Advertisment

4 எண்ணின் சிறப்பு! -பூவை கணேஷன்

/idhalgal/balajothidam/4-number-special-flower-connection

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அனைவரும் 4-ஆம் எண்ணால் குறிக்கப்படுகிறார்கள். இவர்கள் சீர்திருத்தவாதிகளாக இருப்பார்கள். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் ஆளாக நிற்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகவும், நற்சிந்தனை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள்.

Advertisment

தங்களுக்கு சரியெனப்பட்டதைத் தயக்கமின்றி எடுத்துக்கூறுவதில் வல்லவர்கள். சிறு பஞ்சாயத்து முதல் சுப்ரீம் கோர்ட் வரை சென்று நீதி, நியாயத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவார்கள். நூறு விஷயம் தெரிந்தவர்களாகவும், அதை மக்களுக்குப் பிடிக்கும் வகையில் எடுத்துச் சொல்லும் திறமை மிக்கவர்களாகவும்

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த அனைவரும் 4-ஆம் எண்ணால் குறிக்கப்படுகிறார்கள். இவர்கள் சீர்திருத்தவாதிகளாக இருப்பார்கள். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் முதல் ஆளாக நிற்பார்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாகவும், நற்சிந்தனை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள்.

Advertisment

தங்களுக்கு சரியெனப்பட்டதைத் தயக்கமின்றி எடுத்துக்கூறுவதில் வல்லவர்கள். சிறு பஞ்சாயத்து முதல் சுப்ரீம் கோர்ட் வரை சென்று நீதி, நியாயத்தை நிலைநிறுத்தப் பாடுபடுவார்கள். நூறு விஷயம் தெரிந்தவர்களாகவும், அதை மக்களுக்குப் பிடிக்கும் வகையில் எடுத்துச் சொல்லும் திறமை மிக்கவர்களாகவும் இருப்பார்கள்.

அடுத்தவர்கள் தன்னைப் புகழவேண்டும் என்பதற்காக எதையும் செய்யமாட்டார்கள். தங்கள் மனதிற்கு சரியெனப்பட்டதை மட்டும் சிரத்தையுடன் செய்துமுடிக்க பாடுபடுவார்கள். மிகவும் இளகிய மனம் படைத்த இவர்களுக்கு மற்றவர்களின் கடுஞ்சொற்கள் மனதை மிகவும் காயப்படுத்தும். இரவு முழுவதும், நடந்த சம்பவத்தையோ- பேசிய வார்த்தைகளையோ நினைத்து நினைத்து மிகவும் புழுங்கிப் போவார்கள்.

ff

Advertisment

இந்த எண்ணில் பிறந்த குழந்தைகளை, பெற்றோர் அல்லது வேறு யாராக இருந்தாலும் மென்மையாகவும் அரவணைப்புடனும் எடுத்துச்சொன்னால், அதை ஏற்று நடப்பார்கள். மாணவப் பருவத்திலுள்ளவர்கள் தங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்தினால், மிகவும் மதிக்கத்தக்க அளவில் உயர்வடைவார்கள். இவர்கள் தங்களது நண்பர்களுக்கு கடன் வாங்கி செலவு செய்வதில், கடையெழு வள்ளல்களுக்கு அடுத்த நிலையில் வைக்கக்கூடிய நிலையில் இருப்பார்கள். பெரும் தொழிலதிபர்களும் 4-ஆம் எண்ணிற்குட்பட்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதையும் ஆராய்ந்து செய்யும் இவர்கள், நண்பர்களால் நஷ்டப்பட்டுத் தவிப்பர்களாகவும் இருப்பர். அதனால், நல்ல நண்பர்களைத் தேர்வு செய்துகொள்வது மிகவும் அவசியம். இவர்கள் விஞ்ஞான ஆராய்ச்சி, ஜோதிடம், வானசாஸ்திரம், மதபோதனை, கதை, கட்டுரை, கவிதைகள்மூலம் சமுதாய சீர்திருத்தம் செய்ய முற்படுவர். மேலும், தொழில் என்று பார்த்தால் பிரசங்கம் செய்தல், சங்கீதம், நாட்டியம் கற்றத் தருதல், புத்தகம் சம்பந்தமானவை, கால்நடைகள் வளர்த்தல், மரச்சாமான்கள் உற்பத்தி மற்றும் விற்பனை, கனரக வாகனங்கள் ஓட்டுதல், உதிரிபாகங்கள் விற்பனை என இன்னும் பல. எவ்வாறயினும் மக்களை விழிப்புணர்ச்சி பெறவைக்கும் தொழில்களே ஆத்ம திருப்தியளிக்கும்.

4-ஆம் எண்காரர்களுக்கு பெரும்பாலும் நோய்கள் அதிக அளவில் ஏற்படாது. எனினும் மனச்சோர்வு, இடுப்பு வலி, தலையின் பின்புற வலி, குடல் சம்பந்தான நோய், பசியின்மை, ரத்த சோகை போன்றவை ஏற்படும். எந்நோய் வந்தாலும் யோகாசனம்மூலம் சரிசெய்துகொண்டு விடுவார்கள்.

காத்திருப்பு இவர்களுக்கு சற்று குறைவென்று கூறலாம். தக்கவயதில் பெற்றோர்கள் கவனித்துத் திருமணம் செய்துவைக்கவேண்டும். 4-ஆம் எண்காரர்கள் 1-ஆம் எண்காரர்களிடம் அதிகம் காதல் வயப்படுவர். 8-ஆம் எண் காரர்களையும் கவர்ந்திழுக்கக் கூடியவர்கள். ஆத்மார்த்த மாக 1, 4, 8 எண்காரர்கள் காதலர்களாக இருப்பார்கள். 4-ஆம் எண்காரர்கள் செலவாளிகள். எனவே, 6-ஆம் எண் காரரை மணந்துகொண்டால் செல்வம் சேரும். திருமணத் தேதி 1, 10, 19, 28-ல் அமையலாம். கூட்டு எண் 1, 6 வந்தால் சிறப்பானது! ஆனால், 4, 5, 8-ல் அமையக்கூடாது.

செல்: 99400 78841

Magazine Balajothidam bala200522
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe