Advertisment

அகத்தியர் கூறிய பாவ- சாபம் தீர்க்கும் பரிகார தெய்வங்கள்! சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்) சென்ற இதழ் தொடர்ச்சி..

/idhalgal/balajothidam/agathiyar-said-bhava-curse-remedial-deities-siddhardasan-sunderji-jeevanadi-0

"செவ்வாய் என்ற கிரகம், முருகன் என்ற தெய்வத்தைக் குறிக்கின்றது. குடும்ப உறவுகளில், சகோதரன்- சகோதரிகளையும், பெண்கள் வாழ்வில் கணவனையும் குறிக்கின்றது. முருகனுக்கு செய்யும் பரிகார பூஜையை, உடன் பிறந்த சகோதரர்களை முருகனாகவும், பெண்கள் கணவனை முருகன் தெய்வமாகவும் எண்ணி, பூர்வீக சொத்துகளில் சகோதரர்களுக்கு உரிய சொத்து, நிலத்தை முறையாக பாகப்பிரிவினை செய்து கொடுத்தால், சகோதர பங்காளி சாபம் நிவர்த்தியாகும். பெண்கள் தன் கணவனுக்கு துரோகம் செய்யாமல், மதித்து, பாசமாகப் பழகிவந்தால் குடும்பத்தில் கருத்து வேறுபாடு, பிரிவு, விவாகாரத்து இராது. புத்தி பாக்கியம் தடையிராது.

Advertisment

புதன் என்ற கிரகத்திற்கு பெருமாள், விஷ்ணுவை கடவுளாக கூறுவார்கள். குடும்ப உறவுகளில் தாய்மாமன், தொழில், வியாபார கூட்டாளிகளைக் குறிக்கின்றது. பெருமாள் கோவில் உண்டியவில் போடும் பணத்தை தாய் மாமனை மதித்து, பண உதவி செய்தும், வியாபார கூட்டாளிகளை ஏமாற்றாமல் நேர்மையாக செயல்பட்டு, அவர்களுக்குரிய பங்கு தொகையினை கொடுப்பதே பெருமாள் வழிபாடாகும் இதனால் தாய்மாமன் சாபம் தீரும். கல்வி தடை, தொழில், வியாபாரத் தடை விலகும் பணம் சேமிப்பாகும், செல்வந்தன் ஆவான்.

Advertisment

dd

குரு எ

குரு என்ற கிரகம், ஜோதிடத்தில் தட்சிணாமூர்த்தி, சித்தர்கள், ரிஷிகள், முனிவர்கள், மடாதிபதிகள், பீடாதிபதிகள், ஆச்சாரியார்களைக் குறிக்கின்றது. குரு கிரகம் ஆண்கள் ஜாதகத்தில் அந்த ஜாதகனையே குறிக்கும். ஒருவன் உலகில் உண்மை எது? பொய் எது? நிலையானது எது? நிலையற்றது எது? தன் வாழ்வில் எதைச் செய்தால் நன்மை, உயர்வு உண்டாகும் என்று இன்னும் அனைத்தையும் தன் அனுபவத்தால், சுயஅறிவால் அறிந்து வாழ்வதே குரு வழிபாடாகும்.

சுக்கிரன் என்ற கிரகம், சோதிடத்தில் மகாலட்சுமி என்ற பெண் தெய்வத்தைக் குறிப்பிடுகின் றது. குடும்ப உறவுகளில் மனைவியையும், பணத்தையும் குறிப்பிடுகின்றது. ஒரு ஆண் தன் மனைவியை மதித்து, அவளுடன் பாசமாக பழகி, அவள் தேவைகளை, ஆசைகளை முழுமையாக நிறைவேற்றி, மனைவிக்கு துரோகம் செய்யாமல், அவளை மகிழ்ச்சியாக வாழ வைப்பதும், இன்னும் தான் சம்பாதித்த பணம், சொத்துகளை பிறர் சொல்வதை நம்பி இழந்துவிடாமல், மேலும், மேலும் பணம் சேர்த்து செல்வ நிலையை, உயர்வை அடைவதே மகாலட்சுமி வழிபாடாகும். மனிதன் வாழ்வில் மனைவியும், செல்வமும்தான் மகாலட்சுமி. மகாலட்சுமி விலகினால், மகாவிஷ்ணுவும் பிச்சைககாரன்தான். களத்திரதோஷம் நீங்கும்.

சனி கிரகம் ஜோதிடத்தில் கர்மகாரகன், ஆயுள்காரகன் என்று கூறுப்படுகின்றது. மனிதன் வாழ்வில் அவன் செய்யும் தொழிலைக் குறிப்பிடுகின்றது. ஒருவன் செய்யும் தொழிலை கவனமாக செய்து, நிறைய பணம் சம்பாதிப்பதும் சம்பாதித்த பணத்தை, கவனமாக சேமித்து பாதுகாப்பதும், தன்னிடம் வேலை செய்யும் கூலியாட்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியத்தைத் தந்து, அவர்களையும் மகிழ்ச்சியாக வாழவைப்பதே, சனிப்பிரீதி பரிகார வழிபாடாகும். இதனால் தொழில் விருத்தி, செல்வவிருத்தி உண்டாகும். ஏழரைச்சனி, அஷ்டச்சனி, அர்த்காஷ்டமச்சனி என எந்த சனியும் பாதிக்காது. இதனால் பாமர சாபதோஷம் நிவர்த்தியாகும்.

ஒவ்வொரு மனிதனும், அவரவர் குடும்ப உறவு களுக்கு, முறையான நன்மைகளைச் செய்து வாழ்ந்தால், ராகுவினால் உண்டாகும் பாவமும், கேதுவினால் உண்டாகும் சாபங்களும் விலகும். சர்ப்பதோஷம், நாகதோஷம் எனக் கூறப்படும் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும். பாவ- சாப- தோஷங்களை நீக்கி நிவர்த்தி செய்யும் சக்திகள் குடும்ப உறவுகள்தான்.

அகத்தியன் நான் தென்பகுதி திராவிட தமிழ் மக்களுக்கு வகுத்துக் கொடுத்த வழிபாட்டு முறை முன்னோர் வழிபாட்டு முறைதான். தமிழின மக்கள் அவரவர் முன்னோர்களையே தெய்வமாக வழிபட்டார்கள். வேறு எந்த ஒரு தெய்வத்தையும் குலதெய்வமாக வணங்கவில்லை.

ஒவ்வொரு குடும்பத்தினரும் அவர்களின் வம்ச முன்னோர்களை ஒன்று கூடி வழிபாட்டார்கள். குலதெய்வ வழிபாடு, பொதுவான, வேறு குடும்பத் தினர், வேறு இனத்தவர் ஒன்றுகூடி ஒரே இடத்தில், ஒரே சக்தியை வழிபாடு செய்வது குலதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு அல்ல. குலதெய்வம் ஒரு குடும்பத்து பங்காளிக்கு மட்டுமே உரியது.

ஒருவன் எங்கு பிறந்து, எங்கு வாழ்ந்து, இறக்கின் றானோ அந்த இடத்திலும் அவன் வம்ச வாரிசுகள் வசிக்கும் இடத்தில்தான் இருக்கும். எனவே குலதெய்வம் தெரியாதவர்கள், முன்னோர்கள் வசித்த இடம் தெரியாதவர்கள், குலதெய்வ கோவில் இருக்கும் இடம் தெரியாதவர்கள், அவரவர் முன்னோர்கள், தங்கள் வம்ச முன்னோர்களை எப்படி வழிபட்டார்கள் என்பதை அறிந்து, அதேபோன்று முறையான முன்னோர் வழிபாட்டை செய்து வணங்குவதே குலதெய்வ வழிபாடாகும்.

(குலதெய்வம் என்பது, ஒரு குடும்பத்து ரத்த சம்பந்தமான பங்காளிகளுக்கு மட்டும் சொந்தமான தெய்வம், இன்றைய நாளில் குலதெய்வம் என்று கூறிக்கொண்டு, சிவன், பெருமாள், முருகன், அங்காளம்மன், மாரியம்மன் என்று கூறிக்கொண்டு பல இனத்தவரும், பல குடும்பத்தினரும் ஒரே கோவிலில் வழிபாடு செய்து வருகின்றார்கள். அது குலதெய்வ வழிபாடு அல்ல.) இவனின் அடுத்த கேள்விக்கு, இவனின் ஜாதகத்தையும், இவன் வம்ச வாரிசுகளின் ஜாதகத் தையும், சித்தர்களாகிய நாங்கள் உனக்கு போதித்தபடி, தமிழ் ஜோதிடமுறையில் அறிந்து அவனுக்கு பதில், விளக்கம் கூறு'' என்று எனக்கு கட்டளையிட்டு விட்டு ஓலையில் இருந்து மறைந்து போனார்.

அவரிடம், "உங்கள் ஜாதகம், உங்கள் மகன்கள் ஜாதகம், உங்கள் பேரன்களின் ஜாதக ராசிக்கட்டத்தைத் தாருங்கள். உங்கள் வம்சத்தில், உங்கள் முற்பிறவியில் செய்த பாவ- சாப- தோஷம்'' என்றேன். குடும்ப வாரிசுகளில் யாருக்கு தொடர்ந்துள்ளது என்பதைக் கூறுகின்றேன்.

80 வயதான அவர், தன் மனதிலேயே அனைவரின் ஜாதகத்தையும் நினைவில் வைத்திருப்பார்போல் தோன்றியது. என்னிடம் பேப்பரும் பேனாவும் வாங்கி, நட்சத்திரம் குறித்து, ராசிகட்டம் போட்டுத் தந்தார். அந்த வயதில் அவரின் ஞாபக சக்தி என்னை வியப்படையச் செய்தது.

அவரின் ஜாதகத்தினை அடிப்படையாகக் கொண்டு, வாரிசுகளின் ஜாதகத்தில் உள்ள கிரக (உறவுகள்) சேர்க்கை ஆகியவற்றைக் கூறி என்னென்ன பாவ- சாபங்கள் யாருக்கு என்ன பலன் தரும் நிலையில் தொடர்ந்துள்ளது என்று கூறினேன்.

நீண்ட காலமாக உன் மனதில் இருந்த கேள்விக்கு அகத்தியர் பதில் தெளிவைத் தந்தது, உண்மை தெய்வத்தையும் அறிந்தேன் என்று கூறிவிடை பெற்றார்.

செல்: 99441 13267

bala031123
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe