ஆயில்யம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் களில் பலர் எப்போதும் மற்றவர்களைக் குறைகூறிக்கொண்டே இருப்பார்கள். பல மொழிகள் தெரிந்தவர்கள். சம்பாதிக்கும் பணத்தை சேமித்துவைப்பார்கள். எந்த காரியத்திலும் மிக எச்சரிக்கையுடன் செயல்படுவர். ஒரு செயலைச் செய்யத் தொடங்கும்முன் விரிவாக திட்டமிடுவார்கள். சுயமரியாதை மிக்கவர்கள். எதையும் உறுதியுடன் முடிவுசெய்வார்கள். போராடி வெற்றிபெறக்கூடியவர்கள். பணத்தை வழிபடுபவர்கள்.
ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மாநிறம் கொண்டவர்களாக இருப்பார்கள். இதில் பிறந்த அரசியல்வாதிகள் புகழுடன் விளங்குவார்கள். மக்களின் செல்வாக்கு பெற்றவர்கள். சிலர் கலைத்துறையில் நடிகர்களாக இருப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு "உ' என்னும் ஆங்கில எழுத்தில் தொடங்கும்படி பெயர்சூட்ட வேண்டும்.
யோனி- மார்ஜா; கணம்- ராட்சஸம்; நாடி- அனந்த நாடி; ராசி- கடகம்; தெய்வம்- சர்ப்ப தேவதை.
ஆயில்ய நட்சத்திரத்தின் கிரகம் புதன்; அதிபதி சந்திரன்.
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நோயால் பாதிக்கப்பட்டால் அது குணமாக 7, 27, 41 நாட்களாகும். நோய்வாய்ப்பட்டவர்கள் சர்ப்ப தேவதையின் மந்திரத்தைக் கூறவேண்டும். பசுவை தானமளிப்பது நன்று. நாகலிங்க மரத்திற்குப் பூஜைசெய்ய வேண்டும்.
பிறக்கும்போது ஜாதகத்தில் புதன் அஸ்தமனமாகவோ நீசமாகவோ இருந்தால் வயிற்றில் பூச்சித் தொல்லை இருக்கும். வயிறு சார்ந்த நோய் ஏற்படும். சூரியனுடன் புதன் சேர்ந்து லக்னத் தில் இருந்து, அதை பாவகிரகம் பார்த்தால் தோல்நோய் ஏற்படும்.
ஜாதகத்தில் புதன் லக்னத் தில் உச்சமாக இருந்தால் பத்திர யோகம் உண்டாகும். அதனால் சாதாரண குடும்பத்தில் பிறந்திருந்தாலும் உழைப்பால் உயர்ந்து புகழுடன் வாழ்வார்கள். 4 அல்லது 11-ல் சந்திரன் ஆயில்ய நட்சத்திரத்தில் இருந்து, அதன் அதிபதி புதன் உச்சமாக லக்னத்தில் இருந்தால் எதையும் முன்கூட்டியே தெரிந்துகொள்வார்கள். தெய்வத்தின் அருள் பெற்றவர்கள். பிறருக்கு நன்மை செய்வார்கள்.
புதனுக்கு குரு பார்வை இருந்தால் பேச்சாற்றல் மிகும். சிலர் கலைஞர்களாகவும் ஓவியர்களாகவும் புகழ்பெற்ற கணக்காளராகவும் இருப்பார்கள். சூரியனுடன் புதன் 2-ல் இருந்து, அதை 10-ல் இருக்கும் குரு பார்த்தால் ஜாதகர்கள் நிறைய பணம் ஈட்டுவார்கள். நேர்மையுடன் வாழ்வார்கள்.
மகம்
இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உற்சாகத்துடன் இருப்பர். அலைபாயும் மனதைக் கொண்டவர்கள். கலாரசிகர்கள். வீட்டிற்கும் நாட்டிற்கும் தலைவர்களாக விளங்குவார்கள். புகழுடன் வாழ்வார்கள். நண்பர்களுக்கு உதவிபுரிவர். பெண்கள்மீது மோகம் கொண்டவர்கள். சிலர் ரகசிய காதலில் ஈடுபடுவார்கள்.
யாருக்கும் அடிமையாக இருப்பதை விரும்பமாட்டார்கள். தான் விரும்பியதை மட்டுமே செய்வார்கள். எதையும் உறுதியுடன் செய்துமுடிப்பார்கள். இவர்களுக்கு நண்பர்கள் குறைவே. விரும்பிய பொருட்களை வாங்கி அனுபவிப்பார்கள். எதையும் ஆழமாக சிந்திப்பார்கள்.
இந்த நட்சத்திரத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு "ங' எனும் ஆங்கில எழுத்தில் தொடங்கும்படி பெயர்சூட்ட வேண்டும்.
யோனி- மூசக யோனி; கணம்- ராட்சஸம்; நாடி- அனந்த நாடி; ராசி- சிம்மம்; அதிபதி சூரியன்.
இந்த நட்சத்திரத்திற்கான கிரகம் கேது. இதில் பிறந்தவர்களுக்கு நோய் வந்தால் அது குணமாக இருபது நாட்களாகும். ஆடை தானம் நன்று. பிறருக்கு உணவளிப்பதும் நன்மை தரும். ஆலமரத்திற்குப் பூஜைசெய்தால் நோய் குணமாகும்.
பிறக்கும்போது ஜாதகத்தில் கேது 3-ல் இருந்தால் ஜாதகர் தைரியசாலியாக இருப்பார். எதையும் துணிவுடன் செய்வார். சனியுடன் கேது 6-ல் இருந்தால் பித்தம் உண்டாகும். 9-ல் கேது தனித்திருந்தால் இளமையில் கடுமையாக உழைக்க நேரும்.
சனி, செவ்வாயுடன் கேது சேர்ந்து 9-ல் இருந்தால் கடுமையாக உழைத்து பெரிய மனிதராவார்கள். செவ்வாயுடன் கேது லக்னத்தில் இருந்தால் இல்வாழ்க்கையில் தொல்லைகள் ஏற்படும்.
11-ல் கேது இருந்து, அதை குரு பார்த்தால் தைரியம் மிக்கவர்களாக இருப்பார்கள். நிறைய பொருளீட்டுவார்கள். கேது 5-ல் தனித்திருந்து அதை செவ்வாய் அல்லது சனி பார்த்தால் வாரிசு ஏற்படுவதில் பிரச்சினைகள் தோன்றும்.
(தொடரும்)
செல்: 98401 11534