ராகு ஏற்படுத்தப் போகும் அதிரடி மாற்றங்கள்! -பிரசன்ன ஜோதிடர் ஐ. ஆனந்தி

/idhalgal/balajothidam/action-changes-rahu-going-make-prasanna-astrologer-i-anandi

பிரபஞ்சத்தால் படைக்கப்பட்ட உயிர்களில் மனிதனைத்தவிர மற்ற அனைத் துயிர்களும் நிம்மதியாக வாழ்வதை உணரமுடியும். ஓரறிவு உயிர்முதல் ஐந்தறிவு வரையுள்ள அனைத்துயிர்களும் பிரபஞ்ச விதிக்குக் கட்டுப்பட்டு வாழ்கின்றன. ஏனென்றால் விதியைமீறி வாழவேண்டுமென்ற ஆறா மறிவு இன்மையால், உயிரினங்கள் பெரிய சிரமங்கள் ஏதுமின்றி தங்கள் வாழ்நாளைக் கழித்துவிடுகின்றன. மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்களே தீர்மானித்துக்கொள்ளும் சுதந்திரத்தை, பிரபஞ்சம் ஆறாம் அறிவுமூலம் வழங்கியுள் ளது. ஆனால் மனிதர்கள் தங்களின் ஆறாமறிவை பிரபஞ்சத்திற்கு எதிராக திசை திருப்புவதால் நிம்மதி யின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்படுகி றார்கள். இதைத்தான் நமது முன்னோர்கள் விதி, கர்மா என்று கூறியுள்ளார்கள்.

நவகிரகங்களின் இயக்கமே உலகமென்றா லும், வருட கிரகங்களான குரு, சனி, ராகு- கேதுவின் இயக்கம் உலக மக்களின் வாழ்வில் பெரும் ஏற்ற- இறக்கத்தை ஏற்படுத்துகிறது. மனிதர்களின் நல்லவை மற்றும் கெட்டவை அனைத்தையுமே தொடர்ந்து கவனித்து வருபவர் ராகுவே.

ராகு ஒரு பய கேமரா போல் செயல்படுப வர். எதையுமே படம்பிடித்து வைக்கும் கிரகம் ராகு. அதனால்தான் இருளில் நடந்த செயல் ஒருநாள் வெளியில் வந்தே தீருமென்று முன்னோர்கள் கூறினர். இருளில் நடப்பவற்றை நிழற்படம் எடுக்கும் கிரகம் ராகுவே.

raghu

ஒருவரின் வெற்றியை நிர்ணயம் செய்வதில் ராகு- கேதுக்களின் பங்கு அளப் பரியது. ஒருவர் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இவைதான் காரணமென்னும் கருத்து பரவலாக நம்பப்பட்டு வருகிறது. ஏனெனில் சர்ப்ப கிரகங்கள் எனப்படும் ராகு- கேதுக்கள், மனிதர்கள் தங்கள் ஊழ்வினையை அனுபவிக் கச் செய்வதில் பெரும்பங்கை தங்கள் கையில் வைத்திருக்கும் வினையூக்கிகள்.

மனித உடலின் ஐம்புலன்களை இயக்கி, புறச் சிந்தனைகளை உருவாக்கி லௌகீக உலகோடு இணைய வைப்பார் ராகு. சிற்றின்ப நாட்டம் மிகுதியாகும் மனிதனே தவறுசெய்வான். ஒருவனை நிலையிழக்கச் செய்ய, அழிக்க அல்லது தவறுசெய்யத் தூண்ட அவனது ஆசை களை அதிகரிக்கவேண்டும். அதனால்தான் மனிதர்கள் தங்கள் ஆறாம் அறிவால் கர்ம வினையை மிகைப்படுத்தவும் குறைக்கவும் முடிகிறது.

ஒருவரின் ஜாதகத்தில் ராகு நின்ற இடம், கடந்த பிறவியில் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசையைக் குறிக்கும்.

ஒரு ஜாதகத்தில் ராகு எந்த இடத்தில் இருக்கிறாரோ அல்லது எந்த கிரகத்துடன் சேர்ந் திருக்கிறாரோ, அந்த கிரக காரகத்துவங்கள், பாவக காரகத்துவ உறவுகள்மூலம் தீராத, நிறைவேறாத, நிறைவேற்றமுடியாத ஆசைகளை ஏற்படுத்துகிறார். இந்த ஜென்மத்தில் எவ்வளவு கொடுத்தாலும் தீராத ஆசையை ஏற்படுத்திக்கொண்டே இருப்பார். ஆசையை அடக்கினால் மட்டுமே துன்பம் தீரும். ஐம்புலன்களையும் அடக்கினால் மட்டுமே ஆசை குறைந்து அகச் சிந்தனைகள் தோன்றி பாவம்- புண்ணியம் பற்றிய சிந்தனைகள் உருவாகும். புலன்களை அடக்கும் பாடத்தைக் கற்பிப்பவரே ராகு பகவான்.

அதாவது மனிதர்களின் பூர்வஜென்ம பாவ- புண்ணியங்கள் எல்லாம் ராகுவின் மூலம் சனி கிரகத்தில்தான் பதிவு செய்யப் பட்டிருக்கும். சனி கிரகத்தினுள் பதிவாகியிருக் கும் கர்மவினைகளுக்கு ஏற்பவே சுப- அசுப விளைவுகள் இருக்கும். நூறு சதவிகிதம் சுப வினைப்பதிவுகளுடைய மனிதர்கள் இந்த உலகில் கிடையாது. அதேநேரத்தில் நூறு சதவிகிதம் அசுப வினைப்பதிவுகளுடைய மனிதர்களும் கிடையாது. மனிதனுக்கு மனிதன் கர்மாவும், வினைப்பதிவும் மாறுபடும் காரணிகள்.

ராகு ஒரு சுபத்தைக் கொடுத்தால், அதற்குப் பின்னால் இரட்டிப்பு அசுபம் இருக்கிறதென்று பொருள்.

ராகு ஒரு சுபத்தைக் கொடுத்தால், அதற்குப் பின்னால் இரட்டிப்பு அசுபம் இருக்கிறதென்று பொருள். உதாரணமாக, ஜனன ஜாதகத்தில் ஏழில் ராகு நின்றால் திருமணத் தைத் தடைசெய்யமாட்டார். திருமண வாழ்வில் ,பிரச்சினையைத் தருவார் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தைத் தருவார் என்று பொருள்.

ஒரு செயலை நடத்தித்தராமல் தடை, பிரச்சினையைத் தருபவர் கேது. அந்த வகையில் தான் நின்ற பாவகப் பலனை அனு பவிக்க தடையைத் தருபவர் கேது. அதனால் ராகு- கேது இரண்டுமே பிரச்சினைதான். இந்த நிமிடம் முதல் உலக இயக்கம் இருக்கும்வரை நடக்கப்போகும் அனைத்து நிகழ்வுகளையும் முடிவுசெய்பவர் ராகு பகவானே. கேது நடந்ததைப் பற்றிக் கூறும் கிரகமென்றால், ராகு நடக்கப்போவதைப் பற்றிக் கூறும் கிரகம். அதனால்தான் உலகில் அடுத்து என்ன நடக்குமென்பதை எல்லாரா லும் அவ்வளவு எளிதில் கணிக்கமுடிவதில்லை.

கர்மாரீதியாக ராகு- கேதுக்கள் நின்ற பாவகத்தைப் பற்றி ஆய்வுசெய்தால், ராகு நின்ற பாவகத்தின்மூலம் சென்ற பிறவியின் நிறைவேறாத ஆசை அல்லது அளவே இல்லாத ஆசையைப் பற்றிக் கூறமுடியும். அதாவது சென்ற பிறவியின் நிறைவேறாத ஆசையையை நிறைவேற்ற எடுத்த பிறப் பென்று கூறலாம். கேது நின்ற பாவகத் தின்மூலம் சென்ற பிறவியில் நிறைவேற்றத் தவறிய கடமைக்கு இந்தப் பிறவியில் அனுபவிக் கும் தண்டனை என்று கூறலாம்.

