Advertisment

ஆதி குருவை அறியச் செய்த அகத்தியர்! -சித்தர்தாசன் சுந்தர்ஜி ஜீவநாடி (ஊழ்வினை ஆய்வு) ஜோதிடர்

/idhalgal/balajothidam/agasthiyar-who-made-adi-guru-known-chittardasan-sundarji-jeevanadi-astrology

சுமார் 40 வயதுடைய ஒருவர், நாடியில் பலனறிய வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.

"ஐயா, என் வாழ்நாளில் இதுவரை யாருக்கும் மனமறிந்து தீமை-கெடுதல் செய்தது இல்லை. எனக்கு இதுவரை சரியான தொழில், வருமானம் இல்லை. எதனைச் செய்தாலும் தடையாகின்றது. சரியான தொழில் அமையவில்லை. திருமணமும் தடையாகிக்கொண்டே வருகிறது. எனது முன்னோர் தேடிவைத்த வீடு, நிலம் கொஞ்சம் உள்ளது. அதில் பாடுபட்டு வாழ்ந்துவருகிறேன். இதுவரை எனது சுய சம்பாத்தியம் என்று எதுவுமில்லை.

இந்த நிலைக்கு காரணமறிய ஜோதிடர் களிடம், ஜாதகப் பலன் பார்த்தபோது, கிரகநிலை, குலதெய்வ கோபம், தெய்வ சாபம், முற்பிறவி பாவ- சாப- தோஷமென்று எதையெதையோ கூறி, கோவில் சாந்தி பரிகாரம் கூறி செய்யச் சொன்னார்கள். அவர்கள் கூறிய அனைத் தையும் எங்கெங்கோ அலைந்து, கூறியபடி செய்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை. பணமும் நேரமும்தான் செலவானது.

Advertisment

aa

ஒரு ஜோதிடர், என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, நீ முன்ஜென்மத்தில் குருவிற்கு செய்த துரோகத்தினால் உண்டான குர

சுமார் 40 வயதுடைய ஒருவர், நாடியில் பலனறிய வந்திருந்தார். அவரை அமர வைத்து, "என்ன காரியமாகப் பலன்கேட்க வந்தீர்கள்' என்றேன்.

"ஐயா, என் வாழ்நாளில் இதுவரை யாருக்கும் மனமறிந்து தீமை-கெடுதல் செய்தது இல்லை. எனக்கு இதுவரை சரியான தொழில், வருமானம் இல்லை. எதனைச் செய்தாலும் தடையாகின்றது. சரியான தொழில் அமையவில்லை. திருமணமும் தடையாகிக்கொண்டே வருகிறது. எனது முன்னோர் தேடிவைத்த வீடு, நிலம் கொஞ்சம் உள்ளது. அதில் பாடுபட்டு வாழ்ந்துவருகிறேன். இதுவரை எனது சுய சம்பாத்தியம் என்று எதுவுமில்லை.

இந்த நிலைக்கு காரணமறிய ஜோதிடர் களிடம், ஜாதகப் பலன் பார்த்தபோது, கிரகநிலை, குலதெய்வ கோபம், தெய்வ சாபம், முற்பிறவி பாவ- சாப- தோஷமென்று எதையெதையோ கூறி, கோவில் சாந்தி பரிகாரம் கூறி செய்யச் சொன்னார்கள். அவர்கள் கூறிய அனைத் தையும் எங்கெங்கோ அலைந்து, கூறியபடி செய்தேன். ஆனால் எந்த பலனும் இல்லை. பணமும் நேரமும்தான் செலவானது.

Advertisment

aa

ஒரு ஜோதிடர், என் ஜாதகத்தைப் பார்த்துவிட்டு, நீ முன்ஜென்மத்தில் குருவிற்கு செய்த துரோகத்தினால் உண்டான குரு சாபம் இந்தப் பிறவியில் பாதிப்பைத் தந்து அனுபவிக்கச் செய்கிறது. இந்த சாபம் நிவர்த்தியாக மடாதிபதிகள், குருமார்களை அணுகி, அவர்களிடம் ஆசீர்வாதமும், தீட்சையும் பெற்றால், இந்த சாபம் தீரும், உன் வாழ்வில் பிரச்சினைகள் தீர்ந்து நன்மையுண்டாகும் என்று கூறினார்.

Advertisment

பாரம்பரியமாக உள்ள ஆச்சாரியார்கள், மடாதிபதிகள் பீடத்திற்கு சென்றேன். அவர்கள் குருவிற்கும், மடத்திற்கும், காணிக்கையாக பணம், நிலம், பொருட்களை தானமாகக்கொடு என்று கேட்டு வாங்கினார்கள். தினமும் பூஜைக்கு, பொருட்களை வாங்கித்தரச் சொன்னார்கள். தீட்சை மந்திரம் என்று தெய்வ நாமங்களைக் கூறிவரச் சொன்னார்கள். அதனை இன்றுவரை செய்துவருகிறேன். மடத்திற்கு வந்து, மடத்து வேலைகளைச் செய்யச் சொன்னார்கள். மேலும் தெருவில் பார்க்கும் சாமியார்களுக்கு பணம், சாப்பாடு தந்தேன். ஆனால் பணம்தான் விரயமானதே தவிர, எந்த பலனும் இல்லை; குரு கடாட்சமும் இல்லை.

"பாலஜோதிடம்' புத்தகத்தை நீண்ட நாட்களாக வாங்கிப் படித்துவருகின்றேன். உங்கள் கட்டுரையைப் படித்தது இல்லை. கடந்த நான்கு வாரமாக, உங்கள் கட்டுரையைப் படித்தேன். அதன்பிறகு ஜீவநாடி ஓலையில், குரு சாபம் நிவர்த்தியாக வழிகாட்டும் குரு யார்? என்பதைக் கேட்டுத் தெரிந்துகொள்ளவே, அகத்தியரை தேடி, நாடி வந்துள்ளேன்'' என்றார்.

அவரின் அனுபவங்களையெல்லாம் பொறுமையாகக் கேட்டுவிட்டு ஜீவநாடி ஓலையைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினேன். ஓலையில் அகத்தியர் எழுத்துவடிவில் தோன்றி பலன்கூறத் தொடங்கினார்.

"குருவென்றும் சீடரென்றும் மிங்கு சீவனத்திற் கங்கல்லோ காணே'' என்றார்.

இந்தக் கலிகாலத்தில், குரு, சீடன், மடாதிபதி, பீடாதிபதி என்றுக் கூறிக்கொண்டு, கும்பலைக் கூட்டி, தன்னைப் பெரிய ஞானி, மகான், அளப்பறிய சக்தி பெற்றவர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் அனைவரும், தன்னை நம்பி, மதித்துவரும் மக்களிடம், பணம், பொருள் பறித்து, தாங்கள் சுகமாக வாழ்வதற்குத்தான், அவர்கள் குறைகளைத் தீர்ப்பதற்கு அல்லவென்று இவனைப் புரிந்துகொள்ளச் சொல்.

குருவென்பவன், இந்த பூமியில் இல்லாததை, நிரூபிக்க முடியாததை வாழ்வில் அனுபவித்து, அறிந்து, தெரிந்துகொள்ள முடியாததையெல்லாம், இருப்பதாகக் கூறி, பொய் சொல்லி, ஏமாற்று வேலைகளைச் செய்து நம்பச் சொல்வான். இந்தக் குருமார்கள், பார்ப்பதற்கு மிகச் சாதுவான தோற்றத்துடன் இருப்பார்கள். ஆனால் ஏமாற்று வேலைகளைச் செய்வார்கள். பொருள் பறிக்கும் வஞ்சக குணம் கொண்டவர்கள். இவர்கள் செய்யும் பூஜைகள் எல்லாம் பெண்ணாசை, பொன்னாசை, பூமி பொருள் ஆசையால்தான்.

இவனுக்கு ஆதி குருவைக் கூறுகின்றேன். அறிந்து வாழச்சொல்.

"விந்துநிலை தலையறிந்து விந்தைக் கண்டால்

விதமான நாதமது குருவாய்ப் போகும்

அந்தமுள்ள நாதமது குருவாய்ப் போனால்

ஆதி அந்த மானகுரு நீயே யாவாய்'' என்றார்.

(விந்து- மனிதன்) (நாதம்- அனுபவம்)

ஒரு மனிதன், தன் வாழ்க்கை செயல்களில், தனக்கு நன்மை- தீமைகளைத் தருவது எது என்பதை தன் கடந்தகால செயல்கள்மூலம் உண்டான அனுபவங்களை ஆராய்ந்து, செய்த தவறுகளை உணர்ந்து அறிந்து, வருங்கால செயல்களில் செயல்படாமல், எதை? எப்படி செய்தால் நன்மை, வெற்றியை அடையலாம் என்று அறிவால் அறிந்துசெய்தால் எந்த பாவ- சாபமும், கிரகமும் பாதிப்பைத் தராது என்பதை அறிந்துகொள்ளட்டும்.

மனிதர்கள் இதுவரை, தங்கள் அனுபவித்தினாலேயே அனைத்தையும் அடைந்தார்கள். மனிதர்களின் "ஆதி குரு' அவரவர் வாழ்வின் செயல்கள்மூலம் உண்டாகும் அனுபவம்தான். அனுபவ அறிவுதான் குரு.

இதுநாள்வரை இவன் காரியம், செயல்களுக்குத் தடை ஏற்பட்ட காரணம், இவனின் தவறான நம்பிக்கையும், இவன் செயல்பட்ட தவறான வழிமுறையும் தான் காரணம். இவன் தனக்கு நன்மை எது? தீமை எது? என்று அறிவால் அறிந்து, அனுபவ அறிவால் செயல்பட்டு வாழ்ந்தால் வாழ்வில் உயர்வடைவான் என்று கூறிவிட்டு, மேலும் அவர் திருமணத்தடைக்கு காரணத்தையும், தடை விலகி திருமணம் நடைபெற வழிமுறை களையும், தொழில் சம்பந்தமான விவரங்களை யும் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

ஆன்மிகம், பக்தி, பரிகாரம், குரு, மடம் என்று இல்லாததையெல்லாம் இருப்பதாக அவர்கள் கூறியதை நம்பி செயல்பட்டு, நம்பிக்கையில் வாழ்ந்து, பணம், பொருள் இழந்தேன். எனது குரு என்னுள்ளேதான் இருக்கின்றார். வெளியில் இல்லை. "தன்னையறிய தனக்கொரு கேடில்லை'' என்பதைப் புரிந்துகொண்டேன் என்று கூறி, என்னிடம் விடைபெற்று சென்றார். ஆதிகுருவைப் பற்றிய உண்மையை நானும் அறிந்துகொண்டேன்.

செல்: 99441 13267

bala180425
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe