Advertisment

27 நட்சத்திர சிறப்பம்சங்கள்! - (8)

/idhalgal/balajothidam/27-star-highlights-8

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களை மிகவும் தைரியமாக முடிப்பார்கள். தங்களுடைய காரியங்களில் அரசர்களாக இருப்பார்கள். சிலர் பணம் கொடுக்கல்- வாங்கல் தொழிலில் ஈடுபடுவார்கள். சிலர் வணிகப் பொருட்களுக்கு ஏஜெண்டுகளாக இருப்பார்கள். பண விவகாரங்களில் மிகவும் கவனம் உள்ளவர்கள். வர்த்தகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

Advertisment

இனிமையாகப் பேசுவார்கள். இரக்க குணம் உள்ளவர்கள். நேர்மையானவர்கள். தன் தர்ம குணத்தைப்பற்றி பெருமையாக நினைப்பார்கள். அலங்காரப் பிரியர்கள். பெயர், புகழுடன் இருப்பார்கள். சிலர் கதைகள் எழுதுவார்கள். சமூக சேவர்களாக இருப்பார்கள். எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். வீடு வாங்கினால் அது க

சுவாதி

சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செயல்களை மிகவும் தைரியமாக முடிப்பார்கள். தங்களுடைய காரியங்களில் அரசர்களாக இருப்பார்கள். சிலர் பணம் கொடுக்கல்- வாங்கல் தொழிலில் ஈடுபடுவார்கள். சிலர் வணிகப் பொருட்களுக்கு ஏஜெண்டுகளாக இருப்பார்கள். பண விவகாரங்களில் மிகவும் கவனம் உள்ளவர்கள். வர்த்தகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள்.

Advertisment

இனிமையாகப் பேசுவார்கள். இரக்க குணம் உள்ளவர்கள். நேர்மையானவர்கள். தன் தர்ம குணத்தைப்பற்றி பெருமையாக நினைப்பார்கள். அலங்காரப் பிரியர்கள். பெயர், புகழுடன் இருப்பார்கள். சிலர் கதைகள் எழுதுவார்கள். சமூக சேவர்களாக இருப்பார்கள். எப்போதும் உற்சாகத்துடன் செயல்படுவார்கள். வீடு வாங்கினால் அது கலைநயத்துடன் இருக்க விரும்புவர்.

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு "த, ப' ஆகிய ஆங்கில எழுத்துகளில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.

யோனி- மகிஷம் (எருமை); கணம்- தேவகணம்; நாடி- அனந்த நாடி; அதிபதி- வாயு தேவன்; கிரகம்- ராகு.

Advertisment

siva

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால், அது குணமாவதற்கு 17 நாட்களாகும். நோய் குணமாக வாயுவின் "வாயோர கணேதி' மந்திரத்தைக் கூறவேண்டும். நெய்யை தானமளிக்கவேண்டும். அர்ஜுன மரத்தை வழிபடவேண்டும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் ராகு பகவான் 6, 8-ல் இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்வரும். ராகு, சந்திரனுடன் 8-ல் இருந்தால், சீதளம் பிடிக்கும். ராகு, செவ்வாயுடன் 6, 8, 12-ல் இருந்தால், அடிக்கடி ஜுரம் வரும். குழந்தை வளர்ந்தபிறகு பிடிவாத குணம் அதிகமாக இருக்கும்.

ராகு, லக்னத்தில் சூரியனுடன் இருந்தால், சூரிய கிரகணத்தால், விஷப்பூச்சிக் கடியால் ஜுரம் வரும். ராகு, சனி, செவ்வாயுடன் 8-ல் இருந்தால், இளம்வயதில் நிறைய கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியதிருக்கும். திருமண வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படும்.

ராகு, சந்திரன், செவ்வாய், 8, 12-ல் இருந்தால், சீதளம் உண்டாகும். கபம் கட்டும்.

விசாகம்

விசாக நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் சுயநலம் கொண்டவர்கள். பேராசை மிக்கவர்கள். சிலர் கலகத்தை உண்டாக்கு வார்கள். மனதில் நினைத்ததைப் பேசுவார்கள். பிறருக்கு அடங்கி நடக்கமாட்டார்கள். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்கள். தேடல் குணம் இருக்கும்.

சிலர் விஞ்ஞானிகளாக இருப்பார்கள். உறுதியான மனதுடன் எதையும் செய்வார்கள். எதையும் அலசி ஆராய்வார்கள். கலைஞர்களாக இருப்பார்கள். வாத, விவாதம் செய்வார்கள்.

போராடும் குணம் கொண்டவர்கள். நல்ல பண வசதி இருக்கும். சில நேரங்களில், இவர்களில் சிலர் செய்யும் செயல்கள் கோமாளித்தனமாகத் தோன்றும்.

இந்த நட்சத்திரத்தில் பிறக் கும் குழந்தைகளுக்கு "ப' என்ற ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.

யோனி- யானை; கணம்- ராட்சத கணம்; நாடி- அனந்த நாடி அதிபதி- இந்திரன், அக்னி; கிரகம்- குரு.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால், அது குணமாவதற்கு 4-லிருந்து 13 நாட்கள் ஆகும். நோய் குணமாக, இந்திரன், அக்னி ஆகியோருக்கான மந்திரத்தைக் கூறவேண்டும். பசு, தங்கம் தானமளிக்க வேண்டும். நாகலிங்க மரத்தை வழிபட வேண்டும்.

பிறக்கும்போது ஜாதகத்தில் குரு லக்னத்தில் இருந்தால், நீண்ட ஆயுள் உண்டு. உடல்நிலை, நன்றாக இருக்கும்.

குரு, சந்திரனுடன் கடகம் அல்லது இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். அதனால் பணவசதியுள்ள குடும்பத்தில் பிறப்பார்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்.

குரு, சனியுடன் 8-ல் இருந்தால் வயிறு சம்பந்தப்பட்ட நோய்வரும்.

குரு, செவ்வாயுடன் 6-ல் இருந்தால் காலில் அடிபடுவதற்கு வாய்ப்பிருக்கிறது. குரு, செவ்வாய்- சூரியனுடன் 5-ல் இருந்தால் புகழுடன் வாழ்வார்கள்.

குரு 10-ல் இருந்து 2-ல் உள்ள சுக்கிரனைப் பார்த்தால், வாக்குசித்தி கொண்டவர்களாக இருப்பார்கள்.

bala300421
இதையும் படியுங்கள்
Subscribe