சென்ற இதழ் தொடர்ச்சி...
சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தை கோட்சார ராகு கடக்கும் 13-6-2022 வரை அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டமாகும். சிம்ம ராசி வரையிலான பலன்களைக் கடந்த இதழ்களில் கண்டோம். மற்றவற்றைத் தொடர்ந்து காணலாம்.
கன்னி
ராசிக்கு ஒன்பதில் நிற்கும் கோட்சார ராகு விரயாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் பயணம். ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம். ராகு தந்தைவழி உறவு களைப் பற்றிக் கூறும் கிரகம். சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம் பலம்பெற்றவர்களுக்கும், தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கும் ஞானமார்கத்தில் மனம் லயிக்கும். தீர்த்தயாத்திரை செல்ல ஆர்வம் ஏற்படும். பித்ரு கடனை முறைப்படுத்தி பாக்கியப் பலனை அதிகரிப்பீர்கள். குரு உபதேசம் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் நட்பும் நல்லாசியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான சர்ச்சைகள் நீங்கும். தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர் களின் நல்லாசிகள் கிட்டும். ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சி யில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருப்பணி கள் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்வர் களுக்கு சமுக அந்தஸ்தை நிலைப் படுத்தும் கௌரவப் பதவிகள் கிடைக் கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். பயணம் செய்வதில் நாட்டம் ஏற்படும். கண் சார்ந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். ஜனனகால ஜாதகரீதியான தசாபுக்தி சாதகமற்றவர்களுக்கு, தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து விதமான சுயகர்மா, முன்னோர் களின் வினைக்கு பதில் சொல்லும் காலம். ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் வலிமையிழந்தவர்களுக்கு தந்தை- மகன் கருத்து வேறுபாடு மிகுதியாகும் அல்லது பிரிவேற்படும் அல்லது தந்தைக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும் அல்லது தந்தைக்கு சட்ட நெருக்கடி எற்படலாம். ஒருசிலருடைய தந்தை ஏதேனும் காரணத்தால் தலைமறைவாக வாழலாம் அல்லது வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.
கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். ராகு சம்பாதித்த அனைத்தையும் இழக்கச் செய்வார். ஒருசிலருக்கு அரசு தண்டனையும் கிடைக்கலாம். சிலர் தலைமறைவு வாழ்க்கை வாழலாம். புத்திர பாக்கிய யோகத்தில் தடை ஏற்படும். உடல்நலம் பாதிக்கும். உயர்கல்வி முயற்சி தடை, தாமதத்திற்குப் பிறகு பலிதமாகும். சிலர் மதம் மாறலாம்
அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். அரசின் உதவித்தொகை கிடைப்பது தடைப்படலாம். சில குழந்தைகள் மாற்றாந் தாயிடம் வளரும் நிலை ஏற்படலாம். குழந்தைகளுக்கு மந்தத் தன்மை ஏற்படும். நரம்பு தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். அவ்வப் போது உடல் களைப்பு, அசௌகரியங்களால் அவதி ஏற்படும்.
வாகனக் கனவு நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வாங்கும் சொத்தில் வில்லங்கம் இருக்கும் என்பதால் கவனம் தேவை. பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். பங்குச் சந்தையில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். உஷ்ணநோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்
சென்ற இதழ் தொடர்ச்சி...
சூரியனின் கிருத்திகை நட்சத்திரத்தை கோட்சார ராகு கடக்கும் 13-6-2022 வரை அனைவரும் எச்சரிக்கையாக இருக்கவேண்டிய காலகட்டமாகும். சிம்ம ராசி வரையிலான பலன்களைக் கடந்த இதழ்களில் கண்டோம். மற்றவற்றைத் தொடர்ந்து காணலாம்.
