ஜாதகம் பார்க்க ஜோதிடரை அணுகும் பலர்,“ "என்ன பாவம் செய்தேன்- எனக்கு விடிவுகாலம் உண்டா?' என்ற கேள்வியே கேட்கிறார்கள். ஜாதகரின் மன உளைச்சல், துயரம் அந்தக் கேள்வியைக் கேட்கவைக்கிறது. விடிவு காலம் பெறச் செய்யமுடியும் என்பதே இந்த கட்டுரை.
முதலில் கர்மவினை என்றால் என்னவென்பதைக் காண்போம்.
கர்மா என்றால் வினைப்பயன். ஒருவர் செய்யத நல்ல- தீயசெயல்களின் பிரதிபலன். லக்னத்திற்கு 10-ஆம் இடம் கர்மஸ்தானம். இந்த 10-ஆம் இடமே ஜாதகரின் பாவ- புண்ணியங்களைக் குறிக்கும் இடமாகும். காலபுருஷ 10-ஆம் அதிபதியான சனியே கர்மக்காரகன் ஆவார்.
ஒருவரின் கர்மவினையை முழுமையாக அனுபவிக்க உதவுபவர் சனியே. ஒருவரின் வாழ்வில் ஏற்படும் எல்லா சம்பவங்களையும் தனக் குள் பதிவுசெய்து தக்க காலகட்டத்தில் பலனை வழங்குபவர். மனிதர்களின் அனைத்துக் கர்மவினைகளும் சனி கிரகத்தில்தான் பதிவாகி இருக்கும். இவர் கர்மவினையை நிகழ்த்த உதவுபவர்கள் இவரின் பிரதிநிதியான ராகு- கேதுக்கள். முன்ஜென்மத்தில் ஒருவர் செய்த கர்மா என்னவென் பதை கேது சுட்டிக்காட்டும். முன் ஜென்மத்தில் செய்த கர்மாவிற்கு என்ன பலன் என்பதை ராகு சுட்டிக்காட்டும். முற்பிறவில் செய்த பாவ- புண்ணியங்களுக்கேற்ப பலனைப் பெற்றுத்தருபவர் சனி பகவான் .
மனிதன், தன் வாழ்நாளில் மூன்று வகையான கர்மவினைகளை அனுபவிக்கிறான். அவை-
1. சஞ்சித கர்மா
ஒரு கரு உருவாகும்போதே உடன் உருவாவது. அதாவது தாய்- தந்தை, முன்னோர்களிடமிருந்தும், ஆத்மா பல ஜென்மங்களில் செய்த பாவ- புண்ணியத்தாலும் இந்தப் பிறவியில் பற்றிக்கொள்ளும் கர்மவினையாகும்.
2. பிராரப்த கர்மா
ஒரு ஆன்மா பல பிறவிகளில் செய்த பாவ- புண்ணியப் பலன் மூலம், இந்தப் பிறவியில் கிடைக் கக்கூடிய நன்மை- தீமையாகும். இதையே வேறுவிதமாகச் சொன்னால் பிராப்தம், விதி, கொடுப்பினை என கூறலாம். இந்த கர்மாவால் வரும் பலனையும் இந்தப் பிறவிலேயே அனுபவிக்க வேண்டும்.
3. ஆகாமிய கர்மா
மேற்கூறிய இரண்டு கர்மாக் களை கழிக்கச்செய்யும் செயல் கள்மூலம் இப் பிறவியில் வாழும் காலத்தில், ஆசைகளால் பிறருக்குச் செய்யும் நன்மை- தீமைகளால் வருவது.
இவ்விதமாக மூன்றுவகையான கர்மாக்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன.
இந்த கர்மவினைகளிலிருந்து யாரும் தப்பமுடியாது. மனிதன், தன் வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், குழப்பங்கள், எதிர்ப்புகள், நஷ்டங்கள், கடன்கள், பிரிவினைகள், விபத்துகள், நோய்கள், துன்பங் கள், துயரங்கள் அனைத்தும் மேலே கூறிய கர்மவினைத் தாக்கத்தால் வருபவை.
பல பிறவிப் பாவம் என்று கூறுகிறார்களே- பல பிறவியில் ஆத்மா என்ன பாவம் செய்தது என்பதை அறியமுடியுமா?
கர்மக்காரன் சனி என்றால், சனிக்கு திரிகோணத்திலுள்ள கிரகங்களே முன்ஜென் மங்களில் செய்த கர்மவினையை உணர்த்தும் கிரகங்கள். சனிக்கு திரிகோணத்தில் அதிக கிரகங்கள் இருந்தால் பாவம் அதிகம் செய்த வர்கள் என்றும், குருவுக்கு திரிகோணத்தில் அதிக கிரகம் இருந்தால் புண்ணியம் அதிகம் செய்தவர்கள் என்றும் உணரலாம்.
கிரகங்களை சுப கிரகம், அசுப கிரகம் என இண்டாக வகைப்படுத்தலாம்.
சுபகிரகங்கள்: குரு, சுக்கிரன், புதன். அசுப கிரகங்கள்: சூரியன், சந்திரன், செவ்வாய், சனி, ராகு- கேது. கர்மக்காரகன் சனிக்கு திரிகோணத்தில் சுபகிரகங்களான குரு, சுக்கிரன், புதன் இருந் தால், ஜாதகர் கணக்கிலடங்கா புண்ணியம் செய்தவர் என அறியலாம். சனிக்கு திரிகோணத்தில் சுப- அசுப கிரகங்கள் என கலந்திருந்தால் ஜாதகர் பாவ- புண்ணியம் இரண்டும் செய்தவர் என அறியலாம். பல ஜாதகங்களில் பாவ, புண்ணியங்கள் கலந்தே இருக்கும்.
சனிக்கு திரிகோணத்தில் பாவகிரகங்கள் மட்டும் இருந்தால், அளவிட முடியாத பாவங் களைச் செய்தவர் என்பதை அறியமுடியும். சனிக்கு திரிகோணத்தில் நிற்கும் கிரகங்கள்மூலம் என்ன பாவம்- புண்ணியம் செய்திருக்காலம் என காணலாம்.
சூரியன்
சனிக்கு திரிகோணத்தில் சூரியன் நின்றால், தந்தைக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யத் தவறியது, கொடுமைப்படுத்தியது, பொறுப்புகளை தட்டிக் கழித்தல், ஆண் வாரிசுகளை சரியாக கவனிக்காமல் விட்டு விடுதல், ராஜ துரோகம், அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியது, சிவாலயங்களை அசுத்தம் செய்தது, ஒருவருக்கு கண் பார்வை போகக் காரணமாக இருந்தது, முதலாளிக்கு துரோகம் செய்தது போன்றபாவங்களைச் செய்திருக்க லாம். அதன்பலனாக, இந்தப் பிறவியில் தந்தையின் ஆதரவு கிடைக்காமல்போவது, தந்தை- மகன் கருத்து வேறுபாடு, பார்வைக் குறைபாடு, ஆண் வாரிசு இன்மை, அரச தண்டனை அல்லது அரசின் ஆதரவின்மை, முதலாளியால் தொல்லை அல்லது உழைப்பிற்கேற்ற ஊதியம் இன்மை அல்லது சரியான தொழில், வேலை அமையாமல் போவது போன்ற அசுபப் பலன் மிகுதியாக இருக்கும்.
ஜனனகால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத் தில் சூரியன் இருந்தால் அல்லது சூரியன், சனி இணைவிருந்தால் செய்ய வேண்டிய பரிகாரம்:
தந்தையை நல்ல முறையில் பராமரித்தல், தந்தை ஸ்தானத்தில் இருப்பவருக்கு வேண்டிய உதவிகள் செய்தல், பார்வைக் குறைபாடு உள்ளவர்களின் வைத்தியத்திற்கு உதவுதல், சிவாலயங்களில் உழவாரப்பணி செய்தல், சிவாலயங்களில் விளக்கேற்ற எண்ணெய் தானம் செய்தல் போன்ற புண்ணியச் செயல் களைச் செய்தால் சுபப் பலன் மிகும்.
சூரியன், சனி சம்பந்தத்தால் உயிரணு குறைபாடு இருந்து, குழந்தை பிறக்கவில்லை என்றால், தொடர்ந்து ஒரு வருடம்கோசாலை யைப் பராமரிக்க வேண்டும் அல்லது தினமும் இரண்டு மணி நேரம் கோசாலையில் அமர்ந்து சிவபஞ்சாட்ரம் பாராயணம் செய்யவேண்டும்.
சந்திரன்
சனிக்கு திரிகோணத்தில் சந்திரன் இருந்தால், தாயைப் பராமரிக்கத் தவறியது, இழிவுபடுத் தியது, கலப்படமான உணவுப் பொருளை விற்றது, ஒருவருக்கு இடு மருந்து செய்தது, அம்மன் உபாசகர்களை அவமதித்தது, அம்மன் கோவிலை அசுத்தப்படுத்துதல், மாற்றான் மனைவிமீது ஆசைப்படுதல், பெண் குழந்தை களை கவனிக்காமல் விட்டுவிடுதல், பெண்களை அவமதித்தல், கண் பார்வை கெட காரணமாக இருத்தல், விளைநிலங்களை நாசப்படுத்துதல் போன்ற பாவங்களைச் செய்த குற்றத்தின் பதிவாகும். இதன்பலனால், இந்தப் பிறவியில் தாயன்பு கிடைக்காமல்போவது, பெண் குழந்தையின்மை, பெண்களால் அவமானம், வம்பு, வழக்கு, உணவு ஒவ்வாமை, செரிமாணக் கோளாறு, அடிக்கடி ஏற்படும் இடமாற்றம், அலைச்சல் மிகுந்த வேலை, வீண்விரயம், மன உளைச்சல், திருமணத்தடை போன்ற அசுபப் பலன் மிகுதியாகும்.
ஜனனகால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத் தில் சந்திரன் அல்லது சனி, சந்திரன் சம்பந்தமிருப் பவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்:
தாயைப் பராமரித்தல், வயதான பெண் களுக்கு உதவுதல், அம்மன் வழிபாடு, உணவு தானம் செய்யவேண்டும். பிரதோஷ காலங் களில் மாவிளக்குசெய்து சிவனுக்கு நெய் தீபமேற்ற சுபப் பலன் மிகுதியாகும்.
தாய்- தந்தை இல்லாமல் பிறப்பு இல்லை. தாய்- தந்தையின் ஆசியே பல பிறவிப் பாவங்களைக் கடக்க உதவும் எளிய, வலிய பரிகாரம்.
செவ்வாய்
சனிக்கு திரிகோணத்தில் செவ்வாய் இருந்தால், சகோதரனை ஏமாற்றுதல், சகோதரர் களின் சொத்துகளை அபகரித்தல், மற்றவர்களின் பொருளை அபகரித்தல், கால்நடை களைத் துன்புறுத்துதல், கொலைசெய்தல், பிறரை ஏமாற்றிப் பணம் பறித்தல், வாங்கிய கடனைத் திருப்பிக்கொடுக்காமல் ஏமாற்றுதல், பெண்களை பலவந்தமாகக் கற்பழித்தல், வீண் வம்புச்சண்டைக்கு போதல், கணவன்- மனைவி பிரிவினைக்குக் காரணமாக இருத்தல் போன்ற பாவங்களைச் செய்த குற்றத்தின் பதிவு. இதன்பலனாக இந்தப் பிறவியில் சகோதரர்களின் ஆதரவு கிடைக்காமை, சொத்துகள் விரயம், சொத்துகள்மூலம் வம்புவழக்கு, சொத்து பறிபோதல், சரியான தொழில், உத்தியோகமின்மை, கடன் தொல்லை, ரத்த சம்பந்த உறவினர்கள் பகை, ரத்த சம்பந்தமான நோய், உழைப்பிற்கேற்ற ஊதியமில்லாமை, வம்புவழக்கு தேடிவருதல், பணவிரயம் ,கணவன்- மனைவி பிரிவினை ஏற்படும்.
ஜனனகால ஜாதகத்தில் சனிக்கு திரிகோணத் தில் செவ்வாய் அல்லது செவ்வாய், சனி சம்பந்தம் இருப்பவர்கள் செய்யவேண்டிய பரிகாரம்:
பூமி தானம், உடன்பிறந்தவர்களுக்கு உதவிசெய்தல், ரத்த தானம், பிரிந்த கணவன்- மனைவியைச் சேர்த்துவைத்தல் மற்றும் முருகன் வழிபாடுசெய்ய சுபப் பலன் மிகும்.
சனி, செவ்வாய் சம்பந்தத்தால் வீடு, வாகனம் அமைவதில் தாமதம், சொத்து தொடர்பான பிரச்சினை இருந்தால், செவ்வாய்க் கிழமை ராகு வேளையில் முருகனுக்கு மாதுளை கலந்த தயிர் சாதம் நிவேதனம் செய்யவேண்டும். கணவன்- மனைவி பிரிவினை, கருத்து வேறுபாடு மறைய செவ்வாய்க்கிழமை ராகு வேளையில் சிவப்பு வஸ்திரம், அரளி மாலை அணிவிக்கவேண்டும்.
புதன்
சனிக்கு திரிகோணத்தில் புதன் இருந்தால், ஜாதகர் சென்ற பிறவியில் கல்விக் கூடங்களை நிறுவுதல், வித்யா தானம் செய்தல், மரம் நடுதல், விஷ்ணு ஆலயங்களைப் பராமரித்தல், நண்பர்களுக்கு உதவுதல், பூமி தானம் செய்தல், நேர்மையான தொழில் போன்ற புண்ணியச்செயல் செய்தவர். இதன்பலனாக, இந்தப் பிறவில் கல்வியில் சிறந்து விளங்குதல், நண்பர்களின் அன்பு, ஆதரவு, நல்ல நண்பர்கள், தொழில் மேன்மை, தொழில் கூட்டாளி ஆதரவு, நிலபுலன் சேர்க்கை, தாய்மாமன் ஆதரவு கிடைக்கும்.
சனி, புதன் சமசப்தமப் பார்வை, புதனுக்கு அடுத்து சனி இருந்தால், மேற்கூறிய பலன்கள் அசுபமாக நடக்கும். இதற்குப் பரிகாரமாக விஷ்ணு வழிபாடு, பச்சைப் பயறு, சுண்டல் தானம், சக்கரத்தாழ்வார் வழிபாடு ஆகியவை நல்ல பலன் தரும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 98652 20406