ஒருவர் சட்ட நிபுணராகவோ, வழக் கறிஞராகவோ வருவதற்கு படிப்பு, திறமை வேண்டுமென்றாலும், சில கிரகங்களின் உதவியும் தேவைப்படுகிறது.
சட்டத்துறையில் புகழுடன் இருப் பதற்கு ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும்.
அப்படி இருந்தால், அவர் ஆழமான சிந்தனை கொண்டவராக இருப்பார். 2-ஆம் பாவாதிபதி நல்ல நிலையில் இருந்தால் நல்ல பேச்சுத் திறமை இருக்கும்.
அதை செயல்வடிவில் கொண்டுவர 10-ஆம் பாவாதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும். அதற்குக் கேந்திரத்தில் அல்லது 10-ஆவது பாவத்தில் குரு இருந்து, 2-ஆம் பாவத்தைப் பார்க்க வேண்டும் அல்லது 2-ஆம் பாவாதி பதியைப் பார்க்கவேண்டும். இத்தகைய ஜாதக அமைப்புடையவர் திறமையான வழக்கறிஞராக இருப்பார். நிறைய பணம் சம்பாதிப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியும், 7-ஆம் அதிபதியும் 2-ஆம் அதிபதியுடன் 11-ல் இருந்து, அதை குரு 7-ல் இருந்து பார்த்தால், ஜாதகர் நன்கு சம்பாதிக்கக்கூடிய வழக்கறிஞராக இருப்பார்.
லக்னத்தில் சந்திரன், 2-ல் குரு, 5-ல் சுக்கிரன், கேது, 6-ல் சூரியன், சனி, புதன் இருந்தால், ஜாதகர் தைரிய மாகப் பேசக்கூடியவர். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, வழக்கைத் தன்பக்கம் திருப்பும் திறமைவாய்ந் தவராக
ஒருவர் சட்ட நிபுணராகவோ, வழக் கறிஞராகவோ வருவதற்கு படிப்பு, திறமை வேண்டுமென்றாலும், சில கிரகங்களின் உதவியும் தேவைப்படுகிறது.
சட்டத்துறையில் புகழுடன் இருப் பதற்கு ஒருவர் ஜாதகத்தில் லக்னாதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும்.
அப்படி இருந்தால், அவர் ஆழமான சிந்தனை கொண்டவராக இருப்பார். 2-ஆம் பாவாதிபதி நல்ல நிலையில் இருந்தால் நல்ல பேச்சுத் திறமை இருக்கும்.
அதை செயல்வடிவில் கொண்டுவர 10-ஆம் பாவாதிபதி நல்ல நிலையில் இருக்கவேண்டும். அதற்குக் கேந்திரத்தில் அல்லது 10-ஆவது பாவத்தில் குரு இருந்து, 2-ஆம் பாவத்தைப் பார்க்க வேண்டும் அல்லது 2-ஆம் பாவாதி பதியைப் பார்க்கவேண்டும். இத்தகைய ஜாதக அமைப்புடையவர் திறமையான வழக்கறிஞராக இருப்பார். நிறைய பணம் சம்பாதிப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் லக்னாதிபதியும், 7-ஆம் அதிபதியும் 2-ஆம் அதிபதியுடன் 11-ல் இருந்து, அதை குரு 7-ல் இருந்து பார்த்தால், ஜாதகர் நன்கு சம்பாதிக்கக்கூடிய வழக்கறிஞராக இருப்பார்.
லக்னத்தில் சந்திரன், 2-ல் குரு, 5-ல் சுக்கிரன், கேது, 6-ல் சூரியன், சனி, புதன் இருந்தால், ஜாதகர் தைரிய மாகப் பேசக்கூடியவர். சூழ்நிலையைப் புரிந்து கொண்டு, வழக்கைத் தன்பக்கம் திருப்பும் திறமைவாய்ந் தவராக இருப்பார். நிறைய பணம் சம்பாதிப்பார்.
லக்னத்தில் சூரியன், புதன், 2-ல் சனி, 4-ல் கேது, 5-ல் ராகு இருந்தால், அவர் ஆழமான சிந்தனை கொண்டவர்; திறமையாகப் பேசக்கூடியவர்; தைரியம் உள்ளவர். வழக்கினை எப்படி முடிக்கவேண்டும் என்பதைப் பற்றி முன்கூட்டியே தீர்மானித்து செயலாற்றுவார்.
லக்னத்தில் சூரியன், புதன், 2-ல் சுக்கிரன், 10-ல் சந்திரன், செவ்வாய் இருந்தால், ஜாதகர் பெரிய வழக்கறிஞராக புகழுடன் இருப்பார்.
லக்னத்தில் சந்திரன், 2-ல் சூரியன், 3-ல் புதன், 10-ல் குரு இருந்தால், அவர் திறமைசாலிலியான, நியாயமாக வாதாடக்கூடிய வழக்கறிஞராக இருப்பார்.
லக்னாதிபதி, சனி, சுக்கிரனுடன் 8-ல் இருக்க, 6-ஆம் பாவத்தில் சூரியன் இருந்தால், அவர் நன்கு தொழில்புரியக்கூடிய வழக்கறிஞராக இருப்பார். எதையும் தைரியமாகப் பேசுவார். நிறைய வெற்றி களைக் காண்பார்.
2-ஆம் பாவத்தில் சனி, செவ்வாய், சுக்கிரன் இருந்து, 10-ஆம் வீட்டில் குரு, 11-ல் சூரியன், புதன் இருந்தால் ஜாதகர் திறமைவாய்ந்த வழக்கறிஞராக இருப்பார்.
ஒருவரின் ஜாதகத்தில் 2-ல் சனி, 3-ல் குரு, 5-ல் சந்திரன், 10-ல் செவ்வாய் இருந்தால், அவர் கடுமை யாக உழைக்கக்கூடியவர். பேச்சுத்திறமை கொண்டவர். புகழ்பெற்ற வழக்கறிஞராக விளங்குவார்.
4-ல் ராகு; 6-ல் சுக்கிரன், குரு; 7-ல் செவ்வாய், புதன், சூரியன்; 12-ல் சந்திரன் இருந்தால், அந்த ஜாதகர் சட்டம் படித்து, புகழ்பெற்ற வழக் கறிஞராக இருப்பார். தனக்குக் கீழே பலரையும் வைத்து தொழில் நடத்துவார். தான் அதிகமாகப் பணிசெய்யாமல், பிறரைப் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பார்.
லக்னத்தில் உச்ச சந்திரன், 7-ல் சுக்கிரன், 8-ல் செவ்வாய், சனி, சூரியன் இருந்தால், அவர் கடுமையாக உழைக்கக்கூடியவர். பேச்சுத்திறமை மிக்க வழக்கறிஞராக விளங்குவார். தன் தொழிலிலில் நிறைய வெற்றிகளைக் காண்பார்.
2-ல் சந்திரன், 4-ல் கேது, 7-ல் குரு, 8-ல் செவ்வாய், 12-ல் சூரியன் இருந்தால், அந்த ஜாதகர் தன் வாழ்க்கையின் இரண்டாவது பகுதியில் வழக்கறிஞர் பணி செய்து நிறைய பணம் சம்பாதிப்பார். பிறரை மதிக்கும் குணமிருக்காது. நிறைய பேசக்கூடியவராக இருப்பார்.
2-ல் கேது, 4-ல் குரு, 10-ல் புதன், சூரியன், செவ்வாய், சனி இருந்தால், அவர் ஏராளமான பணத்தைச் சம்பாதிக்கும் வழக்கறிஞராக இருப்பார்.
லக்னத்தில் சந்திரன், ராகு; 2-ல் சூரியன்; 3-ல் சனி, செவ்வாய், சுக்கிரன், புதன்; 7-ல் கேது; 9-ல் குரு இருந்தால், அந்த ஜாதகர் தன் காரியத்தில் எப்போதும் கண்ணாக இருப்பார். எதையும் சரியாக முடிப்பார். எதிரணியினர் பேசமுடியாத அளவுக்கு தைரியமாக வழக்கை நடத்துவார். நிறைய பணம் சம்பாதிப்பார்.
பரிகாரங்கள்
தினமும் சரஸ்வதியையும் துர்க்கையையும் வணங்கவேண்டும். வெள்ளிக்கிழமை துர்க்கை ஆலயத்திற்குச் சென்று தீபமேற்றவேண்டும்.
தெற்கு அல்லது கிழக்கில் தலைவைத்துப் படுக்கவேண்டும்.
தன் லக்னாதிபதி மற்றும் 9-க்குரிய கிரகத்தின் ரத்தினத்தை அணியலாம்.
வீட்டில் அடர்த்தியான பச்சை, கறுப்பு, ப்ர வுன் போன்ற நிறங்களைத் தவிர்க்கவேண்டும்.
தினமும் ஆஞ்சனேயரை நான்குமுறை சுற்றிவந்து வழிபடவேண்டும்.
சனிக்கிழமை பைரவர் ஆலயத்திற்குச் சென்று, ஒரு தீபமேற்றி வழிபடுவது நன்று.
செல்: 98401 11534
______________
முத்தான மூன்று ஹோமங்கள்!
வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் மார்கழி மாதப் பௌர்ணமியை முன்னிட்டு, 10-1-2020 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிமுதல் 12.00 மணிவரை கந்தர்வராஜ ஹோமம், சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் சந்தான கோபால யாகம் ஆகிய மூன்று ஹோமங்கள் நடைபெறவுள்ளன.
திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி செய்யப்படும் ஹோமமே கந்தர்வராஜ ஹோமமாகும். இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதகரீதியாக உள்ள தோஷங்களும், கிரகரீதியாக உள்ள தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற வழிவகை செய்யும் ஹோமமே சுயம்வரகலா பார்வதி ஹோமம். இது பார்வதி தேவியை வேண்டி செய்யப்படுவதாகும். இந்த ஹோமத்தில் சொல்லப்படும் மந்திரம் பார்வதி தேவியே சிவபெருமானைப் போற்றிக் கூறியதென்றும், அந்த ஹோமத்தைச் செய்ததன் விளைவாக பார்வதி தேவி சிவபெருமானை மணந்ததாகவும் புராணங்களில் கூறப்படுகிறது. இதில் கலந்துகொள்ளும் திருமணமாகாத பெண்களுக்கு திருமணத்தடை விலகி விரைவில் திருமணம் ஈடேறும்.
ஒரு திருமணத்தின் முக்கியத்துவம் குழந்தைப்பேறுதான். ஆனால் சில தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைப்பதில்லை. குழந்தையின்மைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். அத்தகைய தோஷங்கள் நிவர்த்தியாகி, தம்பதிகள் விரைவில் குழந்தை பாக்கியம் பெற பகவான் கிருஷ்ணரை வேண்டி செய்யப்படும் ஹோமமே சந்தான கோபால ஹோமம் ஆகும். இதில் பங்கேற்று கிருஷ்ணரின் ஆசிகள் பெற்று குழந்தை வரம் பெறலாம்.
மேலும் விவரங்களுக்கு:
ஸ்ரீதன்வந்திரி ஆரோக்கிய பீடம், அனந்தலை மதுரா, கீழ்ப்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை- 632 513.
ராணிப்பேட்டை மாவட்டம், தொலைபேசி: 04172- 230033, 230274. அலைபேசி: 94433 30203.
Email : danvantripeedam@gmail.com