சுமார் 62 வயதுடைய ஒருவர், தனது 28 வயதுடைய மகளுடன் நாடியில் பலன்காண வந்திருந்தார். அவர்களை அமரவைத்து, "என்ன? காரணமாக நாடி படிக்க வந்துள்ளீர்கள்' என்றேன்.
அவர் தன்னைப் பற்றி முத-ல், கூறத் தொடங்கி னார். "தான் நீதித்துறையில் உயர்பதவியில் இருந்த தாகக் கூறிவிட்டு, இவள் எனது மகள், இவளின் ஜாதகத்தைப் பார்த்த எனது ஜோதிட நண்பர் ஒருவர், இவளுக்கு 25 வயதில் திருமணம் செய்துவிடவேண்டும். இல்லையென்றால், இன்னும் ஏழு வருடங்களுக்கு திருமணம் செய்யமுடியாது என்று கூறியதால், எனது கௌரவத்திற்கும், அந்தஸ்திற்கும் தகுந்த குடும்பத்தில் பிறந்த ஒருவரை, தேர்ந்தெடுத்து, ஜோதிடர்கள் கூறியநாளில், பிரம்ம முகூர்த்த நேரத்தில், சாஸ்திரத்தில் கூறியுள்ளபடி, வேத மந்திரங்கள் ஓதி, சம்பிரதாயபடி, ஆகம சடங்குகளைச் செய்து திருமணம் செய்துவைத்தேன்.
இவள் திருமணம் முடிந்து, ஒரு வருடகாலத்தில், கணவன்- மனைவியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பிரச்சினைகள் உருவாக்கி, கணவனைவிட்டுப் பிரிந்துவந்து, இரண்டு வருடமாக எங்களுடன்தான் இருக்கின்றாள். நாங்கள் கணவனுடன் சேர்ந்து வாழக்கூறினாள், அவனுடன் சேர்ந்து வாழமுடியாது. நீங்கள் சேர்ந்து வாழவேண்டும் என்று வற்புறுத்தினாள்,
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/agathiyar_19.jpg)
தற்கொலை செய்து கொள்வேன். அல்லது வீட்டைவிட்டு வெளியேறி, யாரும் கண்டுபிடிக்க முடியாதபடி எங்காவது சென்றுவிடுவேன் என்று கூறி மிரட்டு கின்றாள்.
என் மகளின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டுமென்று நான் சாஸ்திரபடி செய்த சடங்கு, சம்பிரதாய செயல்களால், எந்த நன்மையும் கிடைக்கவில்லை. இவள் மனம் மாறி, கணவனுடன் சேர்ந்து நல்லபடியாக வாழ்க்கை நடத்துவாளா? இவளின் எதிர்கால வாழ்க்கை நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ளவே அகத்தியரை நாடி வந்துள்ளேன்'' என்றார்.
அவர் கூறியதையெல்லாமல் பொறுமையாகக் கேட்டுவிட்டு, ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.
இவன் பெரிய படிப்பு படித்து, உயர்ந்த பதவியி-ருந்தேன் என்று கூறினான். இந்த பூமியில் பிறக்கும் ஒருவரின் பிறப்பு, இறப்பு, திருமணம் இவை மூன்றையும் யாராலும், எந்த சக்தியாலும், ஜோதிட சாஸ்திரத்தாலும், தீர்மானித்துக் கூறமுடியாது. இவை மூன்றும், தாயின் கர்ப்பத்தி-ருக்கும்போதே, முற்பிறவில் அம்ச பாவ- சாப அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டு, விதியாக அமைந்துதான் பிறப்பார்கள். இந்த மூன்று நிகழ்வுகளும், பிறந்தபின்பு தீர்மானிக்கப்படுவதில்லை. கருவில் அமைந்தாற்போல்தான் நடக்கும் என்ற ஞானம் (அறிவு)கூட இல்லாமல் இருக்கின்றான். இவன் மகளின் இந்த நிலைக்கு, இவன் வம்சத்தில் பாதிக்கப்பட்டு, இறந்து போன ஒரு பெண் விட்ட சாபம்தான் காரணம்.
அதைப்பற்றிக் கூறுகின்றேன். அறிந்துகொள்ளச் சொல்.
இவன் முன்னோர்கள், ஒரு சிறிய கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்ந்து வந்தார்கள். இவனின் பாட்டன் வய-ல் வேலை செய்துகொண்டிருக்கும்போது, இவன் பாட்டி கணவனுக்கு சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பது வழக்கம். ஒருநாள் பாட்டி சோறு கொண்டுவந்து கொடுப்பதற்கு, கொஞ்சம் நேரமாகிவிட்டது. பசியுடன் இருந்தவன், பாட்டியைப் பார்த்தவுடன், கோபம் அதிகமாகியது. அந்தப் பாட்டி அப்போது கர்ப்பிணியாக இருந்தாள். மனைவி கர்ப்பிணி என்றும்கூட யோசிக்காமல், ஏரில் கட்டிய மாடுகளை ஓட்டும் சாட்டைக் குச்சியால் மனைவியை அடித்துவிட்டான். மனமுடைந்து, வெறுத்துப்போனப் பாட்டி, அருகில் இருந்த கிணற்றில் குதித்து இறந்து போனாள்.
