மாபெரும் இந்த சூட்சுமம் நிறைந்த பிரபஞ்சத்தில் எண்களின் ஆளுமையானது அதி முக்கியத்துவம் வாய்ந்ததாக திகழ் கின்றது.

Advertisment

நம் வாழ்வில் ஏற்புக்குரிய நிகழ்வுகளை சந்திக்க சூழல் அமையாத பொழுதும், ஜாதகத் தில் எந்த யோகமும் இல்லாத சூழ்நிலையிலும், இருக்கும் ஒரு நபருக்கு அதிஷ்ட எண்ணில் பெயர் அமைத்துக்கொண்டும், கையெழுத்தை சாதகமாக மாற்றிக்கொண்டும், பயணித்தால் அதிர்ஷ்டங்களை நிச்சயமாக அனுபவிக்க முடியும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

ட,எ ஆகிய எழுத்துக்கள் 8-ஆம் எண்ணின் ஆதிக்கம் கொண்டவையாகும்.

இந்த 8-ஆம் எண்ணானது ஆயுள், கர்மம், நேர்மை, ஆகியவற்றை பறைசாற்றும் நோக்கில் அமையப்பெற்றுள்ளது.

இது கருமக்காரகன் என்றும் கர்மாகாரகன் என்றும் அழைக்கக்கூடிய சனி பகவானின் முழு ஆளுமைக்குரிய எண்ணாகும்.

Advertisment

சனிபகவான் மனித உடலில் முதுகுத் தண்டில் உள்ளே பயணிக்கக்கூடிய ஒரு திரவமாக அமையப்பெற்றுள்ளார்.

மேலும் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் சனி பகவானின் காரகம் சார்ந்தது.

8, 17, 26 ஆகிய தேதிகளில் எந்த மாதத் தில் பிறப்பெடுத்திருந்தாலும் இவர்கள் சனி யின் ஆதிக்கத்தில் பிறந்த நபர்கள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறப்பு எண் 8 விதி எண் 1-ல் பிறந்தவர்கள்

Advertisment

சனி மற்றும் சூரியனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள், பார்ப்பதற்கு சுறுசுறுப்பான தோற் றம் உடையவர்களாக இருப்பார்கள். மிகுந்த சிந்தனை பலம் மிக்கவர்கள். மற்ற பற்களை காட்டிலும் முன்பற்கள் இரண்டும் வித்தியாச மாகக் காட்சியளிக்கும். கடினமான உழைப் பாளிகள், சிறந்த ஞானிகள் என்று போற்றும் அளவிற்கு மகத்துவம் வாய்ந்தவர்கள்.

உற்சாகம் மற்றும் சுக- துக்கங்கள் இரண் டையும் சமமாக பாவிக்கும் மன தின்மை பெற்றவர்கள். கடுமையாக உழைத்துப் போராடக்கூடிய மனோதிடம் பெற்றவர்கள். எவ்வளவு உயர்ந்த நிலைக்கு சென்றாலும் தனது பழைய வாழ்வையும் அதில் ஏற்பட்ட பாடங்களையும் மறக்க மாட்டார்கள்.

தொழிலின்மூலம் தன்னை வெளிப் படுத்திக்கொள்ளும் அளவிற்கு தொழில் பக்தியும் அதில் முன்னேற்றத்தையும் அடை வார்கள். தான் செய்யும் தொழிலில் எப் பொழுதும் ஒரு நேர்மையினைக் கடை பிடிக்கும் நல்லவர்கள். பிறருக்கு தீங்கு செய்யும் காரியத்தில் இறங்க மன கூச்சப்படும் நபர்கள். தான் செய்வதே சரி என்று வாதிடுவார்கள். இவர்களுக்கு 35 முதல் 40 வயதிற்குமேல்தான் வசந்தத்தின் காற்றே வீசும். தன்னை பெரும்பணம் படைத்தவனாக மாற்றிக் கொள்வதற்கான உழைப்பை நிதமும் தொடரும் நபர்கள்.

பிறப்பு எண் 8 விதி எண் 2-ல் பிறந்தவர்கள்

சனி மற்றும் சந்திரனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் மிக அன்பானவர்கள். எப்பொழுதும் இருமன சிந்தனையில் பயணிப்பவர்கள். முக கவர்ச்சியுடன் திகழ்வார் கள். பிடிவாத குணம் இவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும். சில நேரங்களில் ஏற்படும் பிரச்சினையைக் கண்டு கலங்கி விடுவார்கள். எதற்கும் தெய்வத்தின் துணை யினை பெரிதாக எண்ணி பயணிப்பார்கள். ஜாதகரீதியாக சனி சந்திரனின் தொடர்பா னது புனர்பூ தோஷம் என்கின்ற ஒரு தோஷத்தை குறிக்கும். இது மனம் எப்பொழுதும் ஒரு குழப்பத்தின் வசம் பயணிப்பதை எடுத் துரைக்கும். எந்த முடிவையும் சட்டென்று எடுத்துவிட முடியாத சூழ்நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவார்கள். எல்லா காரியங்களும் தனது மேற்பார்வைலேயே நடக்க வேண்டும் என்கின்ற எண்ணம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். கலைகள், கதை, கட்டுரை, கவிதை, எழுதுவதால் புகழ் அடைவார்கள். மறைபொருள் ரகசியத்தை அறிய முற்படுவார்கள். சுறுசுறுப்பாக இயங்கக்கூடியவர்கள். அதீத ஞாபக சக்தி உடையவர்கள். எழுத் தாளர்கள் என்று பெயர் எடுப்பார்கள். தீய எண்ணங்கள் இவர்களை பெரிதும் கவரும்.

ஆன்மிக நாட்டம் அதிகமாக இருக்கும். சிறு சிறு குழப்பங்களுக்கே ஆடிவிடுவார்கள். எல்லாவற்றிலும் தலைமை பொறுப்பை தனதாக்கி கொள்ளவேண்டும் என்கின்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கும். அடிக்கடி தெய்வீக பிரயாணங்கள் செய்ய முற்படுவார் கள். வாழ்க்கை சம்பவங்கள் அனைத்தையும் அலசி ஆராய்ந்து கொண்டே இருப்பார்கள்.

11

பிறப்பு எண் 8 விதி எண் 3-ல் பிறந்தவர்கள்

சனி மற்றும் குருவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கலை உணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் பெரிய அனுபவசாலிகள் என்று அழைக்கலாம். பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காட்சியளிப்பார்கள். குரு மார்க்கம், பக்தி மார்க்கம் தெரிந்தவர்கள். பல புண்ணிய பிரயாணங்கள் மேற்கொள் வார்கள். தேசபக்தியும் தெய்வீக பக்தியும் நிரம்பியவர்கள். கடினமான மொழிகளில் பேசுவார்கள். ஒளிவு மறைவின்றி தனது மனதில் பட்டதை கூறிவிடுவார்கள். இதனால் பலரிடம் பகையை சம்பாதித்துக் கொள்வார்கள். தங்களின் குறைகளை மற்றவர்களிடம் கூறி உதவிகேட்க மாட்டார்கள். மற்றவர்களுக்கு உதவிகள் செய்வதிலும் தாமதப்பட்டு செய்து தருவார்கள். குற்றம் செய்தவர்களை மற்றவர்களை விடவும் கடுமை யாக தண்டிக்கும் மன ஆற்றல்மிக்கவர்கள். புகழ்மிக்க வாழ்க்கையை இவர்கள் பெரிதும் கவர்ந்து அதன்வசம் செல்வார்கள். இல்லாத ஒன்றை இருப்பது போல் காட்டி மற்றவர்களையும் நம்பச் செய்வார்கள். ஆன்மிகம், இல்லறம் என்று வாழ்க்கை இருபுறமும் சில கசப்புடன் நகர்ந்து செல்லும். இவர்களுக்கு யோகம், தியானம், மந்திர ஜெபங்கள், சித்தியாகும். ஜாதகத்தில் குரு சனி இணைவு பிரம்மஹத்தி தோஷத்தைக் குறிக்கும். இந்த இணைவானது பிரச்சினை எங்கிருந்து வருகின்றது என்பதே தெரியாத சில பிரச்சினைகளை அனுபவிக் கும் சூழலை உருவாக்கிவிடும்.

பிறப்பு எண் 8 விதி எண் 4-ல் பிறந்தவர்கள்

சனி மற்றும் ராகுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் எந்திரங்கள், கருவி மார்க்கம், அறிந்தவர்கள். விவாதம் செய்யும்போது தனது கருத்தை விட்டுக்கொடுக்காமல் பேசுவார்கள். இதனால் பலபேர் இவர்களை பிடிவாதக்காரர்கள் என்று கூறி முகம் சுழிப்பார்கள். குழந்தைகளின்மீதும் வளர்ப்பு பிராணிகளின்மீதும் அன்பு காட்டு வார்கள். இளமையிலேயே பலவித மான காதல் வயப்பட்டு துன்பப்பட்டு வந்திருப்பார்கள். நகைச்சுவையுடன் பேசுவார்கள். புன்னகையுடன்கூடிய முகம் இருக்கும். எதார்த்தவாதிகள். தன்னை நம்பி வந்தவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். தெளிவான சுய சிந்தனை இருக்கும். எதிலும் பிரம்மாண்டத்தை எதிர் பார்ப்பார்கள். குருவை உயிர் போன்று மதிப் பார்கள். மற்றவர்களின் உதவியால் முன்னுக்கு வரும் சூழல் இவர்களுக்கு அமையும். பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பார்கள். இவர்கள் பண விஷயத்தில் மிகவும் கண்டிப்பு டன் நடந்துகொள்வார்கள்.

பிறப்பு எண் 8 விதி எண் 5-ல் பிறந்தவர்கள்

சனி மற்றும் புதனின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் கலைகளில் ஆராய்ச்சி தன்மையுடன் பயணிப்பார்கள். எந்த நேரமும் மிகவும் சுறுசுறுப்பு மிக்கவர்களாக இருப்பார்கள். உயர்ந்த லட்சியங்களை கொண்டவர்கள். வசதிகளைத் தேடிக்கொள்வதில் வல்லவர் கள். சில நேரங்களில் குழம்பி போவார்கள்.

இளமையிலேயே எதிர்நீச்சல் போட்டு வெற்றிபெற்றிருப்பார்கள். அரசியல் அறிந்தவர்கள், சட்டம், மருத்துவம், கணிதம், ஜோதிடம், சினிமா போன்ற துறைகளில் சிறந்து விளங்குவார்கள். இயல்பான பேச்சின்மூலம் அனைவரையும் கவர்ந்திருப் பார்கள். வசீகரமான முகத்துடன் வாழ்க் கையை நடத்தும் இவர்கள் எல்லாவற்றையும் விரைந்து முடிக்கவேண்டும் என்று எண்ணுவார்கள். மற்றவர்களிடம் வேலை வாங்குவதில் வல்லவர்கள். கண்டிப்பானவர்கள். பல தொழில்கள் செய்து பணம் ஈட்டுவார்கள். இவர்கள் சோம்பேறி ஆகி விட்டால் நீண்ட நேரம் தூங்கி விடுவார்கள். பலர் போற்றும் மனிதர்களாக இருப்பார்கள். எல்லா பழக்கத்தையும் கற்ற பின்னர் எதற்கும் அடிமையாகாமல் விட்டுவிடுவார்கள்.

பிறப்பு எண் 8 விதி எண் 6-ல் பிறந்தவர்கள்

சனி மற்றும் சுக்கிரனின் ஆதிக்கத் தில் பிறந்த இவர்கள் கருணை இதயம் வாய்ந்தவர்கள். பாசத்திற்கு கட்டுப்படுவார்கள். உண்மையான நட்பிற்கு தலை வணங்குவார்கள். கடவுள் மற்றும் பக்தி மார்க்கத்தின்மீது அபார நம்பிக்கையுடையவர்கள். வாழ்க்கை யில் புகழ்பெற வேண்டும் என்ற லட்சியம் உடையவர்கள். தனது இஷ்டப்படிதான் செயல்படுவார்கள். பிறருக்கு கட்டுப்பட்டு நடப்பதை வெறுப்பார்கள். எதையும் முன் கூட்டியே யூகிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். இவ்வெண்காரர்கள் ஆன்மிக நெறியும் நற்குணமும் வாய்ந்ததால் புகழ்பெற்று விளங்குவார்கள். அரசியல் அறிவும், பொது அறிவும் நிரம்பியவர்கள். செல்வத்தை பாதுகாக்க தெரிந்தவர்கள். புத்தகம், இசை, நாடகம், சினிமா, விஷயத்தில் அதிகம் ஆர்வம் இருக்கும். சூழ்ச்சியால் கெட்ட பெயர் எடுத்து அவமானப்படுவார்கள்.

பிறப்பு எண் 8 விதி எண் 7-ல் பிறந்தவர்கள்

சனி மற்றும் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்களின் வம்சாவழியில் ஒரு சன்னியாசி இருக்க வாய்ப்புகள் அதிகம். அல்லது திருமணத்தடை உள்ளவர்கள் இருப்பார்கள். ரகசியம் காப்பதில் வல்லவர்கள். எங்கு சென்றா லும் நல்லபெயர் எடுப்பார்கள். மலர்களை விரும்பக்கூடியவர்கள். அதீத கற்பனை வளமும் சிந்தனை சக்தியும் உடையவர்கள். கலைகளில் தேர்ச்சியும் சிறப்பும் அடைவார்கள்.

எழுத்தாற்றல், பேச்சாற்றல் மிக்கவர்கள். நிர்வாக திறனுடையவர்கள். ஆத்ம ஞானம் பெற்றிருப்பார்கள். பல காரியங்களை கற்பனையிலேயே செய்துவருவார்கள். பிறரிடம் கலகலப்பாக மனம்விட்டு பேசக்கூட மாட்டார்கள். இளமையிலேயே காப்பாளர் களின் ஆதரவு குறைந்துவிடும். தைரியசாலிகள். இன்ப- துன்பத்தை தனக்குத்தானே அனுபவிப்பார்கள். மனதிற்குள் ஒருவித மேதாவிதனம் இருந்துகொண்டே இருக்கும். பிறருக்கு அடிபணிய மறுப்பார்கள். மிதம் மிஞ்சின செயல்களில் ஈடுபட்டு பெரும் நஷ்டம் அடைவார்கள். எப்பொழுதும் ஆன்மிக விஷயங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள்.

பிறப்பு எண் 8 விதி எண் 8-ல் பிறந்தவர்கள்

முழுக்க முழுக்க சனியின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் செயற்கரிய காரியங்கள் செய்யும் பராக்கிரமசா-கள். இளமையிலிருந்து 40 வயதுவரை பல போராட்டங்களைக் கடந்த சில உயர்ந்த நிலையை அடைவார் கள். இவர்களின் சாதனையோ அல்லது தியாகவோ மற்றவர்களால் பாராட்டப் படவே படாது. மரியாதைக்கு உரிய நபர்களாக வலம் வருவார்கள். இளமை கடந்தபிறகே இவர்களுக்கு அதிர்ஷ்டக் காற்று வீசும். எதிரி களை அடக்கியாளும் சக்தி படைத்தவர்கள். ஜனவசியே சக்தி படைத்தவர்கள். மூளை பலம்மிக்கவர்கள். கலை, ஓவியம், காவியம், சினிமா போன்றவற்றினால் சிறப்படை வார்கள். திறமான மனதுடன் நடந்து கொள்வார்கள். அதீத தெய்வ நம்பிக்கையும் தன்னம்பிக்கையும் உடையவர்கள். வாதம் விவாதம் இரண்டுமே செய்வார்கள். குருபக்தி மிக்கவர்கள். மந்திர தந்திர செயல்கள் இவர் களுக்கு ஏமாற்றத்தை மட்டுமே அளிக்கும். காதல் விஷயத்தில் தோல்வி கண்டு மனம் பாதிப்படைவார்கள். போலிகளை நம்பி ஏமாறுவார்கள்.

பிறப்பு எண் 8 விதி எண் 9-ல் பிறந்தவர்கள்

சனி மற்றும் செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த இவர்கள் நாடாளும் சக்தி படைத்தவர் கள். பூமியில் பொன்விளையச் செய்வார்கள். நாட்டுநலனில் மிகுந்த அக்கறைக் கொண்ட வர்கள். பேச்சில் காந்த வசிய சக்தி கொண்ட வர்கள். எளிதில் யாரையும் பேச்சால் வசமாக்கி விடுவார்கள். கம்பீரமாக மிகுந்த கண் களுடன் காணப்படுவார்கள். தன்னுடைய மன கருத்துக்களை மறைக்காது வெளியிடு வார்கள். ஒரு காரியத்தில் இறங்கினால் முடிக்காமல் ஓய மாட்டார்கள். காந்த சக்தி உடைய இவர்கள் காவியம், ஓவியம், சிற்பம், மருத்துவம், அறிவியல், இராணுவம், பாதுகாப்பு போன்ற துறைகளில் சிறப்பாக பணியாற்றும் திறமைசாலிகள். தவறுகளை திருத்திக்கொண்டு வலம்வரும் தைரியசாலிகள். அதீத தெய்வ நம்பிக்கையும் தன்னம் பிக்கையும் உடையவர்கள். குருபக்தி மிக்கவர்கள். குழந்தைகள்போல நடந்து கொள்வார்கள். இவர்களுக்கும் மந்திர தந்திரங்கள் சுபிட்சத்தை தராது. காதல் தோல்விகளைக் கடந்தே வந்திருப்பார்கள்.

அதிர்ஷ்ட தேதிகள்

6, 15, 24, 5, 14, 23, 9, 18, 27.

துரதிஷ்ட தேதிகள்

8, 17, 26, 2, 11, 20, 29.

அதிர்ஷ்ட நிறங்கள்

வெளிர் நீலம், மஞ்சள், பொன்னிறம்.

துரதிஷ்ட நிறங்கள்

கருப்பு, பச்சை, இருண்ட நிறங்கள்.

அதிர்ஷ்ட ரத்தினங்கள்

நீலக்கல், நீல அக்கோமரின், கார்னெட்.

சனியின் ஆதித்தத்தில் தங்களது பெயரை அதிர்ஷ்டகரமாக அமைத்துக் கொண்டு, நட்பு எண்களில் பெயர் எண்ணையும், தொலைபேசி எண்ணையும், வங்கி எண்ணை யும் உருவாக்கிக்கொண்டால் வாழ்க்கையில் வசந்தத்தை அடையமுடியும்.

செல்: 80563 79988