ஹஸ்தம்
ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தன்னம் பிக்கை உள்ளவர்கள். தங்களின் செயல்களின்மூலம் வெற்றி காண்பார்கள். சிலர் மற்றவர்களின் சொத்து களை அபகரிக்க நினைப்பார்கள். போதைப் பொருட் களின்மீது விருப்பமுள்ளவர்கள். உணவுப் பிரியர்கள்.
தனக்குப் பிடித்த எந்த பொருளையும் வாங்கி அனுபவிப் பார்கள். வெளிப்படையாகப் பேசக்கூடியவர்கள். சமூகத்திற்காகப் பணியாற்றுவார்கள். பரந்த மனம் கொண்டவர்கள். எழுத்தாற்றல் உள்ளவர்களாகவும், கலைகளின்மீது ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள். நிறைய படிக்கும் பழக்கம் உடையவர் கள். காம எண்ணம் குறைவாகவே இருக்கும்.
மஞ்சள் நிறம் கொண்டவர்கள். பிறரை ஈர்க்கும் தோற்றப்பொலிவு இருக்கும். பிறரிடம் பேசும்போது, தனக்கு புகழ் கிடைக்கவேண்டுமென்று எண்ணு வார்கள். கடுமையான உழைப்பாளிகள்.
இந்த நட்சத்திரத்தில் ப

இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு "ட, ப' ஆகிய ஆங்கில எழுத்துகளில் பெயர் ஆரம் பிக்கவேண்டும். "த' என்று தொடங்கும்படியும் பெயர் வைக்கலாம்.
யோனி- மகிஷம்; கணம்- தேவகணம்; நாடி- ஆதிநாடி; அதிபதி- சூரியன்; கிரகம்- சந்திரன்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு உண்டானால், அது குணமாக 15-லிருந்து 17 நாட்கள் ஆகும். நோய் குணமாக "உதயந்த ஜாத் வேதித்' மந்திரத்தைக் கூறவேண்டும். எண்ணெய்யை தானமளிக்கவேண்டும். மல்லிகைக் கொடியை வழிபடவேண்டும்.
பிறக்கும்போது ஜாதகத்தில் சந்திரன் 8-ல் இருந்தால், உடல்நலம் பாதிக்கும். ஜுரம் வரும். எட்டு வயதுவரை பிரச்சினை இருக்கும்.
சந்திரன் 4-ல் இருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். 4-ல் இருக்கும் சந்திரனுக்கு கேந்திரத்தில் குரு இருந்தால் கஜகேசரி யோகம் உண்டாகும். அதனால் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.
சந்திரன், குருவுடன் சேர்ந்து லக்னம் அல்லது கடகம் அல்லது 10-ல் இருந்தால், பெரிய அரசியல்வாதியாக வருவதற்கு வாய்ப்புள்ளது. புகழுடன் வாழலாம்.
சந்திரன், சுக்கிரன், குரு லக்னம் அல்லது கேந்திரத்தில் இருந்தால் ராஜயோகத்துடன் வாழ்வார்கள்.
சந்திரன், ராகுவுடன் 8-ல் இருந்து, அதை சனி பார்த்தால், சிலருக்கு மனநோய் இருக்கும். சந்திரன், சனி, புதன் 8-ல் இருந்தால் இரவில் தூக்கத்தில் உளறுவார்கள். சந்திரன், ராகு, புதன், சனி 12-ல் இருந்தால், பித்ரு தோஷம் காரணமாக வீட்டில் சந்தோஷம் இருக்காது. சிலர் தூக்கம் வராமல் சிரமப்படுவார்கள்.
சித்திரை
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பலர் காம இச்சை உள்ளவர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும். அழகை ரசிப்பவர்கள். கண்கள் ஈர்க்கக்கூடியவையாக இருக்கும். சராசரி உயரத்தைக் கொண்டிருப்பார்கள். பணத்தைச் சேமித்து வைப்பவர்கள். ஆராய்ச்சி யாளர்களாக, சமூக சேவகர்களாக சிலர் இருப் பார்கள். நல்ல மனம் கொண்டவர்கள். பிறரைக் கவரும் வண்ணம் ஆடைகளை அணிவார்கள். பணவசதி சுமாராக இருக்கும். கம்பீரமான தோற்றத்தைக் கொண்டிருப்பார்கள். சிலர் ஆசிரியராகவோ, மருத்துவராகவோ, பொறியியல் நிபுணராகவோ இருப்பார்கள். சித்திரை நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு 'ட' என்னும் ஆங்கில எழுத்தில் பெயர் ஆரம்பிக்கவேண்டும்.
யோனி- வியாக்ரம் (புலி) கணம்- ராட்சத கணம்; நாடி- மத்திம நாடி; அதிபதி- விஸ்வ கர்மா; கிரகம்- செவ்வாய்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நோய் பாதிப்பு உண்டானால், அது குணமாவதற்கு 9-லிருந்து 11 நாட்கள் ஆகும். நோய் குணமாக, "துவஸ்டா துரி கதி' மந்திரத்தைக் கூறவேண்டும். பால்தானம் செய்யவேண்டும். வில்வமரத்தை வழிபடவேண்டும்.
பிறக்கும்போது ஜாதகத்தில் செவ்வாய் லக்னம் அல்லது 7, 8, 12-ல் இருந்தால், செவ்வாய் தோஷமிருக்கும்.
செவ்வாய் 8, 12-ல் இருந்தால் அடிக்கடி ஜுரம் வரும். இரண்டரை வயதுவரை உடல்நலம் கெடும். செவ்வாய் லக்னத்தில் இருந்து அதை குரு பார்த்தால் நல்ல உடல்நலம் இருக்கும். பூமி, வாகனம் வாங்குவார்கள்.
செவ்வாய், குருவுடன் லக்னம் அல்லது 5-ல் இருந்தால் புகழ் கிடைக்கும். சிலர் இராணுவம், காவல், விவசாயம் ஆகிய துறைகளில் இருப்பார்கள்.
செவ்வாய், சனி, சூரியன் 8-ல் இருந்தால் உடல்நலம் பாதிக்கப்படும். செவ்வாய், சூரியன், ராகு 8-ல் இருந்தால் திருமணத்தில் தடை உண்டாகும். சிலருக்கு மறுமணம் நடக்கும்.
செவ்வாய், சூரியன், குரு லக்னம் அல்லது 5 அல்லது 10-ல் இருந்தால் புகழுடன் வாழ்வார் கள். சிலர் அரசாங்கப் பதவிகளில் இருப்பார்கள்.
(தொடரும்)
செல்: 98401 11534