கன்னி
ராசிக்கு ஒன்பதில் நிற்கும் கோட்சார ராகு விரயாதிபதி சூரியனின் நட்சத்திரத்தில் பயணம். ஒன்பதாமிடம் என்பது பாக்கிய ஸ்தானம். ராகு தந்தைவழி உறவு களைப் பற்றிக் கூறும் கிரகம். சுய ஜாதகத்தில் ஒன்பதாமிடம் பலம்பெற்றவர்களுக்கும், தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கும் ஞானமார்கத்தில் மனம் லயிக்கும். தீர்த்தயாத்திரை செல்ல ஆர்வம் ஏற்படும். பித்ரு கடனை முறைப்படுத்தி பாக்கியப் பலனை அதிகரிப்பீர்கள். குரு உபதேசம் கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் நட்பும் நல்லாசியும் கிடைக்கும். பூர்வீகச் சொத்துகள் தொடர்பான சர்ச்சைகள் நீங்கும். தந்தை மற்றும் தந்தைவழி முன்னோர் களின் நல்லாசிகள் கிட்டும். ஆத்ம ஞானத்தை அடைவதற்கான முயற்சி யில் ஈடுபடுவீர்கள். ஆலயத் திருப்பணி கள் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.
பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுள்வர் களுக்கு சமுக அந்தஸ்தை நிலைப் படுத்தும் கௌரவப் பதவிகள் கிடைக் கும். சிலருக்கு வெளிநாட்டு வேலை கிடைக்கும். பயணம் செய்வதில் நாட்டம் ஏற்படும். கண் சார்ந்த பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும். ஜனனகால ஜாதகரீதியான தசாபுக்தி சாதகமற்றவர்களுக்கு, தெரிந்தும் தெரியாமலும் செய்த அனைத்து விதமான சுயகர்மா, முன்னோர் களின் வினைக்கு பதில் சொல்லும் காலம். ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் வலிமையிழந்தவர்களுக்கு தந்தை- மகன் கருத்து வேறுபாடு மிகுதியாகும் அல்லது பிரிவேற்படும் அல்லது தந்தைக்கு ஆரோக்கியக் குறைவு ஏற்படும் அல்லது தந்தைக்கு சட்ட நெருக்கடி எற்படலாம். ஒருசிலருடைய தந்தை ஏதேனும் காரணத்தால் தலைமறைவாக வாழலாம் அல்லது வெளிநாட்டு வேலைக்குச் செல்லலாம்.
கண் பார்வை குறையும். ஒருசிலருக்கு கண்ணில் அறுவை சிகிச்சை செய்யநேரும். ராகு சம்பாதித்த அனைத்தையும் இழக்கச் செய்வார். ஒருசிலருக்கு அரசு தண்டனையும் கிடைக்கலாம். சிலர் தலைமறைவு வாழ்க்கை வாழலாம். புத்திர பாக்கிய யோகத்தில் தடை ஏற்படும். உடல்நலம் பாதிக்கும். உயர்கல்வி முயற்சி தடை, தாமதத்திற்குப் பிறகு பலிதமாகும். சிலர் மதம் மாறலாம்
அல்லது கலப்புத் திருமணம் செய்லாம். அரசின் உதவித்தொகை கிடைப்பது தடைப்படலாம். சில குழந்தைகள் மாற்றாந் தாயிடம் வளரும் நிலை ஏற்படலாம். குழந்தைகளுக்கு மந்தத் தன்மை ஏற்படும். நரம்பு தொடர்பான சிறு பாதிப்பு இருக்கும். பயண அலைச்சல் மிகும். தீயவழியில் பொருள் விரயம் ஏற்படும். உங்களின் சொத்துகள் பிறரால் அனுபவிக்கப்படலாம். உடல் உஷ்ணம், அஜீரணம் தொடர்பான நோய்கள் சங்கடத்தில் ஆழ்த்தும். அவ்வப் போது உடல் களைப்பு, அசௌகரியங்களால் அவதி ஏற்படும்.
