Advertisment

இல்லத்தில் குபேரன் குடியிருக்க 75 குறிப்புகள்! -கோவிலாம்பூண்டி பொ. பாலாஜிகணேஷ்

/idhalgal/balajothidam/75-tips-stay-kuberan-home-kovilampoondi-po-balajiganesh

குபேரனை யாருக்குதான் பிடிக்காது! எல்லாருக்கும் பிடித்தவர் குபேரன். அவர் நம் வீட்டிலிருந்தால் செல்வச் செழிப்போடு நல்வாழ்வு வாழலாம். அதற்கு நாம் என்ன செய்யவேண்டும்?

Advertisment

1. வீட்டில் காமாட்சி விளக்கில் கல்கண்டு போட்டு தீபமேற்ற லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

Advertisment

2. வீட்டில் வெள்ளைப் புறாக்களை வளர்க்க பணத்தட்டுப்பாடு நீங்கும்.

3. வீட்டில் பலவித ஊறுகாய் வைத்திருக்கவும். ஏனெனில் குபேரன் ஊறுகாய்ப் பிரியர். எனவே பலவித ஊறுகாய் வைத்திருக்க குபேர சம்பத்து வரும்.

4. வீட்டிற்கு வரும் சுமங்கலிப் பெண்களுக்கு நீர் அருந்தத் தரவும். பின் மஞ்சள், குங்குமம் தரவும். இதனால் ஜென்ம ஜென்மாந்திர தரித்திரம் தீர்ந்து பணவரவு ஏற்படும்.

5. இறைபக்தியில் இருப்பவர்களிடம் ஆசிபெற்றால் புண்ணிய பலம் கூடும். பணவரவு அதிகரிக்கும்.

6. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மொச்சை, சுண்டலை மகாலட்சுமிக்கு நைவேத்தியம் செய்து குடும்பத்தினர் மட்டும் சாப்பிடவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர குடும்பத்தில் பணப்புழக்கம் அதிகரிக்கும்.

7. அபிஜித் முகூர்த்தத்தில் (பகல் 12.00 மணி) திருநங்கைக்குத் திருப்தியாக உணவளித்து அவர் கையால் பணம்பெற, பணம் நிலைத்திருக்கும்.

8. யாரொருவர் ஜாதகத்தில் லக்னத் திற்கு மூன்றில் சுக்கிரன் நீசம், பகையின்றி இருக்கிறாரோ அவர் கையால் சுக்கிர ஓரையில் பணம் பெற, அன்றிலிருந்து நமக்கு சுக்கிர தசைதான்.

9. தினமும் பசுவின் கோமியத்தில் சிறிதளவு குளிக்கும் நீரில் கலந்து குளிக்கவும். வீட்டில் தெளிக்கவும். 45 நாட்கள் தொடர்ந்து செய்திட தரித்திரம் தீர்ந்து பணம் வரும்.

10. முழு பாசிப்பருப்பை வெல்லம் கலந்த நீரில் ஊறவைத்து, பின் அதனை மறுநாள் பறவைக்கு, பசுவுக்கு அளித்திடவும். தொடர்ந்து இவ்வாறு செய்துவர பணத் தடை நீங்கும்.

11. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயார் அபிஷேகத்திற்குப் பசு

11. வெள்ளிக்கிழமை பெருமாள் கோவிலில் தாயார் அபிஷேகத்திற்குப் பசும்பால் வழங்கி, பச்சை வளையலை தாயாருக்கு அணிவித்திட பணம் வரும்.

12. பெண்கள் இடக்கையில் வெள்ளி மோதிரம் அணிய தனப்ராப்தி அதிகரிக்கும்.

13. பசும்பாலை சுக்கிர ஓரையில் வில்வ மரத்திற்கு ஊற்றவும். 24 வெள்ளிக்கிழமை தொடர்ந்து செய்திட நிச்சயமாகப் பணம் வரும்.

14. பாசிப்பருப்பை ஒரு பச்சைப் பையில் மூட்டையாகக் கட்டி தலையணையின் அடியில் வைத்து உறங்கி, மறுநாள் அதனை ஒரு பையில் கொட்டி மூடி ஓடும் நீரில் விடவும். பணப்பிரச்சினை தீரும்.

15. தினசரி குளிக்கும்முன் பசுந்தயிரை உடல் முழுவதும் தடவி, சிறிது நேரம் கடந்து குளிக்க தரித்திரம் விலகும்.

16. குளித்தவுடன் முதலில் முதுகைத் துடைக்கவும்; தரித்திரம் விலகும்.

ff

17. தமிழ் மாதத்தில் முதல் திங்கட்கிழமை என, தொடர்ந்து 12 மாதமும் திங்கட்கிழமை திருப்பதி ஏழுமலையானை தரிசிக்கவும். கோடீஸ்வர யோகம் கிட்டும். பூர்வபுண்ணியம் இல்லாதவர்கூட லட்சாதிபதியாகலாம்.

18. குடியிருக்கும் வீட்டில் வடகிழக்குப் பகுதியில் கிணறு, நெல்லிமரம், வில்வமரம் இருந்தால் அந்த வீட்டில் லட்சுமி கடாட்சம் ஏற்படும்.

19. தினமும் காலையில் வேங்கடேச சுப்ரபாதம், விஷ்ணு சஹஸ்ரநாமம் ஒலிக்கும் வீட்டில் லட்சுமி நித்தமும் வாசம் செய்வாள்.

20. மகாலட்சுமிக்கு இளஞ்சிவப்பு நிற வஸ்திரம் சாற்றி வழிபட, வசியமுண்டாகி செல்வ வரத்து உண்டாகும்.

21. அவரவர் நட்சத்திர தன தாரை ஓரை வெள்ளிக்கிழமை வரும் வேளையில், அரசமரத்தடி விநாயகருக்கு அகலில் 11 தீபம் ஏற்றி, 11 முறை வலம்வந்து வழிபட்டால் பணவரவு நிரந்தரமாகும்.

22. வீட்டின் தலை வாசல் படியில் கஜலட்சுமி உருவத்தை வெள்ளித் தகட்டில் பதித்து வைத்தால் செல்வம் சேர்ந்துகொண்டே இருக்கும்.

23. ஒவ்வொரு மாதத்தில் வரும் பௌர்ணமியன்று சத்தியநாராயண பூஜை செய்ய செல்வங்களைப் பெறலாம்.

24. ஐப்பசி மாத வளர்பிறையில் மகாலட்சுமியை வழிபட செல்வம் பெருகும்.

25. தொடர்ந்து 11 பௌர்ணமியன்று இரவு 8.30 மணிக்கு சொர்ணாகர்ஷன பைரவருக்கு தாமரை மாலை அணிவித்து, பிரசாதமாக அவல், பாயசம் படைத்து வழிபட சொர்ணம் ஆகர்ஷணமாகும்.

26. மகாலட்சுமிக்கும், தன பண்டார குபேரருக்கும் வில்வத்தால் அர்சித்து, வில்வமாலை அணிவித்திட பணம் குவியும்.

27. ஐஸ்வர்ய தூபப் பொடியுடன் துளசிப் பொடி சேர்த்து அவரவர் தன ஓரையில் தூபம் போட செல்வம் குவியும்.

28. சுக்கிர ஓரையில் உப்பு வாங்கிட செல்வம் பெருகும்.

29. வெள்ளிக்கிழமை மாலைநேரத்தில் பசுவுக்கு உணவளிக்க செல்வம் சேரும்.

30. மகாலட்சுமியை கனகதாரா ஸ்தோத்திரம் கூறி திரிதள வில்வத்தால் அர்சித்திட செல்வம் ஆகர்ஷணமாகும்.

31. சுத்தமான நீரில் வாசனை திரவியம் கலந்து, இரு வேளையிலும் லட்சுமி மந்திரம் கூறியபடி வீட்டில் தெளித்திட செல்வம் சேரும்.