பாட்டி கிணற்றில் விழுந்து, உயிர் துறக்கும்போது, இவன் வம்சத்திற்கு ஒரு சாபத்தை விட்டுத்தான் இறந்தாள். இவன் வீட்டிற்கு வாழவந்து, வம்சம்வளர ஆதாரமான மனைவியை, கர்ப்பிணியென்றும் எண்ணாமல், அடித்து, துன்புறுத்தி என் மரணத்திற்கு என் புருஷனே காரணம் ஆனான். இந்த குடும்பத்தில் ஆண்களின் ஆதிக்க குணத்தால், என் வாழ்க்கை பாதிப்படைந்ததுபோல், இனி இந்த குடும்பத்தில், மனைவியாக வாழவரும் பெண்ணும், இந்த குடும்பத்தில் பிறக்கும் பெண்களும், தங்கள் வாழ்வில் கணவனுடன் நிம்மதியாக வாழமுடியாது என்று சாபத்தைவிட்டுதான் இறந்துபோனாள்.
இவன் பாட்டிவிட்ட சாபம், வம்சத்தில் தொடர்ந்து பாதிப்பைத் தந்து வருகின்றன. இவனுக்கு திருமணம் முடிந்த சில வருடங்களில், இவன் மனைவி நோயாளியானால். அதனால், இவனுக்கும், இவன் மனைவிக்கும் தாம்பத்திய உறவு தடைப்பட்டது. வெளியுலகிற்கு இவர்கள் தம்பதிகளாக வாழ்கின்றார்கள்.
"மன்னன் சுகம் இல்லையடா மன வாழ்வு ஏக்கமடா'' என்ற நிலைதான் இவன் மனைவிக்கு. வம்சத்தில் வாழவந்த பாட்டி விட்டசாபம், இந்த குடும்பத்தில் வாழவந்த பெண்ணான இவன் மனைவியை வாட்டுகின்றது.
இவன் பாட்டிவிட்ட சாபம், வம்சத்தில் தொடர்ந்து, அடுத்த தலைமுறையில், இந்த குடும்பத்தில் பிறந்த பெண்ணான, இவன் மகள் வாழ்வையும் கெடுத்து வருகின்றது. இவன் மருமகன் ஆண்மை குறைவுள்ளவன். தாம்பத்தியத்தில் மனைவியை திருப்திப்படுத்த தகுதியில்லாதவன். இவள் இவ்வளவு நாள்வரை தனது குடும்ப கௌரவத்தையெண்ணி, சகித்துக்கொண்டு வாழ்ந்தாள். மருத்துவம் பார்த்தும், அவன் ஆண்மை குறைவு சரியாகவில்லை. இதனால் தான் இவன் மகள், அவளைப் பிரித்து, தன் பிறந்த வீட்டிற்கு வந்துவிட்டாள். இவன் குடும்ப வாழ்க்கை பற்றியும், மகள் வாழ்க்கைப் பற்றியும் அகத்தியன் கூறியது உண்மையா? இவன் வம்சத்தில் பெண் கிணற்றில் குதித்து இறந்த நிகழ்வு, நடந்ததா? என்று அவனையே கேள் என்றார். அகத்தியர் கூறியது உண்மையா என்று அவரைக் கேட்டேன்.
அகத்தியர் கூறியதுபோன்று, "என் பாட்டி ஒருத்தி கிணற்றில் விழுந்து மாண்டது, என் மனைவிக்கு நோய்த்தாக்கம், என் மருமகனின் ஆண்மை குறைவு என இவையனைத்தும் உண்மைதான். வம்சத்தில் உண்டான பெண் சாபம் நிவர்த்தியாகவும், என் மகளின் எதிர்கால வாழ்வின் நிலை பற்றியும், அகத்தியர்தான் வழிகாட்ட வேண்டும்'' என்றார்.
இவன் மகள், இனி கணவனுடன் சேர்ந்து வாழமாட்டாள். அவனைவிட்டு இவளை முறைப்படி பிரித்துவிடச் சொல். இனி அவளுக்கு அடுத்து ஒரு வாழ்க்கை அமையும் என்று கூறியவர், அடுத்து இவளுக்கு கணவனாக அமையப் போகின்றவன் பற்றிய விவரங்களையும் கூறிவிட்டு. வம்சத்தில் உண்டான பெண் சாபம் நிவர்த்தியாக பிரார்த்தனை வழிமுறைகளையும், கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.
அகத்தியர் கூறியது அனைத்தையும் கேட்ட அவர், "என் குடும்பத்தில் ஏற்பட்ட அனைத்து பிரச்சினை, சிரமங்களுக்கும், என் முன்னோர்கள் கால வாழ்வில் பாதிக்கப்பட்டு இறந்துபோன பெண்விட்ட சாபம்தான் காரணம் என்று இதுவரை எந்த ஜோதிடரும் கூறவில்லை. எல்லா ஜோதிடர்களும் கிரகங்களுக்குத்தான் பலன் கூறினார்களே தவிர, பாதிக்கப்பட்ட எங்கள் பிரச்சினை தீர வழிகூறவில்லை. கடவுளை வணங்கச் சொன்னார்களே தவிர, கர்மவினை தீர வழிகாட்டவில்லை. அகத்தியர்மூலம் காரணக் காரியத்தை அறிந்துகொண்டேன்'' என்று கூறி விடைபெற்று சென்றார்.
செல்: 99441 13267
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2024-02/agathiyar-t.jpg)