வாகனக் கனவு நிறைவேறுவதில் தடை, தாமதம் ஏற்படும். வாங்கும் சொத்தில் வில்லங்கம் இருக்கும் என்பதால் கவனம் தேவை. பூர்வீக நிலம், வீடு போன்றவற்றை விற்பதை ஒத்திவைத்தால் வீண் விரயம் தடுக்கப்படும். பங்குச் சந்தையில் எதிர்பாராத இழப்புகள் ஏற்படலாம். உஷ்ணநோய்க்கு மருத்துவ சிகிச்சை செய்யநேரும்.
ஜனனகால ஜாதகத்தில் பாக்கிய ஸ்தானம் பலமிழந்தவர்களுக்கு தவறான எண்ண அலைகள் மிகுதியாகி தர்மத்திற்குப் புறம் பான செயல்களில் ஈடுபடலாம். இதுவரை தார்மிக உணர்வுடன் செய்துவந்த பொதுக் காரியங்களில் சுயநலம் அதிகமாகும். இறையுடன் மனம் ஒன்றாது. "சாமியை கும்பிட்டு பெரிதாக என்ன சாதித்தோம்; சாமியே கிடையாது' என்ற விரக்தி ஏற்படும். தந்தையின்மீது எவ்வளவு அன்பைப் பொழிந்தாலும் அவர் குற்றங்குறை கூறி வருவார். தந்தை வாசிக்கும் குற்றப் பத்திரிகையால் மனபாரம் அதிகமாகும். மொத்தத்தில் ராகு பகவான் சூரியனின் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் காலத்தில் நிம்மதியாகத் தூங்க முடியாத வகையில் மனபாரம் இருக்கும்.
பரிகாரம்
சிவன் கோவிலை சுத்தம்செய்யும் உழவாரப் பணிகள் செய்யவேண்டும். பௌர்ணமி நாட்களில் விரதமிருந்து கிரிவலம் வரவேண்டும். பைரவர் சந்நிதியில் தொடர்ந்து ஒன்பது புதன்கிழமைகளில் நெய்தீபமேற்றி சகஸ்ரநாம அர்ச்சனை செய்யவேண்டும்.
துலாம்
கிருத்திகை நட்சத்திர அதிபதி சூரியன் துலாத்திற்கு பதினொன்றாம் அதிபதி. லாபாதிபதிமேல் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் ராகு, சுய ஜாதகரீதியான தசாபுக்தி சாதகமாக இருப்பவர்களுக்கு சுபப் பலனைத் தருவார். பொதுவாக அசுப கிரகங்கள் மறைவு ஸ்தானத்திற்கு வரும்போது நன்மை செய்யுமென்பது ஜோதிட விதி. அதாவது "கெட்டவன் கெட்டிட கிட்டிடும் ராஜயோகம்'. வாரா கடன்கள் வசூலாகும். பாலிசி முதிர்வுத் தொகை, பங்குச் சந்தை முதலீடு என பெரிய பணம் உங்களை மகிழ்விக்கும். தொழிலில் இருந்த மந்தநிலை மாறி சூடுபிடிக்கும். நீண்டநாட்களாக தீர்க்கமுடியாத வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். மூத்த சகோதரருடன் இருந்த பிணக்குகள் மாறும். கூட்டுக் குடும்பத்திலிருந்து பிரிந்த மூத்த சகோதர் மீண்டும் குடும்பத்துடன் சேர்வார்.
முன்னோர்கள் சொத்தைப் பிரிப்பதில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறைந்து சொத்துகள் உங்களுக்கு சாதகமாகப் பிரிக்கப்படும். பொன், பொருள், ஆபரணச் சேர்க்கையுண்டு. தொழிலில் நல்ல முன்னேற் றமும் அபரிமிதமான வருமானமும் வரும். லாபத்தை மறுமுதலீடாக மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் நிலவிய தடை, தாமதங்கள் சீராகும். தடைப்பட்ட ஊதியம் மொத்தமாக வந்துவிடும். வேலையில் "மெமோ' வாங்கியவர்களுக்கு மீண்டும் சேர உத்தரவு வரும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தந்தையால் ஆதாயமுண்டு. தடைப்பட்ட வாடகை வருமானம் மீண்டும் வரத் துவங்கும். இரண்டாவது திருமணம் நடைபெறும்.
சுய ஜாதகரீதியான தசாபுக்தி சாதகமற்றவர் களுக்கு, ராகு மூத்த சகோதர ருக்கும் உங்களுக்கும் பிரிவினையைத் தருவார். அது பூர்வீக சொத்து தொடர்பான விஷயமாக இருக்கலாம் அல்லது பரம்பரை கூட்டுக் குடும்பப் பிரிவினை அல்லது பரம்பரை கூட்டுத் தொழில் நிர்வாகக் கணக்கு வழக்குகளில் குளறுபடி செய்ததற்காகவும் இருக்கலாம். சூரியன் ஆன்மா; ராகு தவறான செயலைத் தூண்டுபவர். குடும்ப நபர்களால் ஏற்படும் மன சஞ்சலம் வாழ்வையே முடித்துக்கொண்டால் என்ன என்ற விதமாக சிலருக்கு இருக்கும்.
சிலருக்கு பரம்பரை வியாதிகளான ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றை அதிகப்படுத்தி உடலில் தளர்சியையும், ஒருசிலருக்கு அறுவை சிகிச்சியையும் தந்து, "நித்திய கண்டம், பூரண ஆயுள்' என மன இறுக்கத்தை அதிகப்படுத்துவார். எதிர்மறைச் செயல்களை அதிகப்படுத்தும் ராகு, எப்படி யோசித்து திட்டமிட்டுச் செய்தாலும் நினைத்ததற்கு எதிர்மறையாகவே நடத்துவார்.
இரண்டு, எட்டாமிடத்துடன் ராகு- கேதுக்கள் சம்பந்தம் பெறும்போது அடுத்தவரின் குறுக்கீடு மிகுதியாகும். சம்பந்தமில்லாத குற்றத்தில் உங்களை மாட்டி வம்பு வழக்கை உருவாக்குவார். அதனால் களங்கம் தரும் வீண் விமர்சனம்,
கௌரவக்குறைவு உருவாகும். வட்டிக்கு வட்டிகட்ட நேரும். சிலரின் மறுமணம் ஆயுள் தண்டனையாக இருக்கும்.
ஊருக்குத் தெரியாமல் இரண்டாவது குடும்பம் நடத்துபவரின் குட்டு அம்பலமாகும். ஒரு மனிதனின் எதிரிகள் மன அழுத்தமும், தானென்ற ஆணவமும்தான். இந்த இருவரும் சகோதரர்கள். அழைக்காமலே வந்து வியாதியை அதிகப்படுத்துவார்கள். எனவே இந்த இருவரையும் மனதிலிருந்து விரட்டினால் எட்டாமிட ராகுவை சமாளித்துவிடலாம்.
வழக்குகளில் சாதக மாகத் தீர்ப்பு வராது. ரேஸ், சூதாட்டம், லாட்டரி போன்றவை மீளமுடியாத இழப்பில் கொண்டு நிறுத்தும். உடன்பிறந்த வர்களின் வெறுப்பை சம்பாதிக்க நேரும். அரசு சார்ந்த ஒப்பந்தங்களில் கவனம் தேவை. அரசு ஒப்பந்தங்களை மீறுவது, அலட்சியம் செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். கலைத்துறையினர் பலமுறை யோசித்து படத்தைத் தேர்வு செய்யவேண்டும். தீரயோசிக்காமல் எடுத்த முடிவு எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்கும்.
பரிகாரம்
குலதெய்வ வழிபாடு செய்வது நல்லது. பெருமாள் கோவில் சென்று வழிபாடு செய்வ தால் இன்னல்கள் விலகும். வெள்ளெருக்கு விநாயகரை வீட்டு அறைகளில் கைக்கெட்டாத உயரத்தில் வைத்திருந்தால் மன சஞ்சலம் குறையும்.
