Advertisment

அவஸ்தை தரும் நோய்க்கு அகத்தியர் சொன்ன மருத்துவம்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/agasthiyars-medicine-disease-causes-misfortune-chittardasan-sundarji

சுமார் 50 வயதுடைய ஒரு பெண்மணி நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

அந்தப் பெண்மணி தயங்கித் தயங்கி, கூறத் தொடங்கினார். "நான் ஒரு நோயினால், பெரிதும் சிரமத்தை அனுபவித்துவருகிறேன். முற்பிறவிகளில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை.

பெண்களுக்கே உரிய நோயான "பெரும்பாடு நோய்'தான், என்னைப் பாடாய்ப்படுத்துகிறது. எனக்கு 45 வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. ஐந்து வருடத்தில் பல மாதங்கள் எந்த பிரச்சினையும் இருக்காது.

சில மாதங்கள் சென்றபிறகு, திடீரென்று மாதவிடாய் உண்டாகி, 20 நாட்கள் வரைகூட ரத்தப் போக்கு நிற்காமல் வந்து, கஷ்டப்படுத்தும். அந்த சமயங்களில் மருந்துகள் சாப்பிட்டாலும் குறையாது. என் உடம்பிலுள்ள ரத்தம் எல்லாம் போய், எனக்கு ரத்த சோகை உண்டாகிவிட்டது.

Advertisment

ags

ஒரு பெண் டாக்டர் மட்டும், இந்த பிரச்சினையில் இருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்றால், உங்க

சுமார் 50 வயதுடைய ஒரு பெண்மணி நாடியில் பலன்கேட்க வந்திருந்தார். அவரை அமரவைத்து, "என்ன விஷயமாகப் பலன்கேட்க வந்துள்ளீர்கள்' என்றேன்.

அந்தப் பெண்மணி தயங்கித் தயங்கி, கூறத் தொடங்கினார். "நான் ஒரு நோயினால், பெரிதும் சிரமத்தை அனுபவித்துவருகிறேன். முற்பிறவிகளில் என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை.

பெண்களுக்கே உரிய நோயான "பெரும்பாடு நோய்'தான், என்னைப் பாடாய்ப்படுத்துகிறது. எனக்கு 45 வயதிலேயே மாதவிடாய் நின்றுவிட்டது. ஐந்து வருடத்தில் பல மாதங்கள் எந்த பிரச்சினையும் இருக்காது.

சில மாதங்கள் சென்றபிறகு, திடீரென்று மாதவிடாய் உண்டாகி, 20 நாட்கள் வரைகூட ரத்தப் போக்கு நிற்காமல் வந்து, கஷ்டப்படுத்தும். அந்த சமயங்களில் மருந்துகள் சாப்பிட்டாலும் குறையாது. என் உடம்பிலுள்ள ரத்தம் எல்லாம் போய், எனக்கு ரத்த சோகை உண்டாகிவிட்டது.

Advertisment

ags

ஒரு பெண் டாக்டர் மட்டும், இந்த பிரச்சினையில் இருந்து நீங்கள் விடுபடவேண்டும் என்றால், உங்கள் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை செய்து, எடுத்து விடவேண்டும். இல்லையென்றால், கர்ப்பப்பையில் புற்று நோய் உண்டாகிவிடும் என்றார். ஆனால் கர்ப்பப்பையை அறுவை சிகிச்சை செய்துகொள்ள எனக்கு விருப்பம் இல்லை. மேலும் அவர்கள் கேட்கும் பணத்தைக் கொடுக்கும் அளவு பண வசதியும் இல்லை. அதனால் தான், என் பிரச்சினை, நோய் தீர அகத்தியரிடம் வழிகேட்டு வந்துள்ளேன்'' என்றார்.

Advertisment

ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன்.

ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

இந்த மகள் தன் நோய் பற்றியும், அதனால் அனுபவிக்கும் பிரச்சினைகளையும் பற்றிக் கூறி, அதற்குத் தீர்வுகேட்டு வந்துள்ளேன் என்றாள். மனித வாழ்வில் பிரச்சினைகள் உருவாகும்போதே, அதற்குரிய தீர்வும் அதனுடனேயே உருவாகிவிடுகின்றது. தீர்வு தெரிந்தவன், சுலபமாக அதனைத் தீர்த்துக்கொள்கிறான்.

அறியாதவன் அங்கேயும், இங்கேயும் அலைந்துகொண்டு இருக்கிறான்.

இந்த நோய் இவளுக்கு வந்ததற்கு, முற்பிறவி பாவ- சாபம் எதும் காரணமில்லை. பொதுவாக இந்த நோய், வயது முதிர்ந்த பெண்களுக்கும் வரும். திருமண மாகாத இளம்வயது பெண்களுக்கும் வந்து அவஸ்தை தரும்.

இந்த ரத்தப் போக்கு ஒன்பது வகையான மூல நோயில் ஒன்றுதான். காது துவாரம் வழியாக, மூக்கு துவாரம் வழியாக, ஆசனவாய் வழியாக, வாந்தி எடுக்கும்போது, ரத்தமாக வாந்தி எடுத்தல் போன்று உடலில் உள்ள ஒன்பது துவாரங்களில் வலி, சிரமம் இல்லாமல், ரத்தம் வந்தால், அது மூலநோய் வகையைச் சேர்ந்தது என்பதை நீயும் அறிந்துகொள்.

உடலிலுள்ள ஒரு உறுப்பு, சரியாக செயல்படவில்லையென் றால், அறுத்து, எடுத்துவிடுவது மாற்று மருத்துவமுறை. அந்த உறுப்பை சரிசெய்து, மறுபடியும் சரியாக இயங்கச் செய்வது, சைவத் தமிழ் சித்தர்கள் கூறிய மூலிகை தமிழ் வைத்தியம்.

இவள் அறுவை சிகிச்சை செய்து கர்ப்பப்பையை அகற்ற வேண்டாம். இந்த நோய் தீர நான் கூறும் மூலிகையையும், பயன்படுத்தும் முறையையும் கூறுகிறேன். அதை முறையாகச் சாப்பிடச் சொல்.

நாவல் மரத்துப்பட்டை, மருத மரத்துப்பட்டை துவர்ப்பு சுவை கொண்டது. இந்த துவர்ப்பு சுவை ரத்தப் போக்கை கட்டுப்படுத்தி நிறுத்தும் என்று கூறி, அதைப் பயன்படுத்தும் முறையையும் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

சாப்பிடும் முறை

100 கிராம் அளவு நாவல் பட்டையை, ஒரு லிட்டர் நீரில் இட்டுக் காய்ச்சி, 300 மில்லியாகச் சுண்டச்செய்து, இதில் 60 மில்லி அளவு நீரை ஒரு நாளைக்கு ஐந்து முறை சாப்பாட்டிற்குமுன்பு குடித்துவந்தால் இரண்டு, மூன்று நாட்களில் ரத்தப் போக்கு சரியாகும்.

மருத மரத்துப் பட்டையை, 100 கிராம் அளவு எடுத்து, அதை பால்விட்டு, சந்தனம்போல் அரைத்து, அந்த விழுதை 100 மில்லி பாலில் கலந்து, சாப்பாட்டிற்குமுன்பு குடித்து வந்தால் இரண்டு, மூன்று நாளில் ரத்தப் போக்கு நின்று விடும். இதே அளவு ஒரு நாளில் ஐந்து முறை குடிக்க வேண்டும்.

அகத்தியர் கூறியதைக் கேட்ட அந்தப் பெண்மணி நன்றி கூறிவிட்டு, இன்னும் ஒரு கேள்விக்கு அகத்தியரிடம் கேட்டு வழிகூறுங்கள் என்றவர், எனது கடைசி தங்கைக்கு கர்ப்பப்பையில் நீர்கட்டி உள்ளது என்று கூறி, இப்போது சிகிச்சை பெற்றுவருகின்றாள். அவள் கர்ப்பப்பை நீர்கட்டிகள் கரைந்து, சரியாக வழிகூறுங்கள் என்றார்.

ஜீவநாடியில் தன்னை நாடிவந்த ஜீவனுக்கு மட்டுமே அகத்தியர் வழிகாட்டுவார். எங்கேயோ இருந்துகொண்டு தனக்கு வழி காட்டவேண்டும் என்பவர்களுக்கு வழி காட்டமாட்டார். அல்லது சரியான வழிமுறைகளைக் கூறாமல், எதையாவது கூறிவிட்டு சென்றுவிடுவார். பிரச்சினை உள்ளவர்களோ அல்லது அவர்களைப் பெற்றவர்களோ நேரில்வந்தால் மட்டுமே சரியான வழியைக் கூறுவார். உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் என பலன் கேட்டுவந்தால் சரியான பலனைக் கூறமாட்டார். உங்கள் தங்கையை வரச்சொல்லுங்கள். ஓலையைப் படித்து கூறுகின்றேன் என்று கூறி அனுப்பி வைத்தேன்.

அந்தப் பெண்மணி தன் நோய்தீர வழி கிடைத்த மகிழ்ச்சியில் நன்றி கூறி விடைபெற்றுச் சென்றார்.

செல்: 99441 13267

bala070225
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe