அகத்தியர் அமைத்துக்கொடுத்த யோகத் தொழில்!

/idhalgal/balajothidam/agathiyar-setting-yoga-industry

சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

"ஜீவநாடி'யில் பலன் கேட்கவந்த ஒருவர் என்னிடம், ""ஐயா, நான் தங்க நகை வியாபாரம் செய்துவருகிறேன்.

எனக்கு மூன்று மகன்கள். இவர்களில் என் இரண்டு மகன்கள் நகைத் தொழில் செய்கின்றனர். கடைசி மகன் அரசு உத்தியோகம் பார்க்கிறான். இப்போது நான் பலன் கேட்க வந்தது என் இரண்டாவது மகனுக்காகத்தான்.

என் இரண்டு மகன்களுக்கும் நகை வியாபாரத்தைக் கற்றுக்கொடுத்து, தனித்தனியே கடைகள் வைத்துக் கொடுத்தேன். இருவரும் வியாபாரம் செய்துவரு கிறார்கள்.

aa

● இரண்டாவது மகன் கடையில் வியாபாரம் சரியாக இல்லை. நஷ்டமாகிக் கொண்டேவருகிறது. காலம், நேரம் சரியில்லை என்று சிலர் கூறிய அனைத்தையும் செய்து பார்த்துவிட்டேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. வியாபாரம் நன்கு நடந்து லாபம் கிடைக்க என்ன செய்யவேண்டும்?

● எனது இரண்டாவது மகனுக்கு ஆண் குழந்தை இல்ல

● எனது இரண்டாவது மகனுக்கு ஆண் குழந்தை இல்லை. அவனுக்கு மகன் பிறப்பானா?

● நான் தொழில் செய்து பணம், சொத்து சம்பாதித்து வைத்துள்ளேன். என் மகன்கள் அதனை அழியாமல் காப்பாற்றி, தங்கள் வாழ்வில் இன்னும் உயர்வடைவார்களா? அல்லது அவர்கள் காலத் திலேயே பூர்வீகச் சொத்துகளை அழித்து விடுவார்களோ என்ற கவலை மனதில் தோன்றி விட்டது. இந்த குறைகள் தீர அகத்தியரிடம் நல்ல வழிகளைக் கேட்டுக் கூறுங்கள்'' என்றார்.

அவர் கூறியதை யெல்லாம் கேட்டுக் கொண்டு, அகத்தியரை வணங்கி "ஜீவநாடி' ஓலை யைப் பிரித்துப் படிக்கத் தொடஙகினேன்.

"சோகந்தான் எளியோரை

கள்ளமாய்க் கெடுத்ததாலே

பாமரசாபம் தான் வளர்ந்து

பொருள்நட்ட மாய்வந்த வாறே'

என்று ஆரம்பித்துப் பலன் கூறத் தொடங்கினார் அகத்தியர்.

""என்முன் அமர்ந்துள்ளானே, இவன் வம்ச முன்னோர்கள் காலத்திலிருந்து, பரம்பரையாக பொன்னாபரணம் செய்யும் தொழிலைச் செய்து வருகிறார்கள்.

இவன் வம்ச முன்னோர்கள், நகை செய்ய தங்கம் கொடுத்தவர்களுக்கு, நல்ல தரத்துடன் செய்துதராமல், தங்கத்துடன் அளவுக்கதிகமாக செம்பினைக் கலந்து, ஆபரணம் செய்துகொடுத்து, அந்த பாமர மக்களை ஏமாற்றினார்கள்.

இவனும், இவன் தந்தையும் நகை செய்யும் தொழிலுடன், நகையை வாங்கி விற்கும் தொழிலையும் செய்துவந்தார்கள். தங்களிடம் நகையை விற்க வருபவர்களின் தங்கத்தினை பரிசோதிக்கிறேன் என்று கூறி, அதனை அளவிற்கதிகமாக கல்லில் தேய்த்து, அதனை மெழுகில் ஒட்டியெடுத்து தங்கத்தைத் திருடினார்கள்.

இவனும் திருட்டு நகைகளை மிகக்குறைந்த விலைக்கு வாங்கி அதிக லாபம் பார்த்தான். திருடர்களை ஊக்குவித்தான்.

இவனது இரண்டாவது மகன், தன் வம்ச முன்னோர்கள் செய்த தவறுகளால் உண்டான "பாமர சாபத்தினை'யும், அதற்குரிய தண்டனையையும் அனுபவித்துத் தீர்க்கும் அமைப்புடன் பிறந்துள்ளான். இந்த பாமர சாபத்தின் காரணத்தால்தான் அவன் செய்யும் தங்கம், வெள்ளி சம்பந்தமான வியாபாரம் நலிவடைந்து, நஷ்டத்தைத் தந்துவருகிறது. எந்த தங்கத்தைத் திருடி வாழ்வில் உயர்ந்தார்களோ, அந்த தங்கத்தின்முலமே இப்போது செல்வம் குறைந்துவருகிறது.

இவன் இன்னும் எவ்வளவு பணம் முதலீடு செய்து, அவனுக்கு வியாபாரம் அமைத்துக்கொடுத்தாலும், பரம்பரைத் தொழிலில் அந்த இரண்டாவது மகன் உயர்வடைய முடியாது. நலிவையும், நஷ்டத்தையும்தான் அடையமுடியும். சொத்து அழிந்துகொண்டுதான் வரும். இதற்குப் பரிகாரங்கள் பலன் தராது.

இப்பிறவியில், இவனுக்கு உயர்வுதரும் தொழிலைக் கூறுகிறேன்.

இரண்டாவது மகன் வீடு கட்டும் பொருட்களான சிமென்ட், மணல், இரும்பு, கம்பி, ஜல்லி, வண்ணம் வியாபாரம், வாக னங்கள் இயக்கும் பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை விற்கும் வியாபாரம் செய்தால் தொழில் விருத்தியாகி உயர்வடைவான்.

ஒவ்வொரு மனிதனும், அவரவர்க்குரிய சரியான தொழிலை அறிந்துசெய்து, தங்கள் சுயஉழைப்பினால், பணம், பொருள் சம்பாதித்து வாழ்ந்தால், அந்த குடும்பத்தில் முன்னோர் தேடிவைத்த பூர்வீக சொத்துகள் அழியாது. இவன் மகன்களும் தங்கள் சுயஉழைப்பால் பொருள் தேடி வாழ்ந்தால் சொத்துகள் அழியாது.

இப்பிறவியில் இவன் பிறரை ஏமாற்றி சம்பாதித்துவைத்த சொத்துகளை இவன் மரணமடைந்து, மறுபடியும் இவன் குடும்பத்து வாரிசுகளின் விந்துமூலம் பிறந்து இவனே அழிப்பான்.

இவன் மகனுக்கு ஆண் குழந்தை தாமதமாகவே பிறக்கும். இப்போதுள்ள பெண் குழந்தைக்கு ஏழு வயதாகும்போது, இவன் மகனுக்கு ஒரு புத்திரன் பிறப்பான்'' என்றார்.

மேலும் அந்த இரண்டாவது மகன், மனைவி, மகள் என இம்மூவருக்கும் முற்பிறவியில் உண்டான இன்னும் சில பாவ- சாபப் பதிவுகளையும் கூறி அவற்றால் இப்பிறவியில் உண்டாகும் சிரமங்களைத் தடுத்துக்கொள்ள சில நடைமுறை நிவர்த்திகளையும் பிரார்த்தனைகளையும் கூறி, "ஜீவநாடி' ஓலையிலிருந்து அகத்தியர் மறைந்தார்.

செல்: 99441 13267

bala270320
இதையும் படியுங்கள்
Subscribe