ஜாதகத்தில் லக்னத்திற்கு 7-ஆம் வீட்டிற்குரிய கிரக குணங்களைக் கொண்டு மனைவியின் ரூப லாவண்யங்கள், சொத்து சேர்க்கை, மணப் பொருத்தங்கள், ஆசை, வசியம், மாரகம் முதலிலியவற்றைக் கூறலாம்.

லக்னத்துக்கு 7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திலேயே சுப பலமாய் இருந்தால், அவர் கவர்ச்சியுடன் இருப்பார். அவரிடம் பெண்கள் அன்பு வைத்துப் பழகுதல், புணருதல் போன்ற போக பாக்கியங்களுடன் இருப்பார். பாவ காரியம் என்பதே அறியாது, காம, விரகதாபங்களைக் கொண்டவ ராக பெண்களிடம் பழகுவார். தனது தொழிலையோ, வேலையையோ சிரத்தை யோடு செய்யமாட்டார். கலைகளில் ஊக்கம் இருக்கும். மனைவியின்மூலம் லாபங்கள் ஏற்படும்.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 2-ஆம் வீடாகிய தன ஸ்தானத்தில் இருந்தால், மனைவியின்மூலம் சொத்துகளும் சம்பாத் தியமும் ஏற்படும். மனைவியின் உறவினர் களாலும் லாபங்களைப் பெறுவார்.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 3-ல் இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.

Advertisment

இதனால் மனைவிக்கு மாரகம் (மரணம்) ஏற்பட்டு, மறு விவாகம் செய்யும் நிலை வரலாம். அதிக காமமோ, மனைவியின்மீது பற்றுதலோ இருக்காது. சுபகிரகச் சேர்க்கை யாலோ, பார்வையாலோ இதற்கு விதிவிலக் குண்டு.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 4-ல் இருந்தால் எதிர்பார்க்கும் மனைவியை அடைவார். குடும்பத்தை நடத்தும் பொறுப்பையும், அதற்கான தகுதிகளையும் அவருக்கு வரும் மனைவி பெற்றிருப்பார். குடும்பம் கௌரவ மான பாதையில் செல்லும்.

m7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 5-ஆம் வீட்டிலிலிருந்தால் இது ஒருவிதமான களத்திர தோஷமாகும். கலைகளில் பிரியம் இருக்கும். 5-க்குடையோன் வலுத்தால் களத்திர தோஷம் நிவர்த்தியாகும்.

Advertisment

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 6-ஆம் வீட்டிலிருந் தால், இவருக்கு வரும் மனைவி வியாதி களைக் கொண்டவராயிருப்பார். கணவருக்கு எதிராக கலகங்கள், விரோதங்கள், மனஸ்தாபங் களை மனைவி உண்டாக்குவார். மனைவியால் ஆதரவு அல்லது இன்பம் இருக்காது.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 7-ஆம் வீட்டிலி லிருந்தால், ஜாதகர் தம் மனைவி வீட்டில் அடிமையாக இருப்பார். மனைவியின் செல்வாக்கு குடும்பத்தில் அதிகமாக இருக்கும். ஏழுக்குரியவர் சுப கிரகமா னால், வாழ்க்கை வசதியுடனும் கௌரவத்துடனும் இருப்பார். ஏழுக்குரிய கிரகம் நீசனா கவோ, பாவியாகவோ, பகை யாகவோ இருந்தால், அந்த கிரகத்தின் குணத்திற்குத் தகுந்தபடி மனைவி யும் கணவனும் ஒற்றுமையில்லாமல் சுகவீ னர்களாக இருப்பார்கள்.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 8-ல் இருந் தால், அவருக்கு வரும் மனைவியினால் கஷ்டங்களையோ, வறுமையையோ அனுப விப்பார். குடும்பத்தை ஒழுங்காக நடத்தும் பொறுப்பற்றவராகவும், வீண் ஆசை கொண்டவ ராகவும், குறைந்த வருமானத்தைக் கொண்டவராகவும் இருப்பார். மானத்தை விட்டு, அவமானத்தை அடையும்படி இருக்கும்.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 9-ல் இருந் தால், பெரியோர்களின் அனுகிரகத்தினால், பூர்வஜென்ம புண்ணியங்களால் இளம் வயதிலேயே திருமணம் நடைபெறும். மனைவியால் சொத்துகளையும், ஆடை, ஆபரணங்களையும் பெறுவார். குடும்பம் ஒற்றுமையுடனும், கௌரவத்துடனும், சிறப்பு டனும் விளங்கும். இதற்கு ஒன்பதுக் குடையோன் வலுப்பெற்றும் சுப பலமாயும் இருக்கவேண்டும்.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 10-ல் இருந் தால், வரும் மனைவியினால் ஜீவன பலம் அதிகமாகும். சொத்துகளும் ஆபரணங்களும் சேரும். இளம்வயதிலேயே திருமணம் நடைபெறும். குடும்பத்தை ஏற்று நடத்தும் பொறுப்பையும் பெற்றிருப்பார். ஆயினும் சிலருக்கு (களத்திர) மனைவியின் தோஷம் ஏற்படும். சுபகிரகப் பார்வை பெற்றிருந்தால் எவ்வித கஷ்டமும் இல்லாமல் சுகத்துடன் வாழ்வார்கள். பெரும்பகுதியினர் வெளி நாடுகளில் (அல்லது வெளி மாநிலத்தில்) வேலை செய்வார்கள். அப்படிப்பட்டவர் களுக்கு தோஷங்கள் வராது.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 11-ல் லாப ஸ்தானத்தில் அமர்ந்திருந்தால், நல்ல செல்வத்துடனும் சொத்துகளுடனும் மனைவி வருவாள். மனைவியினால் கணவனின் அந்தஸ்து உயரும். புத்திர பாக்கியங்கள் ஏற்படும். சந்தோஷமாக வாழ்வார்கள்.

7-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 12-ல் இருந் தால், மனைவியினால் தனச் சேதங்கள் ஏற்படும். மனைவி இன்ப வாழ்க் கையை அனுபவிக்க ஆசைப் படுவார். அதனால் கடன் வாங்கி யும், சொத்துகளை விற்றும் குடும்பம் நடத்தவேணடியது வரும். குடும்பத்தில் ஒற்றுமை குறைவாக இருக்கும். ஆயினும், உணவு சுகமும் சயன சுகமும் இருக்கும். 12-க்குரியவர் சுப பலம் பெற்றால் யாதொரு தொழிலுமின்றி மனைவி இன்பத்துடன் சுகவாசியாக இருப்பார்.

7-ஆம் அதிபதி எங்கிருந் தாலும் குரு பார்வை இருந்தால் தோஷம் விலகும்.

பரிகாரம்-1

குலதெய்வக் கோவிலுக்குச் சென்று திருமணத்தை முடிவு செய்யவேண்டும். அல்லது பூக்கட்டிப் போட்டு நல்ல மனைவியைத் தேர்வு செய்ய லாம். இவ்வாறு செய்வது பெயர் ராசி பார்த்து திருமணம் செய்பவர்களுக்கும், ஜாத கமே இல்லாதவர்களுக்கும் பொருந்தும்.

பரிகாரம்-2

களத்திர தோஷம் ஏற்பட் டாலும் ஜாதகத்தை ஒதுக்கக் கூடாது. களத்திர தோஷம் உள்ளவர்களுக்குப் பரிகாரமாக, திருமணமான அன்றே சாந்தி முகூர்த்தம் வைக்காமல் மறுநாள் வைத்துக்கொண்டால் களத்திர தோஷம் மாறும்.

பரிகாரம்-3

திருச்செந்தூர் முருகன் சந்நிதானத்தில் நடைபெறும் திருமணத்திற்கு களத்திர தோஷம் வராது. களத்திர தோஷத்தை திருச்செந்தூர் முருகன் பார்த்துக் கொள்வார்.

செல்: 94871 68174