Advertisment

வெளிநாட்டில் பொருளீட்டும் யோகம்! மணிமொழி (சப்தரிஷி நாடி ஜோதிடர்)

/idhalgal/balajothidam/abroad-materializing-yoga-manimozhi-sabhatarishi-nadi-astrologer

ஜோதிடம் என்பது இந்த பூமியின் இயற்கை நிகழ்வுகளையும், இங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை விதி நிலையையும் கூறுவது; அறிவுரை கூறுவதல்ல. மனிதன் தன் விதியை, அறிந்து தீமைகளைத் தடுத்து நன்மைகளை அடையும் வழிமுறைகளைக் கூறுவது.

Advertisment

மனிதனைத் தவிர இந்த பூமியில் பிறக்கும் அனைத்து உயிரினங்களும், காலைமுதல் மாலைவரை தங்களுக்குத் தேவையான உணவை மட்டும் தேடி அடைந்துகொள்கின்றன. அவற்றின் வாழ்க்கைக்கு வேறெதுவும் தேவையில்லை.

மனிதர்கள் மட்டும் உணவு, உடை, வீடு, நிலம், சொத்து, ஆபரணங்கள், வாகனம், பதவி, திருமணம், குடும்பம் என, இன்னும் வாழ்வின் தேவைகள் அனைத்தையும் பணத்தின்மூலம் அடைந்து கொள்கிறார்கள்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல; இந்த உலகைப் படைத்து, அதில் உயிரினங்களைப் படைத்துக் காப்பாற்றும் கடவுளுக்கும் சிலை செய்து கடவுளை உருவாக்கவும், கோவில் கட்டவும், தினசரி பூஜை, நைவேத்தியம், அபிஷேகம், உற்சவம், திருவிழா என வழிபாட்டிற்கும் பணம் தேவைப்படுகிறது. பணம் மூவுலகையும், தன் கட்டுப்பாட்ட

ஜோதிடம் என்பது இந்த பூமியின் இயற்கை நிகழ்வுகளையும், இங்கு வாழும் மனிதர்களின் வாழ்க்கை விதி நிலையையும் கூறுவது; அறிவுரை கூறுவதல்ல. மனிதன் தன் விதியை, அறிந்து தீமைகளைத் தடுத்து நன்மைகளை அடையும் வழிமுறைகளைக் கூறுவது.

Advertisment

மனிதனைத் தவிர இந்த பூமியில் பிறக்கும் அனைத்து உயிரினங்களும், காலைமுதல் மாலைவரை தங்களுக்குத் தேவையான உணவை மட்டும் தேடி அடைந்துகொள்கின்றன. அவற்றின் வாழ்க்கைக்கு வேறெதுவும் தேவையில்லை.

மனிதர்கள் மட்டும் உணவு, உடை, வீடு, நிலம், சொத்து, ஆபரணங்கள், வாகனம், பதவி, திருமணம், குடும்பம் என, இன்னும் வாழ்வின் தேவைகள் அனைத்தையும் பணத்தின்மூலம் அடைந்து கொள்கிறார்கள்.

மனிதர்களுக்கு மட்டுமல்ல; இந்த உலகைப் படைத்து, அதில் உயிரினங்களைப் படைத்துக் காப்பாற்றும் கடவுளுக்கும் சிலை செய்து கடவுளை உருவாக்கவும், கோவில் கட்டவும், தினசரி பூஜை, நைவேத்தியம், அபிஷேகம், உற்சவம், திருவிழா என வழிபாட்டிற்கும் பணம் தேவைப்படுகிறது. பணம் மூவுலகையும், தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. கோவில்களில் பணம் உள்ளவனுக்குத் தனி மரியாதைதான்.

Advertisment

இந்த உலகில் பணத்திற்குத்தான் முதல் மரியாதை. அதனால்தான் நமது முன்னோர்கள் "திரைகடலோடியும் திரவியம் தேடு' என்றார்கள்.

ss

அயல்நாடுகளுக்குச் சென்று பணம் சம்பாதிக்கும் யோகம் உள்ளவர்கள் ஜாதக கிரக அமைப்பினை ரிஷிகள் சப்தரிஷி நாடியில் கூறியுள்ளார்கள்.

1. ஒருவரின் பிறப்பு ஜாதகத்தில், லக்னத்தில் அல்லது லக்னத்திற்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சனி, சந்திரன், ராகு அல்லது கேது இருந்தால் அவர் வெளிநாடு செல்லும் யோகம் உள்ளவர்.

2. லக்னாதிபதியுடன் சேர்ந்தோ அல்லது லக்னாதிபதி இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரன், சனி, ராகு அல்லது கேது இணைந்திருந்தால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டு.

3. லக்னத்திற்கு 10-ஆமிடத்தில் அல்லது 10-ஆமிடத்திற்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சனி, சந்திரன், ராகு அல்லது கேது இருந்தால் வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டு.

4. லக்னத்திற்கு 10-ஆமிடத்து கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சனி, சந்திரன், ராகு அல்லது கேது இருந்தால் வெளிநாடு செல்வார்.

5. லக்னத்திற்கு 3-ஆமிடத்தில் அல்லது மூன்றாமிடத் துக்கு 1, 5, 9 ஆகிய ராசிகளில் சனி, சந்திரன், ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகரின் இளைய சகோதரர் கள் வெளிநாடு செல்லும் யோகம் பெறுவர்.

6. லக்னத்திற்கு 3-ஆமிடத்திற்குரிய கிரகத்திற்கு அல்லது 3-ஆமிடத்திற்குரிய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சனி, சந்திரன், ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகரின் சகோதரன் வெளிநாடு செல்வான்.

7. லக்னத்திற்கு 5-ஆவது ராசியில் அல்லது 5-ஆமிடத்திற்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரன், ராகு அல்லது கேது, சனி இருந்தால் ஜாதகரின் பிள்ளைகளில் ஒருவர் வெளிநாடு செல்வார்.

8. லக்னத்திற்கு 5-ஆவது ராசிக்குரிய கிரகத்துடன் அல்லது 5-க்குடைய கிரகம் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரனுடன் சனி, ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகரின் பிள்ளைகளில் ஒருவர் வெளிநாடு செல்வார்.

9. லக்னத்திற்கு 7-ஆவது ராசிக்குரிய கிரகத்துடன் அல்லது 7-ஆவது ராசிக்குரியவன் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ல் சந்திரன், சனி, ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகரின் மனைவி வெளிநாடு செல்வாள். பெண்ணின் ஜாதகத்தில் இதுபோன்ற அமைப்பிருந்தால் அவள் கணவனுக்கு வெளிநாடு செல்லும் யோகம் அமையும்.

10. லக்னத்திற்கு 9-ஆவது ராசிக்குரிய கிரகத்துடன் அல்லது 9-க்குரிய கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரன், சனி, ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகரின் தந்தை வெளிநாடு செல்வார்.

11. லக்னத்திற்கு 11-ஆவது ராசிக்குரிய கிரகத்துடன் அல்லது 11-க்குரிய கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரன் சனி, ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகரின் மூத்த சகோதரன் வெளிநாடு செல்வார்.

12. லக்னத்திற்கு 4-க்குடைய கிரகத்துடன் அல்லது 4-க்குடைய கிரகம் நின்ற ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சனி, சந்திரன், ராகு அல்லது கேது இருந்தால் ஜாதகரின் தாய் வெளிநாடு செல்வாள்.

13. லக்னாதிபதியும் லக்னத்திற்கு 7-ஆமிடத்திற்குரிய கிரகமும் சேர்ந்து ஒரு ராசியில் இருந்து, அந்த கிரகங்கள் இருக்கும் ராசிக்கு 1, 5, 9-ஆவது ராசிகளில் சந்திரன், சனி, ராகு அல்லது கேது இருந்தால் கணவன்- மனைவி இருவரும் வெளிநாட்டிற்குச் சென்று வசிப்பார்கள்.

இதுபோன்ற கிரக அமைப்புள்ள ஜாதகர்கள் தங்கள் சொந்த ஊரி-ருந்து பிழைக்கமுடியாது. வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடு சென்று தொழில்செய்து வாழ யோகமுண்டு. மனிதன் உழைத்து சம்பாதிக்கும் யோகம் இருந்தாலும், சம்பாதித்த பணத்தை சேர்த்துவைத்து செல்வந்தனாக வாழ்வின் இறுதிவரை வாழ்வதற்கு அறிவு மட்டுமே உதவிசெய்யும். பலர் போ- நிறுவன ஏஜென்டுகளிடம் பணத்தைக் கொடுத்து ஏமாந்தும் போகிறார்கள்.

அயல்நாடு செல்லும் மோகம் உள்ளவர்கள் தங்கள் ஜாதகத்தில் அமைப்பு உள்ளதா என்று அறிந்து முயற்சிசெய்வது நல்லது.

சப்தரிஷி நாடியில் தசை, புக்தி, அந்தர முறைப்படி பலன் கூறப்படுவதில்லை. கோட்சார கிரகங்கள் பலன்தரும் நிலையில் சஞ்சாரம் செய்யும் காலத்தில், வெளிநாடு செல்லும் யோகம் சித்திக்கும் என்பது ரிஷிகள் வாக்கு.

செல்: 93847 66742

bala011124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe