ஜாதகத்தில் லக்னத்துக்கு 4-ஆம் வீடு தாய்வீடாகும். தாய்வழி மாமன் வீட்டைப் பற்றிய வழிகளையும், வீடு, வாகனம், சுகம், செல்வம் முதலிலியவற்றையும் 4-ஆம் வீட்டிற்குரிய கிரகத்தின்மூலம் அறியலாம்.

Advertisment

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் லக்னத்திலேயே சுப பலமாய் இருந்தால் பங்களா போன்ற வீடுகள், நிலபுலன்கள், வாகனங்கள், மாடு கன்று அபிவிருத்திகள், சுவையான உணவு, நிம்மதியான உறக்கம் என மகிழ்வுடன் இருப்பார்கள். பலரால் போற்றப்படுபவர்களாகவும், ஸ்திரீ போகங்களை அனுபவிப்பவர்களாகவும் இருப்பார்கள். தாய்வழிப் பாட்டி, மாமன் முதலானோர் ஆதரவு நிரம்ப இருக்கும். கல்வியில் திறமையுள்ளவர்களாகவும் இருப் பார்கள். லக்னத்துக்கு நான்காவது வீட்டுக்குரியவர் ஆட்சி, உச்சமாக இருந்தால், அந்த ஜாதகர் உயர்ந்த அந்தஸ்தில் பெரிய பதவியில் சிறப்புடன் விளங்குவார். பாவகிரகப் பார்வையோ சேர்க்கையோ விரயாதிபதியோ சம்பந்தப்பட்டிருந்தால், அந்த ஜாதகர் வறியராகவும், சுகவீனராகவும் இருப்பார். நீதியும் நேர்மையும் பக்தி விசுவாசமும் குறைந்து காணப்படும்.

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற் குரிய கிரகம் 2-ல் சுபமாக இருந்தால் தாய்வழி ஆதரவையும். சொத்து களையும் பெறுவார்கள். தாயார் நோய்வாய்ப்படுவார். குடும்பத்தில் சுக சௌகர்யங்கள் நிறைந்திருக்கும்.

4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 3-ல் இருந்தால், அந்த ஜாதகரைவிட அவரது சகோதரர்கள் சிறந்து விளங்கு வார்கள். ஜாதகரின் தாயார் வியாதிகளைப் பெறுவார். குடும்பத்தில் நாளுக்கு நாள் கஷ்டங்களும் நஷ்டங்களும் தோன்றும். விரயங்கள் அதிகமாகும். veவருமானத்தைவிட செலவுகள் அதிகமாகும். 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 4-ஆம் வீட்டில் ஸ்வக்ஷேத்திரத்திலிருந்தால் பிரபல வீட்டில் நிலபுலன், மாடு கன்றுகள், கீர்த்தி, கல்வியில் திறமை, வாகனங்கள் முதலிலியவற்றுடன் வாழ் வார்கள். பலரும் இவர்களிடம் மரியாதை காட்டுவார்கள். உறவினர்கள், நண்பர்கள் இவர்களிடம் பக்தி விசுவாசத்துடனும், புகழ் பேசியும் வருவார்கள். பணியாட்கள் பலரும் சூழ, அரசவாழ்வுக்கு சமமாக இருப்பார்கள். பெண் சுகங்கள் நிரம்பப் பெற்றும், பெண்களின் சொத்துகளைப் பெற்றும் நல்ல செல்வாக்குடன் விளங்குவார்கள்.

Advertisment

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 5-ல் பலமாகியிருந்தால் புத்திரர்களால் மகிழ்ச்சி பெற்றவ ராகவும், வாகனங்களைப் பெற்றவராக வும், லாபங்களை உடையவராகவும், சமூகத்தில் கீர்த்தியையும் செல்வாக்கை யும் பெற்றவராகவும் இருப்பார்கள்.

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 6-ல் இருந்தால் சுக சௌகர்யங் களை இழந்தவராகவும், தாயிடமும், தாயார்வழிகளிலும் விரோதங்களைக் கொண்டவராகவும், பூர்வீக சொத்து சம்பந்தமான சண்டை, சச்சரவுகளுக்கு செலவு செய்பவராகவும், நோயுடையவர் களாகவும் இருப்பார்கள். சுப பலமானால் பரிகாரத்தினால் நிவாரணம் உண்டாகும்.

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 7-ல் அசுப பலமாய் இருந்தால் தாயார், மாமன்வழியில் மனைவி வருவாள்.

Advertisment

வருமானமும் செலவும் சரிசமமாக இருந்து வரும். கஷ்டமும் சுகமும் உடனுக்குடன் ஏற்படும். வீடு மாறிமாறி குடியிருக்கும்படி நேரும். சுபகிரகப் பார்வை அல்லது உச்சகிரகப் பார்வை பெற்றிருந்தால் குடும்பத்தில் சந்தோஷங்களும் செல்வமும் சுகமும் நிறைந்து விளங்கும். மனைவியின் போக்குப்படி ஜாதகர் இருப்பார்.

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 8-ல் இருந்தால், தாயார் வறிய குடும்பத்தில் பிறந்தவராக இருப்பார். தாய்வழி ஆதரவு குறைந்திருக்கும். வறுமை யும் அவமானங்களும் நிறைந்தவர் களாக ஜாதகர்கள் வாழ்க்கையை நடத்து வார்கள்.

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 9-ல் சுப பலமாக இருந்தால் நிலபுலன்கள், வீடு, வாகனங்கள், பால் பாக்கியம் முதலிலியன பெற்று விளங்குவர். தகப்பனார் அன்பைப் பெற்றிருப்பார்கள். பெரியவர்களிடம் பக்தி விசுவாசத்துடனும், தெய்வீக வழிபாடுகளில் நம்பிக்கை உடையவர்களாகவும் இருப் பார்கள். சுக சௌகர்யங்களுடன் செல்வத்தை யும் பெற்று விளங்குவார்கள்.

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 10-ல் இருந்தால், பூமி சம்பந்தமான பொருள்களால் லாபத்தைப் பெறுவார்கள். ஜீவனபலம் அதிகமாக இருக்கும். பிரபுக்கள், பெரிய மனிதர்களின் ஆதரவு, செல்வம், செல்வாக்கு, கீர்த்திகளைப் பெற்று விளங்குவார்கள்.

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 11-ல் இருந்தால் சுகங்கள் நிறைந்த வர்களாகவும், பூமி, வியாபாரம் போன்ற வற்றால் நல்ல லாபங்களுடனும் வாழ்வார்கள். ஆனால் அந்த ஜாதகரின் தாயார் மாரகத்தை அடைவார்.

லக்னத்துக்கு 4-ஆம் வீட்டிற்குரிய கிரகம் 12-ல் இருந்தால், சுக சௌகர்யங்கள் குறைந்து, ஆதரவற்றவர்களாக வறுமை மிகுந்து, கஷ்டநஷ்டங்களுடன் வாழ் வார்கள். நிலங்கள் விரயமாகும். மொத்தத்தில் சிரம வாழ்க்கையை நடத்தும்படி இருக்கும்.

பரிகாரம்-1

சனிக்கிழமையன்று மாலையில் பெருமாள் அல்லது கிருஷ்ணர் கோவில் சென்று, துளசி அர்ச்சனை செய்து வணங்கி, தாய் நன்றாக இருக்கவும், வீடு வாசல், வாகனங்கள் விருத்தி ஏற்படவும் வழிசெய்ய வேண்டு மென்று வழிபட, வேண்டியது நடக்கும்.

பரிகாரம்-2

வசதியுள்ளவர்கள் திருப்பதி சென்று பத்மாவதி தாயார் சந்நிதியில் வணங்கிவர, தாயார் நலமுடன் இருப்பார். திருப்பதி வேங்கடாசலபதியாரை வணங்கிவர, அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

செல்: 94871 68174