Advertisment

முடங்கிய தொழிலில் மீண்டு வர அகத்தியர் சொல்லும் ரகசியம்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/agathiyars-secret-recover-crippled-business-chithardasan-sunderji-jeevanadi

சுமார் 40 வயதுடைய ஒரு ஆணும், சுமார் 36 வயதுடைய அவரின் மனைவியும் நாடியில் பலன் அறிந்துகொள்ள வந்திருந்தனர். அவர்களை அமரவைத்து, நாடி படிக்கவந்த காரணம், என்ன? என்று கேட்டேன்.

Advertisment

அந்தப் பெண் ஐயா, "இது நாள்வரை நாங்கள் பல தொழில் செய்துவிட்டோம். எந்த தொழிலும் சரியாக அமையவில்லை. தொடர்ந்து செய்யமுடியவில்லை. நிரந்தரமாக தொழில், வியாபாரம் அமையவில்லை. போட்ட முதலீடு பணம் கடன் வாங்கிபோட்ட பணம், என அனைத்தும் விரையமாகி நட்டம்தான் ஆனது. அதனால் கடனாளியாகவும் ஆகிவிட்டோம். வேறு வகையில் எந்த சொத்தோ, வருமானமோ இல்லை. ஏதாவது ஒரு தொழில் செய்து உழைத்துதான் பிழைத்து வாழவேண்டும் என்ற நிலை. இனி நாங்கள் எந்தத்தொழில் செய்தால், நன்மையும், உயர்வும் உண்டாகும் என்று அகத்தியரிடம் கேட்டு அறிந்துகொண்டு, அவர் கூறும் வழிமுறைகளை, இனி வாழ்நாளில் கடைப்பிடித்து வாழவேண்டும் என்றுதான் நாடியில் பலன்கேட்க வந்துள்ளோம்'' என்றாள் அந்தப் பெண்.

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

ஓலையில் அகத்தியர் எழுத்து வடிவில் தோன்றி, பலன் கூறத் தொடங்கினார்.

ff

இவ

இவனின் இப்பிறவி வாழ்க்கையில், சரியான தொழில் அமையாமலும், தொழிலில் பணம் நட்டம் ஆனது பற்றியும் கூறினான். இதற்குரிய காரணத்தை முதலில் கூறுகின்றேன்.

"முற்பிறவியில் இவன், பலவிதமான தொழில்களைச் செய்து, நிறைய பணம் சம்பாதித்து, செல்வச் செழிப்புடன் வாழ்ந்தான். இவன் தன் தொழில், வியாபாரத்திற்கு தேவையான பணத்தை தனது நண்பர்கள், உறவினர்களிடம் முதலீடு செய்யப்பெற்று, வருடமுடிவில் தொழிலில் வரும் லாபத்தில் அவரவர் பங்கு தொகைக்கு தகுந்த பணத்தைத் தருவதாகக்கூறி, அவர்களிடம் பணம்பெற்று, தொழிலில் கூட்டாளிகளைச் சேர்த்துக்கொண்டு தொழில் செய்தான்.

தொழில், வியாபாரம் என அனைத்திலும் நிர்வாகப் பொறுப்பினை ஏற்று, முதலாளியாக இவனே இருந்து செயல்பட்டான். பங்குதொகை செலுத்திய அனைவரும் இவன்மீது முழுமையாக நம்பிக்கை வைத்து இருந்தார்கள். அதனை இவன் முழுமையாக பயன்படுத்திக்கொண்டு, வியாபாரத்தில் பொய்க்கணக்கு எழுதி, நட்டம் வந்தது எனக்கூறி அவர்களுக்குத் தரவேண்டிய லாபத்தையும், போட்ட முதலீட்டு பங்குப் பணத்தையும் ஏமாற்றி அபகரித்துக்கொண்டான்.

தொழிலில் இவனை நம்பி பணம் முதலீடு செய்தவர்கள், இவன் ஏமாற்றியதை அறிந்து கோபம்கொண்டு, அவரவர் மனத்திற்கு தோன்றிய படி பலவிதமான வாக்கு சாபங்களை விட்டார்கள். ஆனால் இவள் அவர்களை ஏமாற்றியும், தொழிலில் சம்பாதித்த பணத்தையும்கொண்டு வீடு, நிலம், சொத்துகள் என வாங்கி வசதியாக அனுபவித்துவாழ்ந்தான்.

முற்பிறவியில் தொழில் கூட்டாளிகளை ஏமாற்றிய பாவமும் பணத்தையும் இழந்து, பாதிக்கப்பட்டவர்கள் சாபமும் மலைபோல் வளர்ந்து, இப்பிறவியில் இவனுக்கு சரியான தொழில் அமையாமலும் தொடர்ந்து செய்யும் வியாபாரங்களில் நஷ்டம், தடைகள் உண்டாக்கி, தொழில் இல்லாதவனாகவும் கடனாளியாகவும் செய்துவருகின்றது. இவன் முற்பிறவியில் தொழில் கூட்டாளிகளுக்கு செய்த பாவத்திற்கு நிவர்த்தியே கிடையாது. இவன் ஆயுள்வரை இப்பிறவியில் எந்தத் தொழில் செய்தாலும் அதில் நட்டமும் தடையும்தான் உண்டாகும்'' என்றார் அகத்தியர்.

ஐயா, "அகத்தியர் வழிகாட்டுவார் என்றுதான் அவரை நாடி, நம்பி வந்தோம். ஆனால் இவர் முற்பிறவியில் செய்த பாவத்திற்கு பரிகாரமோ, நிவர்த்தியோ கிடையாது என்று கூறுகின்றார். நாங்கள் தொழில்செய்து கோடீஸ்வரனாக வேண்டும் என்று ஆசைப்படவில்லை. நாங்களும், எங்கள் குழந்தைகளும் எங்கள் ஆயுள் உள்ளவரை பசியின்றி வாழ உண்ண உணவு, உடுக்க உடை, வசிக்க ஒரு வீடு மட்டும் இருந்தால்போதும் அவற்றை அடைய எந்த தொழிலைச் செய்யவேண்டும் என்றுகூறி எங்களை காப்பாற்றிக்கொள்ள வழி சொல்லவேண்டும் என்றாள் அவன் மனைவி.

அகத்தியர் ஓலையில் தோன்றி, இதுவரை பலதொழில்களைச் செய்தோம் என்று கூறினார்கள். அதில் ஏதாவது ஒரு தொழிலைச் செய்தபோது, நஷ்டமில்லாமல், லாபம் வந்து, கஷ்டமின்றி வாழ்ந்திருப்பார்கள், அந்த தொழில் எது? என்று கேள்? என்றார்.

அந்தப் பெண்ணிடம், அம்மா, அகத்தியர் கூறியதைக் கேட்டாயா? எந்த தொழில் செய்தபோது லாபம் வந்து கஷ்டமின்றி வாழ்ந்தீர்கள் என்றேன்.

கணவன்- மனைவி இருவரும் சிறிது நேரம் யோசித்துவிட்டு, ஒரு வியாபாரத்தைக்கூறி, இந்தத் தொழில் செய்தபோது, நல்ல லாபம் வந்து கஷ்டமின்றி வாழ்ந்தோம் என்றார்கள்.

அந்தத் தொழிலை மறுபடியும் தொடங்கி செய்யச்சொல். எந்த காரணத்தாலும், வேறு தொழிலைச் செய்யவேண்டாம் என்று கூறு. ஆனால், தொழில், வியாபார நிர்வாகம், பண நிர்வாகம் இவையனைத்தையும் இவன் மனைவியின் பெயரில், மனைவிதான் முதலாளியாக இருந்து தொழிலை கவனித்துச் செய்யவேண்டும். இவன் உழைத்து வாழும் தொழிலாளியாகவே இருக்கவேண்டும். இவன் முதலாளியாக இருந்தால் முற்பிறவி சாபம், தொழிலில் உயர்வை தராது. முடக்கிவிடும்; கவனம்.

ஒருவனுக்கு தான் செய்யும் தொழில் உயர்வை தருமா? நட்டம் தருமா? என்பதை, அவன் அனுபவத்தின்மூலம்தான் அறிந்துகொள்ளமுடியும். 100 பவுன் (ரூபாய்) முதலீடுசெய்து அதில் 110 பவுன் (ரூபாய்) கிடைத்தால், 10 பவுன் லாபம் கிடைத்தால், அந்தத் தொழில் படிப்படியாக உயர்ந்து தொழிலில் உயர்வு அடைந்துவிடுவான்.

தொழில், வியாபாரத்தில் 100 பவுன் (ரூபாய்) முதலீடு செய்து 90 பவுன் கிடைத்து, 10 பவுன் நட்டம் வந்தால் அந்தத் தொழிலை அன்றே கைவிட்டுவிடவேண்டும். தொடர்ந்து செய்தால் நட்டம்தான் உண்டாகும் என்பதை புரிந்துகொண்டு தொழிலைச் செய்யச் சொல் என்று கூறி ஓலையிலிருந்து அகத்தியர் மறைந்தார்.

அகத்தியர் கூறியதைக்கேட்ட கணவன்- மனைவி இருவரும், அகத்தியர் கூறியபடியே நடைமுறையில், கடைப்பிடித்து, தொழில்செய்து பிழைத்துக் கொள்கின் றோம் என்று கூறி விடைபெற்று சென்றார்கள்.

செல்: 99441 13267

bala081223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe