3-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகரின் சகோதரர்கள் தைரியசாலிகளாக இருப்பார் கள். ஜாதகரும் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். பலரிடமும் வாதம்செய்து, வெற்றிபெறுவார். காமவெறி உள்ளவராக இருப்பார். பிறருக்கு சேவை செய்வார். பலரிடம் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்கும். அவருக்கு நல்ல நண்பர்கள் இருக்கமாட்டார்கள். ஜாதகர் எதையும் திட்டமிட்டே செய்வார். போர் குணம் கொண்டவராக இருப்பார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அந்த கிரகம் பாவ கிரகமாக இருந்தால், உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். பண கஷ்டம் இருக்கும். சிலர் பிறரின் உதவியில் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். ஜாதகருக்கு உடன்பிறந் தோருடன் சரியான உறவு இருக்காது. அதுவே சுபகிரகமாக இருந்த
3-ஆம் பாவத்திற்கு அதிபதி லக்னத்தில் இருந்தால், ஜாதகரின் சகோதரர்கள் தைரியசாலிகளாக இருப்பார் கள். ஜாதகரும் துணிச்சல் குணம் கொண்டவராக இருப்பார். பலரிடமும் வாதம்செய்து, வெற்றிபெறுவார். காமவெறி உள்ளவராக இருப்பார். பிறருக்கு சேவை செய்வார். பலரிடம் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்கும். அவருக்கு நல்ல நண்பர்கள் இருக்கமாட்டார்கள். ஜாதகர் எதையும் திட்டமிட்டே செய்வார். போர் குணம் கொண்டவராக இருப்பார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 2-ஆம் பாவத்தில் இருந்தால், அந்த கிரகம் பாவ கிரகமாக இருந்தால், உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். பண கஷ்டம் இருக்கும். சிலர் பிறரின் உதவியில் பிழைத்துக் கொண்டிருப்பார்கள். ஜாதகருக்கு உடன்பிறந் தோருடன் சரியான உறவு இருக்காது. அதுவே சுபகிரகமாக இருந்தால், ஜாதகர் அரசரைப்போல வாழ்வார். செல்வச் செழிப்புடன் இருப்பார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 3-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகருக்கு சுமாரான பலம் இருக்கும். அவரின் நண்பர்கள் நல்லவர்களாக இருப்பார்கள். சகோதரர்கள் நல்லவர்களாக இருப் பார்கள். ஜாதகருக்கு ஆழமான கடவுள் நம்பிக்கை இருக்கும். குருநாதரிடம் பக்தி இருக்கும். அரசாங்க விஷயங்களில் லாபம் இருக்கும். ஜாதகருக்கு பரிசுகள், விருதுகள் கிடைக்கும். பெயர், புகழுடன் வாழ்வார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 4-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் தந்தை, தாய், உடன்பிறந்தோர் ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்வார். அன்னையுடன் சில நேரங்களில் உறவு சரியாக இருக்காது. தந்தையின் சொத்தை ஜாதகர் அழிப்பார். தேவையற்றதைப் பேசுவார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 5-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தைரிய குணம் உள்ளவராக இருப்பார். சகோதரர்கள், மகன் ஆகியோரால் அவருக்கு சந்தோஷம் இருக்கும். ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். பலருக்கும் அவர் நன்மைகள் செய்வார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 6-ஆம் பாவத்தில் இருந்தால், கண்ணில் நோய் இருக்கும். ஜாதகருக்கு நிலம், வீடு இருக்கும். சகோதரர்களுடன் அவருக்கு உறவு சரியாக இருக்காது. உடலில் நோய் இருக்கும். சில நேரங்களில் ஜாதகர் கோபத்துடன் பேசுவார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 7-ஆம் பாவத்தில் இருந்தால், அது சுபகிரகமாக இருந்தால், ஜாதகரின் மனைவி நல்லவளாக இருப்பாள். பக்குவப்பட்ட, நல்ல குணம்கொண்ட இல்லத் தரசியாக இருப்பாள். ஆனால், அதுவே பாவகிரகமாக இருந் தால், மனைவிக்கு கள்ள உறவு இருப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. அதனால், இல்வாழ்க்கையில் பிரச்சினை உண்டாகும்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 8-ஆம் பாவத்தில் இருந்தால், பலருக்கு சகோதரர்கள் இருக்கமாட்டார்கள். ஜாதகருக்கு உடல்நலத்தில் பிரச்சினை இருக்கும். சுபகிரங்கள் பாவத்தைப் பார்த்தால், ஜாதகருக்கு நீண்ட ஆயுள் இருக்கும். சிலருக்கு தோல் வியாதி, நமைச்சல் இருக்கும்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 9-ஆம் பாவத்தில் இருந்தால், அது சுப கிரகமாக இருந்தால், ஜாதகர் நிறைய படித்தவராக இருப்பார். அறிவாளியாக இருப்பார். உடன் பிறந்தோருடன் பாசம் உள்ளவராக இருப்பார். அதுவே பாவகிரகமாக இருந்தால், உடன்பிறந்தோருடன் ஜாதகருக்கு சுமாரான உறவே இருக்கும். அவர் துணிச்சல் குணம் உள்ளவராக இருப்பார். பிறரிடம் ஆவேசமாக சண்டை போடுவார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 10-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் பெற்றோரிடம் அளவற்ற பாசம் கொண்டிருப்பார். உடன்பிறந்தோரிடம் அன்புடன் பழகுவார்; பேசுவார். அரசாங்கத் தின் பரிசு, விருது ஜாதகருக்குக் கிடைக்கலாம். எதையும் துணிச்சலாக அவர் செய்வார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 11-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் நிறைய பணம் சம்பாதிப்பார். அதை சேமித்து வைப்பார். தேவைப்படும் அனைத்து பொருட்களும் அவரிடம் இருக்கும். அரசரைப்போல அவர் வாழ்வார்.
3-ஆம் பாவத்திற்கு அதிபதி 12-ஆம் பாவத்தில் இருந்தால், ஜாதகர் தன் நண்பர்களுடன் சண்டை போடுவார். உடன்பிறந் தோருடன் அவருக்கு கருத்து வேறுபாடு இருக்கும். ஜாதகர் சோம்பேறியாக இருப்பார். வேலை யற்றவராக இருப்பார். வற்புறுத்தி னால் மட்டுமே வேலை செய்வார்.
செல்: 98401 11534