Advertisment

வம்ச விருத்திக்கு அகத்தியர் கூறிய வழி! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/agathiyars-way-developing-dynasty-siddhardasan-sunderji-jeevanadi-corruption

சுமார் 60 வயதுடைய ஒருவர், தன் மகன், மருமகளுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவர்களை அமர வைத்து, "என்ன காரணமாகப் பலன்கேட்க வந்துள்ளீர் கள்' என்றேன்.

Advertisment

அந்த பெரியவர், "இவன் எனது மகன், இவள் மருமகள். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து, ஐந்து வருடங்கள் ஆகின்றது. ஆனால் இன்னும் ஒரு புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. என் மனதில் உள்ளதை அப்படியே உங்களிடம் கூறுகின்றேன். அப்போது தான் என் மனம் ஆறும் என்றவர், தான் நினைத்ததை யெல்லாம் கூறத் தொடங்கினார்.

என் மகனுக்கு புத்திரத் தடைக்கு, ஜோதிடர்களிடம் சென்று ஜாதகப்பலன் கேட்ட போது, இவர்கள் இருவருக் கும், புத்திர தோஷம், புத்திர சோகம் பாதிப்பு உள்ளது. இதற்கு புத்திர காமேஷ்டியாகம் செய்தால், தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும் என்றார்கள். பல ஆயிரம் ரூபாய்கள் செலவுசெய்து அந்த யாகத்தை செய்தோம். இன்னும் சில ஜோதிடர்கள், புத்திர ஸ்தானமும், ஸ்தானதி பதி கிரகமும், கெட்டுவிட்டது. இந்த கிரக தோஷப் பாதிப்பு நீங்க, கணவன்- மனைவி இருவரும், சில பரிகாரங் களைச் செய்து முடித்துவிட்டு, சஷ்டி

சுமார் 60 வயதுடைய ஒருவர், தன் மகன், மருமகளுடன் நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவர்களை அமர வைத்து, "என்ன காரணமாகப் பலன்கேட்க வந்துள்ளீர் கள்' என்றேன்.

Advertisment

அந்த பெரியவர், "இவன் எனது மகன், இவள் மருமகள். இவர்கள் இருவருக்கும் திருமணம் முடிந்து, ஐந்து வருடங்கள் ஆகின்றது. ஆனால் இன்னும் ஒரு புத்திர பாக்கியம் உண்டாகவில்லை. என் மனதில் உள்ளதை அப்படியே உங்களிடம் கூறுகின்றேன். அப்போது தான் என் மனம் ஆறும் என்றவர், தான் நினைத்ததை யெல்லாம் கூறத் தொடங்கினார்.

என் மகனுக்கு புத்திரத் தடைக்கு, ஜோதிடர்களிடம் சென்று ஜாதகப்பலன் கேட்ட போது, இவர்கள் இருவருக் கும், புத்திர தோஷம், புத்திர சோகம் பாதிப்பு உள்ளது. இதற்கு புத்திர காமேஷ்டியாகம் செய்தால், தோஷம் நீங்கி புத்திர பாக்கியம் உண்டாகும் என்றார்கள். பல ஆயிரம் ரூபாய்கள் செலவுசெய்து அந்த யாகத்தை செய்தோம். இன்னும் சில ஜோதிடர்கள், புத்திர ஸ்தானமும், ஸ்தானதி பதி கிரகமும், கெட்டுவிட்டது. இந்த கிரக தோஷப் பாதிப்பு நீங்க, கணவன்- மனைவி இருவரும், சில பரிகாரங் களைச் செய்து முடித்துவிட்டு, சஷ்டி திதியன்று விரதம் இருந்துவந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்றார் கள். அவர்கள் கூறிய பரிகாரங்களையும் செய்து முடித்தோம்.

ass

Advertisment

இன்றுவரை சஷ்டி விரதத்தை இருவரும் இருந்து வருகின்றார்கள்.

சாமி குறிபார்த்து சொல்பவர்கள், கோடங்கி பூசாரிகள், தெய்வ குற்றம் உள்ளது. உங்கள் குலதெய்வத்திற்கும், காளி, மாரி போன்ற சில அம்மன் தெய்வங்களுக்கு அக்னி சட்டி எடுத்து, தீக்குளி இறங்கி, மடிப்பிச்சையெடுத்து, சில பூஜைகளைச் செய்யச் சொன்னார்கள். அவைகளை யெல்லாம் இருவரும் செய்தார்கள். மந்திரவாதிகளை யும் பார்த்தோம். அவர்கள் தாயத்து அணிந்து கொண்டு, யந்திரம் தந்து பூஜை செய்துவரச் சொன்னார்கள்.

பெரிய, பெரிய டாக்டர்களிடம் சென்று பார்த்தோம். அவர்கள் பல பரிசோதனைகளைச் செய்துவிட்டு மருந்து தந்து சாப்பிட்டு வரச்சொன்னார்கள். அவர்கள் இருவரும் இன்றுவரை அதையும் சாப்பிட்டுக்கொண்டு இருகின்றார்கள். ஒரு குழந்தை பிறக்கவேண்டும் என்று யார்? யார்? தானம், தர்மம் என்று எதையெல்லாம் சொன்னார்களோ, அவற்றையெல்லாம் செய்தோம். லட்சக்கணக்கில் பணம்தான் செலவானதே தவிர, ஒரு வாரிசு உருவாக்கிப் பிறக்க வில்லை.

பணம், சொத்து, எங்களுக்கு எவ்வளவோ இருந்தும், சொத்தை அனு பவிக்க, வம்சம் வளர, என் மகனுக்கு ஒரு குழந்தை இல்லையே என்று உங்களிடம் இப்போது, கூறியதையெல்லாம், என் நண்பரிடம் கூறிப் புலம்பி னேன். அவர் தான், தங்களைப் பற்றிக் கூறி, ஜீவநாடியில் பலன்கேட்டால், அகத்தியர் ஒரு நல்லவழி கூறுவார் என்று கூறினார். அதனால்தான் தங்களை நாடிவந்தோம். என் மனதில் உள்ளதையெல்லாம், உங்களிடம் கூறிவிட்டேன். ஏன் குழந்தை பிறக்கவில்லை என்று காரணம் தெரியாமல் அலைந்துகொண்டு இருக்கும் எங்களுக்கு அகத்தியர் தான் வழிகாட்டவேண்டும்.

ஜீவநாடி ஓலைக்கட்டைப் பிரித்துப் படிக்கத் தொடங்கி னேன். ஓலையில் எழுத்து வடிவாகத் தோன்றிய அகத்தியர், எனக்கு ஒரு கட்டளையிட்டார். நான் ஓலையில் கூறுவதை இப்போது அவர்களிடம் கூறாதே, நீ மட்டும் படித்து தெரிந்துகொண்டு, கணவன்- மனைவி இருவரையும் தனித்தனியே அழைத்து, "நான் கூறுவது எல்லாம் நடைமுறையில் அவர்கள் தாம்பத்திய நிலையில் உள்ளதா? என்று விசாரித்து அறிந்தகொண்டு, அதன்பிறகு ஓலையில் நான் கூறியதையெல்லாம் சொல்'' என்று கூறிவிட்டு பலன்களைக் கூறினார். நானும் பலன்களைத் தெரிந்துகொண்டு, கணவன்- மனைவி இருவரையும், தனித்தனியே அழைத்து, சில விவரங்களைக் கேட்டேன். அகத்தியர் கூறியதும், அவர்கள் கூறியதும் சரியாகவே இருந்தது.

அந்த மூவரையும் அமரவைத்து, ஓலையைப் படித்தேன். இவர்கள் புத்திரத் தடைக்கு, பாவ- சாப- தோஷங்களோ, கிரகங்களோ, தெய்வ குற்றமோ, காரணம் இல்லை. இந்த மகனுக்கு சரீரத்திலுள்ள குறைதான் காரணம். இவன் சிறுவயதில் சைக்கிள் ஓட்டும்போது, கீழே விழுந்துவிட்டான். அதில் அடிபட்டதினால், நரம்பு பாதிப்பு அடைந்தது. இதனால் ஆண்மைக்குறைவு, விந்தணு, விந்து உற்பத்தி குறைவு, உணர்ச்சி, எழுச்சி இல்லாமல் போய்விட்டது. இதனால் தாம்பத்திய உறவு நன்கு இல்லை. புத்திரத் தடைக்கு இந்த மகனின் ஆண்மைக் குறைவுதான் காரணம்.

வம்சம் விளங்க குழந்தை பிறக்க, மருமகளிடம்தான் குறையுள்ளது. அதனால் தன் மகனுக்கு வேறு ஒரு பெண்ணை இரண்டாம் தாரமாக திருமணம் செய்துவைக்கலாமா? என்று இந்த தந்தையின் மனதில் ஒரு எண்ணமும் உள்ளது. இன்னும் எத்தனை பெண்ணைத் திருமணம் செய்துவைத்தாலும் அந்தப் பெண்ணை கர்ப்பம் அடையச் செய்யும் தன்மை இவன் மகனுக்கு இல்லை.

இந்தப் பெண்ணிற்கு, ஒரு குழந்தையைப் பெற்றுத்தரும் சரீர சக்தி, கர்ப்பப்பை, கருமுட்டை உற்பத்தி, கருக்குழாய் என அனைத்தும் முழுத்தகுதி யுடன் உள்ளது.

என் மகனுக்கு ஆண்மைக்குறைவு உள்ளது என்று கூறும் அகத்தியர் பெருமானே இந்த குறை நீங்கி, முழுமையான தகுதியைப் பெற்று, புத்திர பாக்கியம் உண்டாக நல்லவழி காட்டவேண்டும் என்றார்.

குழந்தை பிறக்க, தெய்வமோ, கிரகமோ, காரணமில்லை. ஆண்- பெண் இருவருக்கும் சரீர நிலை சக்தியுடன் இருக்கவேண்டும். நான் கூறும் மூலிகைப் பொடிகளை, நான் கூறும் முறையில் இந்த மகனை சாப்பிட்டு வரச்சொல், பாதிக்கப்பட்ட நரம்பு மண்டலம் வலுப்பெற்று, ஆண்மைக் குறைவு நீங்கி, உணர்ச்சியும், எழுச்சியும் உண்டாகும். மருமகள் கர்ப்பம் தரிப்பாள் என்று கூறியவர், பெண்ணின் கர்ப்பகால நாட்களை கூறி, அந்த நாட்களில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள வழிமுறைகளைக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அகத்தியரை வணங்கிவிட்டு, புத்திர பாக்கியம் இல்லையேயென்று புலம்பிக் கொண்டுவந்தவர்கள், புன்னகையுடன் விடைபெற்றுச் சென்றார்கள்.

செல்: 99441 13267

bala240524
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe