ருவர் ஜாதகத்தில் லக்னத்துக்கு எட்டாம் வீட்டிற்குரிய கிரகத்தைக் கொண்டு ஆயுளை நிர்ணயம் செய்யலாம். மரணம், கீழே விழுந்து அடிபடுதல், சிரமமான வாழ்க்கை, அவமானம், வறுமை, அவதூறு, ஆயுதங்களினால் ஆபத்து, மன அமைதியின்மை, சிறை தண்டனை போன்றவற்றை லக்னத்துக்கு அஷ்டமாதிபதி (எட்டுக்குரியவர்) கொடுப்பார்.

Advertisment

லக்னத்துக்கு எட்டுக்குரிய கிரகம் லக்னத்திலேயே இருந்தால், வியாதி, கடன், வறுமையோடிருப்பார்கள். சுபகிரகங்கள் பார்வை, சேர்க்கை இருந்தால், தீர்க்காயுள் உண்டு. சிரமம் குறைந்த வாழ்க்கையுடனும், சொற்பக் கவலைகளுடனும் வாழ்க்கை நடத்துவார்கள்.

8palans

பாவி, மாரகர் சம்பந்தம், பார்வை பெற்றால் அதிக வறுமை, வியாதி, மரண விபத்து உண்டாகும்.

Advertisment

எட்டுக்குரிய கிரகம் 2-ல் இருந் தால், வாக்கில் நாணயம் இருக்காது. தீய சொற்களைப் பிரயோகிப் பார்கள். குடும்பம் சுபிட்சமாக விளங்காது. செல்வத்தை ஸ்திர நோக்கமில்லாமல் செலவிடுவார்கள். கல்வியில் ஊக்கம் இராது. உடல்பலம் குறைவு. பித்தனைப்போல் வாழ்க்கை நடத்து வார்கள்.

எட்டுக்குரிய கிரகம் 3-ல் இருந்தால், சகோதரர்களிடையே ஒற்றுமை இருக்காது. தைரியம் குறைந்து, மனதில் ஒருவித பயம் இருந்து கொண்டே இருக்கும். பெரியவர் களால் சேர்த்து வைக்கப்பட்ட சொத்துகள் பலவிதங்களில் நாச மாகும்.

எட்டுக்குரிய கிரகம் 4-ல் இருந் தால், தாயார் மற்றும் தாய்வழி மாமன் வகையில் ஆதரவிருக் காது. குடும்பத்தில் சச்சரவுகள் தோன்றும். பிதுரார்ஜித சொத்து களும், சம்பாதிக்கும் பொருளும் நஷ்ட மாகும். கட்டடமாக இருந்தால் நாச மாகும். வாகனங்களாக இருந்தால் எதிர்பாராத விபத்தில் சிக்கி நஷ்டங் களும், சுகவீனங்களும் ஏற்படும்.

சுபகிரகப் பார்வை பெற்றிருந்தால் மேற்சொன்ன தீமைகளின் அளவு குறையும்.

Advertisment

எட்டுக்குரிய கிரகம் 5-ல் இருந்தால், புத்திரர்களால் மன அமைதியின்மையும், சஞ்சலமும், கலகங்களும், நோய்களும் இருந்துவரும். உறவு, நட்புகளிடையே விரோதங்கள் இருக்கும். அலைச்சல் அதிகமாகும். எக்காரியத்திலும் திடமான மனதுடன் செயல்பட முடியாது.

எட்டுக்குரிய கிரகம் 6-ல் இருந்தால், உடல் மெலிலிந்து காணப்படும். கெட்ட எண்ணங்களைக் கொண்டவராகவும், தந்திரக்காரர்களாகவும் இருப்பார்கள். கீழ்மைத்தனம் கொண்டவர்கள்.

சந்தான பாக்கியமில்லாது, ஸ்வீகாரம், தத்து என மாற்றார் பிள்ளைகளை வளர்த்துக்கொண்டு, அற்பாயுளுடன் இருப்பார்கள்.

எட்டுக்குரிய கிரகம் 7-ல் இருந்தால், மனைவியை அன்புடன் வைத்துக் கொள்ளமாட்டார். மனைவி அற்பாயுளைக் கொண்டவர்.

பெண்களால் கலகம், அவமானம், வறுமை முதலியன ஏற்படும். இகழ்ச்சியுடன் காலம் கழிப்பார். ஆயுள் தீர்க்கம் உண்டு.

எட்டுக்குரிய கிரகம் 8-ல் ஆட்சியாக இருந்தால், சஞ்சலத்துடனேயே வாழ்க்கை நடத்துவார். நன்மை- தீமைகள் அறியாது, லாப- நஷ்டங்கள் அறியாது, எண்ணிய மாத்திரத்தில் எதையும் செய்துவிட்டு அவமானத்தையும், அலைச்சல் முதலியவற்றையும் அடைவார். பிறர் சொல்லைக் கேட்கமாட்டார். ஆயுள் தீர்க்கம் உண்டு.

எட்டுக்குரிய கிரகம் 9-ல் இருந்தால், பிதுர்பாக்கிய சொத்துகள் நாசமாகும். புத்திரர்களால் கடன் ஏற்படும். உறவினர், நண்பர்களிடையே விரோதத்துடனும், அபிப்ராயப் பேதத்துடனும் இருப் பார்கள்.

எட்டுக்குரிய கிரகம் 10-ல் இருந்தால், செய்யும் தொழிலிலில் ஸ்திரமாக இருக்க மாட்டார்கள். அடிக்கடி வேலை மாறிக் கொண்டே இருப்பார்கள். சுபகிரகம் சம்பந்தப்பட்டிருந்தால் வாழ்க்கை பிரகாசத்துடன் விளங்கும். தீர்க் காயுளுடன் இருப்பார்கள். வாழ்க்கையை சமாளித்து நடத்துவார்.

எட்டுக்குரிய கிரகம் 11-ல் இருந்தால், மூத்த சகோதர- சகோதரிகளுக்கு கண்டமும் ஆயுள் அற்பமுமாய் இருக்கும். புத்திரர்களால் லாபம் ஏற்படும்.

எட்டுக்குரிய கிரகம் 12-ல் இருந்தால், ஊர்சுற்றும் குணம் இருக்கும். மன அமைதியில்லாமல், தகாதவழியில் செல்வத்தை இழப்பார். சுகபோகங் களை அனுபவித்து வாழ்க்கையைக் கழிப்பார்.

பரிகாரம்-1

எட்டாமிடத்து அதிபதி 8-ல் இருப் பவர்கள் வாழ்வில் ஒருமுறையாவது திருக்கடையூர் சென்று வணங்கிவர ஆயுள் நீடிக்கும்; கண்டம் குறையும்.

பரிகாரம்-2

உங்கள் ஊர் அருகிலுள்ள எமதர்ம ராஜா கோவிலுக்குச்சென்று வணங்கிவர அனைத்து செயல்பாடுகளும் நன்மையாகும். எட்டுக்குரியவர் ராஜயோகத்தைக் கொடுப்பார்.

பரிகாரம்-3

எமதர்மராஜாவை தரிசிக்க முடியாத வர்கள் தெற்கு திசையிலுள்ள எமதர்ம ராஜாவை மனதில் நினைத்து வழிபட ஆயுள் நீட்டிப்பு உண்டு. பிள்ளைகள் பெரியவர்களாகி சம்பாதிக்கும்வரை வாழ்ந்து செல்லலாம்.

செல்: 94871 68174