமே சாமுத் ரிகா சாஸ்திரம் ஆனது' என்கிறது. இதில் உடல்சார்ந்த அங்க சாமுத்ரிகம், கைகளில் வரிகள் சார்ந்த ஹஸ்த சாமுத்ரிகம் என்று இரு பிரிவுகள் உள்ளன.

நம் இதயத்திற்கும் கைரேகைக்கும் நெருங்கிய தொடர்புண்டு. நாம் எண்ணும் நல்ல நினைவுகள்மூலம் உள்ளங்கை ரேகைகள் வலம், இடப்புறமாக 16 நாட்களுக்கு ஒருமுறை .05 அளவுக்கு மாற்றமடையும் என்ற விஷயம் பலருக்கும் தெரியாது.

கைரேகை துல்லியப் பலன் தருமா?

நன்றாக மங்களங்களுடன் வாழ்ந்துவரும் ஒரு மனிதரை, புயல்போல திடீரென்று வரும் கஷ்டங்கள் புரட்டிப் போட்டுவிட்டால், அவரைத் தூக்கி நிறுத்திப் புனர்வாழ்வுபெறச் செய்திட அவருடைய இரண்டு கைகளிலுள்ள ரேகைகள் மட்டுமே போதும்.

Advertisment

dd

கைக்குள் மூன்று சக்திகள்!

"காலை எழுந்தவுடன் உள்ளங் கையைப் பாருங்கள்' என்று நமது தர்ம சாஸ்திரமான சம்க்ஷேபம் கூறுகிறது.

ஒருவரது உள்ளங்கைக்குள் நட்சத்திரப்படி சில தெய்வங்கள் ரேகை வடிவில் இருக்கின்றன. இவர்களை வழிபடும் விதி ரகசியத்தை மட்டும் அறிந்துவிட்டால் அனைவரும் அதிஷ்ட வாழ்க்கை பெறும் கோடீஸ்வரர்களே!

ரேகைகள் இயற்கையாக ரத்த ஓட்டத்தின் அடிப்படையில் தோன்றுபவை என்று மருத்துவத் துறையினர் கூறுவர்.

ஆனால், வேத ஜோதிடத்தின் ஆய்வுப்படி, அவரவர் முற்பிறவியின் நல்வினை, தீவினைகளின்படியே அமைகின்றன. நல்வினை செய்தோருக்கு எடுப்பாகவும், தீவினை செய்தோருக்கு மங்கலாகவும் அமையும் என கண்டறிந்துள்ளனர்.

ஆண்களுக்கு வலதுகை, பெண்களுக்கு இடதுகை ரேகைகள்படி பலன்கள் தெரியும். ஆண்களின் இடது கைரேகை மனைவி பற்றிக்கூறும். பெண்களுக்கு வலதுகை ரேகைகள் கணவரைப் பற்றிக்கூறும் என்கிறது சாஸ்திரம். ஆனால், சமீபகால கைரேகை நிபுணர்கள் வலதுகையை வைத்தே பலன் களைக் கூறுவர். ஒருவரது வலது கைரேகை கள் நிலையான வாழ்க்கை, அதிஷ்டங்கள், வம்சம், குணாதிசயங்களை எடுத்துக்கூறுவன என்பதே உண்மையான கருத்து.

ஐந்து விரல்களும் அதிஷ்டக்குறிகளும் பத்து விரல்களால் உழைத்து ஐந்து விரல்களால் மட்டுமே அள்ளிச் சாப்பிடுகிற நாம், நம் கைகளின் உட்பகுதியிலுள்ள யோகக்குறிகளை அறிந்து, அதில் குறுக்குக் கோடுகள் இருந்தால், அவை மறைந்து அதிஷ்டம்வர பரிகார முறைகளைச் செய்து கொள்ளவேண்டும். ஒவ்வொரு மனிதருக்கும் இதயத்தினுள்ளே கட்டைவிரல் அளவுக்குக் கடவுள் உட்கார்ந்திருப்பதாகச் சொல்கிறது சாஸ்திரம். விரல்கள் ஐந்துக்கும் விசேடப் பெயர்கள் உண்டு. கட்டைவிரல்- அங்குஷ்டம்; சுட்டுவிரல்- தர்ஜனி; நடுவிரல்- மத்யமா; மோதிரவிரல்- அநாமிகா; சுண்டுவிரல் கனிஷ்டகா. விரல்கள் பத்தும் இணைந்து பலவிதமான தெய்வ முத்திரைகள் காட்டப் படுவதால், நம் அங்கமே இறைவன் வாழும் கோவிலாகிறது என்று சிவாகமம் கூறுகிறது.