32. சுக்கிர ஓரையில் மொச்சைப் பயறு வாங்கிட செல்வம் சேரும்.

33. அவரவர் பிறந்த தினத்தில் சொர்ணாகர்ஷன பைரவருக்கு தூய பன்னீரில் அபிஷேகம் செய்திட பணம் சேரும்.

34. பசுவுடன்கூடிய கன்றுக்கு உணவளித் தால் சகல செல்வங்களும் வசமாகும்.

35. வயதான சுமங்கலிக்கு மங்கலப் பொருட்களுடன் வளையல், மருதாணி சேர்த்து தானமளித்திட லட்சுமியின் அருள் பரிபூரணமாகக் கிட்டும்.

36. மஞ்சள் நீருடன், வாசனை திரவியம் கலந்து வீட்டிலும், தொழில் ஸ்தாபனத் திலும் தெளிக்க ஐஸ்வர்யம் பெருகும்.

37. ஆந்தை படத்தினை தொடர்ந்து பார்த்து வர பணம் ஆகர்ஷணமாகும்.

38. காலை எழுந்தவுடன் தங்கநகை அணிந்த திருப்பதி வேங்கடாசலபதி படத்தில் கண்விழித்திட பணம் கிடைக்கும்.

39. தனாகர்ஷண தைலத்தால் விளக்கேற்றிட செல்வம் நிலையாகத் தங்கும்.

40. சொர்ணாகர்ஷன பைரவருக்கு ஒன்பது நெய்விளக்கு தொடர்ந்து ஒன்பது வாரம் ஏற்றிவர குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

41. குபேரனுக்கு தாமரைத் திரிபோட்டு விளக்கேற்றி வழிபட்டால் பணம் வரும்.

42. குலதெய்வ வழிபாடும், பித்ருக்கள் வழிபாடும் தொடர்ந்து செய்துவர குடும்ப முன்னேற்றம் ஏற்படும்.

43. திருமலை வேங்கடாசலபதிக்கு வெண்பட்டு அணிவித்து வழிபட செல்வம் சேரும்.

44. துளசிமாடம் அமைத்து தொடர்ந்து அதனைப் பூஜித்துவர தீமைகள் நீங்கி நன்மை உண்டாகும்.

45. சொர்ண பைரவருக்கு பன்னீர்கொண்டு அபிஷேகம் செய்து, அதனை வீட்டில் தெளித்திட சொர்ண லாபம் கிட்டும்.

46. செவ்வாய்க்கிழமையில் செவ்வரளி கொண்டு செந்தூர் முருகனை வழிபட்டால் காரியத்தடை நீங்கி வளம் பெருகும்.

47. ஏகாதசியில் பெருமாள் பாதம் வரைந்து அர்ச்சித்து வழிபட பூமி லாபமும், செல்வ வளமும் கிட்டும்.

48. கோவிலில் லட்சுமிமீது வைத்த தாமரை மலரைக் கொண்டுவந்து பச்சைப் பட்டில் வைத்து மடித்து பணப்பெட்டியில் வைக்க பணம் சேரும்.

49. சம்பாதிப்பதில் ஒரு தொகையை சேர்த்துவைத்து அதனை அன்னதானத்திற்கு செலவிட, அதனைப்போல் ஐந்து மடங்கு நம்மிடம் வந்துசேரும்.

50. ஸ்ரீ ரங்கநாதப் பெருமாள் கோவிலில் பெருமாளுக்கு அணிவித்த சந்தனத்தைப் பெற்று, அதனை தினமும் அணிந்துவர பணம் வரும்.

51. வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி, செந்தாமரை இதழ்கொண்டு அர்சிக்க தனலாபம் கிட்டும்.

52. ஐஸ்வர்ய லட்சுமி படத்தில் வாசனை திரவியம் தடவி பணப்பையில் வைக்க பண ஆகர்ஷணம் உண்டாகும்.

53. தொடர்ந்து 11 நாள் ஸ்ரீ சூக்த பாராயணத்தை வேதபண்டிதர்களைக் கொண்டு செய்ய லட்சுமி கடாடசம் நிரந்தரமாகும்.

54. ஸ்ரீ லஷ்மிகுபேர சத நாம ஸ்தோத்திரத்தினை தீப தூப ஆராதனையோடு கூறி வர, அஷ்ட தரித்திரம் நீங்கி தனலாபம் பெறலாம்.

55. கனகதாரா ஸ்தோத்திரத்தைக் கூறியும் கேட்டும் வர பணம் கிடைக்கும்.

56. வீட்டில் சுமங்கலியாக இறந்த பெண்களை நினைத்து மஞ்சளாகப் பிடித்து, அவர்களை நினைத்து வழிபட, சகலதோஷங்கள் விலகி குடும்பத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

57. மகாலட்சுமிக்கு பச்சைப் பட்டினை அணிவித்து வணங்க பணம் வரும்.

58. கற்பக விநாயகரை 1,008 அறுகம்புல் கொண்டு மகாசங்கடஹர சதுர்த்தியில் அர்சித்து வணங்க தொழிலிலுள்ள தடை நீங்கி லாபம் கிட்டும்.

59. பச்சைப் பட்டுடுத்திய லட்சுமி படத்தினை வாசலில் மாட்டி தினமும் தூபம் காட்டி வர அஷ்ட ஐஸ்வர்யங்களும் வசமாகும்.

60. செல்வத்திற்கு உரியவளான மகாலட்சுமியை வெள்ளிக்கிழமைகளில் வழிபடவும். தொடர்ந்து 24 வெள்ளிக் கிழமை வழிபட்டால் பணம் கிடைக்கும்.

61. தன பண்டார குபேரனை வழிபட பணம் தடையின்றிக் கிடைக்கும்.

62. இந்திராணி மந்திரம் ஜெபம் செய்ய ராஜயோகமாக வாழ பணம் கிடைக்கும்.

63. வியாழனன்று குரு ஓரையில் தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய செல்வம் சேரும்.

64. வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரையில் சுக்கிரன், மகாலட்சுமி இருவரையும் மல்லிகை மலர்கொண்டு 33 வாரம் வழிபட செல்வம் கிடைக்கும்.

65. செந்தாமரையில் அமர்ந்துள்ள தெய்வங்களை வழிபட பணம் கிடைக்கும்.

66. கனகதாரா ஸ்தோத்திரம், ஸ்ரீ சூக்தம், பாக்கிய சூக்தம் சுக்கிர ஓரையில் பாராயணம் செய்ய பணம் வரும்.

67. அமாவாசை, முன்னோர்கள் இறந்த திதி ஆகியவற்றில் முன்னோர்களை வேண்டி தானம் செய்ய, நாம் செய்த அளவின் மடங்குகள் பணம் வரும்.

68. திருப்பதி வேங்கடாசலபதி, பத்மாவதி படம் வைத்து வழிபட பணம் வரும்.

69. தனதாயட்சணீ பூஜை வில்வ மரத்தடியில் தந்திர சாஸ்திரப்படி செய்ய ஏழே நாளில் பணம் கிடைக்கும்.

70. சௌபாக்கிய பஞ்சதசி மந்திரம் ஜெபிக்க நிறைய பணம் கிடைக்கும்.

71. சொர்ணாகர்ஷண பைரவர், சொர்ண கணபதி, தன வீரபத்திரர், சொர்ண காளி, சொர்ண வராஹி ஆகியோரை வழிபட தங்கநகை கிடைக்கும்.

72. ஜோடி கழுதைப் படம், ஓடும் வெள்ளை குதிரைப் படம் அடிக்கடி பார்க்க பணம் வரும்.

73. தனாகர்ஷண மூலிகை சட்டைப் பாக்கெட்டில் இருந்தால் பணம் குறையாது.

74. பசுவின் பிருஷ்ட ஸ்பரிசம் தனம் தரும்.

75. வியாழக்கிழமை குபேர காலத்தில், மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை குபேரனை வழிபட பணம் வரும்.

bala290422
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe