க்னத்துக்கு மூன்றாவது வீட்டிற்குரிய கிரகத் தைக்கொண்டு இளைய சகோதர- சகோதரிகளின் ஆதரவு, ஒற்றுமை, சுகசௌகர்யங்கள், எதிர் காலத்தில் ஏற்படக்கூடிய புகழ், வெற்றி, அந்தஸ்து, கலை வளர்ச்சி, யோகங்கள் முதலியவற்றைக் கண்டுகொள்ளலாம்.

மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் முதல் வீடாகிய லக்னத்தில் சுப பலனுடன் இருந்தால், இளைய சகோதர விருத்தி ஏற்படும். பல வேலையாட்களை வைத்து வேலை வாங்கும் அதிகார யோகம், அந்தஸ்து பெற்று, சினிமா, நாடகம், நாட்டியம், சங்கீதத்தில் புகழையும் பெற்று விளங்குவார்கள். உடல் பலம் மிக்கவர்கள். வைரம், பொன் நகை களைப் பெற்றவர்களாக உன்னத நிலையில் இருப் பார்கள். சகோதர- சகோதரிகளின் ஆதரவுடன், செல்வாக்குடன் விளங்குவார்கள்.

மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் லக்னத் திற்கு இரண்டாவது வீட்டில் இருந்தால், மூத்த சகோதர, சகோதரிகளின் ஆதரவில் காலம் கழிப்பார். தைரியம் இல்லாதவர். உடல்நலம் குன்றியவர்களாக இருப்பார்கள். மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் சுபராகவும், பாவகிரகப் பார்வை இல்லாமலும் இருந்தால், சகோதர- சகோதரிகளின் சொத்துகள் கிடைக்கும். அசுப கிரகங்கள் இருந்தால், தாழ்மையான நிலையில் வாழ்க்கை நடத்துவார்கள்.

ddமூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் மூன்றில் ஸ்வக்ஷேத்திர பலத்துடன் இருந்தால், சகோதர- சகோதரிகள் செல்வம், செல்வாக்குடன் இருப் பார்கள். அவர்களால் இந்த ஜாதகருக்கு எல்லா வகையிலும் ஆதரவு கிட்டும். அந்தஸ்துடன் அதிகாரப் பதவியிலிருப்பார்கள்.

Advertisment

கலைகளில் நாட்டமிருக்கும். பலசாலிகள். ஆடை, ஆபரணங் களில் ஆசையுடையவராகவும், அவற்றைப் பெற்றும் விளங்கு வார்கள். வழிபாடுகள், சாஸ்திரங் களில் நம்பிக்கை இருக்கும்.

மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் 4-ல் சுப பலமாக இருந்தால், குடும்பத்தில் ஒற்றுமை நிறைந்திருக்கும். சகோதர- சகோதரிகள் நீண்ட ஆயுளுடன் இருப்பர். உறவினர், நண்பர்கள், வேலையாட்களைப் பெற்று விளங்குவார்கள். தாயார், தாய்வழி ஆதரவு உண்டு. அந்தஸ்து, அதிகாரம், ஆடை, ஆபரணங்களுடன் இருப்பார்கள். குடும்பத்தில் செல்வமும் சுகமும் சிறந்து விளங்கும்.

மூன்றாம் வீட்டிற்குரிய கிரகம் 5-ல் இருந்தால், இளையவர் புத்திர விருத்தி பெற்றவராகவும்; சகோதரர், பிள்ளைகள், உறவினர், நண்பர்களின் ஆதரவைப் பெற்றவர்களாகவும் திகழ்வர். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து விளங்கும். பெரிய மனிதர்களின் நட்பு, ஆதரவு இருக்கும். சாஸ்திர ஆராய்ச்சி, தெய்வீக வழிபாடு நிரம்பப் பெற்றவர்களாக இருப்பார்கள்.

Advertisment

மூன்றாம் வீட்டிற்குரிய கிரகம் 6-ல் இருந்தால், இளைய சகோதர- சகோதரிகள் பரம எதிரிகளாகவும், உடல்நலம் குறைந்த வர்களாகவும், வியாதி உடையவராகவும், அடிக்கடி தொல்லை கொடுப்பவர்களாகவும் இருப்பர். அரசாங்கத்தினரால் அவமதிப்பு நேரும். மூன்றாவது வீட்டிற்குரியவர் சுப பலமானால் எதிரிகள் ஜெயம், தாயாதி வகை லாபம், பயமின்மை உண்டாகும்.

மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் 7-ல் சுப பலமாக இருந்தால், இளையவர் பெண்கள் வழியில் அதிகம் செலவு செய்பவராகவும், அந்நியப்பெண் தொடர்புடையவராகவும் இருப்பர். தன் சுகத்தையும் சௌகர்யங்களையும் அனுபவித்துக் கொள்வர். தைரியமானவர். பெண்கள் சொத்துகளைப்பெற முயல்வார். யாதொரு தொழிலுமின்றி சுகவாசியாக இருப்பார்கள்.

மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் 8-ல் இருந்தால், சகோதரர்களுடன் இணக்கமிருக் காது. உடல்நலக்குறைவு, அங்கஹீனத்துடன் இருப்பார்கள். வாக்கு- வண்மைக் குறைவு. சிரமத்துடன் குடும்பத்தை நிர்வகிக்க வேண்டிய பொறுப்பு இருக்கும். கடன், அவமானம், வருமானக்குறைவுடன் இருப்பார்கள். சுப பலமாக இருந்தால் நிவாரணமுண்டாகும்.

லக்னத்துக்கு மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் 9-ல் சுபமாக இருந்தால், தைரியமும், வீர சுபாவங்களும் பொருந்தி, பூர்வபுண்ணியத்தி னால் வசதி பெற்றவர்களாகவும், பக்தி விசுவாசம் நிறைந்தவர்களாகவும் விளங்குவார்கள்.

லக்னத்துக்கு மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் 10-ல் சுபமற்றதாய் இருந்தால், சகோதர- சகோதரிகளின் ஆதரவு இருக்காது. அந்தஸ்து குறைந்தவர்கள். ஆனாலும் ஓரளவு நற்பெயரும், கீர்த்தியும் பெற்றிருப்பார்கள். தாராள மனது டையவர்கள். சாதாரண உத்தியோகத்தில் வாழ்க்கை ஓடும்.

லக்னத்துக்கு மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் 11-ல் சுபமாக இருந்தால், சகோதர- சகோதரிகளால் லாபம், அன்பு, ஆதரவைப் பெற்றிருப்பார்கள்.

லக்னத்துக்கு மூன்றாவது வீட்டிற்குரிய கிரகம் 12-ஆம் வீட்டிலிருந்து அசுபமானால் சகோதரிகளிடம் சண்டை, சச்சரவுகள் நிலவும்.

சொத்துகள் விரயமேற்படும். அலைச்சல், மன அமைதியின்மை, கஷ்டங்கள் நிறைந்திருக்கும். பிறர் இடத்திலிருப்பார். சயன சுகமற்றவ ராகவும் இருப்பார்.

பரிகாரம்

பெற்றோர் திருச்செந்தூர் முருகன் சந்நிதானம் சென்று வணங்கிவிட்டு, வலம்வரும்போது கொடிமரத்தடியில், "நல்ல சகோதர- சகோதரிகளாக விளங்க வேண்டும்' என்று வேண்டிவர (ஒன்பதுமுறை மௌனமாக வேண்டிக் கொள்ளவும்) அவர்கள் பிள்ளைகள் நல்ல சகோதர- சகோதரிகளாக விளங்குவார்கள். உடன்பிறப்புகளும் வேண்டிக்கொள்ளலாம்.

செல்: 94871 68174