விருச்சிகம்
உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் விருச்சிகத்திற்கு 10-ஆம் அதிபதியின் நட்சத்திரம். கோட்சார ராகு ராசிக்கு 7-ல் சஞ்சாரம் செய்கிறார். ஜனன ஜாதகரீதியான தசாபுக்தி சாதகமாக இருப்பவர்கள் மன முதிர்ச்சியுடன் விவேகமாக நடந்துகொள்வீர்கள். உங்களின் அனுசரணையான அணுகுமுறை எல்லாரிடமும் நன்மதிப்பைப் பெற்றுத் தரும். பொதுக் காரியங்களில் ஈடுபடுபவர்களின் புகழ், அந்தஸ்து, செல்வாக்கு, கௌரவம் உயரும். உங்கள் இன, மத இயக்கங்களில் முதன்மைப் பதவியும், கௌரவமும் தேடிவரும். தொழில் தொடர்பான அனைத்து முயற்சிகளும் பலிதமாகும். தொழிலில் நிலவிவந்த மந்தநிலை மாறி, தொழிலை விரிவுபடுத்த வாய்ப்பு உருவாகும். புதிய ஒப்பந்தங்கள் தேடிவரும். தொழில் ஆரம்பித்து காலூன்ற முடியாமல் தவித்தவர்களுக்கு தொழில் முன்னேற் றம் திருப்தி தரும். கூட்டுத் தொழிலில் இதுவரை இருந்த மாற்றுக் கருத்து மறையும். தொழிலில் புதிய பங்குதாரர்கள் வரலாம். பழைய பங்குதாரர்கள் வெளியேறலாம். நண்பர்களும் பங்குதாரர்களும் தொழில் வளர்ச்சிக்கு கைகொடுத்து உதவுவார்கள். அரசுப் பணியில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வுடன்கூடிய இடமாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த சம்பள உயர்வு தேடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிட்டும். அரசு வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு வேலை கிடைக்கும். அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் "தனி வருமானம்' மகிழ்ச்சியைத் தரும். தொழிலாளர்களுக்கு குறைந்த உழைப்பும் நிறைந்த வருமானமும் கிடைக்கும். ஜனனகால தசாபுக்தி சாதகமற்றவர்களுக்கு தடைப்பட்ட திருமணத்தை சங்கடத்துடன் நடத்துவார். வேதனைப் படுத்தும் காதல்- கலப்புத் திருமணங்களை அதிகமாக நடத்துவார். சிலருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட திருமணத்தையும் நடத்தித் தருவார். திருமணமான தம்பதிகள் மகிழ்சியாக இருந்தாலும், சம்பந்திகளின் சண்டையால் மன வருத்தம் ஏற்படும். இரண்டாவது குழந்தைக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும். தொழில் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் தொழில் சட்டத்தின் பிடியில் சிக்கவைக்கும். சிலருக்கு வருமான வரி, சொத்து வரி போன்றவற்றால் மன சஞ்சலம் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியம் குறையும். மருத்துவச் செலவு அதிகரிக்கும். தந்தைவழி நெருங்கிய உறவில் ஒரு கர்மம் நடக்கும் அல்லது ஆரோக்கியமின்மையால் படுத்த படுக்கையாவார்கள். அரசியல் பணிகளில் இருப்பவர்களுக்கு சுமாரான நேரம். லக்னத்தில் நிற்கும் கேது பலவிதமான தொழில் ஞானத்தை வழங்குவார். ஏழாமிட ராகு மிகுதியான பொருளாசையைக் கொடுப்பார். சூரியன் ஆன்மா; ராகு தவறான செயலைத் தூண்டுபவர். ராகுவின் தாக்கத்தால் ஆன்மா தன் தொழில் ஞானத்தை மறக்கும். பரம்பரையாக கௌரவத் தொழில் செய்பவர்கள் தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று தவறான முடிவை எடுக்கவைக்கும் காலம். அதிர்ஷ்டத்தின்மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும். பல ஆண்டுகளாக தொழில் செய்தவர்கள்கூட தவறான முடிவை எடுக்கிறார்கள். அதிர்ஷ்டத்தைத் தேடி லாபத்தை இழக்கநேரும். ஏழாமிட ராகு ஒருசிலரின் தந்தைக்கு தவறான நட்பை ஏற்படுத்தி, அதன்மூலம் பொருள் இழப்பை மிகுதிப்படுத்தி, தொழிலை நிலைகுலையச் செய்யும். கௌரவத்தைக் காக்க பூர்வீக சொத்தையும் இழக்கநேரும் என்பதால் கவனம் தேவை.
பரிகாரம்
உங்களின் ஜென்ம நட்சத்திர நாளில் சித்தர்களின் ஜீவசமாதியில் வழிபாடு செய்தால் நல்ல மாற்றமும் ஏற்றமும் கிடைக்கும். மனக் குறைகள் நீங்கும். லக்னத் தில் கேது இருப்பதால் விநாயகருக்கு அறுகம் புல் வைத்து வழிபடவும்.
தனுசு
உத்திராடம் சூரியனின் நட்சத்திரம். சூரியன் தனுசுக்கு ஒன்பதாமதிபதி. ஆறாமிடத்தில் பயணம் செய்யும் ராகு ஒன்பதாமதிபதியின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறது. சூரியன் பாக்கியாதிபதி என்பதால் சுய ஜாதகத்தில் தசாபுக்தி சாதகமாக இருந்தால் கௌரவத் தோற்றம் ஏற்படும். சூரியன்- தந்தை, ஆன்மா. ராகு- கர்மவினை ஊக்கி. பொருள் கடன் மற்றும் பிறவிக் கடனில் தத்தளித்த உங்களுக்கு கர்மவினைத் தாக்கம் குறையும் காலம் வந்துவிட்டது. வாழ்நாளின் பாதியை தந்தையின் கடன் மற்றும் பூர்வீக சொத்திற்காக இழந்து நொந்த உங்களுக்கு விடிவுகாலம் வந்துவிட்டது. சூரியன் தனுசிற்கு பாக்கியாதிபதி என்பதால் தெய்வ வழிபாட்டில் ஆர்வம் மிகும். கடவுளே இல்லை என்று கூறியவர்கள்கூட பிரபஞ்ச சக்தியை உணர்வார்கள். ஆத்ம ஞானம் கிடைக்கும். உடலுக்கும் ஆன்மாவுக்கும் புத்துணர்வு கிடைக்கும் பயிற்சிகளில் ஆர்வம் ஏற்படும். தடைப்பட்ட வேண்டுதல்களை நிறைவேற்றுவீர்கள். நெடுந்தூர தீர்த்த யாத்திரை சென்றுவரலாம். துறவு மனப்பான்மை மிகும். குலதெய்வம், பித்ருக்கள் வழிபாட்டில் ஆர்வம் மிகும். அரசுவழி ஆதாயம் மிகும். தந்தை- மகன் உறவு சிறக்கும். தந்தையின் ஆயுள், ஆரோக்கியம் அதிகரிக்கும்.
குழந்தை பாக்கியம் தொடர்பான உங்களின் எண்ணம் ஈடேறி அழகிய பெண் குழந்தை கிடைக்கப் பெறுவீர்கள். செயற்கைக் கருத்தரிப்பிற்கு முயற்சி செய்பவர்களுக்கும் இது சாதகமான காலம். குழந்தைகளின் கல்வி முன்னேற்றம், ஆரோக்கியம் மனநிறைவு தரும். வெளிநாட்டுப் படிப்பு அல்லது வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வாய்ப்பு கிட்டும். இதுவரை வெளிநாடு செல்லாதவர்களுக்கும் வெளிநாடு வாய்ப்பு கிட்டும். குழந்தைகளால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். அரசு வகை ஆதாயமுண்டு.
ஒருவர் புகழப்படுவதும் தாழ்த்தப்படுவதும் ஏழரைச் சனியின் காலத்தில்தான். ஜனனகால ஜாதகத்தில் சுபத்தை மிகுதிப்படுத்தும் 5, 9-ஆம் அதிபதிகளின் தசை நடந்துகொண்டிருந்தால் புகழ் கொடிகட்டிப் பறக்கும். நீங்கள் சார்ந்திருக்கும் இயக்கத்தால் மதிப்பு, மரியாதை உயரும். புதிய நட்பு வட்டாரம் உருவாகும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும்.
ஜனனகால ஜாதகத்தில் சூரிய தசை அல்லது ராகு- கேது தசை நடந்தால், நினைப்பது ஒன்று- நடப்பது வேறு என்றரீதியில் திட்டங்கள் பலிதமாகாமல் பல ஏமாற்றத்தை சந்திக்கநேரும். ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகுவால் செவித்திறன் குறைதல், சீழ்வடிதல் போன்ற காது தொடர்பான நோய் பாதிப்பு தோன்றி மறையும். நரம்பு, வாதம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். புதிய கடன் வாங்கி பழைய கடனை அடைப்பீர்கள். ஒரு கடன் அடைவதற்குள் மறுகடன் உருவாகும் என்பதால் கவனம் தேவை. மந்தத்தன்மை, தயக்கம் இருக்கும். சோம்பல், மறதி உருவாகும். உழைக்காமல் உண்ணும் எண்ணம், தேவையற்ற கோபம் வரும். பூர்வீக சொத்து தொடர்பான வம்பு வழக்கு உருவாகும். தந்தையின் ஆரோக்கியக் கேட்டினால் பொருள்விரயம் மிகும். எனினும் ஆயுள்குற்றம் இல்லை.
தந்தை- மகன் கருத்து வேறுபாடு அதிகரிக்கும். தந்தை- மகன் பிரிந்துவாழ நேரும். தந்தை, தந்தைவழி உறவினர்கள் வெளிப்பேச்சில் நல்லவர்களாகவும் மனதிற்குள் வஞ்சகம் வைத்தும் பேசுவார் கள். அரசுவழி ஆதாயம் கிடைப்பதில் தடை ஏற்படும். இழுபறியாக இருந்துவந்த குடும்ப சொத்து விவகாரம் சட்டத்தின் உதவியை நாடவைக்கும். குலத்தொழில் செய்துவந்தவர்கள் அதைவிட்டு வேறு தொழில் செய்யத் தொடங்குவீர்கள்.
அரசு மற்றும் பொதுவாழ்வில் இருப்பவர் கள் மிகவும் எச்சரிக்கையாகப் பேச வேண்டும். எதிர்கட்சியினர் உங்கள் வார்த்தை யைக்கொண்டே உங்கள் கட்சியில் கலகத்தை ஏற்படுத்துவார்கள். அரசின் நலத்திட்டங்கள் வந்து சேர்வதில் காலதாமதம் ஏற்படும். பூர்வீக சொத்து இன்று வந்துவிடும், நாளை வந்துவிடுமென, இலவுகாத்த கிளியாக நாளைக் கடத்தவேண்டும்.
பரிகாரம்
மீளமுடியாத கடனால் தவிப்பவர்கள் வியாழக்கிழமை இரவு 8.00-9.00 மணிக்குள் ஸ்ரீராமானுஜர் படத்திற்கு அவல், நாட்டுச் சர்க்கரை, ஏலக்காய் கலந்து படைத்து வழிபட பணப்புழக்கம் அதிகரித்து கடன் தொல்லை நீங்கும். வியாழக்கிழமை மதியம் (1.00-2.00) குரு ஓரையில் குழந்தைகள் காப்பகத்திலுள்ள குழந்தைகளுக்கு மஞ்சள் லட்டு தர மனக் கவலை நீங்கும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 98652 20406