ஐந்து விரல்களிலுமுள்ள குறிகளைக் காணும்போது, தூய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய்க் கலவையைக் கலந்து தடவி ஒரு நிமிடம் கழித்து "ட்ரில்லியன் மைக்ரோ' கண்ணாடிவழியாகக் காணவேண்டும். கைகளில் வலைக்குறி இருந்தால் அதிகாரம், பதவி, செல்வாக்கு கெட்டுவிடும் என்பர். வட்டக்குறி இருந்தால் புகழ், நற்பெயர் விருத்தியாகும். சதுரக்குறி- நட்டத்திலிருந்து காக்கப்படுவர். முக்கோணம்- இது ஒரு யோக சக்தி அமைப்பு.

ஆயுள், ஆரோக்கியம் விருத்தியாகும். எதிர்பாராத பணவரவு ஏற்படும். நட்சத் திரக்குறி காணப்பட்டால் செல்வாக்கு, அதிஷ்டம், தலைமை ஏற்கும் யோகம் சித்திக்கும். பெருக்கல் குறி குருமேட்டில் இருந்தால் மட்டுமே நலம் தரும். தீவுபோன்ற குறி காணப்பட்டால் உடலில் பலவீனம் ஏற்படும். அங்க லட்சணம் குறையும். சந்திரன், சூரியமேட்டில் வளையங்கள் அமைவது உத்தமப்பலன் கொடுக்கும்.

மனிதக் கரங்கள் கோடிக்கணக்கில் இருந்தாலும், அவற்றின் வடிவங்கள் மொத்தம் ஏழுவகைதான் என்று ஹஸ்தா மூலத்துதி கூறுகிறது. சதுரக்கை- சூரியனது ஆதிக்கமுடையது. தத்துவக் கை- நகங்கள் நீண்டும், விரல்முனைகள் கூர்மையாகவும் காணப்படுவது. சிந்திப்பவர். பணவரவும் செலவும் சமமாக இருக்கும். மனோதத்துவக் கை- அடிப்பாகம் பருத்து விரல்நுனி குவிந்தவாறு காணப்படுவது. தடித்த கை- சதுரம், தத்துவம், மனோதத்துவக் கைகளின் அமைப்புகளால் கலந்து தெரிவது. வேறுசில ஆய்வுகளின்படி, ஏழுவகைகளுக்கும் சதுரம், நீள்சதுரம், வேதாந்தம். மனோதத்துவம், சித்திரம், ஆரம்ப காலத்தவை, கலப்புக் கை என்று அறியப்படுகின்றன.

கைரேகை ஆய்வின் அம்சங்கள்

ஒரு குழந்தை பிறந்ததுமுதல் ஐந்து வயதுவரை ரேகைகள் மாற்றமடைகின்றன. 15 வயதுவரை கண்களுக்குத் தெரியாதபடி சிறிய மாற்றங்களடைகின்றன. கைரேகை ஆய்வில் ஆயுள் ரேகை, புத்திரேகை, இதய ரேகை, விதி ரேகை, திருமண ரேகை, ஆரோக்கிய ரேகை, செவ்வாய் ரேகை, சூரிய ரேகை, சுக்கிர வளையம், ஞான ரேகை, கங்கண ரேகை, சக்கர அமைப்புகள், சங்கு, பருவரேகை, யவரேகை நகங்கள், கைகளது காட்சி, கிரகமேடுகள், கட்டை விரலின் அமைப்பு ஆகிய அம்சங்களை ஆராயவேண்டும்.

ஒன்றுமுதல் மூன்று மாதங்களுக்குள் தோன்றி மறையும் ரேகைகள் உபரேகைகளாக வருகின்றன. சாலமன் வளையம், சகோதரம், அருள், சனி வளையம், பயணம், சந்தானம், போக பாக்கியம், செல்வாக்கு, சுக்ரா எனப்படுகின்றன. இங்கே சுக்ரா ரேகை நமது கைகளில் காணப்படும் காலத்தில் மகாலட்சுமி தந்திர வழிபாட்டைச் செய்தால் அது நிரந்தரமாகத் தங்கிவிடும்.

ஆயுள் ரேகை

மணிக்கட்டின் நடுவிரல் தொடங்கி, கட்டைவிரலின் மேற்புறத்தைச் சுற்றி வில்லைப் போல காணப்படுவதே ஆயுள் ரேகை. மனிதனது 120 வருட ஆயுட் காலத்தை அதன்மேல் அமைந் துள்ள வெட்டுகள், புள்ளிகள், கோடுகளிலிருந்து அறியலாம்.

புத்தி ரேகை

குரு மேட்டிற்குக்கீழ் ஆயுள் ரேகையை ஒட்டியவாறு தொடங்கி, புறங்கையின் ஓரத்தில் முடியும். இந்த ரேகை ஆயுள் ரேகையுடன் ஒட்டியவாறு இருந்தால் வாழ்க்கையில் தனித்துவம் பெற்று செயற்கரிய செயலைச் செய்துவருவார்கள். இதன் பாதையில் நல்லகுறிகள் காணப்பட்டால் அதிஷ்டகரமான வாழ்க்கையைப் பெற்றிருப்பார்கள்.

இதய ரேகை

இது சுட்டுவிரலின் அடிப்பாகத் திலிருந்தும், நடுவிரலின் கீழுள்ள சனி மேட்டின் நடுவிரலிலிருந்தும் வெளி வருவது. எண்ணங்கள், திறமை, கலைகள், விளையாட்டுத்துறைகளில் வளர உந்துசக்தி எப்படி வெளியாகிறது என்று அறியவேண்டும். இந்த ரேகையில் துண்டு விழுந்தால் மனம்போன போக்கில் சென்று செலவுசெய்து, மருத்துவத்திற்கும் அதிக பணம் செலவுசெய்யும் சூழ்நிலை ஏற்படக்கூடும்.

விதி ரேகை

தலைவிதி மாறவேண்டுமென்று நினைப் போர் விதிரேகையிலுள்ள குறிகளைக் கண்டு, எதிர்வரும் ஆபத்தைத் தடுக்க எளிய இறைவழிபாட்டுப் பரிகாரங்களைச் செய்துகொள்ளலாம்.

விதி ரேகை என்பது அவரவர் கர்மாவினால் அமைந்து, வாழ்க்கையில் யோகம், தனம், அதிஷ்டத்தைப் பற்றித் தெரிவிக்கும் வைரக் கோடாக வளர்கிறது. ஒவ்வொரு மனிதருக்கும் விதிரேகை 32 வகைகளாக மாற்றமடைந்து வெளியில் தெரிகிறபடியால், "ட்ரில்லியன் கண்ணாடி'யால் பார்த்துப் பலன்களை அறியலாம்.

சூரிய ரேகை

மணிக்கட்டுப் பகுதியில் தொடங்கி சூரிய மேட்டுக்குச் செல்லும் வளைகோடுதான் சூரியரேகை என்னும் அதிஷ்ட ரேகை. இதன் லட்சணத்தைப் பொருத்தே பூர்வீக சொத்து, அரசாங்க நன்மை, தன் அறிவால் உயர்ந்த நிலையில் வாழ்தல் ஆகிய யோகப் பலன்கள் ஏற்படும். இந்த ரேகை தெளிவாகவும், சற்று தடிமனாகவும், மூன்று கிளைகளோடும் அமைந்தால், அரசியலில் உயர்பதவி, கௌரவப் பட்டங்கள், பெரிய அளவில் செல்வச் சேர்க்கை கிடைப்பதை யாராலும் தடுக்கமுடியாது.

ஆனால், சூரிய ரேகை அழிந்து மங்கலாகத் தெரிந்தால், "வானத்தை வில்லாக வளைத்துவிடுகிறேன்' என்று திறமையாகச் செயல்பட்டாலும், முன்னேற்றத்தில் தடங்கல்கள் ஏற்படும். இந்த சூரிய ரேகை யானது விதிரேகையின் அருகிலிருந்து எழுதல் வேண்டும். இந்த அமைப்புடையவர்கள் சாதனையாளர்களாகத் திகழ்வார்கள். இந்த அதிர்ஷ்ட ரேகையை 42 கோணங்களில் கண்டு பலனறிந்து உயர்ந்து வாழமுடியும்.

திருமண ரேகை

வாழ்க்கைத்துணை நன்றாக அமைந்தால்தான் ஒரு மனிதனின் வாழ்நாள் இன்பமயமாகக் கடக்கும். ஆண்- பெண் இருபாலரில் பெண்ணுக்கு மிக அவசியம்... தார ரேகை. விவாக ரேகை என்று வர்ணிக்கப்படுகிற இந்த சுபரேகை புதன் மேட்டின் குறுக்காக புறங்கை ஓரமாக மிகச்சிறிய கோடாகத் தெரிவது. 52 கோணங்களில் தெரிகிற இச்சிறிய கோட்டைக்கொண்டு ஒரு பெண்ணுக்குத் திருமணத்தடை, கணவனது அமைப்பு, திருமணமாகும் காலத்தை அறியலாம். இதய ரேகையிலிருந்து சுண்டுவிரல் அடிப்பாகம்வரை உள்ள இடமே திருமண வயதைக் கூறும்.

ஆரோக்கிய ரேகை

செவ்வாய் சமவெளியையும் சந்திர மேட்டையும் பிரிப்பதாக அமையும். சுக ரேகை, அங்கபல ரேகை என்றும் கூறப்படும். ஏழு அம்சங்களில் ஆராயப்படுகிற இச்சிறிய கோட்டைக்கொண்டு உடலில் ஏற்படும் நோய்கள், அதனைத் தடுக்கும் பரிகார பூஜைகளை அறிந்துகொள்ள முடியும். இந்தக் கோட்டிற்கும் நவகிரகங்களுக்கும் நெருங்கிய தொடர்புண்டு. இந்த ரேகையின்மேல் சிலருக்கு அழியாத கரும்புள்ளி காணப்பட்டால் இதயநோய் வரலாம் என்று முன்பே அறிந்து, அதற்கான மருத்துவம், ஆரோக்கியக் கடவுளின் ஆராதனை, எந்திர பூஜை, ரட்சைகள் செய்து பயன்படுத்தவேண்டும். சுண்டுவிரல்- புதன்; மோதிர விரல்- சூரியன்; நடுவிரல்- சனி; கட்டுவிரல்- குரு; கட்டைவிரல்- சுக்கிரன் என்ற விதி நாம் முன்பே அறிந்த விஷயம்.

ஞான ரேகை

சந்திர மேட்டிற்கும் புதன்மேட்டிற்கும் நடுவில் வளைந்து காட்சிதருவது. இந்த வளைகோடு எல்லாருடைய கைகளிலும் இருக்காது. தெய்வீக ஆற்றல், அமானுஷ்ய மனோசக்தி, வருவதை எடுத்துக்கூறும் திறமை உள்ளவர்களுக்கு இந்த ரேகை வெளிப்படும். ஜோதிட விதிகளில் வாக்குப்பலிதம், தீர்க்க தரிசன அம்சம் என்று கூறுவார்கள்.

பத்துவகை சங்க ரேகைகள், பத்து சக்கர ரேகைகள் நமது அதிஷ்ட வாழ்க்கையை நிர்ணயம் செய்கின்றன. உள்ளங்கையை விரித்துப் பாருங்கள். அதிர்ஷ்ட வாழ்க்கை அருகில் வரும்.

செல்: 91765 39026

bala060320
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe