நமக்கு எந்த ஒரு காரிய காரணத்தின்மீது நம்பிக்கை மலர்கிறதோ அது வசப்படும் என்கிறது கீதை. "ஹாரீத மகரிஷி'யின் தெளிவான ஜோதிட சித்தாந்தப்படி, வாழ்வில் விரும்பிய அனைத்தும் நமக்குக் கிடைத்தபோதும், பலருக்கும் வம்சவிருத்தி என்பது மட்டும் ஏன் வரமாவ தில்லை என்பதை விளக்கவே, ஆதிசேஷனின் அம்சமான ஸ்ரீராமானுஜர் பொற்பாதம் பணிந்து வரைகிறேன் சிறு கட்டுரை.
திருமணம் ஏற்கும் ஆண்- பெண்களுக்குள் வசீகரம், அன்யோன்யம், சுயவிருப்பம் ஆகியவற்றை ஜாதகத்தின் 1, 7, 12-ஆம் பாவங்களைக் கொண்டும், களஸ்திர காரக கிரகமான சுக்கிரன், செவ்வாய் நிலைகளை வைத்துமே நிர்மாணித்துள்ளது வேத ஜோதிடம். ஒ
நமக்கு எந்த ஒரு காரிய காரணத்தின்மீது நம்பிக்கை மலர்கிறதோ அது வசப்படும் என்கிறது கீதை. "ஹாரீத மகரிஷி'யின் தெளிவான ஜோதிட சித்தாந்தப்படி, வாழ்வில் விரும்பிய அனைத்தும் நமக்குக் கிடைத்தபோதும், பலருக்கும் வம்சவிருத்தி என்பது மட்டும் ஏன் வரமாவ தில்லை என்பதை விளக்கவே, ஆதிசேஷனின் அம்சமான ஸ்ரீராமானுஜர் பொற்பாதம் பணிந்து வரைகிறேன் சிறு கட்டுரை.
திருமணம் ஏற்கும் ஆண்- பெண்களுக்குள் வசீகரம், அன்யோன்யம், சுயவிருப்பம் ஆகியவற்றை ஜாதகத்தின் 1, 7, 12-ஆம் பாவங்களைக் கொண்டும், களஸ்திர காரக கிரகமான சுக்கிரன், செவ்வாய் நிலைகளை வைத்துமே நிர்மாணித்துள்ளது வேத ஜோதிடம். ஒருவர் ஜாதகப்படி வம்சவிருத்தியைத் தடைசெய்யும் துன்ப கிரக நிலைகள் எவையெனக் கேட்டால், மணம்முடித்து சில ஆண்டுகள் கழித்தபின்னும், 11, 9, 7, 5, 3-ல் பாவ கிரகங்களான ராகு, சனி, சூரியன், செவ்வாய் வேறு பெண் கிரகங்களுடன் இணைந்துநின்றவர்களுக்கும், சனிக்கு 12-ல் சூரியன் நின்ற அபாக்கியசாலிகளுக்கும் வம்சவிருத்தி, குழந்தை பாக்கியம் அடைவதில் தடைதாமதத்தையே அனுபவிக்கநேரிடுகிறது.
சனி நின்ற ராசிக்கு 5, 9, 12-ல் சூரியன் அமைந்தவருக்கும், சனி 5-க்குடையவராகி (கன்னி, துலாம்) சூரியன் 12-ல் நின்றவர்களுக்கும் கரு தங்குவதில், கர்ப்ப உற்பத்தியில் மனவழித் தொல்லை, உடல்வழித் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. கைராசி டாக்டர்கள்கூட இவர்களுக்கு அனுகூல மில்லை- கருத்தரிக்கும் விஷயத்தில். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் மேஷம், தனுசு ராசி, லக்னப் பெண்களின் 7, 5, 3, 1-ல் பாவகிரக ஜாகை, மணம் முடித்த ஓராண்டிற்குள் கருத்தங்குவதில்லை.
பல வைத்தியம் செய்த பிறகும் வம்சவிருத்தி மட்டும் ஆவதில்லை- அனுபவத்தில். டாக்டர், இன்ஜினீயர் ஆனபோதும், துலா லக்ன ஆண்களுக்கு மிதுனத்தில் சூரியனும், கடகத்தில் சனியும் நின்றால் (சூரியன், சனி 2, 12 நிலை) அப்பா ஆவதில் தடை, தாமதம் உண்டு.
வெற்றி ஜோதிடர்களின் அனுபவத்தில், ஒருவர் ஜாதகத்தில் 5-ல் நின்ற ராகுவை செவ்வாய் பார்த் தாலும் அல்லது செவ்வாய் நின்ற வீட்டிற்கு 5, 8-ல் ராகு நின்றாலும், கருப்பைக் கோளாறு, கர்ப்பச் சிதைவு துயர்களால் மனம் வாடும் நிலை தரும். 5-ஆம் அதிபதி சனி அல்லது செவ்வாயாகி, 5-ல் ராகு நின்றவர்களுக்கும், 5-ல் நின்ற சனியை சந்திரன் பார்த்து, 5-க்குரியவர் ராகு வுடன் கூடிநின்றாலுமே சந்தான பாக்கிய பங்கம் தான். குரு நல்லநிலையில் அமர்ந்தவர்களுக்கு குழந்தை பிறந்தாலும்கூட, பிறந்த அக்குழந்தையால் தாய்- தந்தையருக்கு பலவகை மனவேதனை உண்டு. எட்டு மாத காலம் இன்குபேட்டர் பராமரிப்பு, ஆடிஸ்சம் துயர், சிசுவின் இதய வால்வு பலவீனம் போன்ற துன்பநிலையை அனுபவித்தவர்கள் நம்மில் பலர். திருமண பந்தத்தில் இணைக்கும்போதே, இத் தகைய இக்கட்டான ஜாதக இணைவுகளை சேர்க் காமல் இருப்பதே வம்சவிருத்தி தரும்.
முடிவுரையாக, சிலருக்கு திருதீய அஷ்டம லாப விரய ஸ்தானங்களில் (12, 11, 8, 3-ல்) பாவர்கள் நின்றாலும், சேர்ந்தாலும், விதிவிலக்காக வம்சவிருத்தி ஏற்படுவது குலதெய்வ அருள். தசாபுக்தி அடிப்படையில் ராகு- கேதுக்கள் சூரியன், செவ்வாய், சனியுடன் சேரும் கோட்சாரங்கள் தோஷ ஜாதகருக்குக்கூட குருவின் ஆசியால் தாய்- தந்தையாகும் யோகம் கிட்டுகிறது. தவம் மற்றும் மருத்துவம் ஏற்ற வாசகர்கள் பலருக்கும், வரும் ஆவணி, ஐப்பசி, கார்த் திகையில் நல்ல வம்சவிருத்தி உண்டு. வாழ்க வளமுடன்!
செல்: 75399 10166