தற்பொழுது ராகு சூரியனின் நட்சத்திர மான கிருத்திகையில் பயணிக்கத் தொடங்கி யுள்ளதால் குடும்பத் தலைவர்கள், நாட்டின் மற்றும் மாநிலத்தின் தலைவர்கள், தலைமைப் பதவி வகிக்கும் உயரதிகாரிகள் மற்றும் ராகு தசை புக்தி நடப்பவர்கள், மேஷ, ரிஷப லக்னம் மற்றும் ராசியினர் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலம் இது. நாட்டில் அரசியல் குழப்பம், அரசியல் பிரமுகர்கள் வீட்டில் ரெய்டு, லஞ்சப்பணம், கருப்புப் பணம் வெளிவருவது, பெரும் திருட்டு, கொள்ளை, பெரும் நோய், இயற்கை சீற்றம் போன்றவை மிகுதியாகும் காலமாக இது இருக்கும்.

அதாவது சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தை கோட்சார ராகு கடக்கும் 13-6-2022 வரை அனைவரும் எச்சரிக்கை யாக செயல்படவேண்டும். யார் எதை மறைத்து வைத்தாலும் ராகு வெளிச்சம்போட்டுக் காட்டிவிடுவார். அதற்குத் தகுந்தாற்போல சனியின் கோட்சார சஞ்சாரம் இருக்கிறது. ராகுவுக்குத் திரிகோணத்தில் கர்மகாரகன் சனி ஆட்சிபலம் பெற்றிருக்கிறார். ராகு பயணிக்கும் ரிஷபம் காலபுருஷ மாரக ஸ்தானம். கோட்சாரத்தில் கேது, சனியின் அனுஷ நட்சத்திரத்தில் காலபுருஷ அஷ்டம, ஆயுள் ஸ்தானமான விருச்சிகத்தில் பயணிக் கிறார்.

கோட்சார ராகு

ரிஷபத்தில் சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால் நெருப்பு, மின்சாரம், வாகனம், மலை, பாதுகாப்பு, இயந்திரம், கட்டுமானம், அரசு சார்ந்த விஷயங் களில் நிறைய சீர்திருத்தம் நடைபெறும். இந்த துறைசார்ந்த ஊழியர்கள் நிறைய தவறு செய்ய நேரும். மலை, காடு போன்ற இடங்களில் தீசார்ந்த பாதிப்புண்டு. அரசியல்வாதிகள், அரசு உயரதிகாரிகள் கவனமுடன் செயல்பட வும். சில மத குருமார்கள், அரசியல் தலைவர் களுக்கு கண்டமான காலம்.

கோட்சார கேது விருச்சிகத்தில் சனியின் நட்சத்திரத்தில் சஞ்சரிப்பதால், தொழிலாளர்கள், தொழில் சார்ந்த விஷயங்களில் அதிக ந-வு ஏற்படும். தொழிலாளிகளை ஏமாற்றி முதலாளிகள் சிறப்படையும் காலம். பேராசை அதிகமாகும்.

எனவே முக்கிய அரசியல் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், அரசு ஊழியர்கள், நாட்டின் தலைமை, நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள், அரசு ஊழியர்கள், உயரதிகாரி கள்- அவர்களின் குடும்பத்தினர்கள், குடும்பத் தலைவர்கள் கவனமாக இருக்கவேண்டும். இவர்கள் உக்கிர தெய்வங்களான காளி, துர்க்கை, பிரத்தியங்கரா தேவியை ராகு காலத்தில் வழிபட, தாக்கம் குறையும்.

பலருக்கு இல்லற வாழ்க்கையில் கசப்பு அதிகமாகும். பலருக்கு பிரிவினைகள், வழக்கு, தவறான நட்புகள் அதிகமாகும். வாழ்க்கைத்துணையால் பாதிப்புகள் உண்டாகும். நண்பர்களால் ஏமாற்றப்படுதல், காதல்- கலப்புத் திருமணம், விவாகரத்து, திருமணப் பிரிவுகள் நடக்கும். மத குருமார்கள், மதத் தலைவர்கள் கவனமாக இருக்கவேண்டும். பல இடங்களில் சண்டிஹோமம் நடத்துவது சிறப்பு தரும். பெண்கள் மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி, காஞ்சி காமாட்சியை வழிபடுவதால் குடும்பம் பலப்படும்.

பொதுவாக ராகு கர்மத்தை சேர்க்கவைப்ப வர். தன் தசையில் தான் நின்ற வீட்டின்மூலம், தன்னுடன் சேர்ந்த கிரகத்தின்மூலம் நிச்சயம் கர்மத்தை சேர்க்கவைப்பார்.

தான் நின்ற வீட்டின் அதிபதி, தன்னைப் பார்த்த கிரகம், தன்னோடு சேர்ந்த கிரகத்தின் முழுமையான காரகத்துவங்களை இவரே செயல்படுத்துவார். ஒரே டிகிரியில் ராகுவுடன் இணைந்த கிரகம் தன்னுடைய முழுமையான காரகத்துவத்தை ராகுவிடம் இழந்துவிடும்.

உதாரணமாக, ஒரே டிகிரியில் ராகுவுடன் இணைந்த சூரியன் எந்தவித சுபர் தொடர்பும் பெறவில்லையெனில், அந்த ஜாதகத்திற்கு சூரியன் எந்த ஆதிபத்தியம் பெறுகிறதோ அது சார்ந்த விஷயங்களில் ஜாதகர் அதிகம் பாதிக்கப்படுவார். ராகுவுடன் விரயாதிபதி இணைந்திருந்து தசை நடத்தினால், குறிப்பிட்ட அந்த கிரகம் ஆட்சி, உச்சமாக இருந்தால் நிச்சயமாக விரயமுண்டு. இரண்டு ஆதிபத்தியம் பெறுகின்ற ஒரு கிரகம், ராகுவுடன் இணைந்து செயல்படுத்தப்பட்டால், உயிர் காரகத்துவம், பொருள் காரகத்துவம் என இரண்டில் ஏதேனும் ஒன்றை நசுக்கும்.

ஒருவருடைய ஜாதகத்தில் என்னதான் யோகம் செய்யும் நிலையில் இருந்தாலும், ராகு தசையில் ராகுவுக்கு எதிரில் கேதுவும் இணைந்து செயல்படுவதால், ராகுவை முழுமையாக உணர்ந்து செயல்பட்டால் அதன் தசையின் இறுதிப்பகுதியில் ஏற்படக் கூடிய சில விரயங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். கொடுப்பதுபோல கொடுத்து சிக்கவைப்பவர் ராகு. குருவின் பார்வைபெற்ற ராகுவால் நிச்சயமாக நற்பலன் உண்டு.

இனி 12 ராசியினருக்கும் சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் ராகுவால் ஏற்படும் பலன்களைக் காணலாம்.

மேஷம்

மேஷ ராசியினருக்கு சூரியன் ஐந்தாமதி பதி. கோட்சார ராகு சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தில், லக்னத்திற்கு இரண்டாமிட மான தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்கிறார். ஜனனகால ஜாதகத்தில் பூர்வபுண்ணியத்தை வலிமைப் படுத்தக்கூடிய தசாபுக்தி நடந்தால் திடீர் பதவி, புகழ், கௌரவம் கிடைக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு மேன்மையான காலம். அதிகாரப் பதவிகள் தேடிவரும். அரசியல்வாதி களிடையே கருத்தொற்றுமை ஏற்படும். கட்சி மேலிடம் உங்களுக்கு முக்கியத்துவமும், பதவியும் கொடுக்கும். ஆலயத் திருப்பணிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். அந்தணர்கள், சிவனடியார்களுக்கு தான தர்மங்கள் கொடுத்து ஆனந்தமடைவீர்கள். தொழிலதிபர்களுக்கு அரசு உதவி கிடைக்கும். தொழிலாளர்கள் ஆதரவாக உதவிக்கரம் நீட்டுவார்கள். இதுவரையில் யோசிக்காத வகையில் விவேகமாக சிந்தனைசெய்து தொழிலை வளப்படுத்துவீர்கள். பணப் புழக்கம் சரளமாக இருக்கும். சீட்டு, ரேஸ், பங்குச் சந்தை மூலம் வருமானம் பெருகும். புதிய தொழில் கிளைகள் உருவாக்க ஏற்ற காலம். தடைப்பட்ட காதல் திருமண முயற்சிகள் கைகூடும். சிலருக்கு வயது வித்தியாசமில்லாத காதல் உண்டாகும்.

குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளை களால் ஆதாயமுண்டு. பிள்ளைகளுக்குத் தொழில், உத்தியோகம், திருமணம், குழந்தை, வீடு, வாகன யோகம்போன்ற அனைத்து விதமான பாக்கியங்களும் உண்டாகும்.

நீண்டநாட்களாகத் தடைப்பட்ட குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றும் முயற்சி வெற்றிதரும். குலதெய்வ அருள் கிடைக்கும். கூப்பிட்ட குரலுக்கு குலதெய்வம் வந்து நிற்கும். சிவ வழிபாட்டில் ஆர்வம் அதிகரிக் கும். உங்கள் ஆழ்மனதிலுள்ள பால்ய வயது எண்ணங்களை நினைவுபடுத்தி ஆனந்தம், பேரானந்தம் அடைவீர்கள். இதுவரை கிடப்பில் கிடந்த பூர்வீக சொத்து தொடர்பான விஷயங்களைப் பேசிமுடிக்கும் ஆர்வம் ஏற்படும். கலைத்துறையினர், திரைப்படத் துறையினர், அரசியல் பிரமுகர்களுக்கு ஏற்றமும்ஈ மேன்மையும் உண்டாகும்.

ஜனனகால ஜாதகத்தில் 6, 8, 12-ஆம் இடங்களுடன் சம்பந்தம்பெறும் கிரகங்களின் தசை, புக்தி நடைபெற்றால், சூரியனும் ராகுவும் பகை கிரகங்கள் என்பதால் தந்தை- மகன் உறவில் விரிசல் ஏற்படலாம். தந்தைக்கு ஆரோக்கியக் குறைபாடு மற்றும் வைத்தியச் செலவு அதிகரிக்கும். கூட்டுக் குடும்பத்தில் பிரிவினை ஏற்படும். குலத் தொழிலி-ருந்து விடுபட்டு வேறுதொழில் செய்ய ஆர்வம் மிகும். குழந்தைப் பிறப்பில் காலதாமதம் ஏற்படும். குழந்தைகளால் மனவேதனை, பொருள் விரயம் மிகும். பூர்வீகச் சொத்து பிரிப்பதில் கருத்து வேறுபாடு ஏற்படும் அல்லது பூர்வீகச் சொத்து கைவிட்டுப் போகும் நிலை வரும். ஒரு சிலர் பூர்வீகச் சொத்தை விற்றுப் புதிய சொத்து வாங்குவார்கள்.

ஐந்தாமிடமென்பது பதவி ஸ்தானம், பூர்வபுண்ணிய ஸ்தானம், ஆழ்மனம். சூரியன் என்பது ஆன்மா. ராகு என்பவர் தவறான எண்ணத்தைத் தூண்டுபவர். இதுநாள்வரை மனசாட்சிக்கு பயந்து நிர்வகித்துவந்த பதவியை, மனசாட்சிக்கு விரோதமாகப் பயன்படுத்த நேரும். பதவியைத் தவறாகப் பயன்படுத்தி பொருள் சேர்க்கும் காலம். பெரும் நிர்வாகப் பொறுப்பில் இருப்பவர்கள் தவறான ஒப்பந்தத்திற்குக் கையெழுத்திடுவது, மதிப்பு குறைவான சொத்திற்கு அதிக கடன்கொடுப்பது போன்ற செயல் களில் பிரச்சினையைத் தாமாகவே தேடிக் கொள்வார்கள். நிர்வாகிகள் மனக் கட்டுப் பாட்டைக் கடைப்பிடிப்பது அவசியம். குழந்தை பாக்கியத்தில் காலதாமதம் ஏற்படும். கண், இதயம் தொடர்பான அறுவை சிகிச்சை யில் ஏற்பட்ட தடை, தாமதம் விலகி சிகிச்சை வெற்றியடையும்.

பால்ய வயது குழந்தைகளுக்கு ஆரோக்கியக் குறைபாடு உண்டாகும். பருவ வயது பிள்ளை கள் குடும்பத்தைப் பிரிந்து, விடுதியில் தங்கிப் படிக்கலாம். வெகுசில பிள்ளைகள் தவறான நட்புவலையில் விழுந்து நிம்மதியிழக்கலாம். எந்த வேலை செய்தாலும் ஆத்மார்த்த ஈடுபாட்டு டன் செய்யவிடாமல் ராகு உங்களைத் தவறாக வழிநடத்த முயற்சிப்பார்.

பரிகாரம்

கெடுபலன்களால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து விடுபட, வீடு அல்லது தொழில் நிறுவனத் தில் குலதெய்வத்தின் படம்வைத்து வழிபட் டால் வெற்றிவாய்ப்பு மேலும் அதிகரிக்கும். ஆழ்மனதைக் கட்டுப்படுத்தும் யோகா, மூச்சுப்பயிற்சி, தியானம் மிக அவசியம்.

ரிஷபம்

சூரியன் ரிஷபத்திற்கு நான்காம் அதிபதி. கோட்சார ராகு நான்காம் அதிபதியின் சாரத்தில், ராசியில் சஞ்சாரம் செய்கிறார். நான்காமிடம் என்பது சுக ஸ்தானம். வீடு, வாகன யோகம் மற்றும் கல்விநிலை பற்றிக் கூறுமிடம். எதிர் மறை எண்ணங்கள் மறையும். நல்ல சிந்தனை குடிபுகும். ஜனனகால ஜாதகரீதியாக தசாபுக்தி கள் சாதகமாக இருந்தால், பல வருடங்களாகக் கிடப்பில் கிடந்த பூர்வீகசொத்து தொடர் பான விஷயங்கள் சாதகமாக முடியும். வில்லங்கமான- விற்கமுடியாத சொத்துகள் அதிக லாபத்திற்கு விற்கும். சிலர் லஞ்சம் கொடுத்து புறம்போக்கு நிலத்தைப் பட்டா போடுவார்கள். புதிய வீடுகட்ட அரசின் மானியம் அல்லது வீடு, வீட்டுமனை கிடைக்கும். சிலர் நல்ல வெளிச்சமான- காற்றோட்டம் நிறைந்த பெரிய வீடுகட்டிக் குடிபுகுவார்கள். சிலருக்கு பழையவீட்டைப் புதுப்பிக்கும் ஆர்வம் அதிகரிக்கும். காற்றோட்ட மில்லாத வசதி குறைவான வாடகை வீட்டில் அடைபட்டிருந்தவர்கள், நல்ல வசதியான வீட்டிற்கு ஒப்பந்த அடிப்படையில் செல்வார்கள்.

நான்கு சக்கர வாகனக் கனவு நிறைவேறும். வீட்டிற் குத் தேவையான அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். ஒருசிலருக்கு நாய், பூனை, பறவைகள் போன்ற உயிரினங்கள் வளர்ப்பில் ஆர்வம் ஏற்படும். ரிஷப ராசிப் பெண்களுக்கு இது பொற்காலம். அழகு, ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வார்கள். நீண்டகாலமாக எதிர்பார்த்த தாய்வழி சீதனம் உங்களைத் தேடிவரும். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற தாய்- தந்தை பக்கபலமாக இருப்பார்கள். தாய்- தந்தையின் ஆரோக்கியம் சிறப்படையும். பள்ளி, கல்லூரிப் படிப்பை இடையில் நிறுத்திய மாணவ- மாணவிகள் மீண்டும் படிப்பைத் தொடர்வார்கள். முன்பைவிட அதிக ஈடுபாட்டுடன் படித்து நல்ல மதிப்பெண் பெற்று அனைவரின் பாராட்டையும் பெறுவார்கள். சிலர் வெளிநாட்டிற்குச் சென்று படிக்கலாம். விவசாயிகளுக்கு அருமை யான வருமானம் தரும் காலம். நிறைந்த விளைச்சலும் அரசின் உதவியும் கிடைக்கும். கிணறு தோண்ட ஏற்ற நேரம். மனைவிக்கு அரசுவேலை கிடைக்கும். ரியல் எஸ்டேட் துறையினருக்கு நல்ல லாபம் உண்டாகும்.

ஜனனகால ரீதியான தசாபுக்தி சாதகமற்ற வர்களுக்கு எண்ணங்கள் மற்றும் செயல்பாடு களில் குறுக்குபுத்தி மிகும். உடல் உஷ்ணம் அதிகரிக்கும். கண்நோய் உண்டாகும். தாய்வழி உறவுகளுடன் கருத்து வேற்றுமை உண்டாகலாம். தாயின் ஆரோக்கியம் குறைவுபடும். வீடு சீரமைக்கும் பணியில் பட்ஜெட் கையைப் பிடிக்கும். பூர்வீகச் சொத்தில் உங்களுக்கென்று ஒருபங்கு உறுதி. ஆனால் முடிவு எதிர்பார்த்த வகையில் சாதகமாக இருக்காது. வாடகைக்குக் குடியிருப்பவர்கள் வீடு மாறலாம். ஒருசிலருக்கு வாடகை வருமானம் தடைப்படலாம் அல்லது வாடகை வருமானம் தருகின்ற கட்டடங்களில் சட்டச் சிக்கல் ஏற்படும். சிலருக்கு நடத்தையின்மேல் களங்கம் ஏற்படுத்தும் விதமான அவப்பெயர் தேடிவரும். சிலர் பேராசையால் வில்லங்க மான விஷயத்தில் தலையிட்டு அவமானம் அடைவார்கள்.

இந்த காலகட்டத்தில் சிலர் வீட்டில் வாஸ்து மீன் வாங்கி வளர்ப்பார்கள். சொத்து விற்கப்போனால் குறைந்த விலையே கிடைக்கும். சொத்து வாங்கப்போனால் சொத்தின் மதிப்பைவிட அதிக விலைகொடுக்க நேரும். அல்லது வாஸ்துக் குறைபாடான வீடு, மனை கிடைக்கும். சிலரின் நிலங்கள் நாட்டின் நலத் திட்டங்களுக்காக அரசால் கையகப்படுத்தப்படும். குழந்தைகளுக்குக் கல்வி நாட்டம் குறையும்.

மாமியார்- மாமனார், நாத்தனார், மைத்துனர் பிரச்சினை தலை தூக்கும். வீட்டில் மின்சார உபகரணங்களான ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி, டிவி பழுதாகி அதிக செலவு வைக்கும். வாகனங்களில் பயணம் செய்யும்போது அதிக கவனம் தேவை. சாலை விதிகளைக் கடைப்பிடிக்க வேண்டும். வாகனங் களுக்குத் தேவையான லைசன்ஸ், ஒட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களை முறையாக வைத்திருக்க வேண்டும். அரசுக்கு தண்டம் கட்ட நேரலாம்.

பரிகாரம்

பிரதோஷ காலத்தில் சிவ வழிபாடு செய்தல் வேண்டும். வசதியற்றவர்களின் கல்விச் செலவுக்கு உதவுவது சிறப்பு. முன்னோர்- குலதெய்வ வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நற்பலன் மிகுதியாகும்.

(தொடர்ச்சி அடுத்த இதழில்)

செல்: 98652 20406

bala191121
இதையும் படியுங்கள்
Subscribe