Advertisment

பணம் வீட்டி தங்க 6 பரிகாரங்கள்! -பா. கவிதாபாலாஜி

/idhalgal/balajothidam/6-remedies-save-money-pa-poetics

சிலர் எவ்வளவுதான் உழைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கு உரிய பலனை அனுபவிக்க முடியாமல் போகும். வீட்டில் இருக்கக்கூடிய சிறுசிறு அமைப்புகளை கவனித்தாலே வருமானம் அதிகரிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையில் பணம் குறைவதற்கான காரணம் என்ன? வருமானம் அதிகரிக்க அலமாரியை எப்படி வைத்திருக்க வேண்டும்? வீட்டை எப்படி வைத்திருக்கவேண்டும் என்று பார்ப்போம்.

Advertisment

1. பணம் வைக்கும் அலமாரியின்மீது குபேரர் சிலையை வைத்தால் பணவரவு தடை இல்லாமல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குபேரன் இருக்கக்கூடிய இடம் வடக்கு. எனவே அலமாரியின்மீது குபேரன் சிலையை வை

சிலர் எவ்வளவுதான் உழைத்தாலும் அவர்களின் உழைப்பிற்கு உரிய பலனை அனுபவிக்க முடியாமல் போகும். வீட்டில் இருக்கக்கூடிய சிறுசிறு அமைப்புகளை கவனித்தாலே வருமானம் அதிகரிக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது. அந்த வகையில் பணம் குறைவதற்கான காரணம் என்ன? வருமானம் அதிகரிக்க அலமாரியை எப்படி வைத்திருக்க வேண்டும்? வீட்டை எப்படி வைத்திருக்கவேண்டும் என்று பார்ப்போம்.

Advertisment

1. பணம் வைக்கும் அலமாரியின்மீது குபேரர் சிலையை வைத்தால் பணவரவு தடை இல்லாமல் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குபேரன் இருக்கக்கூடிய இடம் வடக்கு. எனவே அலமாரியின்மீது குபேரன் சிலையை வைக்கும்பொழுது வடக்கு திசையை நோக்கி வையுங்கள்; சிறப்பான பணவரவு உண்டாகும்.

gg

2. பணம் வைக்கக்கூடிய அலமாரியில் தங்கம் மற்றும் வெள்ளி போன்ற பொருட்கள் இடம்பெறலாம். இவற்றை ஒரு சிறிய கண்ணாடியில் தெரியும்படி லாக்கருக்கு உள்ளே அமையுங்கள். அந்த இடத்தில் பச்சை நிற புடவை உடுத்திய கஜலட்சுமி படம் ஒன்றை வையுங்கள். பணத்தை ஈர்க்கக்கூடிய பச்சை கற்பூரம் கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை மிகுந்த பொருட்களை போட்டு வையுங்கள். உங்க பீரோ இப்படியிருந்தால் பணம் குறையாது சேரும்.

Advertisment

3. பணம் வைக்கும் அலமாரியின் உள்ளே மற்ற தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்துங்கள். புதிய துணிமணிகள் அல்லது அனு தினம் பயன்படுத்தக் கூடிய துணிமணிகளை அழகாக, நேர்த்தியாக அடுக்கி வையுங்கள். பூச்சிகள், தூசுகள் சேராமல் ரச கற்பூரத்தை போட்டு வையுங்கள். கூர்மையான ஆயுதங்கள் அல்லது இரும்பு சார்ந்த பொருட்களை வைக்காதீர்கள். இது சனி தோஷத்தை ஏற்படுத்தும். பணத்தை சேரவிடாது தடுக்கும்.

4. பணம் வைக்கக்கூடிய இடத்தில் சிவப்பு நிறம் சார்ந்த பொருட்கள் இருப்பது நல்லது ஆனால் கருப்பு நிறப் பொருட்களை தவிர்ப்பது உத்தமம். லட்சுமி தேவிக்கு சிவப்பு உகந்த நிறம் என்பதால் சிவப்பு நிற துணிமணிகளை அல்லது பொருட்களை அடுக்கி வைக்கலாம். ஆனால் கருப்பு நிற துணிமணிகள் மற்றும் பொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவது நல்லது. இதுவும் பணத் தடையை உண்டாக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.

5. உங்கள் வீட்டின் பீரோவிற்கு பின்னால் பழைய கிழிந்து போன பாய் அல்லது துடைப்பம் வைப்பது அதிர்ஷ்டத்தை தடுக்கும் செயலாகும். கிழிந்து போன, நைந்து போன துணிமணிகள், பாய், துடைப்பம் போன்றவற்றை ஒருபோதும் வீட்டில் வைத்திருக்கக் கூடாது. இதை குப்பையில் போட்டு விடவேண்டும்.

6. வீண்விரயம், மருத்துவ செலவுகள், அனாமத்தாக பணம் செலவழிவது போன்றவை இருந்தால் உங்களுடைய வீட்டில் இருக்கக்கூடிய கழிவறை மற்றும் பாத்ரூம் கதவுகளை எப்பொழுதும் மூடி வைத்திருக்கிறீர்களா? என்பதை கவனியுங்கள். பழங்காலங்களில் இவை வெளியே இருந்தன. ஆனால் மாடர்ன் உலகில் வீட்டிற்கு உள்ளே இருப்பதால் இவற்றை திறந்த நிலையில் வைத்திருந்தால் பணம் ஆனது வீண் செலவழியும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

7. வீட்டின் பின்புறம் ஒற்றை மரம் இருப்பது நல்லதல்ல! ஒற்றை மரம் பின்புறம் இருந்தால் குடும்பத்திற்கு ஆகாது. சண்டை, சச்சரவுகள் அடிக்கடி வருமென்று நம்பப்படுகிறது. மேலும் இது பணத் தடையை ஏற்படுத்தி, வருமானத்தைக் குறைய செய்யும். மரம் வளர்த்தால் இடைவெளி விட்டு நிறைய மரங்களை வளருங்கள்.

செல்: 98425 50844.

bala011223
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe